Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Seer Kondu Vaa Venmagame
Seer Kondu Vaa Venmagame
Seer Kondu Vaa Venmagame
Ebook224 pages1 hour

Seer Kondu Vaa Venmagame

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465643
Seer Kondu Vaa Venmagame

Read more from R.Geetharani

Related authors

Related to Seer Kondu Vaa Venmagame

Related ebooks

Reviews for Seer Kondu Vaa Venmagame

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Seer Kondu Vaa Venmagame - R.Geetharani

    11

    1

    "என்ன செல்லாயி சௌகர்யந்தானே..." குரல் கேட்டு சட்டென நிமிர்ந்தாள் செல்லாயி. நேற்றைக்கிருந்ததற்கு இன்று சற்று தேவலை. செவ்வந்தியின் கசாயத்தாலும், நாட்டு வைத்தியர் செல்லக்கண்ணுவின் கை வைத்தியத்திலும் சற்று தேறியிருந்தாள்.

    அம்மா... நீங்களா... வாங்க வாங்க தாயி... ஏது இம்புட்டு தூரம். எதுனா வேலையின்னா சொல்லியனுப்பிச்சி விட்டா நானே வந்திருப்பேனே. உட்காருங்கம்மா... என்று முதன் முதலாக வீடு தேடி வந்த சண்முகவல்லியை பதற்றத்துடன் வரவேற்று இற்றுப்போன ஈச்சம்பாயை அந்த மண் தரையில் விரித்தாள். பாயில் அமர்ந்த சண்முகவல்லியின் கண்கள் வீட்டை ஒரு பார்வையில் மேய்ந்து சுழன்றன.

    சாணம் மெழுகிய மண்தரையில் அங்கங்கு மேடு பள்ளமாய் பல்லிளித்துக் கொண்டிருக்க, கொடியில் நான்கைந்து பழஞ்சேலைகள், அரியநாயகியின் சாயம் போன சீட்டி பாவாடை, சட்டி முட்டி தட்டுமுட்டு சாமான்கள் என பராரியாய் கிடந்ததை சண்முகவல்லியின் கண்கள் மேய்வதை செல்லாயி கவனிக்கத் தவறவில்லை. சங்கோஜத்தால் நெளிந்தாள்.

    என்ன செல்லாயி மேலுக்கு சொகமில்லைன்னு கேள்விப்பட்டேன். இப்போ சௌகர்யந்தானே...

    பரவாயில்லெம்மா... மோர் சாப்புடுங்க. ஏதோ இந்த ஏழை வூட்லெ இருக்கிறது... என்று கொத்துமல்லித்தழை மிதக்கும் மோரை குவளையில் கொண்டு வந்து சண்முகவல்லியின் அருகில் வைத்தாள்.

    உட்காரு செல்லாயி. ஆமா. எங்க அரியநாயகியெக் காணோம்...

    ஆட்டெ ஓட்டிக்கிட்டுபோனா. இன்னும் காணோம்...

    நின்னுட்டேயிருக்கே. உட்காரு செல்லாயி. மரியாதையெல்லாம் மனசுல இருக்கட்டும் இப்டி வந்து உட்காரு. உன்கிட்டே முக்கியமான விசயம் பேசணும்னு தான் வந்ததே. முனியா... என்று செல்லாயியிடம் பேசிக்கொண்டே வெளியே குரல் கொடுத்தாள்.

    அம்மா... என்று முனியன் பவ்யமாக வந்து நின்றான். அவள் உத்தரவிற்காகக் காத்து கிடப்பவன் போல் அவள் முகம் பார்த்து நின்றான்.

    வண்டியிலெ இருக்கற பழத்தட்டை எடுத்துட்டு வா...

    ஆகட்டுங்கம்மா... என்ற முனியன் அடுத்த நிமிடத்தில் பெரிய பழத்தட்டை ஈச்சம்பாயின் நடுவில் கொண்டு வந்து வைத்தான்.

