Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ananda Ragangal
Ananda Ragangal
Ananda Ragangal
Ebook171 pages1 hour

Ananda Ragangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465650
Ananda Ragangal

Read more from Vimala Ramani

Related to Ananda Ragangal

Related ebooks

Reviews for Ananda Ragangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ananda Ragangal - Vimala Ramani

    25

    1

    அது நண்பர்கள் கூட்டம். தன் வீட்டின் மொட்டை மாடியில் ஆனந்த் தன் நண்பர்களுக்கு, தன் பிறந்த நாளை முன்னிட்டு தருகிற விருந்து அது.

    தன் எல்லா நண்பர்களையும் அழைக்காமல் குறிப்பிட்ட தன் ஆத்மார்த்த நண்பர்களை மட்டும் ஆனந்த் அழைத்திருந்தான்.

    செந்தில், தியாகு, இனியவன், மாதவன், விக்கி, வளர்மதி, துரை - இது போன்ற சிலர்.

    ஒலி நாடாவில் சிட்டி பாபுவின் இனிமையான இசை.

    அது ஒரு ‘விருந்து வைபவம்’. அவரவர்களுக்கு விருப்பமானதை அவரவர்களே எடுத்துப் போட்டுக் கொண்டு கையேந்தி பவனில் நிற்கும் வாடிக்கையாளர்கள் போல...

    ‘வாழ்வில் கூட இப்படி தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும்படியான ஒரு அமைப்பு இருந்தால் எப்படி இருக்கும்?’

    ஆனந்த் யோசித்தான்.

    இவன் தன் நண்பர்களுக்குத் தருகிற பிறந்த நாள் விருந்து. தன் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் எதையாவது புதுமையாகச் செய்ய ஆசைப்படுகிறவன் ஆனந்த்.

    அனாதை இல்லங்களுக்குப் போய் உணவுப் பொட்டலம் வழங்குவது -- கோவில் வாசலில் காத்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு திடீர் பரிசாக எதையாவது தருவது -

    ஏழைச் சிறுவர் சிறுமிகளுக்கு முடிந்தவரை கல்வி கற்க தன்னால் ஆன பொருளுதவி எதையாவது செய்வது!

    இன்னும் இவன் தன் திருமணத்தைப் பற்றித்தான் நினைக்கவில்லை. அதிலும் ஏதாவது புதுமை செய்து பார்த்தால் என்ன?

    இந்தக் காலத்தில் சுயம்வரம் இல்லை! இருந்திருந்தால் இவனே கையில் மாலை ஏந்திக் கொண்டு போய் ஒவ்வொரு இளவரசியின் முன்பும் நின்று,

    அரசே... இந்த இளவரசி கலிங்க ராணி. பதிர் பேனி பெண்மணி - என்று எதுகை மோனைக்காக எதையாவது பிதற்றும் அறிவிப்பாளர் முன்னால்...

    தன் நினைவே சிரிப்பை வரவழைக்க ஆனந்த் இரைந்து சிரித்தான்.

    என்ன மச்சி படா குஷியா இருக்கே? - நண்பன் ஒருவன் கேட்டான்.

    உஸ்... இந்த மச்சி மாமோய்... சைட், தம், கோலி பக்கற குண்டு பக்கற - இதெல்லாம் இன்னிக்கு வேண்டாம்னு தானே வீணை இசை போட்டிருக்கேன்.

    ஐ! ஆனந்த் பிரேமானந்தாவா மாறிட்டான். நாங்களும் மாறியாச்சு! அப்போ நீங்க?

    பேசாம இருங்கடா... முதல்லே விருந்தை நல்லா சாப்பிட்டு முடிங்க.

    இந்தத் தயிர் சாத விருந்தை எவன் கேட்டான்? விருந்துன்னா ஒரு ‘திடீர்’ நிகழ்ச்சி வேண்டாம்?

    திடீர் தானே? இரு... இப்ப தரேன். எங்கே அந்த உணவுத் தட்டை எடு. என் கையிலே துப்பாக்கி. அதுலே உன்னைக் குறி பாக்கறேன். சாப்பிடற ஒவ்வொரு கவளமும் திடீர் தான்! போதுமா?

    போதும்டா சாமி...

    நண்பர்கள் சிரித்தனர்.

    மச்சி... ஸாரி ஆனந்த். உன் பொறந்த நாள் வருஷத்துக்கு ஒரு தடவையா வருது? வாரா வாரம் பொறந்த நாள் விருந்து கொடேன்.

    அப்ப எனக்கு சீக்கிரம் வயசாயிடுமே.

    இப்பவே வயசாயாச்சு. சீக்கிரம் ஒரு கண்ணாலம் கட்டிட்டு கல்யாண விருந்து தா நண்பனே!

    அதுவும் சரி தான். இன்னிக்கே ஒரு சபதம் எடு. இனி அடுத்த விருந்து உன் கல்யாண விருந்துதான்! சரியா?

    அது சரி... பிறந்த நாள் சபதம் ஒண்ணும் இல்லையா? - வருஷா வருஷம் பிறந்த நாள் சபதம்னு ஏதாவது பேத்துவியே! இந்த வருஷம் என்ன பேத்தல்?

