Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pichipoove Mella Vanthu Killi Po
Pichipoove Mella Vanthu Killi Po
Pichipoove Mella Vanthu Killi Po
Ebook118 pages42 minutes

Pichipoove Mella Vanthu Killi Po

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465643
Pichipoove Mella Vanthu Killi Po

Read more from R.Geetharani

Related authors

Related to Pichipoove Mella Vanthu Killi Po

Related ebooks

Reviews for Pichipoove Mella Vanthu Killi Po

Rating: 3.5 out of 5 stars
3.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pichipoove Mella Vanthu Killi Po - R.Geetharani

    10

    1

    அப்பா... இருந்தப்போ எல்லாம் எடுத்துக்கட்டி முன்னே நின்னு செய்வார். பாவம்... நல்ல மனுஷர்... போய்ச் சேர்ந்துட்டார். தலைமைப் பொறுப்பை ஏத்துக்கிட்டு நீ தான் நடத்தித் தரணும் ரமணா...!

    - பெருமாள் கோவில் குருக்கள்

    கதிரவன் தன் ஒளிக்கிரணங்களை உச்சிக்கு உயர்த்தி சுடரொளி வீசிக் கொண்டிருந்த நண்பகல். பாரம் சுமக்கும் விவசாயியின் முதுகைப்போல் கதிர்முனை முற்றி பால் மணிகள் சற்றே சிதறிக் கிடந்த சோளக்காட்டில் அறுவடை தருணம். வேலையாட்கள் வெகு சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர்.

    களத்துமேட்டில் கூலியாட்களின் கணக்கு வழக்குகளை சரிவரப் பார்த்து பணத்தை எண்ணிக் கொடுத்து விட்டு, மேல் துண்டால் முகத்தைத் துடைத்து நிமிர்ந்தான் ரமணன்.

    ஐயா... உங்களுக்கு ஒரு கடுதாசி வந்திருக்கு. நம்ம போஸ்ட்மேன் கந்தசாமி வர்ற வழியிலே கொடுத்தனுப்புனாருங்க...

    வேலையாள் முனியன் கடிதத்தை பவ்யமாய் ரமணனிடம் கொடுத்தான்.

    ம்... சரி... முனியா... உன் சம்சாரம் பிரசவத்துக்கு போறதா சொன்னியே, போய்ட்டாப்லயா...?

    எங்கிங்கய்யா... தாய் வீட்ல தான் ஏகப்பட்ட ரவுசுன்னு மூக்கால அழறா. சரி ஆனது ஆகட்டும். நாமளே பார்த்துக்கலாம்ன்னு முடிவு கட்டிட்டேன்... ஐயா... உங்களைத் தான் உதவி கேட்கணும்ன்... னு... முனியன் தலையைச் சொறிய - புரிந்து கொண்டாற்போல் ரமணன் பணத்தை எண்ணி முழுசாய் ஆயிரம் ரூபாய் கைகளில் திணித்தான்.

    ஐயா... ரொம்ப சந்தோஷ முங்க...! முனியன் மனசார கும்பிட்டுவிட்டு கிளம்பினான்.

    யோசனையுடன் கடிதத்தைப் பிரித்து படித்த ரமணனின் முகம் மலர்ந்தது.

    அம்மா... நம்ம வெங்கடேஷ் வர்றானாம். லெட்டர் வந்திருக்கு... என்று மகிழ்ச்சியுடன் அம்மாவிடம் ஓடினான்.

    எப்போ... வர்றானாம் ரமணா...?

    ம்... இன்னைக்கு புதன். வர்ற ஞாயிற்றுக்கிழமை வர்றதா எழுதியிருக்கான்...

    சந்தோஷம்பா... எப்படியோ பெரிய அளவுல வந்தும்கூட இன்னும் நம்மளை எல்லாம் மறக்காமல் இருக்கானே. அதுவே பெரிய விஷயம்...

    நம்ம ஊர்லயே கொஞ்ச நாள் சர்வீஸ் பண்ணப்போறானாம்...

    இருக்கட்டும்ப்பா... என்று இரண்டு மூன்று வார்த்தைகள் பேசியதே சோர்வு தட்ட படுக்கையில் ஆயாசமாய் சரிந்து கண்களை மூடிக் கொண்டாள் ராஜேஸ்வரி.