    பெரிய எவர்சில்வர் தட்டில் சீப்பாய் செவ்வாழையும், பந்தாய் மல்லிகைப்பூவும், கண்ணைப்பறிக்கும் வண்ண ஜரிகைப்பட்டும், தேங்காய் பழம் இனிப்பு பணம் என்று நிறைந்து இருந்தது அந்த வீட்டிற்கே சற்றும் பொருத்தமில்லாததாயிருந்தது.

    சரி நீ போய் வெளியிலெ இரு முனியா...

    சண்முகவல்லியின் உத்தரவிற்கு கட்டுப்பட்டவனாய் முனியன் வெளியேறினான். ஆனால், செல்லாயி ஒன்றும் புரியாது சண்முகவல்லியையும், தட்டையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

    என்ன செல்லாயி அப்டி பார்க்கறே. இதெல்லாம் எதுக்குன்னுதானே. எல்லாம் நல்ல சேதி தான். உம்மவ அரியநாயகியெ எம்மருமவளாக்கிக்கத்தான் பொண்ணு கேட்டு வந்திருக்கேன்...

    அம்மா... என்ன சொல்றீங்க. நீங்க என்ன கௌரவம்! இது பிச்சைக்கார குடும்பம் தாயி. உங்க குடும்பத்துல சம்பந்தம் பண்ணவும் ஒரு யோக்யதை வேணும்..

    என்ன செல்லாயி பொசுக்குனு இப்டி சொல்றே. ஏதோ எங்கண்ணன் போதாத காலம் சொத்து, பத்து எல்லாத்தையும் அழிச்சிட்டு உங்களை தவிக்கவிட்டுட்டு போயிட்டாருன்னா உறவு அத்துப்போய்டுமா. நான் இந்த பணம், பகட்டுன்னு பார்க்கறவ கெடையாது. பொண்ணு நாலாம் எடத்துல போயி கஷ்டப்படுமேன்னுதான் வந்தேன். செந்திலும் படிப்பை முடிச்சிட்டு வந்துட்டான், என்னதான் அக்காபுள்ளயானாலும் அவனை வளர்த்தது எல்லாம் நான்தானே! அதனால, அவனுக்கும் காலாகாலத்துல ஒரு கால் கட்டை போட்டுட்டா என்னன்னு தோணிச்சி. கையிலெ வெண்ணெயெ வெச்சிக்கிட்டு நெய்க்கு ஏன் அலைவானேன்னு நேரா இங்க வந்துட்டேன். உங்க அண்ணனுக்குதான் அரியநாயகி மேலெ கொள்ளைப்பிரியம். அவரு சொல்லிதான் நானே வந்தேன். திடீர்னு சுக்கம்பட்டியிலெ ஒரு விசேஷம். வந்தேதானாகணும்னு சுக்கம்பட்டி பிரசிடென்ட்டு வீட்டுக்கே வந்துட்டார். அதனால், நான் மட்டும் கௌம்பி வந்துட்டேன். நல்ல காரியம் தட்டிப் போயிடப்படாது பாரு. அதுக்காகத்தான். என்ன சம்மதம் தானே செல்லாயி...

    பெருமையை நீட்டி முழக்கிவிட்டு சண்முகவல்லி செல்லாயியின் முகத்தை ஏறிட்டாள். செல்லாயி இன்னும் குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை முகம் சொல்லியது. சண்முகவல்லி புழுக்கம் தாங்காமல் முந்தானையால் விசிறிக்கொண்டாள்.

