Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iththanai Naalai Engirunthaai
Iththanai Naalai Engirunthaai
Iththanai Naalai Engirunthaai
Ebook174 pages1 hour

Iththanai Naalai Engirunthaai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465674
Iththanai Naalai Engirunthaai

Read more from V.Usha

Related to Iththanai Naalai Engirunthaai

Related ebooks

Reviews for Iththanai Naalai Engirunthaai

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iththanai Naalai Engirunthaai - V.Usha

    19

    1

    மாலினி கையெழுத்து போட்டாள்.

    மனதைவிட்டு விலுக்கென்று எதுவோ கழன்ற மாதிரி இருந்தது.

    ஆல் தி பெஸ்ட் மாலினி... பெற்றுக் கொள்... என்றார் பெரியவர் வேதாசலம்.

    உயர்தர வெண்மைத் தாளில், விலை மிகுந்த இந்திய அச்சக மையில் அடிக்கப்பட்ட எழுத்துக் களை வாசித்தாள். சோஷியாலஜி படிப்புக்கான பட்டத்தை பெற்றுவிட்டாள் அவள் என்பதற்கான அரசு அங்கீகாரத்தை அந்த வாசகங்கள் பறைசாற்றின.

    நன்றி ஐயா... என்றாள்.

    போய் வா அம்மா... வாழ்க்கை உனக்கு சந்தோஷங்களை அருளட்டும்... நெக்ஸ்ட்...

    வெளியே வந்தாள்.

    சந்தோஷங்கள்!

    எல்லோரும் இன்பத்தையேதான் விரும்புகிறார்கள். இன்பத்தை மட்டும் விரும்புகிறார்கள்.

    ஆனால் வாழ்க்கை அதை மட்டுமா வைத்துக் கொண்டு காத்திருக்கிறது?

    துன்பமும் இன்பமும் சேர்ந்ததுதானே முழுமையான வாழ்க்கை? ‘ஒரு கரை மட்டும் போதும், இரண்டு கரை வேண்டாம்’ என்று நதி ஒன்று பிரார்த்தனை செய்ததாக ஜென் கதையில் வருமே, சாத்தியமற்ற நிலைதானே அது? இன்னும் சொல்லப்போனால் இரண்டு கரைகளை உண்டாக்கியதே நதிதான். அவற்றின் நடுவே சுழித்துக் கொண்டு ஓடுவதும் கூட அதுதான்.

    மாலினி திகைப்படன் தலையை உதறிக் கொண்டாள்.

    எதிர்மறை எண்ணங்களிலேயே சுழன்று கொண்டிருக்கிறது மனது. காலையில் எழுந்ததிலிருந்தே இப்படித்தான் இருக்கிறது அது. கையெழுத்து போட்டு, பட்ட சான்றிதழை வாங்கியவுடன் கல்லூரிக்கும் அவளுக்குமான உறவு முறிந்துவிடப்போகிறது. இந்த எண்ணம் கொடுத்த தாக்கம் அது. மூன்றாண்டு இனிமைத் தொடர்புக்கு இன்றோடு ஒரு முற்றுப்புள்ளி.

    இருக்கட்டும்.

    இதுதான் வாழ்க்கை.

    எதுவும் கடைசி வரையில் நம்முடன் வந்துவிட முடியாது என்பதை முதலிலேயே சொல்லிக் கொடுக்கிறது, இந்த கல்லூரி வாழ்க்கை - மவுனமாக!

    சிறிது நேரம் அப்படியே அவள் கொன்றை மரத்தின் கீழ் நின்றாள்.

    அவளும் தோழிகளும் வகுப்பறைக்குச் செல்வதற்கு முன்னால் இங்கேதான் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். கலாவதியின் புது உடையை வினோ வியப்புடன் பார்த்து ஆயிரம் கேள்வி கேட்பாள். நர்மதா புத்தகத்தில் கண்பதித்தபடியே லெக்சரரை கேலி செய்வாள். ரோஸலின் தன் வீட்டுத் தோட்டத்தில் புதிதாய் வந்த லவ்பேர்ட்ஸ் பற்றி மெல்லிய கிறக்கத்துடன் சொல்வாள். ஆதிரை தான் முதல்நாள் படித்த சீனக் கவிதையை சிலாகித்து விவரிப்பாள்.

    எத்தனை அருமையான தோழிகள்!

    ‘எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?

    இந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ?

    இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ?

    இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ?’

    கடைசி நாள் பிரிவுபசார விருந்தின்போது, உருகிக் கொண்டிருந்த ஐஸ்க்ரீமுக்கு போட்டியாக அத்தனை பேரும் நெகிழ்ந்ததும், அணைத்துக் கொண்டு அழுததும், நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்த வேதனையைத் தாங்க முடியாமல் கதறியதும் -

    நிமிர்ந்தாள்.

    மரங்களின் இடைவெளியை துளைத்தபடி சூரியக் கதிர்கள் தரையில் விழுந்து ரங்கோலிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தன. பகலிலும் தூங்கிக் கொண்டிருந்த தூங்கு மூஞ்சி மரங்களில் காலம் பழுத்த இலைகளாக தன் முத்திரையைப் பொறித்திருந்தது.

    மாலினிம்மா... பிரின்சிபல் அம்மா உன்னை கூப்பிடறாங்க... என்று அஞ்சுகத்தின் குரல் கேட்க, திரும்பினாள்.

    ஆச்சரியத்துடன் பிரின்ஸி பலா? என்று கேட்டபடி விரைந்தாள்.

    எப்போதும் அலுவலர்களும், மாணவிகளும் சமயத்தில் பெற்றோருமாக பரபரப்பாக இருக்கும் பிரின்சியின் கட்டிடம் இன்று அமைதியாக இருந்தது.

