Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kandharva Veenaigal
Kandharva Veenaigal
Kandharva Veenaigal
Ebook114 pages1 hour

Kandharva Veenaigal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465650
Kandharva Veenaigal

Read more from Vimala Ramani

Related to Kandharva Veenaigal

Related ebooks

Reviews for Kandharva Veenaigal

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kandharva Veenaigal - Vimala Ramani

    19

    அத்தியாயம் 1

    பெயர்?

    சஞ்சய்

    சஞ்சய் ராமசாமியா?

    இல்லை மேடம்...புன்செய் ராமசாமி

    வாட் யூ மீன்?

    எங்கப்பா பேர் ராமசாமி தான். அவர்கிட்ட வானம் பார்த்த பூமி புஞ்சை நிலம் தான் நிறைய... அதனால அவரை எல்லோருமே புஞ்சை ராமசாமின்னு கூப்பிடுவாங்க...

    அவளுக்கு சிரிப்பு வந்தது.

    கஜினி சினிமா வந்தாலும் வந்தது. என்னை எல்லோருமே சஞ்சய் ராமசாமின்னே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க

    ஷார்ட் மெமரி இல்லையே?

    நோ மேடம். வேலையைக் கொடுத்துப் பாருங்க...எவ்வளவு ப்ரில்லியன்டுன்னு தெரியும். நூறு வருஷம் கதை கூட மறக்க மாட்டேன்.

    நூறு வயசாயிடுச்சா? நம்ப முடியல்லையே...

    உம்... சரித்திர பாடம் படிக்கிறவங்க எல்லாம் ஆயிர வருஷக் கதையை நினைவு வைச்சிருக்காங்க... அப்போ அவங்களுக்கு ஆயிரம் வயசா? ஸாரி... கொஞ்சம் அதிகப் பிரசங்கம் பண்ணிட்டேனோ?

    கொஞ்சம் இல்லை... ரொம்பவே... ஓ.கே... நீங்க போகலாம்...

    அப்போ...?

    இந்தாங்க... நீங்க இங்கே மறந்து வைச்சுட்டுப் போன உங்க ஆபீஸ் ஃபைல். எல்லாம் சரியா இருக்கா பார்த்துக்கங்க...

    நீங்க கேட்ட கேள்வியைப் பார்த்தா இங்கே எனக்கு வேலை தர்றதுக்காக இன்டர்வியூ நடத்தறீங்களோன்னு சந்தேகப்பட்டேன்,

    உம்... யூ மே கோ நௌ...

    யெஸ் மேடம்

    அவன் தன் ஃபைலை வாங்கிக்கொண்டு கண்ணாடி கேபினின் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

    திரும்பிப் பார்த்தான்.

    ப்ரவீணா..எம்.டி. திவ்யா குரூப் ஆப் கம்பெனிஸ் என்று போட்டிருந்தது.

    காலை இங்கு இவன் வந்ததென்னவோ உண்மைதான். தன் நண்பன் ஒருவனைச் சந்திக்க வந்தான். ரிஸப்ஷனில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பி விட்டான். பாதி வழியில் போனதும்தான் கையில் ஃபைல் இல்லாதது தெரிந்தது. ஆபீஸ் கணக்கு வழக்கு பைல். அக்கௌன்டண்ட் ஒரு முசுடு... மேலே விழுந்து பிடுங்கும். அவசரமாகத் திரும்பி வந்து ‘ரிஸப்ஷ’னில் பார்த்தால் ஃபைலைக் காணவில்லை.

    ரிஸப்ஷனில் கேட்டான்.

    ஓ ஃபைல் உங்களுது தானா அது? யாரோ மறந்து வைச்சுட்டுப் போயிட்டாங்கன்னு எம்.டி. ரூம்லே கொடுத்துட்டேன். இருந்து வாங்கிட்டுப் போயிடுங்க...

    இவன் எம்.டி.ரூமை நோக்கிப் போன போது...

    வெயிட் பன்ணுங்க ஸார். க்ளையண்ட்ஸ் கிட்ட எம்.டி.பேசிட்டு இருக்கார். நான் சொன்னப்பறமா போங்க..

    எரிச்சலுடன் காத்திருந்தான்.

    ‘வேணும்... எனக்கு நல்லா வேணும். என் மறதிக்கு சரியான தண்டனை..’

    கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ரிசப்ஷனிஸ்ட்யூ கேன் கோஎன்று சொன்ன பிறகு இவன் எம்.டி.அறைக்குள் நுழைந்தான்.

    டை கட்டிய ஒரு வயதான ஆளை எதிர்பார்த்துப் போனவனுக்கு அப்சரஸ் மாதிரி அமர்ந்திருந்த அந்த அழகியைக் கண்டதும் வியப்பாகி விட்டது.

    எம்.டி.யின் பெயரைக்கூடப்பார்க்காமல் அறைக்குள் நுழைந்த தன் மடத்தனத்தை நினைத்தபடி குட் மார்னிங்..ஸார்..ஸாரி மேடம்..என்று ஆரம்பத்திலேயே அபத்த அறிமுகம் செய்து கொண்டான்.

    நீங்க?

    அதன்பின் தான் ஆரம்ப வாசகங்கள்.

    இவன் யோசித்தபடி தன் பைக்கின் அருகில் வந்தபோதுதான் தெரிந்தது.

    பைக் சாவியை எம்.டி.யின் டேபிளிலேயே விட்டு விட்டு வந்த உண்மை.

    மீண்டும் போகவேண்டும்

    கொஞ்சம் உற்சாகமாகவே மீண்டும் உள்ளே நுழைந்தான்.

    அத்தியாயம் 2

    ப்ரவீணா ஆபீஸ் ஃபைல் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

    திடீரென்று ஏதோ நிழலாடிய மாதிரி...

    நிமிர்ந்து பார்த்தாள்.

    கண்ணாடி கேபினுக்கு வெளியே அவன்..யாரவன்? சஞ்சய் ராமசாமி..

    சீ..வெறும் சஞ்சய். ஏதோ அபிநயித்துக் கொண்டிருந்தான்.

    உள்ளே வரச்சொல்லி சைகை காட்டியபோது புயலாக உள்ளே நுழைந்தவன்..

    ஸாரி மேடம்.. பைக்கோட சாவியை உங்க டேபிள்ளேயே விட்டுட்டேன்.

    அசடு வழிந்தான்.

    ப்ரவீணா சிரித்தாள்.

    முதல்லே ஃபைலை மறந்தீங்க. இப்போ சாவி..வேற எதையாவது விட்டுட்டுப் போயிடாதீங்க..மறுபடியும் வர வேண்டி இருக்கும்..

    சஞ்சய் சாவியை எடுத்துக்கொண்டான்..

    ம்..கொஞ்சம் பழக்கமாகி இருந்தா,

    ‘யெஸ் மேடம்... என் மனசை விட்டுட்டுப் போறேன். கண்டுபிடிச்சு வைங்க..அப்புறமா நான் வந்து யார் மனசுல யாருன்னு கேள்வி கேட்பேன்.’

    நினைத்துக் கொண்டான். ஆனால்

    Enjoying the preview?
    Page 1 of 1