Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kungumam
Kungumam
Kungumam
Ebook218 pages1 hour

Kungumam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.

37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வு​பெற்றார்.

ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் ​பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி ​நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.

இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் ​பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.

சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் ​பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை​ பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் ​கொண்டவர். இரு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக் ​கொள்வது ​போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீ​தையில் கூறப்பட்ட கருத்துக்க​ளை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124103446
Kungumam

Read more from Ja. Ra. Sundaresan

Related to Kungumam

Related ebooks

Reviews for Kungumam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kungumam - Ja. Ra. Sundaresan

    http://www.pustaka.co.in

    குங்குமம்

    Kungumam

    Author:

    ஜ.ரா.சுந்தரேசன்

    Ja. Ra. Sundaresan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    விக்டோரியா மகாராணியும் வினோலியா சோப்பும்

    நெற்றியில் இட்டுக் கொள்ளப் பசைப் பொட்டுக்கள் வராத காலத்தில் எழுதப்பட்ட நாவல் குங்குமம் - ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்.

    ஆகவே, அணா பைசா கணக்கு வரும், ஆயிரம் ரூபாயில் கல்யாணம் நடக்கும்! கைநிறைய என்பது நூறு ரூபாய் சம்பளம்! காசுகள் மாறினாலும் காரெக்டர்கள் என்றும் மாறுவதில்லை.

    குமுதம் இதழின் ஆசிரியரும் என் எழுத்துலக ஆசானுமாகிய திரு. எஸ். ஏ. பி. அண்ணாமலை அவர்கள் தந்த ஊக்கமே, அதுவரையிலும் சிறுகதை எழுத்தாளனாக மட்டுமே இருந்த என்னைத் தொடர்கதையும் எழுதக் கூடியவன் என்ற தகுதிக்கு ஆளாக்கியது.

    'நான் லட்சாதிபதியாக ஆனால், செய்ய ஆசைப்படும் முதல் காரியம் என்னவாக இருக்கும்?’ என்று என்னை நான் கேட்டுக் கொள்வேன். அதற்கு விடையளிப்பதில் எனக்குக் குழப்பமோ தாமதமோ ஒரு போதும் ஏற்பட்டதில்லை.

    மன நிலை குன்றிய தாய்மார்களைப் பார்க்கும் போதெல்லாம் என் உள்ளம் ஊமை அழுகையாக அழும். என்னைப் பெற்றவளே அந்தக் கதிக்கு ஆளானதே காரணம்.

    'இந்த நாட்டில் எந்தத் தாயோ, சேயோ மனநோயால் பாதிக்கப்படலாகாது' துரதிருஷ்டத்தால் அத்தகைய நிலையை அடைந்தவர்களைச் சமூகம் கனிவோடு, பாசமாக நடத்த வேண்டும்.

    'அவர்களுடைய பசி, அவர்களது உறக்கம், உடை, நோய் இவைகளை மன நலக்காப்பு மருத்துவமனைகளினால் மட்டுமே சரி செய்துவிட முடியாது. எல்லாரையும் நன்கு பராமரிக்கும் காப்பக வசதிகளும் நாட்டில் குறைவு.

    உற்றாரும் உறவினரும் காட்டும் கனிவும் சகிப்புத் தன்மையுமே மன நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் மனிதர்களாக்கி, உதவுகிறவர்களையும் மனிதர்களாக்கும். என்ற உணர்ச்சியில் எழுந்த நவீனம் இது.’

    எனது தாய் காலஞ்சென்ற பாக்கியம் அவர்களுக்கு இதனைச் சமர்ப்பிக்கிறேன். இப்போது அவர் இதைப் படிக்க இயலாது. உயிருடன் இருந்தபோது சமர்ப்பித்திருந்தாலும் படித்திருக்க இயலாது. "என்னடா சுந்தரப்பா... புஸ்தகமா? விக்டோரியா மகாராணி பற்றியா? நீ போய் வினோலியா சோப்பு வாங்கிண்டு வர்ரியா?' என்று சம்பந்தமில்லாமல் கேட்டிருப்பார்.

