Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panthaya Kuthiraikal
Panthaya Kuthiraikal
Panthaya Kuthiraikal
Ebook227 pages59 minutes

Panthaya Kuthiraikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465643
Panthaya Kuthiraikal

Read more from R.Geetharani

Related authors

Related to Panthaya Kuthiraikal

Related ebooks

Reviews for Panthaya Kuthiraikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panthaya Kuthiraikal - R.Geetharani

    குதிரைகள்

    1

    வாழ்த்துங்களேன் மேகங்களே...

    சூரியக்குழந்தை மேகப்பார்வையை விலக்கிக் கொண்டு மெல்ல எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது வானவீதியில். மணி காலை ஆறைத்தொட முயற்சித்துக் கொண்டிருந்தது. விடியற்காலையின் மெல்லிய இருட்போர்வைப் படலம் லேசாய் அகன்றிருக்க மேகம் தன் போர்வைகளை சூரியப்பார்வையில் சமர்ப்பித்துக் கொண்டிருந்தது. இரண்டொரு காக்கைகள் ஆண்டெனா கம்பியில் அமர்ந்து ‘கா... கா...’ என்று கத்தி இந்தப் புறமும், அந்தப் புறமும் தலையசைத்துப் பார்த்து பின் வெறுமை படர்ந்த பூமிப் பிரதேசம் தரிசிக்க வெறுப்பு ஏற்பட்டாற் போன்று விர்ரென்று தென்கிழக்கு திசை நோக்கி தாழப்பறந்து மறைந்து போனது.

    தேவி ஜன்னல் வழியே சுள்ளென்று முகத்தில் வந்தறையும் சூரியக் கதிர்வீச்சில் இருந்து முகத்தை திருப்ப மனம் இல்லாதவளாய் கிழக்கு வானத்தின் சூரிய உதயத்தையும் தகதகவென்ற சூரியப் பொன்னொளியில் உற்றுப் பார்த்தால் விரியும் ஊதாக் கதிரொளி நிறப் பரிமாணங்களையும் கண் கொட்டாது பார்த்தவாறு நின்றிருந்தாள்.

    தலைக்கு குளித்திருந்த கூந்தலின் ஈரம் முதுகு தொட்டுக் கொண்டிருந்தது.

    பூஜையறையில் ‘கிணு கிணு கிணு’வென்று மணி ஒலிக்கும் சப்தம். இன்ஸ்டண்ட் சாம்பிராணியின் நறுமணப் புகைப்படலத்தை தொடர்ந்தாற் போல் கற்பூரக் காற்றின் இதம் நாசியை வருடிற்று சுகந்தமாய்.

    தேவி ஜன்னலில் பதித்த முகத்தை திருப்பினவளாய் ஹாலை நோக்கினாள். ஒரு சில நொடி இருள் ஊடாடிக் கொண்டு விழியை மறைத்தாற் போலிருந்தது. தலையை சிக்கெடுத்தவளாகவே ஹாலிலிருந்த சோபாவில் வந்தமர்ந்தாள். மணி சரியாய் ஆறு என்றடித்து ஓய்ந்தன கடிகார முட்கள்.

    அம்மா பார்கவி கமகமக்கும் காபி கப்புடன் கூடத்திற்கு வர, மேஜையின் மீதிருந்த தொலைபேசி மணியடித்து ‘என்னையும் கொஞ்சம் கவனியேன் தேவி ’ என்று சிணுங்கிற்று.

    தேவி ரிஸீவரை காதிற்கு கொடுத்தாள்.

    குட் மார்னிங் மேடம்...! நான் மைக்கேல் பட்டிணம் ஜான்சி பேசறேன்....

    குட்மார்னிங் ... குட்மார்னிங்.... தேவி புன்னகையுடன் பேசினாள்.

    மேடம்... நீங்க ஏரியா மீட்டிங் விசிட் வர்ற டைமிங்ஸ் கொஞ்சம் சேஞ்ச் பண்ணித்தந்தா சௌகர்யமா இருக்கும்...

    ம்... சொல்லுங்க... ஜான்ஸி...

    மேடம்... மகளிர் மன்றங்கள்ல இருந்து பெண்கள் கூட்டம் வந்து சேர பதினோரு மணியாகும்னு தகவல் வந்தது. முன் கூட்டியே விபரம் தெரிவிக்கணும்னு தான் நான் போன் பண்ணினேன். ரொம்ப நன்றி மேடம்...!

    ம்... சரிங்க ஜான்ஸி. பதினோரு மணிக்கு நான் சரியா வந்துடறேன். உங்களோட அப்ளிகேஷன்ஸ் எல்லாம் ஆல் ரெடி நான் சொன்ன மாதிரி ப்ரிப்பேர்டா இருக்கணும்.... ஓ.கே...!

    சொன்ன தேவி போனை அதனிடத்தில் வைத்துவிட்டு அமர்ந்தாள்.

