Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Sooriyan, Naan Thamarai
Nee Sooriyan, Naan Thamarai
Nee Sooriyan, Naan Thamarai
Ebook200 pages1 hour

Nee Sooriyan, Naan Thamarai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465636
Nee Sooriyan, Naan Thamarai

Read more from R.Geetharani

Related to Nee Sooriyan, Naan Thamarai

Related ebooks

Reviews for Nee Sooriyan, Naan Thamarai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Sooriyan, Naan Thamarai - R.Geetharani

    18

    1

    நீ வரும் பாதையில்

    நேரம் கணித்துக் காத்திருந்து

    காதல் வளர்த்தது - ஒரு காலம்;

    நீ இல்லாத வாழ்க்கைப்பாதையில்

    வாழ்வே அர்த்தமில்லாதது - எனக்

    கணித்துக் கரம்பிடித்து

    காதலுக்கு மகுடம் சூட்டியது - ஒரு காலம்;

    எல்லாம் கனாக்காலமாய்

    தேடலுக்கு அகப்படாத பொருளாய்

    தூண்டிலுக்குச் சிக்காத விலாங்குமீனாய்

    ஏக்கப் பெருமூச்செறிகிறது இன்று!

    சேலம் -

    பட்டும், பனாரசும், வைரமும், தங்கமும் பளபளக்கும் கல்யாண வீட்டின் இனிய மாலை நேரம். ஸ்பீக்கரின் உச்சஸ்தாயி காதை இனிமையாய் அறைந்தாலும், பரஸ்பரம் பேசிக் கொள்ளும் தொனியின் அலைவரிசையும் அடிவயிற்றிலிருந்துதான் வெளிப்படுத்தியாக வேண்டியிருந்தது. ஆனாலும், பேசிக்கொண்டேதான் இருந்தார்கள் சந்தோஷம் பொங்க பொங்க.

    இது எதனையும் பொருட்படுத்தாத கஸ்தூரி, மணப்பெண்ணை அலங்கரிப்பதில் வெகு முனைப்புடன் ஈடுபட்டிருந்தாள். க்ளன்சிங்மில்க் வாஷ், பேஷியல் ஃபவுண்டேஷன் என படிப்படியாய் முடித்து முகத்தைப் பொலிவாக்கிக் கொண்டிருந்தாள். நேர்த்தியான அவளின் ஒப்பனையில் பார்த்துப் பார்த்து பொறுமையான கலையுணர்வுடன் செய்யப்பட்ட அழகு கண்ணைக் கவர்ந்திழுத்தது காண்பவரை.

    உண்மையில், மணப்பெண் உஷாநந்தினி சற்று முன்னர் இந்த அறைக்குள்ளிருந்த பெண்மையின் தோற்றமா...? என ஐயுறத்தக்க எழில் வண்ணம் வெகு இயல்பான ஒன்றாய்ப் பொழிந்தது. ஒப்பனையின் தன்மையை அறிந்த ஒரு சிலர் கஸ்தூரியின் கரம் பற்றி பாராட்டுத் தெரிவித்தனர்.

    கஸ்தூரிக்குள் சந்தோஷப் பூரிப்பு. இந்தக் கலைத்தொழில்தானே இன்று அவளை மானத்துடன் வயிறு நிறைத்து வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

    ஒப்பனை முடியவும், வெளியே தாரை தாரையாய் மழைக்கம்பிகள் மண் தொடவும் சரியாக இருந்தது. மழை முகம், மேனி தொட்டதை உணர்ந்தவர்கள் சாமியானா பந்தலிற்குள்ளும், வீட்டின் முகப்பிலும், மாடி அறையிலும் என இடம்தேடி பதுங்கிக் கொண்டனர்.

    ‘கிடு கிடு’ என்ற குளிர் வேறு இடையே... லேசாய் விருந்தாளிகளைக் கிடுகிடுக்க வைத்தது.

    என்னடி... கல்யாணப் பொண்ணே... நந்தினி! அரிசி நிறைக்கத் தின்னியோ...? மழை இப்படி கொட்டுது கல்யாணப் பந்தல்லே... என்று உஷாநந்தினிக்கு சித்தி முறையான உறவுக்காரப் பெண்மணி ஒருவர் கிண்டலடித்தார். கூட்டத்தில் சிரிப்பொலி. பசிக்குரல் ஒலி. மழைவிடுவதற்கு சுத்தமாய் அரைமணி நேரத்துக்கும் மேலாயிற்று.

