Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jeippathu Nijam
Jeippathu Nijam
Jeippathu Nijam
Ebook97 pages49 minutes

Jeippathu Nijam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403412
Jeippathu Nijam

Read more from Rajesh Kumar

Related to Jeippathu Nijam

Related ebooks

Related categories

Reviews for Jeippathu Nijam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jeippathu Nijam - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஜெயிப்பது நிஜம்

    Jeippathu Nijam

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ஜே! என்றான் விவேக், கையில் இருந்த ரிஸீவரை வைத்தபடி ராத்திரி மணி பத்து. டெல்லி குளிர்க்கு இதமாய் கம்பளிக்குள் புகுந்து கொண்டு ஸ்டார் டி.வி.யில் ஃபேஷன் ஷோ பார்த்துக் கொண்டிருந்த ரூபலா விவேக்கை ஏறிட்டாள்.

    இப்போ எதுக்காக 'ஜே’ போட்டீங்க...?

    விவேக் ரூபலாவுக்கு பக்கத்தில் வந்து அவளை நெருக்கிக் கொண்டு உட்கார்ந்தான். நாம டெல்லிக்கு வந்து இப்போ எத்தனை நாளாச்சு?

    இன்னிக்கு சரியா ஒரு வாரம்...

    நான் எதுக்காக டெல்லி வந்தேன்...?

    நேஷ்னல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் உங்களை உடனே வரச்சொல்லி... கான்பிடென்ஷியல் லெட்டர் போட்டாங்க... வெந்நீரை கால்ல கொட்டிகிட்ட மாதிரி உடனே அடுத்த ஃப்ளைட்டை பிடிச்சு டெல்லி வந்தோம்... வந்து ஒரு வாரமாகியும் நேஷ்னல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் உங்களை கண்டுக்கலை. இந்த ஸ்டார் ஹோட்டல்ல தங்கி கவர்மெண்ட் பணத்தை பாழ் பண்ணிட்டிருக்கோம்... இந்த நிமிஷம் வரை.

    கவலைப்படாதே... ரூபி... நேஷ்னல் செக்யூரிட்டி ஃபோர்ஸிலிருந்துதான் போன் வந்தது. பத்து நிமிஷம் கழிச்சு சேர்மன் எனக்கு போன் பண்ணுவாராம். போனுக்குப் பக்கத்திலேயே இருக்கச் சொல்லியிருக்காங்க...

    வந்து ஒரு வாரத்துக்கு அப்புறம்தான் அவங்களுக்கு போன் பண்ணனும்ன்னு தோணியிருக்கு.

    விவேக் அவளுடைய தோளைத் தட்டினான். ரூபி! நேஷ்னல் செக்யூரிடி ஃபோர்ஸ்ங்கிறது ஒரு பஞ்சாயத்து ஆபீஸோ... ஒரு முன்சிபல் கட்டிடமோ இல்லை. இந்த தேசத்தோட பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அதுக்குள்ளே எத்தனையோ அந்தரங்கங்கள், சூட்சமங்கள் இருக்கு. யாரை எந்த நேரத்துல கான்டாக்ட் பண்ணனும்ன்னு அங்கே இருக்கிற அதிகாரிகளுக்கு தெரியும்...

    உங்களை எதுக்காக கூப்பிட்டிருப்பாங்கன்னு நினைக்கறீங்க...?

    புரியலையே...! ஒரு வாரமா இந்தக் கேள்விதானே மண்டையை குடைஞ்சுட்டிருக்கு...

    எனக்கு தோணறதை சொல்லட்டுமா?

    சொல்லு...

    தேசத் தலைவர்கள்ல யாருடைய உயிர்க்காவது ஆபத்து ஏற்பட்டிருக்கும். அதுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்றதுக்காக உங்களை கூப்பிட்டிருக்காங்க...

    எனக்கு அப்படி தோணலை... இது ஏதோ வேற விவகாரம். நீ சொல்ற மாதிரி தலைவர்களோட உயிர்க்கு ஆபத்துங்கிற விவகாரமா இருந்தா... டெல்லி வந்து சேர்ந்த என்னை ஒருவாரம் காக்க வைக்க மாட்டாங்க... உடனடியா கூப்பிட்டு பேசுவாங்க...

    நேஷ்னல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் சேர்மன் பேர் என்ன?

    பிரதாப் சட்டர்ஜி... தேசத்தோட பாதுகாப்பு சங்கதிகள் பூராவும் இவர்க்கு அத்துபடி... விவேக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே டெலிபோன் மறுபடியும் கனைத்துக் கூப்பிட்டது.

    இரண்டே எட்டில் எழுந்துபோய் ரிஸீவரை எடுத்தான் விவேக். மறுமுனையில் பிரதாப் சட்டர்ஜி கணீரென்ற குரலில் தெளிவான ஆங்கிலத்தில் பேசினார்.

    மன்னிக்க வேண்டும் மிஸ்டர் விவேக்... நீங்கள் டெல்லி வந்து ஒரு வாரகாலமாகியும் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. காரணம்... குறுக்கிட்டுவிட்ட சில அரசாங்கப் பணிகள். அந்தப் பணிகளை முடிப்பதற்காக ஜம்மு ஸ்ரீநகர் வரை செல்ல வேண்டி வந்து விட்டது...

    விவேக் சிரித்தான்.

    பரவாயில்லை ஸார். உங்கள் பணியின் பளு எனக்குத் தெரியும். காரணம் இல்லாமல் என்னைக் காக்க வைக்க மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்...

    இப்போது நீங்கள் ஓய்வாகத்தானே இருக்கிறீர்கள்?

    ஆமாம்...

    என்.எஸ்.ஃபோர்ஸ் அலுவலகத்திற்கு உடனடியாய் புறப்பட்டு வாருங்கள்... ஒரு மணி நேரமாவது உங்களோடு பேச வேண்டியிருக்கிறது. டெல்லி போலீஸ் உங்களுக்கு கார் கொடுத்திருக்கிறார்கள் அல்லவா?

    ஆமாம்...

    உடனே புறப்பட்டு வாருங்கள்... அடுத்த அரைமணி நேரத்திற்குள் உங்களை எதிர்பார்க்கலாமா...?

    கண்டிப்பாய்...

    நீங்கள் இங்கே என்னை பார்க்க வருவது உங்கள் மனைவி தவிர வேறு யார்க்கும் தெரியவேண்டாம்...

    நிச்சயமாய் தெரியாது...

    காத்திருக்கிறேன்... வாருங்கள்...

    மறுமுனையில் ரிஸீவர் வைக்கப்பட்டுவிட விவேக்கும் ரிஸீவரை வைத்துவிட்டு ரூபலாவிடம் திரும்பினான்.

    ரூபி... டேக் கேர்... நான் என்.எஸ்.எஃப். சேர்மனை மீட் பண்ணிட்டு வந்துடறேன்...

    எவ்வளவு நேரமாகும்...?

    எப்படியும் ரெண்டு மணி நேரமாயிடும் விவேக் சொல்லிக்கொண்டே ஹேங்கரில் இருந்த ஓவர் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டு அறையினின்றும் வெளிப்பட்டான்.

    கார் சாவியை எடுத்துகிட்டீங்களா?

    Enjoying the preview?
    Page 1 of 1