Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pachai Kiligal Tholodu
Pachai Kiligal Tholodu
Pachai Kiligal Tholodu
Ebook189 pages45 minutes

Pachai Kiligal Tholodu

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465643
Pachai Kiligal Tholodu

Read more from R.Geetharani

Related to Pachai Kiligal Tholodu

Related ebooks

Reviews for Pachai Kiligal Tholodu

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pachai Kiligal Tholodu - R.Geetharani

    14

    1

    பூமியோடு மனதுக்கிருக்கும் தொடர்புகளை முற்றிலுமாகத் துண்டித்து ஆழ்ந்த உறக்கம் எனும் ஆழியில் அமிழ்ந்து கிடந்த இருள் நிறைந்த இரவுப் பொழுது. உயிரில் விழுந்த முடிச்சுகளை - முற்றுப்பெறாத ஆசைகளை - கனவுகளாய் அசைபோட்டு கண் மூடிக்கிடக்கும் கணம் ஒன்றே வாழ்வின் மகத்தான தொடு சொர்க்கம். அப்படியொரு சொர்க்கத்தின் கதவை மெல்ல தட்டிக்கொண்டிருந்த அவரின் செவிப்பறையை தொட்டு உசுப்பிற்று கர்ண கடூரமான குரல்.

    ஆகாசத்துல பறக்கறதுக்கு ஆலோசனை கேட்டாப்ல இல்லே இந்த மனுஷன் மொகத்தை எரவாணத்துல ஏத்தி வெச்சுட்டு திரியறாரு. பொழுதுக்கும் பொங்கி பொங்கி நானே கருகறதாயிருக்கு. இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாவணும்...! இல்லை... நான் நாண்டுக்கிட்டு தொங்கிடுவேன் உத்தரத்துல ஆ...மாம்...!

    .....

    அவர் மெல்ல புரண்டு படுத்தவராய் போர்வையை காது வரை நன்றாய் இழுத்துப் போர்த்திக் கொண்டதை கண்ணுற்ற ஆண்டாள் நாச்சிக்கு அடித்துக் கொண்டு கரையுடைத்துப் புரளும் காட்டாற்று வெள்ளமாய் சீற்றம் பொங்கிற்று. என்ன நினைத்தாளோ ஏது நினைத்தாளோ விடு விடு என்று சமையற்கட்டிற்குள் விரைந்து சென்றவள் செப்புத்தவலையை தண்ணீரோடு தூக்கி ‘பட்...டீர்’ என்று தரையில் போட்டாள்.

    நாச்சியின் கோபக்கணை வீச்சில் நாலா திக்கும் நசுங்கி சப்பளித்துப்போன தவலை நாராசமான ஓசை ஏற்படுத்தி நிலை கொள்ள சற்று நேரம் பிடித்தது. தவலையிலிருந்து கொட்டப்பட்ட தண்ணீர், வெள்ளமாய் சமையற்கட்டில் தரையின் மண் ருசித்து ஓடியது.

    என்னவோ ஏதோ என்று கண்மணி தனது அறையிலிருந்து வாரிச்சுருட்டிக் கொண்டு குழந்தையுடன் வந்து நின்றாள்.

    வெள்ளைச்சாமி தேவர் கட்டிலில் எழுந்தமர்ந்திருந்தார். உறக்கம் முற்றிலுமாகக் களைந்து விட்டிருந்தது.

    என்ன நடந்துட்டதுன்னு இப்டி நட்ட நடுநிசியில செப்புக் கொடத்தைத் தூக்கிப் போட்டு உடைக்கிறே ஆத்தா...! உனக்கு என்னாச்சு...? கிழடு தட்டிப் போச்சுதுன்னா கிறுக்குமா புடிச்சுப்போவும்? அங்கே புகுந்த வீட்ல ஆத்தாமத்தான் இங்கே வந்தேன்னா... நீ புளிய மரத்து பொல்லாப் பிசாசா இல்லே அவதாரம் எடுத்து ஆடுறே...

    "ஆமாம்... டி... ஆமாம்...! நான் ஆடறேன் தான். ராட்சசிதான். என் ஈரக்கொலையே பத்தி எரியறதுடி. என்ன... ஏதுன்னு... கேட்பாரத்துப் போன சிறுக்கியாயிட்டேனில்லே. ‘தானா தரையுருளணும் நானா எழுந்துக்கணும்’ன்னு என்னைக்கோ அவன் எந்தலையில எழுதிட்டான். வந்த மக இருந்து விருந்து சாப்பிட்டுட்டு போ தாயி...! இந்த கடைகெட்ட செம்மம் கண்ணீர் விட்டழுதா நீ ஏன் அலமலந்து போறே...?" - நாச்சி தன் கண்டாங்கிச் சேலை முந்தானையால் மூக்கு சிந்தினாள்.