    ம்... காபியை குடிச்சிட்டு மற்றதை பாரும்மா தேவி.... அப்புறமா.... ஃபைல் டிஸ்கஷன் அது இதுன்னு பறப்பே.... ரெண்டு வாய் சாப்பிடக் கூட நேரம் இருக்காது. தலையில ஈரம் சொட்டறது பார்.. தலையை நன்னா... உலர்த்து காத்தாட நின்னு. இல்லை இந்த மொட்டை வெய்யிலுக்கு தலைவலின்னு நீர்க் கோத்துக்கிட்டு அவஸ்தை படணும்... பாரு...

    அம்மா எப்பொழுதுமே இப்படித்தான்.

    ம்... இன்னும் உம் பொண்ணு சின்ன பப்பா பாரு.. தொட்ட தொண்ணூறுக்கும் உபதேசம் பண்ணிண்டு. அவள் இந்த ஜில்லா கலெக்டர்டி.... அதாவது ஞாபகமிருக்கா.... இல்லை மறதிப் பேராசிரியை பார்கவிக்கு ஞாபகப்படுத்தணுமா...? நக்கல் தொனிக்க சிரிப்பை உதிர்த்தவராய் தேவியின் அப்பா கிருஷ்ணமாச்சாரி இடது கையில் ஆவி பறக்கும் காபி டம்ளருடன் வந்தார்.

    ம்... நீங்க சொல்லித்தான் தெரியணுமாக்கும். காலையிலேயே கழுத்தறுக்காதீங்கோ... அடுப்படி வேலை ஒண்ணுமே ஆகலை. இந்த அஞ்சலை இத்தனை நாழி ஆகியும் இன்னும் காணோம். பாத்திரங்கள் எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கு... பார்கவி புலம்பினவாறே உள்ளே சென்றாள்.

    காலிங்பெல் ஒலிக்க கிருஷ்ணமாச்சாரி சென்று கதவைத் திறந்தார்.

    குட் மார்னிங் ஸார். ஐ ஆம் ராஜிவ். ‘டிஸ்ட்ரிக் போர்ட் யூனியன் ஆஃபீஸர். மேடம் இருக்காங்களா...?

    மேடம்... இருக்காங்க... வாங்க...! வரவேற்றவராய் உள்சென்றார்.

    குட் மார்னிங் மேடம்...

    குட் மார்னிங்.. வாங்க ஸார்... எனிதிங் அர்ஜெண்ட் ஆர் இம்பார்ட்டெண்ட்...

    தேவி அந்த கூடத்தின் இடது புறமிருந்த மூங்கில் வேலைப்பாடுகளாலான சேரில் அமர்ந்து கொள்ள, ராஜீவ், தேவியின் எதிர்புறம் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.

    கிருஷ்ணமாச்சாரி ஹிண்டு சகிதமாக மகளுக்கு சற்று அருகே அமர்ந்து கொண்டார்.

    மேடம்... நம்ம யூனியன்ல இருக்கற ஆயிரத்து நாற்பது வீடுகளுக்குமே மழை நீர் சேகரிப்பு திட்டம் பற்றி இன்னும் பல அறிவிப்புகளை கொண்டு வரணும்னு கோரிக்கை வெச்சிருக்காங்க மகளிர் ஒருங்கிணைப்பு மன்றத்துல. நீங்க இன்னைக்கு அட்டெண்ட் பண்ணப்போற மீட்டிங்ல இதைப் பற்றி கருத்துகளை வலியுறுத்தி பேசினீங்கன்னா பொது மக்கள் கிட்டே இன்னும் நிறைய ஆதரவு கிடைக்கும்ன்றதால தான் காலையிலேயே கிளம்பி வந்தேன். ஸாரி ஃபார் தி டிஸ்டர் பென்ஸ்...

    நோ... நோ.... ஐ ஆல்வேஸ் வெல்கம் ஸார். நான் இங்கே வந்து கலெக்டரா பொறுப்பேற்றுக்கிட்ட இந்த இரண்டாண்டு காலகட்டத்துல முடிஞ்சளவு மக்களுக்கான சேவைகளுக்காக எந்த நேரத்தையும் ஒதுக்கி செயல்படத் தயாரா இருக்கேன். ஜான்ஸி இப்போதான் போன் பண்ணினாங்க. மீட்டிங் டைம் லெவன் ஆர் லெவன் தர்ட்டின்னு சேஞ்ச் பண்ணியிருக்கறதா பேசினாங்க...

    ஓ.. ஐ... ஸீ...! இப்போ மழைநீர் சேகரிப்பு திட்டம் பற்றிய அறிவிப்பு நாம எதிர்பார்க்காதளவு நல்லா பிக் அப் ஆகியிருக்குன்னு தான் எனக்கு தகவல்கள் தெரிவிக்கிறது. இன்னும் நல்லா பிக் அப் ஆகணும்னா ஒவ்வொரு வீட்டிலயும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்களை பெற்றுக்கொண்டு, அந்த அமைப்புகளை பேரூராட்சி நிர்வாக அதிகாரி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பார்வையிட்ட பின்னரே குடிநீர் இணைப்பு தரப்படும்னு ஒரு ஆணையை அமலுக்கு கொண்டு வரணும். அதோடு நில்லாமல் பட்டா மாறுதல், பெயர் மாற்றம் போன்ற பணிகளுக்காக பேரூராட்சிகளை அணுகுகிறவர்கள் அனைவரும் வீட்டில் மழைநீர் தொட்டி கட்டினால் தான் அந்த பணி செய்து தரப்படும் என்று கட்டாயப்படுத்தணும்...! ராஜிவ் ஒரு கம்பீரத்துடன் பேசினான்.

