Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sakkara Vandi
Sakkara Vandi
Sakkara Vandi
Ebook132 pages52 minutes

Sakkara Vandi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803433
Sakkara Vandi

Read more from Maharishi

Related to Sakkara Vandi

Related ebooks

Reviews for Sakkara Vandi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sakkara Vandi - Maharishi

    http://www.pustaka.co.in

    சக்கர வண்டி

    Sakkara Vandi

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சக்கர வண்டி

    அந்தபங்களா, சேலம் ஏற்காட் ரோட்டில், மாடர்ன் தியேட்டர் சினிமா ஸ்டுடியோவுக்கு சற்று முன் இருந்தது.

    பிரதான சாலையை விட்டு உள்ளே தள்ளியிருந்தது.

    அதற்கான வெள்ளை மொரம்புச்சுற்கள் போட்டு சமனப்படுத்தப்பட்ட சாலை ஒன்று சென்றது.

    பங்களாவின் பின்புறம், ஒரு சிறிய கரடு, அகலமான, பரவலானகரடு, கொஞ்சம்கூட பயிர் பச்சை இல்லாத வரடிக்கல் கரடு, அதன் சரிவுகளில் கூழாங்கற்கள் போல பாறைகள் தென்பட்டன. அருசேயும், எதிரேயும், நெல் வயல் சிலவும், சோளப் பயிர் வளர்ந்த நிலங்களும், தென்பட்டன,

    விஷ்ணுசர்மா அந்த பங்களாவின் முன் கேட்டில் வந்து நின்றான், இரும்புக் கிராதிகள் போட்ட கதவை லேசாக அசைத்துப் பார்த்தான் வேகமாக அக்கதவு ஆடியது. தன் பலத்தையெல்லாம் சேர்த்து ஆளுயரத்திற்கு மேல் உள்ள கேட்டைத் தள்ளினான். கதவின் கீழே பொருத்தியிருக்கும் சக்கரம், எண்ணெய் கண்டு எத்தனை நாள் ஆகியிருக்குமோ தெரியவில்லை, அவன் கதவைத் தள்ளியபோது போட்ட சப்தம் நாராசமாக இருந்தது.

    இரும்புக்கதவு திறந்துகொண்டு விட்டது. நல்லவே சுர்க்கா, வாட்ச்மேன், நாய்கள், என்று இது வரை எவ்வித சில்லரைத் தொல்லைகளும், எதிர்படவில்லை.

    பெரிய கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவுடன், விஸ்தாரமான வெட்ட வெளி ஓரிடத்தில் சிறிய தோட்டம், வலப்புறம் ஓர் அழகிய அவுட் ஹவுஸ் பளிச்செனத் தெரிந்தது. இரண்டு ஜன்னல் வராண்டா முன் பக்கம் சார்புக் கூரை.

    அவன் அவுட்ஹவுஸ் புத்தி, பங்களாவைப் பார்க்க மறுத்து விட்டது.

    இந்த அவுட்ஹவுஸ் மட்டும் நமக்குக் கிடைத்தால்......

    யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்

    பெண் குரல் கேட்டு அவுட்ஹவுஸின் மேல் உள்ள தன் பார்வையை திருப்பிக்கொண்டால்,

    பெண்ணைப்பார்த்த அவன், குட்மார்னிங் என் பெயர் விஷ்ணுசர்மா! நான் இங்கே ஒரு கம்பெனிக்கு தாற்காலிகமாக மாற்றப்பட்டிருக்கிறேன், சில காலம் இங்கே தங்கியிருக்க எனக்கொரு சிறிய வீடு வேண்டும், இங்கேயொரு அவுட் தரவுஸ் இருப்பதாகக் கேள்விப்பட்டேன், எனக்கு தசரத்தின் சந்தடி பிடிக்கவில்லை, இம்மாதிரி இடங்களாக இருந்தால் நல்லதென நினைப்பதால், உங்களுடைய பரிபூரணமான சம்மதம் தந்தால் சந்தோஷமாக வருவேன்" என்றாள் அளவுக்கு அதிகமான பணிவுடன்.

    அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டு நின்ற துர்கா என்கிற அப்பெண் அவனையே வைத்த விழி வாங்காமல் பார்த்தாள்; பிறகு நிதானமாக அவனிடம் மேலும் சில விவரங்களைக் கேட்டாள். அவனைப்பற்றின எல்லா விவரங்களையும் சளக்காமல் கேட்டவள், பிறகு நிதானமாக, என்னால் உங்களுடைய வேண்டு கோளுக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாது. அவுட் ஹெவுஸ் ஒன்று இருப்பது.

    வாஸ்தவம்தான், செளகரியமான செல்ஃப் கண்டைன்ட் ஹவுஸ் அது, இதை உங்களுக்குத் தருவதால் நான் யோசித்துத்தான் பதில் சொல்ல வேண்டும். இது பற்றி இந்த பங்களாவின் சொந்தக்காரப் பெண்ணுடன் பேசியபின்தான் எந்தவிதமான முடிவையும் நான் சொல்வ முடியும். ஆகவே, தயவுசெய்து இரண்டு நாள் கழித்து வாருங்கள்"

    ரொம்ப நன்றி மேடம்.

    எதற்கு நன்றி, நான் உங்களுக்கு எவ்வித உதவியும் செய்ய வில்லையே

    உதவி செய்யாவிட்டால் என்ன, உங்கள் வார்த்தையில் இருக்கிற ஒரு நம்பிக்கை, அது எனக்கு நிச்சயம் உதவப் போகிறது.... என்று சிரித்துக் கொண்டே விடை பெற்றவன் சொன்னபடியே இரண்டு நாள் கழித்து அங்கே வந்தான்.

    இந்த அவுட் ஹவுஸ்தான் ரொம்ப நாளாக, வாடகைக்கு விடுவதில் என்று தீர்மானித்திருந்தேன், அதற்குத் தனிப்பட்ட காரணங்களைவிட சொந்தக் காரணங்களே அதிசம், என்று சொன்ன துர்கா என்கிற அப்பெண் சொன்னபோது, விஷ்ணு மெளனமாகவே இருந்தான். பேச்சில் தீர்மான வாசகம் இன்னும் வரவில்லை, -என்றாலும், உங்களை முதன் முதலில் பார்க்க நேர்ந்த சூழ்நிலை, நீங்கள் குடியிருக்க இடம் கேட்டு நின்று அடக்கமான உருவம்..... உங்கள் கண்களில்தான் சந்தித்த அந்த அளவற்ற தைரியம், எல்லாம் அடுத்த சில விநாடிகளிலேயே, உங்களைத் தோல்வியுடன் திரும்பிப் போகச் சொல்ல மனம் வரவில்லை... என்று கூறி அவுட்ஹவுஸின் சாவியை அவன் கையில் கொடுத்தான்.

    ரொம்ப நன்றி, என்றான் அவுட்ஹவுஸின் சாவியைப் பெற்றுக்கொண்டு,

    பிருந்தாவிடம் கேட்டேன், அவள் இதற்கு சம்மதம் தந்திருக்கிறாள். அநேகமாக அவளுடைய விருப்பத்திற்கு,மாறாக நான் இதில் ஒன்றும் சொல்லமுடியாமல் இருந்தேன். உங்கள் அதிர்ஷ்டம், அவள் சம்மதித்து விட்டாள், என்று துர்கா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவள் நிஷ்டூர மயமான விழிகளுடன் வெளிப்பட்டு நின்றாள். அப்பெண்ணின் கண்களில் சிந்திய உக்கிரம் விஷ்ணுவை நேரடியாகத் தாக்கியபோது அவன் சற்றே பயந்து போனான்.

    அவள் இவர்களைத் தாண்டி அப்பால் போனபோனது, நீங்கள் சொன்ன பிருந்தா இவர்தானா?

    துர்கா சற்றே ஏளனமாக உதட்டை சித டிகிரி அளவு கீழ்நோக்கி சரியவிட்டுவிட்டு நகைத்தாள்.

    பிருந்தாமாடியில் இருக்கிறாள், அவளால் கீழே வர முடியாது. இவள் பெயர் நிர்மலா!

