Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Man Veenaigal
Man Veenaigal
Man Veenaigal
Ebook114 pages44 minutes

Man Veenaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465667
Man Veenaigal

Read more from Vimala Ramani

Related to Man Veenaigal

Related ebooks

Reviews for Man Veenaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Man Veenaigal - Vimala Ramani

    11

    1

    பஸ் போய்க் கொண்டிருந்தது. உச்சி வேளை. சம்மர் சீசன். ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை. இல்லை யென்றால் இப்படி இந்த உச்சி வெய்யிலில் பஸ் பயணம் தேவை இல்லை.

    பெங்களூருக்கும், கோவைக்கும் இரவு நேர ரயில்கள் இருந்தாலும், அத்தனையும் ஃபுல். இரவு நேர பஸ்ஸில் கூட டிக்கெட் கிடைக்கவில்லை. அதுதான் இந்த உச்சிவேளை பஸ் பயணம். இல்லையென்றால் ஒரு ஏஸி பஸ்ஸில் நிம்மதியாய் இரவுப் பயணம் முடித்து பெங்களூர் போய்விடலாம்.

    வியர்த்தது. சிவசுப்ரமண்யன் சற்றே சாய்ந்து உட்கார்ந்திருந்தார். அருகில் சீட் காலியாக இருந்தது. யார் வருவார்கள்? கொஞ்சம் நாகரீகம் தெரிந்தவர்கள் வந்தால் பரவாயில்லை. இல்லையென்றால் இவர் சீட்டையும் ஆக்கிரமித்துக் கொள்வான். என்னதான் ஹேண்ட் ரெஸ்ட் இருந்தாலும் நாகரீகமும் இருக்க வேண்டும்.

    இவர் பஸ் கிளம்பும்போதே டிப்போவிலேயே ஏறி விட்டார். இனி ஒவ்வொருவராக பஸ் டெர்மினஸ், பஸ் ஸ்டாப்பு என்று ஒவ்வொரு இடமாக ஏறுவார்கள்.

    சரி... இப்போதைக்கு பக்கத்து சீட் காலி. கொஞ்சம் தாராளமாக உட்காரலாம். கையோடு கொண்டு வந்திருந்த மினரல் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடித்தார் சிவசுப்ரமண்யம்.

    தன் கையில் இருந்த பௌச்சைத் திறந்தார். கர்ச்சீப்போடு ஒரு கல்யாண அழைப்பிதழும் கீழே விழுகிறது.

    ‘கடவுளே... இந்த அழைப்பிதழ் முக்கியம். இது இருந்தால்தான் கல்யாண சத்திரத்தின் விலாசத்தைத் தேடிக் கண்டு பிடிக்க முடியும்’.

    பசவன்குடியில் ஏதோ ஒரு திருமண மண்டபம். கஞ்சம் மண்டபமோ? பஞ்சம் மண்டபமோ? ஃபோன், செல் எல்லா நம்பர்களும் இருந்தன.

    நாளை மறுநாள் திருமணம். நாளை மாப்பிள்ளை அழைப்பு, ரிசப்ஷன் எல்லாமே!

    மணப்பெண் பெயர்...?

    வண்டார் குழலி.

    அழகான தமிழ்ப் பெயர்.

    சிவசுப்ரமண்யம் நண்பன் கார்த்திகேயனின் மகள்.

    சிவாவும், கார்த்தியும் சிறுவயது முதல் ஒன்றாக ஒரே இடத்தில் இருந்தவர்கள். ஒரே பள்ளியில் படித்தவர்கள். ஒரே கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடியவர்கள். ஒரே கல்லூரியில் இடம் கிடைத்தது. ஒரே க்ரூப்பில் சேர்ந்தவர்கள். இத்தனை ஒற்றுமை இருந்ததால் தானோ என்னவோ...?

    தொலையட்டும். அதெல்லாம் பழைய கதை.

    பின் வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தவர்கள். சிவா டெல்லிக்கும், கார்த்திகேயன் சென்னைக்குமாகப் பிரிந்து போனவர்கள்.

    ஆரம்பத்தில் இருவரும் கடிதம் போட்டுக் கொண்டனர். ஃபோனில் பேசிக் கொண்டார்கள். கடைசியில் அந்தத் தொடர்பும் விட்டுப் போக அவரவர் பாதையில் அவரவர் பயணித்துக் கொண்டிருந்த அந்த வேளையில் தான் -

    டெல்லியில் அமெரிக்கன் எம்பஸியில் தன் மகளின் மேற்படிப்புக்கான விசாவுக்காக கார்த்திகேயன் காத்திருந்த போது தான், அதே வரிசையில் காத்திருந்த சிவா

    தன் பழைய சினேகிதனை சந்தித்தார்.

    அட... நீ கார்த்தி இல்லை?

    நீ சிவா இல்லை?

    இருவரும் கடந்த காலம் பற்றிப் பேசினார்கள். கல்லூரி நாட்கள் பற்றிப் பேசினார்கள். கல்லூரி நாட்களில் நாடகம் போட்ட அனுபவம் பற்றிப் பேசினார்கள்.

    உணர்ச்சி வசத்தில் காதலியாக நடித்த கார்த்திகேயனின் தலையை காதலனாக நடித்த சிவா பிடித்து இழுத்தபோது ‘விக்’ கையோடு வந்து மாணவ, மாணவிகளின் சிரிப்பும், விசிலும், கிண்டலும், கை தட்டலும் அரங்கத்தில் ஒலித்த அந்தப் பழைய நினைவுகளில் மூழ்கினார்கள்.

    எப்படிடா இருக்கே கார்த்தி?

    - சிவா கேட்டார்.

    நல்லா இருக்கேன். ஒரே பொண்ணு. இன்ஜினியரிங் முடிச்சுட்டு எம்.எஸ்.பண்ண அமெரிக்கா போறா. அதுக்குத்தான் அலையா அலையறேன். பாங்க் பாலன்ஸ் அது இதுன்னு ஏகப்பட்ட கெடுபிடிகள். இப்போ முந்தி மாதிரி இல்லை. அமெரிக்கா போறதுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ். உம். பெண் குழந்தை. என்னதான் படிச்சிருந்தாலும் தனியா அனுப்ப பயமாத்தான் இருக்கு. என்ன பண்றது? என் ஒய்ஃபோட ரிலேஷன் அங்கே இருக்காங்க. அங்கே அவங்க வீட்டிலே தங்கறதா? இல்லை யூனிவர்சிடி ஹாஸ்டல்லே தங்கறதான்னு தினமும் எங்க வீட்ல பட்டிமன்றம்தான். சம்மர் டிரஸ்- வின்டர் டிரஸ்ன்னு ஏகப்பட்ட செலவு. அவ பிடிவாதமா எம்.எஸ்.படிப்பேன்னு சொல்றா. என்ன பண்றது?

    உன் பெண் பேர் என்ன?

    வண்டார் குழலி! இந்தப் பேரை வைச்சுட்டு அமெரிக்கா பயணம். அமெரிக்கன்ஸ் இவ பேரை ஒரு வழி பண்ணிடுவாங்கன்னு நினைக்கறேன். வண்டு, குழலி, குஜ்லின்னு. இவ அமெரிக்காவிலே போய் படிப்பான்னு தெரிஞ்சிருந்தா பேசாம மார்டனா வேற பேர் வைச்சிருக்கலாம்.

    சிவா சிரித்தார்.

    "அது சரி.

    Enjoying the preview?
    Page 1 of 1