Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mupathu Naalum Nilavu
Mupathu Naalum Nilavu
Mupathu Naalum Nilavu
Ebook188 pages1 hour

Mupathu Naalum Nilavu

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465674
Mupathu Naalum Nilavu

Read more from V.Usha

Related to Mupathu Naalum Nilavu

Related ebooks

Reviews for Mupathu Naalum Nilavu

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mupathu Naalum Nilavu - V.Usha

    26

    1

    மதுமதி சமையலறைக்குள் நுழைந்தாள்.

    காய்கறிக் கூடையின் மேலாக பளபளவென்று தக்காளிப் பழங்கள் கண்சிமிட்டின. வட்ட வடிவத்தில் நல்ல அடர்சிவப்பு நிறத்தில் மிகச்சரியான பெரிய தக்காளி ஒன்றை எடுத்து நான்காக வெட்டிக் கொண்டாள். மிக்ஸியில் போட்டதும் அது உடனே கூழாகக் கரைந்தது. லாவகமாக எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொண்டு ஃபிரிஜ் கதவைத் திறந்தாள். உள்கதவு திறந்து ஆழ் உறை நிலையில் வைத்துவிட்டு மூடினாள்.

    ‘முகத்தை எப்போதும் மூடிவைக்காதே... எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே’ என்று முணுமுணுத்தபோது இதழ்களில் புன்னகை பிறந்தது.

    எத்தனை இனிய பாடல்! நல்ல ரசனை மிகுந்த மனத்திலிருந்து உருவாகி வழியும் அழகிய கவிதை. ‘அரபு நாடே அசந்து போகும் அழகியா... உருவக்கவிஞன் உமர்கய்யாமின் கவிதையா’ என்று இளைய ஆண்மகன் ஒருவனின் குரல் தேனைப் போல தித்தித்து ஓடியது.

    அழகு! அழகு!

    வாழ்க்கையே அழகுதான். அழகற்ற நிலையிலிருந்து வாழ்க்கையை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. கடல் அழகு. மேகம் அழகு. அருவி அழகு. பூக்கள் அழகு. காய்கள், கனிகள், மழை, நீர், ஆறு, மழலைகள் எல்லாமே அழகு. அதிலும் பெண், கேட்கவே வேண்டாம். அத்தனை அழகு; அவ்வளவு ரம்மியம்.

    மதுமதி நேரம் பார்த்தாள்.

    பதினைந்து நிமிடங்கள் ஓடியிருந்தன.

    குளிர்ப்பெட்டி திறந்து தக்காளிக்கூழ் வைத்த கிண்ணத்தை எடுத்தாள். ஐஸ் தக்காளியாக மாறியிருந்ததை மென்மையாக முகத்தில் தேய்த்துத் தடவினாள். வட்ட வட்டமாக மஸாஜ் செய்வது போல கன்னம், நெற்றி, முகவாய், காதோரம் என்று தேய்த்து அப்படியே காயவிட்டாள்.

    சமையலறையிலிருந்து ரசத்திற்கு தாளித்துக் கொட்டும் நெய்வாசனை வந்தது. கூடவே தேங்காய்க் கூட்டு கொதிக்கிற நறுமணம். அம்மா வேகமாக சமையலை முடிக்கிறாள் என்றால், வெளியில் ஏதோ வேலை இருக்கிறது என்று அர்த்தம்.

    மதூ... மதூ... என்று தாயின் அழைப்பு கேட்டதும் அவள் வெள்ளரிக்காயை எடுத்த இடத்தில் வைத்து விட்டு விரைந்தாள்.

    என்னம்மா?

    போற வழில என்னை கோவில்ல இறக்கி விட்டுடேன்... இதோ கௌம்பிடறேன்... என்றாள் பார்வதி - அதற்குள் குளித்து தலையில் ஈரத்துண்டுடன் இருந்தாள். அதையும் மீறிக் கசிந்த சீயக்காய் வாசனை நாசியை இனிமையாக்கிற்று.