    என்ன செல்லாயி பலமா யோசிக்கறாப்புலெ இருக்கு. கால் தம்புடி காசு வேணாம். உம்புருஷன் வித்த சொத்துதானே அம்புட்டும். உம் பொண்ணெ கட்டுன பொடவையோட அனுப்பி வெச்சா போதும். பாரப்பட்டி மிராசு வீட்டுலேர்ந்து பொண்ணு தர இப்பக்கூட தயாராயிருக்காங்க. என்னவோ, நம் அரியநாயகி வாழ்க்கை நல்லாயிருக்கட்டுமேன்னுதான் இவ்ளோதூரம் வந்தேன். அரியநாயகி ஆளாயி கூட மூணு நாலு வருசமிருக்குமில்லெ. வயசுப்புள்ளெ காடு, கரைன்னு அலைஞ்சி திரிஞ்சி பொறவு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டா யார் என்ன பண்ண முடியும்...?அதான் காலாகாலத்துலெ கரையேத்திடணும்கறது. உம்மவ என் வீட்டுக்கு வந்தா ராசாத்தி மாதிரி வீட்டோட இருக்கலாம். மூணு வேளை சாப்பாடு, துணிமணி, நகை, நட்டுனு பண்ணையாரம்மாவே அவதான். என்ன நான் சொல்றது. வீடு தேடிவர்ற ஸ்ரீதேவியெ காலால ஒதெயமாட்டேன்னு நினைக்கிறேன். புத்தியுள்ளவளாயிருந்தா உம் பொண்ணு நல்லா பொழைச்சுக்குவா. அப்புறம் உன் இஷ்டம்...

    அம்மா.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. செந்திலு தம்பி எம்புட்டு படிப்பு படிச்ச புள்ளே. நாலெழுத்து நல்லா எழுதக்கூட தெரியாதவ அரியநாயகி. நாட்டுப்புறம். நல்லது கெட்டது வெவரம் தெரியாத பொண்ணு...

    நான் ஒண்ணு சொல்றேன். நீ ஒண்ணு சொல்றே செல்லாயி... தா பாரு. செந்தில் எனக்கு பொறந்தவன். கோவிந்தசாமி என் அக்காவுக்கு பொறந்தவன். இருந்தாலும் நான் இதுநாள் வரைக்கும் அவனை எம்புள்ளயாதான் நெனச்சி வளர்த்திருக்கேன். சூது, வாது தெரியாத அப்பிராணி பய. அவனுக்கும் ஒரு வாழ்க்கைத் துணை வேணுமில்லெ. என்னதான் இருந்தாலும் நம்ப அம்மா இருந்தா நம்பளை இப்டி தவிக்கவுட்டிருப்பாளான்னு பின்னாடி அவன் நெனச்சிடக்கூடாது பாரு. அதுக்கு தான் அவனுக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சிட்டா பொறவு அவன்பாடு அவன் பொண்டாட்டி பாடு. செந்திலுக்கு பம்பாய்லெ வேலை. சிவகாசி சிதம்பரமுத்துக்கவுண்டர் பேத்தியெ பேசி முடிச்சிருக்கு. செலவோட செலவா இருக்கட்டுமேன்னு தான் கோவிந்தசாமிக்கு உம் பொண்ணெக் கேட்டு வந்திருக்கேன். என்ன இப்பவாவது வௌங்குதா...

    யாரோ நிற்க வைத்து, அத்தனை துணியையும் அவிழ்த்துக் கொண்டு சாட்டையால் விளாசினாற்போல் கூனிக்குறுகி செயலற்றுப் போனாள் செல்லாயி. ‘ஏழ்மையும், வறுமையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளாக தவழ்கின்ற இந்த வீட்டில் மாடிவீட்டு மகராசி பெண்கேட்டு தட்டேந்தி வந்திருப்பது ஒரு நொண்டிக்குத்தானா...? அப்படியானால் தான் ஆசை ஆசையாய் பொத்திவளர்த்த ஒத்தை மகளின் வசந்தவாழ்வு இந்த ஏழ்மையினால் முடமாக்கப்பட்டுவிட்டதா...?

    தெருவில் ஜோடி ஜோடியாய் ஆணும் பெண்ணும் போவதைப்பார்த்து மனதில் ஏங்கி, தன் மகளுக்கும் இப்படி ஒரு நாள் வாராதோ என தவித்தவள் கண் முன் விந்தி விந்தி நடக்கும், கோணைவாய் கோவிந்தசாமி தான் மாப்பிள்ளையாகக் கிடைத்தானா..?