    இந்த வருஷம் பேத்தல் இல்லை! செயல்!

    நண்பர்கள் கை தட்டினார்கள்.

    பொண்ணு பாத்துட்டியா?

    இனிமே தான் பாக்கணும்...

    அட போப்பா நீ...! உன்னைப் பொண்ணு பாத்துட்டா கல்யாணம் பண்ணிப்பாளா?

    ஏன்... - ஆனந்த் பொய்யாகக் கோபப்பட்டான்.

    டேய் முந்திரிப் பருப்பு எங்கேடா?

    டேய் அது என் விரல்டா. கடிச்சுத் தின்னுடாதே...

    கஸ்மாலம்... உன் விரல்லே சுவையா இருக்கப் போகுது? உப்புக்கரிக்கும்.

    உப்பிட்டவரை உள்ளளவும் நினை...

    கப்படிக்குதுடா... தள்ளி உட்காரு...

    ஏக சிரிப்பு... கலாட்டா...

    டேய்... நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லல்லை. உன்னோட பிறந்த நாள் சபதமா என்ன பண்ணப்போறே?

    இனிமே பிறந்த நாளே கொண்டாடப் போறதில்லைன்னு அறிவிக்கப் போறேன்.

    டேய்... டேய் எங்க வயத்துலே அடிக்காதேடா.

    சரி தலையிலே அடிச்சு சத்தியம் பண்றேன்...

    நீ ஒண்ணும் அடிக்க வேண்டாம். வாயிலே சொல்லு...

    ஏதாவது ஒரு நல்ல காரியம் பண்ணணும்டா...

    ஹேய்! இப்போ நாம பண்ணிட்டு இருக்கறதே நல்ல காரியம்தான். விருந்து சாப்பாடு இனிமை இதோ... இதோ... ஜிலேபி அதோ... அதோ...

    நண்பர்கள் சிரிப்பு. டேய் ஆனந்த் என்ன சபதம் பண்ணப் போறே?

    முதல்லே நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ. அப்பறமா சபதம் பண்ணலாம்.

    ஐடியா...

    கல்யாணத்துக்கா? சபதத்துக்கா?

    ரெண்டுக்குமே ஒரு ஐடியா... - ஆனந்த் தொடர்ந்தான்.

    நான் ஒரு விதவைக்கு வாழ்வு தரப் போறேன். ஒரு ஏழை விதவை யாராவது இருந்தா சொல்லுங்க. ஆனா அவ அழகா இருக்கணும்...

    மச்சி என் தங்கச்சிக்கு போன வருஷம் தான் கல்யாணம் ஆச்சு. பேசாம அவ புருஷனைக் கொன்னுட்டு அவளை விதவை ஆக்கிட்டு உனக்குக் கட்டி வைக்கட்டுமா?

    நம்பிக்கைத் துரோகம் பண்ணாதேடா நண்பா...

    நம்பிக்கைத் துரோகம் பண்ணினா அப்பறம் எப்படி நண்பனாக முடியும்?

    சரி அழகான இளம் விதவை, குடும்பப் பெண்ணா இருக்கணும். அவ வேலையிலே இருந்தாலும் பரவாயில்லை. கல்யாணத்துக்கு அப்பறமா ‘ரத்து’ பண்ணிக்கலாம்... ஓகே? போங்கடா... போய் பொண்ணு பாருங்க...

    தப்பு... விதவை பார்க்கணும்...

    சரி... சரி...

    ஹேய்... - என்று கத்தியபடி நண்பர்கள் பிரிந்தனர்.

    2

    "என்ன டைப் பண்ணி இருக்கே? ‘வி’ என்று வர்ற இடத்துலே எல்லாம் ‘யூ’ - ‘வி ஆர்’ என்கிறதுக்கு ‘யூ ஆர்’ன்னு போட்டா, அர்த்தமே மாறிப் போகாதா? ஏன்? கண்ணு தெரியலியா? கண்ணாடி போடு. என் கழுத்தை அறுக்காதே. குடும்பக் கஷ்டம்னு வேலைக்கு வர வேண்டியது; அப்பறம் என் கழுத்தை அறுக்க வேண்டியது. பேசாம வீட்டோட ஒரு மூலையிலே உட்கார்ந்து கனவு காண வேண்டியது தானே?"

    - வளர்மதி இரைந்து கத்திக் கொண்டிருந்தான். அந்தத் தட்டெழுத்துக் காகிதத்தை முகத்தில் வீசி ஏறிந்தான்.

    கீழே விழுந்த கோப்பை வானதி எடுத்துக் கொண்ட போது...

    அந்த அறைக் கதவு திறந்தது.

    ஆனந்த் உள்ளே நுழைந்தான்.

    கண்களில் நீர் ததும்ப வானதி அந்தக் ‘கோப்பு’டன் வெளியேறியபோது...

    இவனை நிமிர்ந்து பார்த்தாள்.

    அவள் நெற்றி

    Enjoying the preview?
    Page 1 of 1