    மெல்ல எழுந்த படபடப்பை அடக்கிக் கொண்டு கதவை நாசூக்காக தட்டினாள். மே ஐ கமின் மேடம்? என்று தழைந்த குரலில் கேட்டாள்.

    யெஸ் ப்ளீஸ்... என்று பதில் வந்ததும் உள்ளே போனாள்.

    குட் மார்னிங் மேடம்... என்று பணிவுடன் புன்னகைத்தாள்.

    குட் மார்னிங் மை சைல்ட்... உக்கார்... என்று ஜெயராணி சொன்னார்.

    இருக்கட்டும் மேடம், நிக்கறேன்... என்கையில் அவள் குரல் கரகரத்தது.

    யெஸ், என்ன ஆச்சு? ஏன் தொண்டை அடைக்குது? ஜெயராணி புன்னகையுடன் கேட்டார்.

    மூணு வருஷ பந்தம் மேடம்... பிரியும்போது மனசு தாங்கலே... இந்த கட்டிடம், இந்த வகுப்பறை, தூங்கு மூஞ்சி மரம்னு பாக்க பாக்க நெஞ்சு வலிக்கற மாதிரி இருக்கு... காத்திருந்தவளாய் மாலினி படபடத்துவிட்டாள்.

    ரிலாக்ஸ் மை சைல்ட்... என்றார் மிக மிருதுவாக.

    அவர் முகம் அமைதியாக அவளை ஏறிட்டுப் பார்த்தது. மென்மையாக புன்னகைத்தது.

    பிரிவும் சந்திப்பும் இல்லாம வாழ்க்கை இல்லேம்மா... சோஷியாலஜில டிஸ்டிங்ஷன் வாங்கியிருக்கே... எதிர்காலம் பத்தி என்ன திட்டம் வெச்சிருக்கேம்மா?

    வேலைக்குப் போகணும் என்கிற பொருளாதார கட்டாயம் எனக்கில்லே மேடம்... அதுக்காக வீட்டுல ஒக்காந்துகிட்டு காலத்தை டி.வி.ல சிதைக்கிற கொடுமையும் செய்யமாட்டேன்... படிப்பையும் மனசையும் சமூக நலம் சார்ந்த ஏதாவது ஒரு துறைல உருப்படியா செலுத்தணும்னு இருக்கேன்... என்றாள்.

    அவர் முகம் மலர்ந்தது.

    வெரிகுட்... என்றார் வேகமாக. உன் வயசுல எனக்கு எவ்வளவு நிர்ப்பந்தங்கள் தெரியுமாம்மா? கன்யாஸ்திரியா போகணும்னு அப்பா சொன்னார்... என்.ஆர்.ஐ. மாப்பிள்ளையை கட்டிக்கணும்னு அம்மா... ஒரே முடிவுல நான் நின்னேன், பெண்கள் கல்லூரிக்கு முதல்வரா ஆகிறதுதான் என் வாழ்க்கை லட்சியம்னு... இதோ ஆயிட்டேன்...

    நிமிர்ந்தாள். கம்பீரத்தில் பளிச்சிடும் அவர் விழிகளையே பார்த்தாள்.

    எப்பவும் வகுப்புல நீ முதல்... உன் குடும்பம்கூட தியாகி குடும்பம்னு கேள்விப்பட்டிருக்கேன்... இப்போ பல்கலைக் கழகத்துல தங்கமெடல் வாங்கியிருக்கே... இப்படி சிறப்பான பாரம்பரியமும் புத்திசாலித்தனமும் இருக்கிற நீ, எங்கே ஆஸ்திரேலியா மாப்பிள்ளையை கட்டிகிட்டு வீடு குழந்தைன்னு வட்டத்துக்குள்ள போயிடுவியோன்னு கவலைப் பட்டேம்மா... குட்! நல்ல தீர்மானத்துல இருக்கே... டெல் மீ, நான் ஏதாவது செய்ய முடியுமா?

    யெஸ் மேடம் ப்ளீஸ்... அவள் அவசரமாக சொன்னாள். தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் இப்படி ஏதாவது பத்தி தகவல் வேணும் மேடம்... கிடைக்குமா?

    நிச்சயமா... என்றவர் ஒரு கணம்யோசித்துவிட்டுச் சொன்னார். நாளைக்கு இதே நேரம் ஆபீசுக்கு போன் பண்ணு... டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணி பிரபாகிட்ட கொடுத்து வெக்கிறேன்... ஆல் தி பெஸ்ட் மா மாலினி... ஆனா, ஒரு விஷயம்...

    யெஸ் மேடம்...

    எந்த வேலையானாலும் பெத்தவங்களோட ஒப்புதலோடு செய்யணும்மா மாலினி நீ... என் முடிவுதான் எனக்குப் பெரிசுன்னு போகக்கூடாது... தட் இஸ் மை சின்சியர் அட்வைஸ்...

    ஷ்யூர் மேடம்... தேங்க்யூ வெரிமச் என்று வெளியே வந்தாள்.

    கொன்றை மரம் சிவப்பு மலர் ஒன்றை அவள் தலையில் சொரிந்து வழியனுப்பி வைத்தது.

    2

    மகாபலிபுரம்.

    அரசு சிற்பக் கலைக்கல்லூரிக்கு அருகில் பெரிய மைதானம் போன்ற இடத்தில் கூரை வேயப்பட்டு அதன் கீழே கற்கள் கொட்டிக் கிடந்தன.

    பாறை, பெரிய பாறை, வழுக்குப் பாறை, சொரசொரப்பான கல், ஒழுங்கான கல், கூரான கல்

    Enjoying the preview?
    Page 1 of 1