Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manasaiththadi Manikkuyile
Manasaiththadi Manikkuyile
Manasaiththadi Manikkuyile
Ebook180 pages1 hour

Manasaiththadi Manikkuyile

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465636
Manasaiththadi Manikkuyile

Read more from R.Geetharani

Related authors

Related to Manasaiththadi Manikkuyile

Related ebooks

Reviews for Manasaiththadi Manikkuyile

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manasaiththadi Manikkuyile - R.Geetharani

    16

    1

    உச்சி வெயில் மெள்ள மெள்ள உயர்ந்து நடுவானைத் தொட்டுக் கொண்டிருந்த நண்பகல் பொழுது. சூழலில் வெக்கை அறுவித்தின்றது. தகிக்கிற வெப்பத்திற்கு வேப்பமரத்திலிருந்த ஒரு கிளை கூட அசைகிறதாகக் காணோம். மரக்கிளைகளே ‘ஆ’வென்று வாய்ப்பிளந்து காற்றுக்காக ஏங்கி நிற்கிறது போன்று இருந்தது. இதில் தோட்டத்து தாவரங்கள் அசைந்து கொடுப்பதாயில்லை.

    சரண்யா வலது பக்கம் மெள்ள தலையைத் திருப்பி தூரத்தே தெரிகிற மலையைப் பார்த்தாள். மேற்குத் தொடர்ச்சி மலைகள். அழகிய அருவிகள், சின்னஞ்சிறு சிற்றோடைகள் என்று மழைக்காலத்தில் நல்ல செழிப்பமாகவும், மற்ற காலங்களில் மிதமாகவும் உருவாக்கி தன் சுற்றுப்புற மனிதர்களை வாழ வைத்துக் கொண்டிருந்த மலைகளைப் பார்த்த பொழுது மனதில் நெகிழ்ச்சி பிறந்தது.

    நான்கு வருடங்களுக்கு முன் ராஜீவை முதன் முதலாகக் கரம் பற்றிக் கொண்டு இந்த மண்ணில் அடியெடுத்து வைத்த போது எல்லாம் புதிதாய், புத்தம் புதியதாய் ரசிக்கத்தக்க ஒன்றாக இருந்தது. இன்று ஏனோ வெறுப்பை மெள்ள தோற்றுவிப்பதாய் மாறிவிட்டிருந்தது. காலத்தின் கோலம் போலும். ராஜீவோடு வாழ்ந்த வாழ்க்கை மனக் கண்ணில் வந்து போனது.

    எல்லாம் தலையெழுத்து வேணும்டி பொண்ணே... என்று அத்தை அடிக்கடி சொல்வாள். நிஜம் தான் போலும்... இல்லாது போனால் ராஜீவிற்கு வேலை தான் போயிருக்குமா... இல்லை நான் தான் சுவரிலடித்த பந்து போல தாய் வீட்டிற்கு வந்து விழுந்து இருக்க இயலுமா..?

    அக்கா... என் நோட்டு எங்கே...? உள்ளே அறையிலிருந்து செளம்யா குரல் கொடுத்தாள்.

    இதோ வந்துட்டேன்டி... உன் நோட்டு என்னைக் கேட்டா வெக்கிறே...? படிக்கிற பொண்ணு லெட்சணமா பார்த்து பத்திரமா வெச்சுக்குவியா... அதை விட்டுட்டு என்னைக் கேட்கறா... வாய்பாட்டிற்கு ஏதோ பேசினாலும் சரண்யா நோட்டை தலையணையின் மீது இருந்து எடுத்து வந்து வைத்தாள்.

    அக்கா... எனக்கு இந்த பூவைக் கொஞ்சம் வெச்சிவிடேன்... கனகாம்பரச் சரத்தினைக் கொண்டு வந்து வைத்தாள் சரண்யாவின் கரத்தினில்.