    ஹ... ஆத்தா...! ஒரு எழவும் வௌங்கலை எனக்கு. அப்புச்சிக்கிட்டே எதும் கோபமா...? - கண்மணி இடுப்பில் இடுக்கின எட்டுமாத குழந்தை ரகுவுடன் தாயின் முன்னிலையில் வந்து நின்றாள்.

    ம்... என் கோபம் கொடி கட்டிப் பறந்து எந்த கோட்டையும் சரிஞ்சுடாதுடி...! எல்லாம் தெரிஞ்ச சீமான் எதுகளோ எங்கேயோ முட்டிக்கிட்டு சாகட்டும்ன்னு கிடக்கிறாரே... செவியவிஞ்சுப் போச்சா... இல்லை கண்ணவிஞ்சு போச்சா...? காலக்கெரகம் என் நெஞ்சுக்குழியில தணலள்ளிக் கொட்டியில்லே கூத்தாட்டம் பார்க்கறது...!

    ஆத்தா... வௌங்கற மாதிரி பேசவே தெரியாதா உனக்கு? கெட்டகனா எதும் கண்டு மிரண்டு போயி ஒளறுறியா... எனக்கு தெரியலை...! அப்புச்சி... அப்புச்சி... முழிச்சிக்கிட்டுத்தானே கிடக்கறீரு... ஓரெட்டு வந்து என்ன ஏதுன்னு விசாரிக்கப்டாதா...? இந்த ஆத்தா சங்கு வெய்க்க நேரங் காலம்ன்றதே இல்லாமல் போயிட்டது. ச்சைய்...

    கண்மணி சலித்துக்கொள்ளவும், இடுப்பிலிருந்த ரகு சிணுங்கலுடன் வீறிட்டு அழவும் சரியாயிருந்தது.

    ம்... ஹ்... நீ வேற அம்மாச்சிக்குப் போட்டியா வாயைத் திறந்துட்டியாலே... இனி, விடிஞ்ச மாதிரிதான்...!

    "ந்தா... புள்ளே கண்மணி... குழந்தையை இப்படிக் கொடுத்துட்டு பால்புட்டியை நிறைச்சுக்கிட்டு வா...!

    வெள்ளைச்சாமி எழுந்து வந்து பேரனை வாங்கி தோளில் சரித்துக்கொண்டார்.

    ரகு மிரண்டு போனாற் போல் வீறிட்டழுதான்.

    ஜோ... ஜோ... ராஜாச்செல்லம்... என்லே தங்கம் தூக்கம் கெட்டுப்போச்சாலே... சமர்த்துக்குட்டி இல்லே... ந்தா... பாரு... கிளுகிளுப்பை எடுத்து மணிகள் சப்திக்க ஆட்டி சிரித்தார். குழந்தையின் சிரிப்பு மெல்ல முகிழ்த்து அழுகை அடங்கிப் போனது.

    கண்மணி விறகை சிராம்பு ஒடித்து அடுப்பில் குமித்து தீ மூட்டி வாகாய் விறகைக் கொடுத்து பால் குண்டானை அடுப்பில் ஏற்றினாள். மெல்லிய புகைச்சலுடன் தீ கனன்று ‘கக்’ கென்று பற்றிக்கொண்டு தணல்பரப்பி எரிந்தது.

    சூடான பாலை இறக்கி டம்ளரில் ஊற்றி ஆற்றினவாறே கூடத்திற்கு வந்து நின்றாள்.

    ஆண்டாள் நாச்சி அத்தனை நேரம் அமைதி காத்ததே பெரிய விசயம் என்கிறாற் போன்று மறுபடியும் ஆரம்பித்தாள்.

    அழற புள்ளையை சமாதானம் பண்றாராமா கிளு கிளுப்பு கூத்தாட்டி... இந்த ரவையில...?

    ம்... உன் ஆத்தாக்காரி எரைச்சலுக்கு ஈடாகலைன்னு ஆத்திரம் போல... வெள்ளைச்சாமி பதிலுக்கு இடித்தார்.