    எனது அடிநெஞ்சில் ஊமைச் சுனையாக இருந்த பாசத்தினையே தொடர்கதை ஆக்கினேன்.

    இங்ஙனம்

    ஐ. ரா. சுந்தரேசன்

    ***

    1

    ஓட்டமும் நடையுமாக வந்ததில் புஷ்பலதாவுக்கு இரைத்தது மூச்சு, அவளுக்கு ஓடியாடி வேலை செய்து பழக்கமில்லை. எல்லாக் காரியங்களையும் மெதுவாகவே செய்வாள். ஆனால் என்றாவது ஒரு நாளைக்குள் செய்து முடித்து விடுவாள். பொறுப்பு, அது இது என்று சொன்னால் ரொம்பவும் பயந்துவிடும் குணம் அவளுக்கு. அப்படிப்பட்ட சுபாவம் படைத்த அவள், கல்யாணம் அமர்க்களப் பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வீட்டில் எப்படி அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் வேலை பார்ப்பாள்?

    பொறுப்பு மிகுந்த வேலை ஒன்றை அவள் தலையில் கட்டிவிட்டார்கள். அதை அரை நொடியில் முடித்துக் கொண்டு கல்யாண வீட்டுக்கு ஒரு நொடியில் வந்து சேர வேண்டும் என்பது கணவன் நடராஜனின் கட்டளை. பட்டுப் புடவையும் புது ரவிக்கையும், நகைகளும், முடமுடத்துக் கசகசத்து, அவளைக் களைப்படையச் செய்தன. வியர்வை ஆறாக ஓடித் தொலைந்தது. இரண்டொரு பெருமூச்சுகள் விடாமல் எந்த வேலையும் செய்து முடிக்க முடியாத அவள் தற்சமயம் சாதித்துள்ள காரியம் மிகப் பெரியது. மேலும் இன்னொரு பெருமிதம் சேர்ந்தது.

    நாத்தியின் கல்யாணத்தை அவளல்லவோ மணவறையில் கணவனுடன் அருகிலிருந்து நடத்தப் போகிறவள்? அவளுக்கு வெகு பெருமையாக இருந்தது. வீட்டுக்கு எஜமானி என்ற உணர்வு வரப்பெற்றவளைப் போலக் கொஞ்சம் சுறுசுறுப்பாக நடந்து சென்று, கல்யாணச் சமையல் 'தடால் புடாலாக' நடந்து கொண்டிருந்த பின் கட்டை அடைந்தாள். ஓர் அரை டம்ளர் காப்பியாவது தன் சரீரத்துக்குள் போனால் தான் மேற்கொண்டு காரியங்கள் நடக்கும் என்று அவளுக்குத் தோன்றியது.

    நாகைநல்லூர் சமையல்காரர்களின் பட்டாளம் துரிதகதியில் இயங்கிக் கொண்டிருந்தது. காலில் கஞ்சியைக் கொட்டிக் கொண்டது போல் ஓர் உதவியாள் பறந்து கொண்டிருந்தார். ஏண்டா தடிப்பயலே! உன்னை யாரடா அந்தப் பானையை இறக்கச் சொன்னது? அது யானை மாதிரி இருக்கிறது. நீ பூனை மாதிரி இருக்கிறாய்? என்று தலைமைப் பரிசாரகர் நிஜமாகவே காலில் கஞ்சி கொட்டிக்கொண்ட அந்த ஆளை ஓர் இறக்கு இறக்கினார். போ! போய் அந்தக் காலின் தலையில் கொஞ்சம் தேனைத் தடவிக் கொண்டு உட்கார்ந்து கிட! தேன் எங்கே என்று என்னைக் கொட்டாதே! தேனில்லாவிட்டால் நெய்யைத் தடவு.

    தலைமைப் பரிசாரகரை அணுக புஷ்பலதாவுக்கு ஏனோ பயமாயிருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய இடங்களிலெல்லாம் காப்பி அண்டாவையே காணோமே!