    ம்... பூச்சரம் கூட ஒரு பின் குத்தி வெச்சுக்கத் தெரியாது. நீ இந்த வருஷம் ப்ளஸ் டூ எக்ஸாம் எப்படி எழுதப் போறியோ.. இந்த அம்மாவைச் சொல்லணும் எல்லாம்.. என்றவாறே பின்னை லாவகமாக சொருகி பூவை வைத்து விட்டாள்.

    அக்கா... போயிட்டு வரேன்க்கா... செளம்யா இரட்டைப் பின்னலை பின்னுக்கு தள்ளி பூச்சரம் ஊசலாட பள்ளிக்கு சைக்கிளில் கிளம்பி விட்டாள். கோட்டையூர் சிவசுப்பிரமண்யம் உயர்நிலைப் பள்ளியில் தான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள் செளம்யா.

    சரண்யா தான் வீட்டின் மூத்தவள். எல்லா புகழும் இறைவனுக்கே என்கின்ற விதமாய் எல்லாச் சுமையும் மூத்தவளான சரண்யாவின் தலையில் தான் விழுந்தது என்றே சொல்ல வேண்டும். தெரிந்து தான் ராஜீவைக் காதலித்து மணந்தாலோ.. இல்லை விதியின் விளையாட்டோ... காலம் தான் அறியும்.

    ராஜீவைக் கண்ணால் பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டாள். அப்பேர்ப்பட்ட காதல். ஒரு நாள் அவசரமாய் இருவரும் ஓடிச்சென்று ரிஜிஸ்டர் அலுவலகத்தில் மணம் முடித்துக் கொண்டு வந்து உற்றம், சுற்றத்தை வியப்பிலாழ்த்திய திருமணம் இதோ... இன்று வெற்றுக்கனவாய்...

    சரண்யாவின் விழிகள் முன் அந்த நாட்கள் மெள்ள மெள்ள வந்து போகின்றது.

    உண்டால் சோற்றுப் பருக்கைகூட தொண்டைக் குழியில் இறங்காத ஒரு துக்க உணர்வு உள்ளுக்குள் கிளைத்து நெருடும் - நினைவுகளை.

    இந்த ஊரே வேணாம் சரண்யா... நான், நீ, செளம்யா மூணு பேருமா எங்காவது போய்டலாம் சரியா... அம்மா அடிக்கடி சொல்வாள்.

    ஆனால்.. செயலில் இறங்கிவிட மாட்டாள். ஏன் என்றால்... கணவருடன் வாழ்ந்த மண் என்பதில் பிணைப்பு அதிகமிருந்தது.

    செளம்யா போயிட்டாளா சரண்...? என்று அம்மாவின் குரல் கேட்டது.

    இதோ... வந்துட்டேன்ம்மா... என்றவள் கோழிக் கிடாப்புகளை எல்லாம் திறந்து தீவனம் வைத்து விட்டு, சிறு குவளைகளில் நீரை வார்த்து விட்டு கதவை தாழ்ப்பாளிட்டு உள்ளே வந்தாள்.

    அம்மா.. இப்போ... உடம்புக்கு பரவாயில்லையா...? எப்போ எழுந்திரிச்சீங்க...? நான் தான் ரெஸ்ட்ல இருங்கன்னு சொல்லி இருந்தேனில்லை...

    இப்பத்தான்ம்மா எழுந்தேன்... ராத்திரி மாத்திரை போட்டது மேலுக்கு கிறுகிறுன்னு கொண்டு தள்ளிச்சுது. ஒண்ணுமே முடியலை சரண்...

    இப்போ எப்படிம்மா இருக்கு...? சுடச்சுட டீயை அவரது கரத்தினில் டபரா செட்டுடன் வைத்தவள் நின்று அம்மாவை பார்த்தாள். நாற்பத்தெட்டு வயதிற்கு கட்டான திரேகம், லேசான நரை, கூரிய நாசி, அகன்ற நெற்றி, சாந்த சொரூபியான விழிமணிகள் எல்லாம் சேர்ந்த பெண்மணி தான் என்றால் அது மிகையில்லை.