    உஷாநந்தினி ஜானவாச ஊர்வல அழைப்பிற்குத் தயாராகும் முகமாக வேறு பட்டுப்புடவைக்கு மாறிவிட்டிருந்தாள். கஸ்தூரி தனது மேக்கப் பாக்ஸை தயார்படுத்திக் கொண்டு கிளம்புவதற்கு ஏதுவாக வானத்தின் முகம் பார்த்தாள். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்கிறாற்போல் தூறல் கண்கள்.

    என்ன கஸ்தூரி... வானத்தைப் பார்த்துட்டு... வா... முதல்ல சாப்பிடு. ரகு இருக்கான். கொண்டு விட்டுடச்சொல்றேன். காலையில ஆறரை மணிக்கு முகூர்த்தம். அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் நீ இங்கே இருந்தாத்தான் மணப்பெண் அலங்காரத்துக்குச் சரியாயிருக்கும். ஒண்ணு பண்ணேன். பேசாமல் இங்கேயே ராத்தங்கிடேன். அலைச்சல் இல்லை... என்ன நான் சொல்றது...? உஷாநந்தினியின் தாயார் பேசிக்கொண்டே அவளைச் சாப்பிட, கூடத்திற்கு அழைத்துக் கொண்டு நடந்தாள்.

    சிரமம்ன்னு பார்த்தா எல்லாம் சிரமம்தான். பாட்டிம்மா என்னைப் பார்த்துட்டு இருப்பாங்க. நான் போனதுக்கப்புறம் தான் சாப்பிடுவாங்க....

    மழை நாள்ல என்ன பண்ணறதாம்...? வேண்ணா... ஃபோன் போட்டு சொல்லிடலாமா...?

    வேணாம்மா. உடுப்பும் நாளைக்குன்னு எதுவும் கையோட கொண்டு வரலை. சாப்பாட்டை பார்சல் பண்ணி எடுத்துக்கிறேனே... எனக்கு இப்போ பசிக்கிற மாதிரி இல்லை...

    ம்... நீ எதுக்காகச் சொல்றேன்னு எனக்குப் புரியுது. இலை போடறேன் நீ முதல்ல சாப்பிடு. சமையக்கட்டுல சொல்லிடுறேன். போறப்போ அம்மாவுக்கு பார்சல எடுத்துட்டுப்போ. வா...! வலுக்கட்டாயமாகப் பாக்யலட்சுமி அவளை உட்கார வைத்து வாழை இலை பரப்பி தானே நீர் தெளித்து பரிமாற உத்தரவிட்டுவிட்டு, சமையற்கட்டிற்குச் சென்று ஒரு கண் மேற்பார்வை பார்த்துவிட்டு, ஞானாம்பாள் பாட்டிக்கு என உணவுப் பொட்டலப் பையுடன் கஸ்தூரி முன் வந்து நின்றாள்.

    என்னடி... பொண்ணே... கஸ்தூரி! மழையிருட்டுக்கு நேரம் போறது தெரியாமல் இழுத்துப் போர்த்திட்டுத் தூங்கிடுவியா...? இல்லை... காலேல நேரத்துக்கு வந்து சேர்ந்துடுவியா...? இன்னும் கொஞ்சம் சாதம் வைக்கச் சொல்லட்டுமா..?

    இல்லை... போதும்மா... இதுவே அதிகமாத்தான் சாப்பிட்டுட்டேன்... இலை மூடி, கையலம்பி இடுப்பில் செருகப்பட்டிருந்த கர்ச்சீப்பால் கைகளின் ஈரம், முகவாய் துடைத்து பாக்யலட்சுமியை ஏறிட்டாள்.

    ரகுவோட வண்டியில போய்க்கோ... மணியாய்ட்டது. என்ன நான் சொல்றது புரியுதா...? எனக்கு நிறைய வேலைகள் கிடக்கு. முன் கூடத்தில இருந்தாக வேண்டிய ஆளு நான்... பாக்யலட்சுமி சொன்ன வேகத்திலேயே பட்டுப்புடவையை லேசாய்த் தூக்கிப் பற்றின கையுடன், எதிர்பட்ட உறவு முகங்களிடம் மெல்லிய புன்னகையுடன் ‘வாங்க... வாங்க...’ என்ற உபசரிப்பு தலையாட்டலுடன் முன் கூடத்திற்கு விரைந்தாள்.

    என்ன பாக்யா... எங்கே போயிட்டே..? செய்முறைக்கு உன்னை ஆளனுப்பிச்சுத் தேடறதாயிருக்கு. பொண்ணைப் பெத்தவ பொண்ணோட இருக்க வேணாமா...? வா... வா... நெருங்கிய உறவு மூதாட்டியின் அன்பான கடிந்துரை.

    கஸ்தூரி... கிளம்பறேன்னா... சாப்பாடு குடுத்தனுப்பலாம்ன்னு போனேன்...