    பூசணிக் காய்களை அசுர அரிவாள் மணையில் ஒரு சமையல்காரர் 'பரக்பரக்' என்று வெட்டித் தள்ளியபடி இருந்தார். நறுக்கி வைக்கப்பட்டிருந்த காய்கறிக் குன்றுகளையும், வடித்துக் கொட்டிய ஆவிபறக்கும் அன்னமலையையும் இன்னும் இடையிடையே காலைப் பதம் பார்ப்பதற்காகப் பரத்தி வைக்கப்பட்டிருந்த பாத்திர பண்டங்களையும் ஒருவாறு கடந்து அவரிடம் புஷ்பலதா சென்றாள். அவசரமாகக் காப்பி ஒருத்தருக்கு வேண்டும், என்று இழுத்தாள்.

    அவர் அரிவாள் மணையைவிட்டு அரை அங்குலம் கூட நகரவில்லை. உயரவில்லை அசையவில்லை, காப்பியாம்மா? எதுவும் என்னைக் கேட்காதீர்கள். அந்த வம்பே... எனக்கு வேண்டாம். எல்லாம் அவரைக் கேளுங்கள் தலைமைப் பரிசாரகரை நோக்கித் திசை காட்டியது அவர் கை.

    புஷ்பலதா அசந்து விட்டாள். அவளுக்குக் கூடக் கொஞ்சம் கோபம் போல ஏதோ வந்தது. கல்யாணத்தையே முன்னின்று, தாயார் ஸ்தானத்தில் இருந்துகொண்டு நடத்தப் போகிறவளும் கல்யாணப் பெண்ணுக்கு அண்ணியுமான மகா மகா அவளுக்கா இந்தப் பதில்?

    நான், அல்லோ அசலோ அல்ல, சமையல்காரரே! கல்யாணப் பெண்ணின் சாட்சாத் அண்ணி, சொல்லிவிட்டுக் கைக்குட்டையால் வியர்வையை ஒற்றிக் கொண்டாள். விழுந்தடித்து எழுந்து சமையல்காரர் ஸ்பெஷல் காப்பி ஒன்றைத் தயாரித்து வந்து மரியாதையுடன் நீட்டுவாரென்று அவள் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

    அவரோ, கல்யாணப் பெண்ணே வந்து கேட்டால்தான் எனக்கென்ன? என்று அடுத்த பூசணிக்காயைச் சீவுவதற்காகத் தரையில் பொத்தென்று போட்டுப் பிளந்தார். அதோ அந்த அண்டாவிலே கால்மணிக்கு முன்னால்தான் போட்டு விளாவி வைத்தேன். எனக்கு ஒரு சொட்டு இல்லை. 'கை கொஞ்சம் கடிசா இருக்கட்டும்' என்று எச்சரிக்கை வேறு. நான் என்னதான் செய்வது?

    புஷ்பலதாவுக்கு ஒரு கணத்தில் தான் வீட்டுக்கு எஜமானி, கல்யாணத்தை முன்னின்று நடத்தப்போகிறவள் - அதெல்லாம் மறந்து போய்விட்டது. 'பார்த்தாயா, இந்தச் சமையல்காரர் நம்மிடம் போய் இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறாரே' என்று அழுகை குமுறிக்கொண்டு வந்துவிட்டது. பக்கத்திலிருந்த அண்டாவிலிருந்து பச்சைத் தண்ணீர் ஒரு டம்ளரை விருட்டென முகர்ந்து எடுத்தாள்.

    மடக் மடக்கென்று குடித்தாள். டம்ளரைக் கீழே, வைப்பதற்கும் அவள் கணவன் நடராஜன் பரபரப்புடன் ஏ! புஷ்பம்! நல்ல ஆள் போ நீ. போனவளை இன்னும் காணோமே என்று நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்! நீ இங்கே சமையலறையில் குடியிருக்கிறாய்? இன்று ஒரு நாள் தான் சாப்பாட்டு ராமியாக இல்லாமலிரேன். சீக்கிரமாக வா. ஆமாம், ஏன் இவ்வளவு நேரம்? என்றான்.