    மதுமதி அம்மாவையே பார்த்தாள்.

    கோதுமை நிறம். வட்டவடிவ முகம். மையோ, சாயமோ, பொட்டோ இல்லாமலே அழகிய வடிவம். கண்களின் நீண்ட இமைகளும், மாசற்ற கன்னங்களும், ஏதோ ஒரு பழத்தின் சுளைகளைப் போல உதடுகளுமாக அம்மா கச்சிதமான அழகியாக நின்றாள்.

    என்னடி மதூ, புதுசா பாக்கற மாதிரி, அப்படி வெச்ச கண் எடுக்காம இருக்கே? என்றாள் அம்மா சற்று வெட்கத்துடன். அப்போது இன்னும் அழகாக இருந்தாள்.

    இப்பதான் ஒரு விஷயம் புரிஞ்சுதும்மா என்றாள் அவள் - ரசத்தை ஒரு கரண்டியால் எடுத்து உறிஞ்சியவாறு.

    என்ன விஷயம்?

    நான் எப்படி இவ்வளவு அழகா பொறந்தேன்னு...

    குங்குமப்பூ, பாதாம், முந்திரின்னு நான் கிலோ கிலோவா முழுங்கினேன்னு சொல்லுவேனே அடிக்கடி... இப்பதான் புரிஞ்சுதா அது?

    சேச்சே அதெல்லாம் இல்லம்மா... நான் சொல்றது சயின்ஸ்... ஜெனடிக் சமாச்சாரம்... என் அழகுக்கு ஆதாரம் உன் அழகும்மா... நீ ஒரு பேரழகிம்மா... - மதுமதி தாயை செல்லமாக அணைத்துக் கொண்டாள்.

    நீ அழகிதாண்டி மது, அதிலென்ன சந்தேகம் சொல்லு... போறாதுன்னு புதுசு புதுசா தெனம் ஏதாவது ஒரு டிப்ளமா கோர்ஸ், சர்டிபிகேட் கோர்ஸ்னு படிச்சுண்டே போறே... அழகுக்கலை நிபுணர்னு உன் பாஸ் சௌமியா தலைல தூக்கி வெச்சுண்டிருக்கா... பார்லர் தனியா வெச்சா நீதான் சென்னையோட டாப் அழகுக்கலை நிபுணரா இருப்பியாம். அன்னிக்கு அவ என்கிட்டயே சொன்னா...

    உண்மைதான் என்று தோன்றிற்று. முகம் பெருமையில் பளபளத்தது. ஹேர் கலரிங் கோர்ஸ் இப்போதுதான் இங்கே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. போன வருடமே அதை அவள் முடித்து விட்டாள். நேற்று கூட ஒரு செல்வந்தர் வீட்டு கல்லூரிப் பெண்ணொருத்தி வந்து கலரிங் செய்து கொண்டாள். மூன்றாயிரம் ரூபாய் பில் எழுதி நீட்டினாள் இவள். ஜஸ்ட்லைக் தட் எடுத்துக் கொடுத்து விட்டு அவள் கண்ணாடியில் இப்படியும் அப்படியும் பார்த்துவிட்டு உடனே மதுமதியைக் கட்டிக் கொண்டாள். ‘சிம்ப்ளி சூப்பர்ப் மதுமதி... ஜஸ்ட் ஃபன்டாஸ்டிக்... இவ்வளவு அழகா ப்ளாண்டிங் ஆகி வரும்னு நான் எதிர்பாக்கலே...’ என்று தன் பரவசத்தை வெளிப்படுத்தி விட்டுப் போனாள். சீருடை அணிந்த அத்தனை பெண்களும் வியப்புடன் பார்த்தார்கள். சௌமியா அறையை விட்டு வெளியில் வந்து கையைப் பற்றிக் குலுக்கினாள். ‘தெரியும் எனக்கு. அதனாலதான் மதுவை பண்ணச்சொன்னேன்... அவ யாரு தெரியுமா மதூ? எம் எல் ஏ விக்ரமன் இருக்காரே, எக்ஸ் எம் எல் ஏ - , அவரோட ஒரே பொண்ணு... சரியா வரலேன்னா காளி மாதிரி ஆடிடுவா... பட் யூ மேட் இட் க்ரேட் மதூ... சூப்பர்...’ என்று பாராட்டித் தள்ளினாள்.

