Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karuppu Vanakam
Karuppu Vanakam
Karuppu Vanakam
Ebook87 pages40 minutes

Karuppu Vanakam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403489
Karuppu Vanakam

Read more from Rajesh Kumar

Related to Karuppu Vanakam

Related ebooks

Related categories

Reviews for Karuppu Vanakam

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karuppu Vanakam - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    கறுப்பு வணக்கம்

    Karuppu Vanakam

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    நேரம் 8.42.

    டி.வி. திரையில் அந்தப் பெண் தோன்றி - புன்னகைத்து வணக்கம் சொல்லி செய்திகளை வாசிக்க ஆரம்பித்தாள்.

    தலைப்புச் செய்திகள். நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் தங்கள் சுயநலத்தைத் தள்ளி வைத்து விட்டு - பொதுமக்களுக்காக உழைக்க முன்வரவேண்டுமென்று பிரதம மந்திரி கேட்டுக் கொண்டார். நேற்று பஞ்சாப்பில் நடந்த பல்வேறு சம்பவங்களில் இரண்டு போலீஸ் அதிகாரிகளும், பதினோரு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டார்கள். மக்கள் நலக் கட்சியின் இணைச் செயலாளர் திருமதி மணிமொழி அக்கட்சியை விட்டு விலகி - ஜனநாயக பாதுகாப்புக் கட்சியில் சேர்ந்தார். வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் ஆந்திராவின் கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஸ்டெபி கிராப் மோனிகா செலஸிடம் தோற்றுப் போனார். ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில்...

    டேய் வாசு...

    சோபாவில் சாய்ந்து டி.வி.யை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வானமாமலை கத்தினார். பக்கத்து அறையில் ஏதோ வேலையாய் இருந்த வேலைக்காரன் ஓடிவந்தான்.

    அய்யா!

    டி.வி.யை ஆஃப் பண்ணுடா...

    டி.வி. திரையின் க்ளோஸப்பில் பிரதமரின் முகம் தெரிய, வாசு ஓடிப் போய் அணைத்தான், ஐம்பது வயதான வானமாமலை, தன் வழுக்கையில் வியர்த்திருந்த வியர்வைத் துளிகளைத் தோளில் போட்டிருந்த மேல் துண்டால் ஒற்றிக் கொண்டே டெலிபோனைப் பக்கத்தில் இழுத்து - ரிசீவரை எடுத்துக் கொண்டார். டயல் பட்டன்களைத் தட்டிவிட்டு - மறுமுனையில் ரிசீவர் எடுக்கப்பட்டதும் கேட்டார்.

    குழந்தைசாமியா?

    ஆமா...

    நான் வானமாமலை பேசறேன்!

    தலைவரே! நீங்களா... வணக்கம். என்ன திடீர்ன்னு போன்?

    டி.வி. நியூஸைக் கேட்டியா?

    இல்லையே?

    ஏன்யா... நம்ம கட்சிக்கு... செயலாளரா இருக்கே? எலெக்ஷன் வேற பக்கத்துல வந்துட்டிருக்கு. டி.வி. நியூஸெல்லாம் கேக்க வேண்டாமா? எந்நேரமும் தண்ணியைப் போட்டுக்கிட்டு இருக்கிறதுதான் கட்சி செயலாளரோட வேலைன்னு நினைச்சுக்கிட்டியா?

    மன்னிக்கணும் தலைவா... அசந்து தூங்கிட்டேன். டி.வி.யில் என்ன நியூஸ்?

    நம்ம கட்சியோட கூட்டணி வெச்சிருந்த மக்கள் நல கட்சி லீடர் மணிமொழி அந்தக் கட்சியிலிருந்து ராஜினாமா பண்ணிட்டு - எதிர்க்கட்சியில் போய் சேர்ந்துட்டா...

    அட... டே!

    உச்சுக் கொட்டாமே... உடனே புறப்பட்டு வாய்யா...! வழியில் எந்தப் பேப்பர்காரனாவது பார்த்து - மணிமெழி சம்பந்தமா கேள்வி கேட்டா... எதையாவது உளறி வைக்காதே. நான் பேப்பர்ல அறிக்கை விட்ட பின்னாடி அப்புறமா வாயைத் திறக்கலாம்...

    சரிங்க தலைவரே!

    உடனே புறப்பட்டு வா... - வானமாமலை ரிசீவரை வைத்து விட்டுத் திரும்ப... டெலிபோன் கூப்பிட்டது.

    எடுத்தார்.

    ஹலோ!

    மிஸ்டர் வானமாமலை இருக்காரா?

    வானமாமலை தான் பேசறேன்...

    நான் தின ஒளி எடிட்டர் சங்கரன்...

    என்ன விஷயம்?

    மணிமொழி கட்சி மாறிட்டாங்களே? அதைப் பற்றி உங்க கருத்து என்ன?

    ஒரு பேரம் நடந்து முடிந்து விட்டது.

    பேரமா...?

    "ஆமாம்... மணிமொழி ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1