Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Netru Partha Nilavu
Netru Partha Nilavu
Netru Partha Nilavu
Ebook170 pages1 hour

Netru Partha Nilavu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465674
Netru Partha Nilavu

Read more from V.Usha

Related to Netru Partha Nilavu

Related ebooks

Reviews for Netru Partha Nilavu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Netru Partha Nilavu - V.Usha

    24

    1

    மதிமலர் கண் விழித்தாள்.

    இருளுக்கு இன்னும் முழுமையாக விடை கொடுக்க மனமின்றி கிழக்கு, விடியலுக்கு இடம் கொடுத்தும் கொடுக்காமலும் போக்கு காட்டிக் கொண்டிருந்தது.

    எழுந்தாள். ஜன்னலருகில் போய் கம்பிகளைப் பற்றிக் கொண்டு நின்றாள்.

    தோட்டம் தெரிந்தது. புதிய நாளை வரவேற்கும் ஆவலுடன் எல்லா தாவரங்களும் கிழக்கு நோக்கி காத்திருப்பதாகத் தோன்றியது. சூரிய வெளிச்சம் உட்புகாமலே விளைந்த சோகையான அரிசி, கோதுமையை சீன நாடு சோகத்துடன் தொலைக்காட்சியில் காண்பித்த காட்சி நினைவுக்கு வந்தது.

    அப்பாவின் குரல் மெல்லிய கம்பீரத்துடன் கேட்டது.

    ‘கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தனன் - கன இருள் அகன்றது...’ என்று ராகம் போட்டு பாடிக் கொண்டிருந்ததை செவிமடுத்தபடி அவள் நின்றாள்.

    கதிரவன்! சூரியன்! ஆதவன்!

    அவன் மட்டும் இல்லாவிட்டால் மனித வாழ்க்கை சாத்தியமா? பஞ்ச பூதங்களில் மிக முக்கிய ஒன்றான சூரியன், கோடானுகோடி வருடங்களாக எரிசக்தியை விநியோகித்தபடி, மனித சங்கிலித் தொடரைக் காப்பாற்றியபடி, மானுடவர்க்கத்திற்கு ஆற்றி வருகிற சேவையை நினைக்க நினைக்க அவள் நெஞ்சம் நன்றியால் நெகிழ்ந்தது.

    ‘ஓ, கதிரவனே! நீ வாழ்க! உன் புகழ் வாழ்க! அளவற்ற நின் கருணையால் இந்த பூமியின் சகல ஜீவராசிகளையும் நீ ரட்சித்துக் கொண்டே இருப்பாயாக!’

    குளியலறை வேலை முடிந்து வெளியில் வந்தாள். பொலபொலவென்று விடிந்திருந்தது. தினசரி போடும் பையன்களின் வண்டி மணியோசை கிணுகிணுவென்று இசைபோல கேட்டது.

    ‘அச்சுதா அமரர் ஏறே... ஆயர்தம்

    கொழுந்தே என்னும்

    இச்சுவை தவிர யான்போய்

    இந்திர லோகம் ஆளும்

    அச்சுவை பெறினும் வேண்டேன்

    அரங்க மா நகருளானே...’

    அப்பா கண்மூடி நெக்குருகி பாடிக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்தபடி அவள் புன்னகையுடன் அடுப்படிக்குப் போனாள்.

    அடக்கமான அம்மாவின் புகைப்படம் முன் கண்மூடி நின்றாள். உள்ளே அழகிய முகமும் சிவப்பு நிறமும் கல் அட்டிகையும் ஒற்றைக்கல் மூக்குத்தியுமாக அம்மா தேவதைபோல தோன்றினாள். கை நீட்டி மகளை அணைத்துக் கொண்டாள். ‘என் கண்ணே, இந்த நாள் உனக்கு இனிய நாளடி பெண்ணே’ என்று முத்தமிட்டாள்.

    பால் வாசனையுடன் பொங்கிற்று. வழக்கம்போல அப்பா கச்சிதமாக போட்டு வைத்திருந்த டிகாஷனுடன் பாலைச் சேர்த்து சர்க்கரையும் இணைத்து ஆற்றியபோது காபியின் நறுமணம் இதயத்தில் பாய்ந்தது.

    பாடலை முடித்துவிட்டு அப்பா காத்துக் கொண்டிருந்தார்.

    கொடும்மா... கொடு கொடு... என்று வாங்கிக் கொண்டார்.

    நல்ல கொதிப்பில் இருந்த காபி டம்ளரை துண்டினால் பிடித்துக் கொண்டு சீரான வேகத்துடன் துளித்துளியாக ரசித்து ரசித்து குடித்துவிட்டார்.

    அற்புதமான காபியோடு இந்த காலைவேளை தொடங்கிவிட்டதம்மா மதி... என்று புன்னகைத்தார்.

    என்னப்பா சமைக்கட்டும்? என்றாள் அவள் காலி டம்ளரை வாங்கிக் கொண்டு.

    இன்னிக்கு நான் சமைக்கிறேம்மா மதி... நேற்று முழுக்க கடுமையான வேலை உனக்கு... தோட்டத்திலேயே இருந்தாய்... முதுகு வலி, தோள் வலி என்று வந்திருக்கும். சொன்னால் வருத்தப்படப் போகிறேன் என்று வெளியில் சிரிக்கிறாய்... என்றார் கவலையுடன்.