    ‘அந்த அழகுப் பைங்கிளியினருகில் அசிங்கமாய் ஓர் இணை. இதைக் காண்பதற்காகத்தான் நான் இத்தனை காலம் ஏழ்மையிலும், தாழ்மையிலும் வாழ்க்கையோடு போராடினேனா...? இதற்காகத்தானா...?’

    ‘ஆண்டவா...! ஏழை என்பதால் எட்டி உதைத்து நீ அதலபாதாளத்தில் தள்ளினாலும் எழுந்து நின்று கைகூப்ப வேண்டுமா....? ஏழை என்றால் படைத்தவனுக்கே கூட இளப்பம். ஏழைகளுக்கு மூன்றுவேளை சோறு மட்டும் போதும். அதற்கு மேல் வேறெதுவும் தேவையில்லை என்று எத்தனை மட்டமாக எண்ணி விடுகிறார்கள்...? இவள் மட்டும் என்ன...? இந்த நாடே அப்படித்தான் நினைக்கிறது. மூன்று வேளை சோற்றைப்போட்டுவிட்டு மூணு லட்சத்திற்கு ஏழையின் உழைப்பை உறிஞ்சிக்கொள்கிறது. பணத்தைக் காட்டி பலியாடாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் எப்படி வருகிறது இவர்களுக்கு.’

    தீய திட்டத்தை தியாகமாக மாற்றிய செம்மல் மாதிரி பெரிதாய் பீற்றிக் கொள்கிறாளே இந்த பணக்கார பண்ணையாரம்மாள். ஏன்...? வேறு இடத்தில் நொண்டிக்கு பெண் தரமாட்டார்கள் என்பதால் தானே இந்த ஓட்டை குடிசைக்குள் காலடி வைத்து சம்பந்தம் பேசுகிறாள்.

    நொண்டி, கோணைவாய், சிலுவாய் மூக்கு, கிராக்கு என்று அவலட்சணங்களின் அவதார புருஷனுக்காய் பெண் கேட்டு இந்த வீடு தேடி வர எது தைர்யம் கொடுத்தது...? இந்த வீட்டு ஏழ்மையா...? இல்லாமை தாண்டவமாடும் வறுமையா...?

    இதைத்தான் வயிற்றெரிச்சலில் குளிர்காய்வது என்பதா...? ஏழை என்றால் எங்குமே மகாமட்டம். அதிலும் கணவனற்ற கைம்பெண். யார் வேண்டுமானாலும் ராஜாங்கம் பேசலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எல்லாம் தலைவிதி. அனுபவிக்கத்தானே பிறந்திருக்கிறோம். அப்புறம் அழுதால் மட்டும் தலையெழுத்து கரைந்து அழிந்து விடப்போகிறதா...? தலையெழுத்து அழியுமானால் அழுதுகொண்டே இருக்கலாமே.’

    செல்லாயியின் மனசு நொந்து நைந்து நூலாகிப்போனது. வேதனையின் வெளிப்பாடாய் கண்களில் நீர் மல்கின. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாதே. ஏனெனில், ஏழையாயிற்றே. கட்டியிருந்த ஒட்டுப்போட்ட நூல் புடவையினால் சண்முகவல்லி அறியாதவாறு கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

    என்ன செல்லாயி.. ஏதோ பேசணும்னு நினைக்கிறே. ஆனா, பேசமாட்டேன்றெ. எதுவாயிருந்தாலும் தயங்காம மனசை விட்டு பேசு. பேசினாத்தானே என்னன்னு தெரிஞ்சிக்க முடியும்...

    "அம்மா... நீங்க தப்பா எடுத்துக்கிட்டாலும் சரியே. ஏழை, பாளைதான் நாங்க. ஆனாலும், மனசில ஆசையிருக்கும் இல்லையா. என் பொண்ணெ ஒரு குடியானவனுக்கு கட்டி கொடுத்து

    Enjoying the preview?
    Page 1 of 1