    வெரி குட் ஐடியா ஸார்... வெரி குட் ஐடியா...!

    ராஜிவ் சந்தோசமானான் அந்த பாராட்டுதலில்.

    இன்னும் பத்தாண்டு காலகட்டத்துல உலகம் மிகப்பெரிய குடிநீர் பஞ்சத்தை சந்திக்கப் போகிறதா அபாய சங்கு ஊதியிருக்காங்க சயின்டிஸ்ட்ஸ். நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து இதனால் கடல்நீர் உட்புகும் அபாயமும் இருக்கிறதா தெரிவிச்சிருக்கிறதனால இந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தைப் பற்றி இன்னும் பெரியளவுல சாதிக்கணும்ன்றது தான் என்னோட எண்ணம் ஆசை எல்லாமே...

    தேவி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அம்மா பார்கவி தேநீர் கோப்பையுடன் வந்து நின்றாள்.

    ம்... எடுத்துக்கோங்க ஸார்...!

    எதுக்கு இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம்...

    ஃபார்மாலிட்டீஸா... ஒன் ஆஃப் தி வி.ஐ.பி. ஆப் திஸ் யூனியன். உங்களை உபசரிக்காமல் இருந்தா ஒரு மாவட்ட அதிகாரிக்கு அழகா...? கிருஷ்ணமாச்சாரி இடைபுகுந்து கெக்கே பிக்கே சிரிப்பை உதிர்த்தார்.

    ராஜிவ் சின்னப் புன்னகையுடன் தேநீர் கோப்பையை கையில் எடுத்துக் கொண்டார்.

    என்ன... ராஜிவிற்கு இன்றைக்கு எல்லாம் இருந்தால் இருபத்தியாறு அல்லது இருபத்தியேழு வயதிருக்கும். எம்.ஏ. இலக்கியம் முடித்துவிட்டு பிறந்த மண் மீதிருந்த பற்றுதலாலும், கிராமத்து மக்களை வாழ்வியல் ரீதியாக முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்பதாலும் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டு பஞ்சாயத்து யூனியன், பால்பண்ணை, கிராம நூலகம், தெரு விளக்கு சீரமைத்தல், புகார் பெட்டி என்று பல வழிகளிலும் மக்களின் அறிவுக்கண்ணை திறக்க இந்த நான்கு ஆண்டுகளாய் சிந்திய வேர்வைத் துளிகள் வீண்போகாது வீரியம் பெற்றிருந்தன. மகளிர் மன்றம், இளைஞரணி அமைப்பு என்று ஒரு பெரிய மாற்றமே சந்தோசக் குதூகலிப்புடன் ஒன்று திரண்டிருந்தது தான் ஆச்சர்யமே.

    இதில் அந்த மாவட்டத்திற்கு ஆட்சியாளராகப் பொறுப்பேற்று தேவி அபிராமி பதவிக்கு வந்தபோது இத்தனை சின்னப்பெண் என்ன செய்யப் போகிறார் என்று மக்கள் பேசிக் கொண்டதற்கு மாறாக இருபத்து ஏழே வயதான தேவி கிராமத்து வயல் வரப்புகள், குளம் குட்டைகள் மேடுகள் என்று தானே முன்சென்று எவ்வித சங்கோஜமும் இல்லாது மக்களோடு ஒன்றாக மனம் விட்டுப் பேசி அவர்களின் வாழ்க்கை தரத்தையும், தேவைகளையும் தெரிந்து கொண்டு உடனுக்குடன் சுறுசுறுப்பாய் செயல்பட்டபொழுது ஆச்சர்யத்தில் மலைத்து போயினர்.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக இதோ....

    இதே ராஜிவ் தான் வயல்வெளிகளில் பண்ணைக் குட்டைகள் அமைப்பு பற்றி மக்களின் முன் எடுத்துரைக்க வேண்டும் என்று முதன் முதலாக கோரிக்கையுடன் படியேறினான்.

    வாவ்.... ஃபென்டாஸ்ட்டிக் ஐடியா ராஜீவ் ஸார்... நான் ... நான்.... இன்னைக்கே மூவ் பண்றேன்....

    சொன்னதோடு மட்டுமல்லாது தேவி அரசு நிர்வாக அலுவலகப் பொறியாளர்கள், இதர சமூக ஆர்வலர்கள் என்று ஒன்று திரட்டி மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து விவாதித்தாள்.

    "ஓ.கே.... மேடம்...!

    Enjoying the preview?
    Page 1 of 1