    இல்லை அப்பா... என்று அவள் சிரித்தாள். உள்ளொன்று, புறம் ஒன்று என்று இரண்டு வகை பேச்சு எனக்கில்லை அப்பா. அப்படி நீங்கள் என்னை வளர்க்கவும் இல்லை...

    தோட்டத்திலேயே இருந்தாயே அம்மா, அதனால்தான் சொன்னேன்...

    "மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தேனே தவிர, இறங்கி ஒன்றும் வேலை செய்யவில்லை அப்பா... இயற்கை உரம் பற்றி நிறைய கேள்விப்படுகிறேன், படிக்கிறேன்... நாமோ தோட்டத்தை வைத்து வாழ்கிறோம்... பூக்கள், காய்கள், கனிகள் என்று அள்ளி அள்ளிக் கொடுக்கிற தாவரங்களுக்கு இயற்கை உரம் அளிப்பதுதான் நாம் கொடுக்கும் நன்றி என்று தோன்றியது அப்பா...’

    அதற்காக?

    கிணற்றை அடுத்த மூலையில் காலி இடம் ஒன்று இருக்கிறதல்லவா? மண்புழு வளர்க்க முடிவு செய்தேன்... நம் தோட்டக்கார வடிவேலு மூலமாக தோட்டக்கலை அலுவலரைக் கூட்டி வந்து வேலையைத் தொடங்கிவிட்டேன் அப்பா... உங்களிடம் சொல்லத்தான் வந்தேன்... நீங்கள் மிக சுவாரஸ்யமாக ஏதோ படித்துக் கொண்டிருந்தீர்கள்... சரி, தொந்தரவு தர வேண்டாம் என்று போய்விட்டேன்...

    ஆமாம் ஆமாம்... என்று அப்பா முறுவலித்துக் கொண்டார். கம்பராமாயணம்தான் படித்துக் கொண்டிருந்தேனம்மா மதி... எத்தனையோ தடவைகள் படித்த கவிதைதான்... ஆனால் நேற்று படித்தபோது ‘அடடா, அடடா, எவ்வளவு அழகான பக்தி!’ என்று மெச்சிக் கொள்ளத் தோன்றியது... அற்புதம்... சொல்லட்டுமா?

    குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தபடியே அவள் சொல்லுங்கள் அப்பா... என்றுவிட்டு, ரவையை எடுத்து தட்டில் பரத்திக் கொண்டாள்.

    "நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

    திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

    சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

    இம்மையே இராமவென்றிரண்டெழுத்தினால்"

    முணுமுணுப்பது போல ஆரம்பித்து உரத்த குரலில் பாடி முடித்தார் அப்பா. பெருமையுடன் அவள் பக்கம் திரும்பி எப்படிம்மா மதி? எவ்வளவு பக்தி கொட்டிக்கிடக்கிறது பார்த்தாயா? பக்தியும் பயமும் கொண்டு ஒருவன் ராமநாமா சொன்னால் போதும் நான்கு யுகத்தையும் வெல்ல முடியுமாம்... இசைக்கு மயங்காத தெய்வம் இல்லையே... கவிவாக்கு பாரேன், எத்தனை அற்புதமாக இருக்கிறது! என்னம்மா பேச்சையே காணவில்லை? என்றார்.

    ஒரு விஷயம் ஒப்புக் கொள்கிறேன் அப்பா... என்றாள் மகள் அதே புன்னகையுடன்.

    ராம நாமம் புண்ணியம் தேடித்தரும் என்பதைத்தானே...? என்றார் வேகமாக.

    தமிழ்மொழி அழகானது என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்கிறேன்.

    அப்படியானால்... கருத்து?

    வேண்டாம் அப்பா... விடியலிலேயே எதற்கு மாற்றுக் கருத்து... என்று நகர்ந்தாள்.

    சுதந்திர நாடு, சுதந்திர வீடு.. நீ சொல்லம்மா... என்றார் விடாப்பிடியாக.

    உழைப்பின்றி எதுவும் கிடைக்காது என்று நம்புபவள் நான்... ஓரிடத்தில் உட்கார்ந்து ராமநாமம் சொன்னால் போதும். எல்லாம் கிடைக்கும் என்பவர் நீங்கள்...

    அப்படியானால்... ராமனைப் பிடிக்காதா உனக்கு?

    அவன் போதித்த நட்பு, பொறுமை, ஒழுக்கம் இவை மட்டும்தான் பிடிக்கும் அப்பா... என்று அவள் சொன்னபோது தொலைபேசி அழைத்தது.

    2

    தொலைபேசியை எடுக்க எழுந்த அப்பாவை தடுத்துவிட்டு அவள் விரைந்தாள்.

    வணக்கம்... மதிமலர் பேசறேன்... என்றாள் வலது காதில் மாற்றிக் கொண்டு.

    நான் தானம்மா நல்லபெருமாள் பேசுகிறேன்... எப்படி அம்மா இருக்கிறாய், அப்பா நலம்தானே? என்றார் தளர்ந்த குரலில்.

    "எல்லோரும் நலம் மாமா... சொல்லுங்கள், திவ்யா எப்படி இருக்கிறாள்? முரட்டு குதிரை, இந்த தடவையாவது பழைய பாக்கி எல்லாவற்றையும் முடித்துவிட்டாளா? இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1