Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thethi Kuruchidunga
Thethi Kuruchidunga
Thethi Kuruchidunga
Ebook88 pages49 minutes

Thethi Kuruchidunga

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603397
Thethi Kuruchidunga

Read more from Devibala

Related to Thethi Kuruchidunga

Related ebooks

Reviews for Thethi Kuruchidunga

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thethi Kuruchidunga - Devibala

    http://www.pustaka.co.in

    தேதி குறிச்சிடுங்க

    Thethi Kuruchidunga

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    அப்பாவிடம் விடிந்ததும் பேசியே தீருவது என்று தீர்மானித்துக் கொண்டாள் சொப்னா. எப்படி பேசவேண்டும் என்று மனதுக்குள் ஒருமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டாள்.

    அப்பா சம்மதிப்பாரா?

    'சம்மதித்துத்தான் ஆகவேண்டும். இது என் வாழ்க்கைப் பிரச்சனை. முடியாது என்றா சொல்ல முடியும்?'

    'சொல்லிவிட்டால், இந்த சொத்து சுகங்கள் வேண்டாம் என்று காலை வீசி நடந்து விட வேண்டியதுதான்'

    அப்படி நடக்காது! அப்பாவுக்கு நான் ஒரே மகள். என் ஆசைகளைப் பொசுக்கி அதன் மேல் ஆதிக்கம் செலுத்த மாட்டார்.

    வெகுநேரம் கழித்து உறங்கிப் போனதால் காலை ஒன்பது மணிக்குத்தான் விழிப்பு வந்தது. எழுந்து ஏஸியை நிறுத்தினாள். ஜன்னல்களைத் திறந்தாள். பாத்ரூமுக்குள் நுழைந்து பல் தேய்த்தாள். கதவு தட்டப்பட்டது.

    போய்த் திறந்தாள். வேலைக்காரி நின்றாள்.

    அய்யா உங்களை வரச் சொல்றார். அவர் ரூம்ல காத்துக்கிட்டு இருக்கார்!

    அப்பாவே வரச் சொல்லிட்டார். அம்மாவும் அங்குதான் இருப்பாள். பேசிவிட இதுதான் நல்ல சந்தர்ப்பம். அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள்.

    'குட்மார்னிங் டாடி அண்ட் மம்மி!'

    இப்பத்தான் எழுந்தியா? சீக்கிரம் குளிச்சு ரெடியாகணும் நீ! ஏன் டாடி? எங்கேயாவது போகப் போறமா?

    இல்லைமா! பத்து மணிக்கு டாக்டர் ஆனந்த் உன்னைப் பெண் பார்க்க வர்றார்!

    சொப்னாவுக்கு 'திக்' என்றது.

    டாடி! என்னை நீங்க கேக்காம....!

    எதுக்கு கேக்கணும்? உனக்கு எது நல்லதுன்னு எங்களுக்குத் தெரியாதா?

    அம்மா எழுந்து வந்தாள்.

    ஆமாம் சொப்னா! டாக்டர் ஆனந்த் பரம்பரைப் பணக்காரர். ஃபாரின் போய் படிச்சுட்டு வந்தவர். இன்னிக்கு டவுன்ல ஸ்டார் ஓட்டல் ரேஞ்சுல நர்ஸிங் ஹோம் கட்டி வச்சிருக்கிறார் அவர் ஒருத்தர்தான். அவரை வளைச்சுப் புடிக்க பணக்காரங்க மத்தில நீ, நான்னு போட்டியே நடக்குது. உங்கப்பா அந்தப் போட்டில ஜெயிக்கப் போறார்!

    அம்மாவின் குரலில் பெருமிதம் வழிந்தது.

    அப்பா போட்டில ஜெயிக்கப் போறார். ஆனா வாழ்க்கைல நான் தோக்கப் போறேனே!

    என்னடீ சொல்ற?

    டாடி! இந்த வரன் எனக்கு வேண்டாம்!

    ஏன்மா?

    நான் ஒருத்தரைக் காதலிக்கறேன். அதை உங்ககிட்ட பேச நான் முடிவு செஞ்ச நேரத்துல இந்த டாக்டர் குறுக்கே வர்றார்.

    யாருடி அவன்? அம்மா பதறினாள்.

    இரு சரஸ்வதி! அப்பா, சொப்னா அருகில் வந்தார். அவளை ஏற இறங்கப் பார்த்தார்.

    நீ காதலிக்கிறவன் பேரு ரகுபதி. வயசு இருபத்தி ஆறு... அஞ்சடி... பத்து அங்குலம். தனியார் நிறுவனத்துல குமாஸ்தா. படிப்பு பி.ஏ. சம்பளம் பிடித்தம் போக கையில மூவாயிரத்துச் சொச்சம். உறவுனு யாருமில்லை. திருவல்லிக்கேணில ஒரு பழைய மேன்ஷன்ல இருக்கான். நிறம் கறுப்பு! வெள்ளைச் சட்டைதான் போடுவான். சரிதானா?

    சொப்பா நிலைகுலைந்து போனாள்.

    ‘எ....எப்படி இவருக்கு இத்தனை விவரம் விரல் நுனியில் இருக்கிறது?' எங்கிருந்து சேகரித்தார்?

    என்னம்மா? ஆச்சர்யமா இருக்கா? பெண்ணைப் பெத்தவன் பல்லு குத்திக்கிட்டிருந்தா, அவன் மனுஷனே இல்லை. நான் பிஸினஸ் மாக்கனட், கோடீஸ்வரன். இத்தனை உயரத்துல இன்னிக்கு நிக்கக் காரணம் இந்த அலர்ட்நெஸ்தான். புரியுதா கண்ணு உனக்கு?

    சரி டாடி! இனி நான் பேசவேண்டியதில்லை. சொல்ல வந்தது சுலபமாச்சு!

    "குட்! லெட்டஸ் கம்

    Enjoying the preview?
    Page 1 of 1