    வெங்கடேஷ் ராஜேஸ்வரியின் கூடப்பிறந்த சகோதரி மல்லிகாவின் மகன். அவன் இந்த பூங்கொடி கிராமத்திற்கு டாக்டராக பணியாற்ற வருகிறான் என்பது ஆச்சர்யமான ஒன்று. மல்லிகா போன வருடம் மாரடைப்பில் காலமாகிவிட்டாள். சென்னையில் தான் வாழ்க்கைப்பட்டது. பெரும் பணம். அத்தனைக்கும் ஒரே வாரிசு வெங்கடேஷ் தான்.

    ரமணன் அம்மாவிற்கு கஞ்சியை கரைத்துக் கொடுத்துவிட்டு, தானும் அமர்ந்து சாப்பிட்டான். கஸ்தூரி உலக அதிசயமாய் பரிமாறினாள்.

    மறுபடியும் வேலையை கவனிக்க ரமணன் கிளம்பியபோது பெருமாள் கோவில் குருக்களும், மீனாட்சி கோவில் குருக்களும் சேர்ந்து வந்தனர் வாயிற்படியைத் தாண்டி.

    வாங்க... வாங்க... குருக்களய்யா... ஏது இவ்ளோ தூரம்..?

    ம்... வர்றதுக்கு வந்து தானே ஆவணும்... என்றவாறு முன்கூடத்து திண்ணையில் அமர்ந்தனர் இருவரும்.

    கஸ்தூரி... குருக்களுக்கு சாப்பிட ஏதும் கொண்டு வா...

    அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ரமணா... வர்ற ஆவணி அவிட்டத்துக்கு பெருமாள் கோவில் தேர் இருக்கு. அப்பா... இருந்தப்போ எல்லாம் எடுத்துக்கட்டி முன்னே நின்னு செய்வார். பாவம்... நல்ல மனுஷர்... போய்ச் சேர்ந்துட்டார். முறைப்படி உன்னை வந்து கேட்கணு மோல்லியோ... தலைமைப் பொறுப்பை ஏத்துக்கிட்டு நீ தான் நடத்தித் தரணும் ரமணா...! குருக்கள் புன்னகையுடன் ரமணனை ஏறிட்டார்.

    அதுக்கென்னங்க... தாராளமா செஞ்சிட்டாப் போறது. எல்லாம் அவன் தர்றது தானே...

    கஸ்தூரி மோர் குவளைகளைக் கொண்டு வந்து உபசரித்தாள்.

    எதுக்கும்மா... குழந்தே... என்றாலும் எடுத்துக் கொண்டனர் இருவரும்.

    ம்... அப்புறம் ரமணா... எல்லாம் சௌகர்யந்தானே... அம்மாவுக்கு உடம்புக்கு சுகமில்லைன்னு வைத்தியர் சொன்னார். என்ன பண்றது...?

    ம்... வயசாயிடிச்சு இல்லீங்களா...?

    நல்லவிதமா பார்த்துக்கோ ரமணா... உனக்கு சொல்ல வேண்டியதே இல்லை. பகவான் ஷேமமா வைப்பார்... எல்லாத்தையும். நாளைக்கு ஓரெட்டு வந்துட்டு போயேன் கோவில் பக்கம்...

    ஆகட்டுங்க...

    அப்புறம்... மீனாட்சி திருக்கல்யாணம் நடத்த வேண்டியிருக்கு... மீனாட்சி கோவில் குருக்கள் தன் கோரிக்கையை முன் வைத்தார்.

    நடத்திடுவோம். கவலையே படாதீங்க குருக்களய்யா. அப்பா இருந்தப்போ என்னென்ன நடந்ததோ அது அத்தனையுமே இனி வருசா வருசம் என் பொறுப்புல நல்லவிதமா நடக்கும். என்ன திருப்தி தானே..?

    பரம திருப்தி ரமணா...! உன் நல்ல மனசுக்கு பகவான் அனுக்கிரகம் பண்ணுவார். அப்போ நான் உத்தரவு வாங்கிக்கறேன். குழந்தே வரட்டுமா...? கஸ்தூரியிடமும் சொல்லிக்

    Enjoying the preview?
    Page 1 of 1