    புஷ்பலதாவுக்குக் கணவனின் குற்றச்சாட்டு அநியாயமாகப் பட்டது. அவள் எவ்வளவு சுறுசுறுப்பாகப் போய்விட்டு எவ்வளவு சாமர்த்தியமாகக் காரியத்தை முடித்துக்கொண்டு வந்து, இங்கே ஒரு காப்பிக்கூடக் கிடைக்காமல் பச்சைத் தண்ணீரைப் பாவம் குடித்திருக்கிறாள், அவள் சாப்பாட்டு ராமியாம்!

    நான் என்ன செய்வேன்? நான் பட்ட அவஸ்தை எனக்குத் தெரியும்? அங்கே உங்கள் அம்... அவள் மேலே கூறுவதற்குள், யாரோ, மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த ஒரு கிழவர், கொஞ்சம் வென்னீர் கிடைக்குமா இங்கே? எனக்கு வென்னீர்தான் உயிர், என்று வந்து சேர்ந்தார்.

    நடராஜன் அவர் கையிலிருந்த டம்ளரைத் தான் வாங்கிக் கொண்டு, "வென்னீரென்ன? பன்னீர் வேண்டுமானாலும் நம்ம 'குக்' தருவார். இந்தாங்க சமையல்காரர்! வெரி ஹாட்டா வென்னீர் ஒரு டம்ளர் வெரி அர்ஜண்ட் இவருக்கு! சுக்கு வேண்டுமானால் போடச் சொல்லட்டுமா?' என்று சிரிப்புடன் உபசரித்தான்.

    வேண்டாம் வேண்டாம், சும்மா ஒரு மாத்திரை விழுங்கத்தான். எனக்கு இந்த ஆஸ்த்மா டிரபிள். எப்பவும் கையிலேயே இரண்டு மாத்திரை வைத்திருப்பேன். அது இல்லையோ? அவ்வளவுதான். இந்த வென்னீர்தான் கிரேட்ரிலீப். ஆமாம்... இது உங்கள் புஷ்பலதாவைப் பார்த்து அவர் கேட்டார்.

    என் சம்சாரம்.

    ஓ, நினைத்தேன். மணையில் அப்போ பெண்ணுடன் உட்காருவது...

    ஆமாம், ஆமாம், இவள்தான்.

    ஐயோ பாவம், தாயார் இருந்திருக்கலாம். ஆயிரம் ஆனாலும் அப்பா அம்மா எனப்பட்டவர்கள் இருக்கிறதே தனிதான்.

    வாஸ்தவம். உண்மை, என்ன, வென்னீர் ரெடியாகவில்லையா? நல்ல ஆட்களய்யா? நடராஜன் படபடத்தான், அந்தக் கிழவரிடமிருந்து நழுவ.

    ரொம்பக் கேர்லஸான ஆட்கள். எது கேட்டாலும் பதில் வருகிறதில்லை சாமானியமாய். நான் கூட... புஷ்பலதா நிறுத்திக் கொண்டாள். தான் காப்பிக்குப் பட்ட அவமானத்தைக் கிழவர் முன்னால் கூறிக் கொள்ளலாமா கூடாதா என்று.

    கொஞ்சம் அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. வரட்டுமா? கிழவரிடம் விடை பெற்றுக்கொண்டு மனைவியுடன் கல்யாணம் நடைபெறும் ஹாலை அடைந்தான் நடராஜன்.

    மாதவியின் இதயம் சொர்க்கத்தில் சொக்கிக் கிடந்தது.