    சரண்ம்மா.. ஒரு முக்கியமான விசயம் பேசணும். சும்மாதானே இருக்கே...?

    ம்... சொல்லுங்கம்மா...

    வந்து... நம்ம சின்னய்ய கவுண்டர் வந்திருந்தார் கண்ணு...

    ம்...

    அவரோட ரெண்டாவது மகன் சீனிவாசனுக்கு உன்னை கட்டி வெக்க பிரியப்படறார் தாயி..

    அம்மா.. என்னைப் பொறுத்த வரைக்கும் கல்யாணம்ன்றது ஏற்கனவே நடந்து முடிஞ்ச ஒண்ணும்மா. அதைக் கிளறிப் பார்க்கறதோ இல்லை புதுசா எதையாவது ஒண்ணு செய்யறதோ எனக்குப் பிடிக்கலைம்மா. என்னை வற்புறுத்த வேணாம்மா. ஏற்கனவே நடந்து முடிஞ்ச ஒரு நிகழ்ச்சியை நான் மறுபடியும் என் வாழ்க்கையில நிகழ்த்திப் பார்க்க விரும்பலைம்மா. போதும்மா.. எனக்கு நீங்க, செளம்யா, நான்னு மூணு பேர் உள்ள இந்த குடும்பமும், இந்த தோட்டமும், சின்ன கோழிப்பண்ணையும் போதும்மா. இந்த வாழ்க்கையை விடவா அம்மா நாம இன்னொருத்தர்கிட்டே போய் எதிர்பார்த்துட முடியும்..?

    அது இல்லே சரண்யா... ஒரு பொண்ணோட வாழ்க்கையில ஆண் துணை அவசியம் வேணும்மா...

    வாழ்ந்த வரைக்கும் போதும்மா... வேற ஏதாவது பேசேன்...

    சரி.. உனக்குப் பிடிக்காதது எதுவும் நான் பேசலை சரண்யா. என்னைக்காவது ஒரு நாள் நீயா யாரையாவது மறுபடியும் கூட்டிட்டு வந்து நின்னாலும் நான் மறுப்பு சொல்லிடப் போறதில்லை. ஏன்னா... நான் உன் மேல வெச்ச பாசம் பெரிசு சரண். காலம் முழுக்க உன்னை என் கண்பார்வையில வெச்சு பார்த்துட்டு இருக்கணும் சரண். ஊர் உலகம் ஆயிரம் பேசும். சொல்லும். யார் வீட்ல குறை இல்லை சொல்லும்மா. எல்லாம் நல்லா கண்ணுக்கழகா இருந்தா சரி தான்ம்மா.

    அம்மா... நீங்க ஆயிரம் சொல்லுங்க. உங்களுக்கு எப்படி என்னை கண் முன்னே வெச்சுப் பார்க்கணுமோ அதுபோல எனக்கும் என் செளம்யா குட்டி மேல அன்பு அதிகம்மா. நான் அவளுக்காக ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கித் தரணும்மா. அவள் நல்லா படிக்கணும். மேலே வரணும். அவளுக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணிச்சுட்டுப் போயிடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்ம்மா...

    சரிம்மா... உன் விருப்பம் போல செய். உன் விருப்பத்துக்கு மாறா நான் என்னைக்கு நடந்துக்கிட்டு இருக்கேன் சொல்லும்மா...

    அம்மா எப்பொழுதும் இப்படித்தான் - சரண்யாவிற்கு சாதகமாகத்தான் பேசுவாரேயன்றி மனசறிந்தும் கூட பாதகமாக பேசமாட்டார். ராஜீவை ஆசைப்பட்டு கரம் பற்றின அன்றும் அதே நேசம்தான். ராஜீவை வாழ்நாளில் பறிகொடுத்து தவித்து நின்ற

    Enjoying the preview?
    Page 1 of 1