    நிர்மலா அற்புதமான பெயர்...

    பிருந்தாவின் சகோதரி…

    இதை அவள் சற்றே உயர்ந்த ஸ்தாயியில் சொல்லிக்கொண்டே, பங்களாவின் மற்றொரு கோடியில் நின்றவளைத் திரும்பிப் பார்த்தாள்.

    அதே நேரத்தில் அவளும் துர்காவைத் திரும்பிப் பார்த்தாள்,

    இந்து அவுட்- ஹவுஸை வாடகைக்கு விடுவதில் அவருக்கு விருப்பமில்லை போலத் தெரிகிறதே. அவன் தன் மனதில் உள்ளதைப் பளிச்செனக் கேட்டுவிட்டான்.

    அவளுக்கு விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ, பிருந்தா சம்மதம் தந்துவிட்டாள், நானும் அவள் முடிவை உங்களிடம் கூறிவிட்டேன். இதில் இனிமேல் அபிப்ராயம் சொல்ல என்ன இருக்கிறது? - துர்காவின் இதழோரத்தில் மீண்டும் அதே மாதிரியான மர்ம ஏளனப் புன்னகை.

    ஒரு மூன்றாம் மனிதரின் முன்னால் என்னுடைய சினத்தை நீ கிளறுகிறாய், உன்னுடைய இம்மாதிரி செய்கைகளினால் நீ என்னிடம் அவமானப்பட நேரும், என்றாள் தூரத்தில் நின்ற வண்ணம்.

    துர்கா இதற்காக அதிகம் வருந்தியதாகத் தெரியவில்லை.

    மிஸ்டர் விஷ்ணு... நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டிற்குச் குடி வரலாம்.

    ***

    மிஸ்டர் பிரம்மா, விஷ்ணு, சிவன், நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்? அது அவளுக்கு மட்டும் தெரிந்தால் போதாது, எனக்கும் தெரிந்தாக வேண்டும்.

    நிச்சயமாக எம்ப்ளாய்ட்தாங்க, ஒழுங்காவாடகையைத் தந்துவிடுவேன். என்னுடைய கம்பெனியின் ஹெட் ஆபீஸ் டெல்லி, கோவை, மதுரை, சேலம் இங்கெல்லாம் பராஞ்ச் உண்டு. குறிப்பா, டெல்லிக்கு அடுத்தபடி செளத் ஜோனல் ஹெட்குவார்ட்டர்ஸ் - பெங்களுர், என்னை இந்தப் பக்கத்து பிராஞ்சுகளுக்கு ஒரு மூன்று மாதம் ‘இரவலா’அனுப்பியிருக்கிறார்கள். அதோடு, நான் ரெஃப்ரி கோர்ஸ் எல்லாம் படித்துத் தேறியிருக்கிறேன். ஃபுட்பால், வாலிபால் பேஸ்கட்பால் போன்ற விளையாட்டுக்களுக்கு ரெஃப்ரியாக ஊர் ஊரா போவேன். சமீபத்தில்கூட இங்கே நடந்த சீனியர்கேர்ன்ஸ் பாஸ்கட்பால்…

    எனக்குத் தேவையில்லாத விஷயம்…

    -அவள் உள்ளே போய்விட்டான்.

    இவ்வளவு பெரிய பங்களாவில் நீங்கள் தனிமையாக இருக்கிறீர்களே, பயமாக இல்லை. என்று ஒருமுறை துர்காவிடம் கேலியாகக் கேட்டான்.

    இந்த உலகமே பயங்கரமானது. இவ்வுலகில் எங்கேதான் பயங்கரமில்லை, பயங்கரமற்ற இடமாக ஒன்றைச் சொல்லுங்கள்,பார்க்கலாம்… என்று அவள் விஷ்ணுவையே திருப்பிக் கேட்டுவிட்டு: "அப்படி நீங்கள் எனக்காக நினைப்பதாக இருந்தால் இனி அந்த பயம் எனக்கிருக்காது,

    Enjoying the preview?
    Page 1 of 1