    நாணம் அவளது அழகைத் தூக்கியது. தனது சிவந்த பாதங்களில் இடப்பட்டிருந்த நலங்கின் கோலத்தை அவளது தாழ்ந்த விழிகள் நோக்கிக் கொண்டிருந்தன. மாக்கோலமும் அதன் மேல் பரப்பியிருந்த ஒவ்வொரு பொருளும் இன்பத்தை வாரி இறைத்தது. தனது கணவனை ஓரக்கண்ணால் பார்க்க முயற்சி செய்தாள். அந்த முகத்தை அவளால் பார்க்க இயலவில்லை. கழுத்தைத் திருப்பிப் பார்த்தால் கேலிக்கு ஆளாவோமே என்று அவள் குனிந்தே இருந்தாள், அவனது ஆண் கரத்தின் விரல்கள் மாவிலை ஒன்றை விஷமம் செய்து கொண்டிருப்பதை அவள் குனிந்த கண்கள் நோக்கின. அட! அந்த விரல்கள் ஏதோ எழுதுவது போலத் தெரிகிறதே. தரையில் 'மா' 'மா' என்று அவனது விரல்கள் வருடின. தனது பெயரின் தலைப்பெழுத்தை எழுதிக் காட்டியது அவளுக்கு இன்பமாக இருந்தது. மிகுந்த குறும்புக்காரர்தான் போலும். தாலி என்ற அந்த மங்களச் சின்னத்தைச் சீக்கிரம் கட்டமாட்டார்களா? கூடியிருக்கும் கூட்டம் தன்னையும் அவரையும் மட்டும் விட்டுவிட்டு விலகாதா என்று அவள் துடித்தாள். உடலும் முகமும் வியர்த்து வடிந்தவண்ணமிருந்தன. கையில் படும் மஞ்சள், குங்குமத்தையும் வியர்வையையும் துடைத்துக் கொள்வதற்காக அருகே வைத்திருந்த கைக்குட்டையை அவள் விரல்கள் நாடின. அதே சமயம், அவனது கையும் நாடியது. அவள் உடம்பு புல்லரித்தது. கையை வெடுக்கென்று பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். பரவாயில்லை. எடுத்துக்கொள். என்று அவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிக் கைக்குட்டையை அவள் அருகே நகர்த்தினான். அந்த வாக்கியம் அவளுக்குத் தேனாக இனித்தது. தாலி கட்டுவதற்கு முன்னமேயே அவளுக்காகத் தன் சௌகரியத்தைத் தியாகம் செய்யும் அவனது மனப்பான்மையை அவள் அனுபவித்துப் புளகாங்கிதம் அடைந்தாள்.

    இந்தப்பா. சிவகுமார்! என்று கட்டைக் குரலில் ஒரு தோழன் சிவகுமாரை அணுகினான். மிகுந்த அவசரக்காரன் போலிருக்கிறது.

    நீ சாவகாசமாகத் தாலியைக் கட்டிக்கொள்! இதோ என் அன்பளிப்பு. நான் ரயிலுக்குப் போகிறேன்! என்று பெளண்டன் பேனா ஒன்றை அவனிடம் நீட்டினான் சினேகிதன். என்னப்பா ரங்கா, பெரிய ராங்கி செய்து கொள்கிறாயே? இருந்து சாப்பிட்டுவிட்டுச் சாவகாசமாகப் போகலாம் என்று உபசரித்தான் சிவகுமார். 'இவன்தான் என் ஆருயிர் சினேகிதன் ராங்க் என்ற ரங்கனாதன். என்மேல் உயிர் இவனுக்கு' என்று சினேகிதனை மனைவிக்கு அறிமுகம் செய்து வைக்கச் சிவகுமாருக்குத் தோன்றியது. ஆனால் இன்னும் தாலி கட்டாமல் அந்த உரிமையைப் பிரயோகிக்க அவனுக்கு இஷ்டம் எழவில்லை, கூச்சத்தினால்.

    சிவகுமாரனின் தோழன் ரங்கனாதன் தனது மணப் பரிசைக் கொடுத்துவிட்டுப் போய் விட்டான். அடுத்த ஐந்து நிமிடத்தில் எவ்வளவு பெரிய கலகத்துக்கு அந்தக் கல்யாண மண்டபம் காத்திருந்தது என்பதை அறியாதவன் அவன். அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1