    குளிச்சுட்டு வா மது... என்று அம்மா சொன்ன பிறகுதான் அவள் நனவுக்கு வந்தாள்.

    முகத்தை தக்காளி இறுக்கிப் பிடித்து தசைகளுக்கு வேலை கொடுத்திருந்தது. சின்ன டம்ளரில் மினரல் வாட்டர் எடுத்து முகத்தை அலம்பிக் கொண்டாள். கண்களைச் சுற்றி அழுத்தாமல் மென்மையாக நீர்விட்டு சுத்தம் செய்து, டவல் எடுத்து மெல்லியதாக அழுத்தம் கொடுத்து துடைத்தாள்.

    கண்ணாடி முன் நின்று பார்த்தாள்.

    முகமா ... இல்லை பளிங்கா?

    ஒரு சிறு கரும்புள்ளி கூட இல்லாமல் சிற்பி வடித்த சிலையின் வதனம் போல வழுவழுத்த தன் அழகிய முகத்தைப் பார்த்தபடியே சந்தோஷமாய் நின்றாள் அவள்.

    2

    கபிலன் கண்களை மூடி நின்றான்.

    விடிகாலைக் காற்று சுற்றுப்புறத்தின் பிராண வாயுவை அதிகப்படுத்தியிருந்தது. நச்சுத்தன்மையும் அடர்த்தியும் குறைந்த காலைத் தென்றல் அந்த மொட்டை மாடியின் பெரிய பகுதி முழுக்க நிறைந்திருந்தது. ஒரு முழுநாளை பூமிக்குப் பரிசாக வழங்குவதற்காக இளஞ்சூரியன் கிழக்கில் காத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அடிவானம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

    காற்றை உள்ளே இழுத்தான்.

    தேக்கி வைத்துக் கொண்டான்.

    வினாடிகள் நகர்ந்தன.

    பத்து, பதினைந்து, இருபது, இருபத்தைந்து...

    மெல்ல வெளிவிட்டான். சுவாசப்பயிற்சி. தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு மூச்சை ஆழத்திற்கு இழுப்பதும் வெளியிடுவதுமாக கவனமாக ஈடுபட்டான்.

    கண்களைத் திறப்பதற்கும் ஆரஞ்சு வர்ணக் கதிரவன் இருட்டிலிருந்து வெளியே வருவதற்கும் மிகச்சரியாக இருந்தன.

    சூரியனே! வா! உனக்கு என் முதல் வணக்கம். உன்னால் இந்த உலகம் வாழட்டும். உயிர்கள் தழைக்கட்டும். பூமி செழிக்கட்டும். மேடுபள்ளங்களும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த இந்த அபத்த உலகத்தின் ஒரே நம்பிக்கை நீதான். மனிதர்களுக்கிடையில் எந்த பேதத்தையும் வளர்க்காமல் எல்லா உயிர்களுக்கும் சமமாகக் கதிர்களைப் பாய்ச்சி, வெப்பத்தையும் வாழ்க்கையையும் வழங்குகிறாயே, இதற்காக இந்த ஒரே ஒரு ஒப்புயர்வற்ற நோக்கத்திற்காகவே உனக்கு என் வந்தனம்.

    அடுத்த அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்வதில் ஓடியது.

    உபகரணங்கள் எதுவுமற்ற, தன்னிலை உடற்பயிற்சி. புஷ் ஷப் செய்கைகள். குனிந்து

    Enjoying the preview?
    Page 1 of 1