    எந்தக் கஸ்தூரி...? புருவ முடிச்சில் அந்த அவசரத்திலும் அறிந்து கொள்கிற துடிப்பு கிழவியின் முகத்தில்.

    எந்தக் கஸ்தூரின்னு அப்புறமா ஆற அமர பட்டிமன்றம் நடத்திக்கலாம். வெள்ளி கூஜா எங்கே வெச்சிருக்கே.பொண்ணுக்குப் பால், பழம் தரணும்ன்றாங்க. வா... வா... பரபரத்தாள் பாக்யாவின் சகோதரியான சின்னமணி.

    பாக்யலட்சுமியும் பரபரப்பானாள். கஸ்தூரி உணவு பார்சலுடன், ரகுவோடு பைக்கில் பயணிப்பதா... வேண்டாமா... என்ற யோசனையில் - ரகுவின் வாட்ட சாட்டமான தோரணையும், தயாராய் வண்டியை அவள்முன் கொண்டு வந்து அரைவட்டமடித்து நிறுத்தின பண்பும் அவளை அடுத்த வார்த்தைக்கு இடமிராது பில்லியனில் தொற்றிக் கொள்ள வைத்தது.

    ரகுவுக்குன்னே... பொறந்தாப்ல... என்ன பொருத்தமா இருக்கா பாரேன். ஆமாம்... யார் அந்தப் பொண்ணு...? கல்யாண வீட்டில் ரகுவின் உறவுக்காரப் பெண்மணியிடம் இருந்து, பில்லியனில் தொற்றின கஸ்தூரியின் எளிமையான தோற்றப் பொலிவில் கவர்ந்திழுக்கப்பட்டதில் வார்த்தைகள் வந்து விழுந்தன.

    பசி.. வயித்தைக் கிள்ளுது. சாப்பாடு உள்ளே போனப்புறம்தான் மத்த விசாரணை எல்லாம். எனக்கு மழைநாள்ன்னாலே ஆகறதில்லை...

    ருக்குமணி, இப்படி பேச்சை மாற்றியதற்கு காரணம் இல்லாமலில்லை. அவளின் தங்கை மகள் நளினாவை ரகுவுக்கு எப்படியும் பேசி முடித்துவிட வேண்டும் என போன ஆறு மாதம் முதலே திட்டம் வகுத்துக் கொண்டிருப்பவள் முன்னிலையில் இது போல் பேசினால் சகித்துக் கொள்வாளா என்ன...?

    கஸ்தூரியின் கவர்ந்திழுக்கும் அழகில், இரவு நேரத் தனிமைப் பயணத்தில் ரகுவின் மனது கவிழ்ந்து விடாதிருக்க வேண்டுமே என்று, உள்ளூர எண்ணம் ஓடிற்று. இந்தப் பாக்யலட்சுமிக்கு யார் யாரை ஆராதிப்பது என்கின்ற விவஸ்த்தையே கிடையாது. ஏன்... இவளைக் கொண்டு விட ரகுவைத் தவிர வேறு ஆள் கிடைக்கவில்லையா இத்தனாம் பெரிய கல்யாணக் கூட்டத்தில்.... என்று வேறு பொருமிற்று.

    கல்யாண வீட்டின் முதன்மைச் சடங்குகள் முடிக்கப்பட்டு, முதல் பந்திக்கு இலை விரித்த பின்னரே ரகு வந்து சேர்ந்தான்.

    ருக்குமணி இதற்காகவே காத்திருந்தாற் போல ரகுவை எதிர்கொண்டு வழிய வழிய விசாரித்துச் சாப்பிட அழைத்துப் போனாள்.

    மணப்பெண் சாப்பிட்டு உடைமாற்றி மேக்கப் முகத்தை அலம்பிக் கொண்டிருந்தாள்.

    உஷாம்மா...! நகைகளைப் பொறுப்பா, பத்திரமா கழட்டி வைக்கணும்ன்னு படிச்சுப் படிச்சு சொன்னேன். அப்படியிருந்தும், ட்ரஸ்ஸிங் டேபிள் மேலேயே கழட்டி வெச்சுட்டு வந்துட்டே முகம் கழுவுற. ஆச்சு போச்சுன்னா அப்புறம் கல்யாண வீட்ல யார் குடுமிபிடி சண்டை நடத்தறதாம்...? பவுன் என்ன கொறைச்சா விக்குது...? பாக்யலட்சுமி மகளைக் கடிந்து கொண்டவாறே நகைகளைப் பத்திரப்படுத்தி பீரோவைப் பூட்டி

    Enjoying the preview?
    Page 1 of 1