    ஆமாந்தேன்... நான் பேசினா எரைச்சலாத்தான் தெரியும். அந்த தெக்கூர் மகாராணி வாயைத் திறந்தா தேனருவியில்லே சிந்தும்...!

    எகனைக்கு மொகனையா எதும் பேசினாள்ன்னா எக்குத்தப்பாய்டும் புள்ளே...! உன் ஆத்தாக்காரிகிட்டே சொல்லி வை...!

    சுள்ளுன்னு ஒரைச்சுடுமே...? பனை மரத்துல தேள்கொட்டினா பார்த்தவன் கண்ணுலயா விசமேறும்...? இந்த கூத்துக்கண்றாவி எல்லாம் இங்கே தான் அரங்கேறறுது...!

    கண்மணி பால்புட்டியுடன் வந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

    அப்புச்சி... என்ன இது ஓரியாட்டம் ஓரெழவும் விளங்கலை. நல்ல தூக்கம் ‘டணார்’னு இடி விழுந்தாப்ல சத்தம் கேட்டு ஆடிப்போயி எழுந்தோடி வந்தேன். இந்த ஆத்தாதான் செப்புத்தவலையை போட்டு உடைச்சுட்டு ஆங்காரியா நிக்கறது. எனக்கு ஒண்ணுமே ஓடலை. என்ன சண்டை உங்களுக்குள்ளே...?

    உன் ஆத்தாக்காரிகிட்டேயே கேளு சொல்வா...!

    ம்... வெளியில சங்கதி தெரிஞ்சா வாயால சிரிக்க மாட்டாக ஆமாம். பேரப்புள்ளைக கண்டாச்சு. இன்னும் புருசன் பொஞ்சாதி சண்டைன்னா கேலிக்கூத்தாயிடும் கேட்கறவுகளுக்கு

    ம்... கேளாத்தா... நான் பெத்த மவளே... பேரப்புள்ளைக கண்டுட்ட மனுஷனுக்கு புதுப்பொஞ்சாதி ஒறவு கேட்குதாம்...

    ஆ... த்தா... வாயிருக்குன்னு என்ன வேணாலும் பேசிடறதா...? அப்புச்சி தங்கம்...!

    ஆமா... ம்டி..! தங்கத்தை அடிச்சு அட்டியலு, ஒட்டியாணமுமா பண்ணி இட்டு நிறைச்சுக்கோ தகப்பன் வீட்டு சீரா...! கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெறுற வம்சத்தில எங்காத்தா என்னை அந்த தெக்கூர்காரி மாதிரி பெத்துப்போடலை...!

    கண்மணி...! நீ உள்ளே போ...! வெள்ளைச்சாமி உக்கிரமாய் எழுந்து நின்றார்.

    ஹையோ... அப்புச்சி சும்மாயிருங்க கொஞ்சம். ஏனாத்தா... உன் எழவு வாயை செத்த விடியற நேரந்தண்ணியும் பூட்டி வை. ச்சைய்... அக்கம் பக்கம் மனுஷங்க ஒறக்கம் கலைஞ்சு எழுந்தா கேவலமாயிப் போகும்...!

    கண்மணி இடைபுகுந்தாள்.

    நாம் பேசறது தான் கேவலமாயிப் போய்ட்டதா...? அதான் ஊரே கேள் நாடே கேள்ன்னு சந்தி சந்தியா நின்னு பேசி இவுரு அந்த தெக்கூர் ராணி மங்கம்மைக்கு அள்ளியழுவற வரவு செலவு சொல்லி கூத்தடிக்கிறாகளே...! நாம் பேசறது தான் பெரிய கேவலமாயிடுமா...?

    பளா...ர்... பளா...ர் என்று வெள்ளைச்சாமி அறைந்து தள்ளினார். ஆண்டாள் நாச்சியார் அறைபட்ட கன்னம்பற்றி அடிபட்ட நாகமாய் சீறினாள். அடிக்கிறது தான் ஆம்பிளைக்கு அழகுன்னா அடிய்யா... அடி...! ஏன் இன்னும் உசுரோட இருக்கேடின்னு தானே நினைப்பு. அடிச்சுக் கொன்னுட்டா... ஆதியோடந்தமா அவளுக்கு அள்ளி விடலாமில்லை. குறுக்கே நிக்கற மருக்கை எடைஞ்சலாத்தான் தெரியும். ஏன்னா முத்திப்போச்சில்லே...! எளவட்டம் தேடுது உங்கப்பனுக்கு...!

    "ச்சே...

    Enjoying the preview?
    Page 1 of 1