Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sathuranga Kuthiraigal
Sathuranga Kuthiraigal
Sathuranga Kuthiraigal
Ebook145 pages52 minutes

Sathuranga Kuthiraigal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sathuranga Kuthiraigal

Read more from Rajeshkumar

Related to Sathuranga Kuthiraigal

Related ebooks

Related categories

Reviews for Sathuranga Kuthiraigal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sathuranga Kuthiraigal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ஜெயகோபால் ஐந்தாவது தடவையாய் குரல் கொடுத்தான்.

    சந்தியா...

    ட்ரஸ்ஸிங் அறையிலிருந்து சந்தியாவின் குரல் கேட்டது.

    வந்துட்டேன்...

    நீ கண்ணாடி முன்னாடி நின்னு அரைமணி நேரமாச்சு! மணி இப்ப எவ்வளவு தெரியுமா...?

    என்னவாம்...?

    பத்தரை...

    புத்தாண்டு பார்ட்டி பதினோரு மணிக்குத்தானே ஆரம்பம்?

    அதுக்காக சரியா போய் பார்ட்டிக்கு நிக்கணுமா? பார்ட்டி நடக்கிற ஹோட்டல் பக்கத்திலா இருக்கு...? ஹீரோ ஹோண்டாவில் போனாலே பதினஞ்சு நிமிஷமாகும்...

    சரி... புலம்பாதீங்க... வந்துட்டேன்...

    ட்ரஸ்ஸிங் அறையிலிருந்து வெளிச்சமாய் வெளியே வந்தாள் சந்தியா. பளபளப்பான ரோஜாநிற சல்வார் கம்மீஸ். அதில் சிரிக்கும் சூர்யகாந்தி பூக்கள். இருபத்தைந்து வயது சந்தியா அரைமணிநேர மேக்கப்பின் விளைவாக ஐந்து வயது குறைச்சலாய் தெரிந்தாள்.

    ட்ரஸ் எப்படி...?

    சந்தியாவுக்கு ஜே!

    இந்த கிண்டல்தானே வேணாம்ங்கிறது...?

    அட... நிஜமாத்தான் சொல்றேன். இந்த ரோஜா நிற சல்வார் கம்மீஸ்ல பார்க்கும் போது நீ எப்படி இருக்கே தெரியுமா?

    எப்படி இருக்கேன்...?

    ஒரு பெரிய ரோஜா பூவுக்கு கையும் காலும் முளைச்ச மாதிரி இருக்கு…

    சரி... எனக்கு ஏதோ ந்யூ இயர் ப்ரஸண்டேஷன் குடுக்கப் போறதா சொன்னீங்களே...?

    ஆமா...

    எங்கே...?

    என் கோட் பாக்கெட்ல இருக்கு...

    குடுங்க...

    இப்ப குடுக்க மாட்டேன்...

    பின்னே எப்பவாம்...?

    புதுவருஷம் பிறந்ததும்... அதாவது 12.01க்கு.

    சரி... ப்ரஸண்டேஷன் என்னான்னு சொல்லிருங்களேன். டென்ஷன் இல்லாமே இருப்பேன்...

    சொல்லமாட்டேன். அது சஸ்பென்ஸ்…

    வாங்கின பொருளோட முதல் எழுத்தை மட்டும் சொல்லுங்களேன்.

    நோ... க்ளூஸ்... அந்த பரிசுப் பொருள் என்னான்னு 12.01க்குத்தான் தெரியும்... ம்... கிளம்பு...

    பிசாசு...! கல்லிலிருந்து நார் உரிச்சுடலாம், உங்ககிட்டயிருந்து ஒரு வார்த்தையைக் கூட உரிக்க முடியாது.

    ஜெயகோபால் சிரித்தான்.

    வீட்டை பூட்டிக் கொண்டு இருவரும் வெளியே வந்தார்கள். ஹீரோ ஹோண்டா காத்திருந்தது.

    உதைபட்டது.

    சந்தியா பில்லியனில் மெத்தென்று பொருந்திக் கொள்ள ஜெயகோபால் வண்டியை விரட்டினான். அண்ணா சாலை புத்தாண்டு அமளியில் இருந்தது. இளைஞர்களும் யுவதிகளும் ஸ்கூட்டர், பைக்குகளில் காய்த்து தொங்கினார்கள். தொப்பிகளை நிறம் நிறமாய் மாட்டிக் கொண்டு கூச்சலிட்டார்கள். வர்ண பலூன்கள் தலைக்கு மேல் பறந்தன.

    என்னங்க...

    சந்தியா ஜெயகோபாலின் முதுகை - தன் நெயில்பாலீஷ் நகங்களால் மெல்ல பிறாண்டினாள்.

    ம்...

    இன்னிக்கு நடக்கப் போற பார்ட்டியில... நீங்க லிக்கரை ‘டச்’ பண்ணக் கூடாது, உங்க கையில பெப்ஸிகோலா மட்டும்தான் இருக்கணும்...

    இது கொடுமை...! பார்ட்டியில கலந்துக்க தலைக்கு இருநூத்தி ஐம்பது ரூபாய் குடுத்திருக்கோம்... என்ஜாய் பண்ண வேண்டாமா?

    பார்ட்டியில அது ஒண்ணுதானா...? அதை விட்டுட்டு மத்ததையெல்லாம் ‘டச்’ பண்ணுங்க...

    சரி... ஒரே ஒரு பெக் மட்டும்...

    நோ...

    ப்ளீஸ்... சந்தியா... ஒரே ஒரு ஸ்மால் மட்டும்.

    ஸ்மால் மட்டும்?

    ஆமா...

    நம்பலாமா உங்களை...?

    நம்பு... நம்பு... பார்ட்டியில நீயும் என் பக்கத்துலதான இருக்கப் போறே...

    ஸ்மால், லார்ஜானால் நான் பத்ரகாளியாயிடுவேன்...

    நீ ருத்ர தாண்டவமும் ஆடுவேன்னு எனக்குத் தெரியாதா...? ஒரு ஸ்மாலுக்கு மேல தாண்டவே மாட்டேன்...

    ஹீரோ ஹோண்டா அண்ணா சாலையில் பாதியை விழுங்கிவிட்டு - தியாகராயநகர் எல்லைக்குள் நுழைந்தது. போக்குவரத்து இல்லாததால் அந்நேரத்துக்கே ஊமையாகிப் போன சாலையில் - ஹோட்டல்கள் மட்டும் நியான் வெளிச்சங்களில் உயிரோடு இருந்தன.

    வேகமாய் - எதிர்பட்ட பைக்கில் இரண்டு இளைஞர்கள் பீர் பாட்டிலோடு கைகளை உயர்த்தி ஹேப்பி நியூ இயர் என்று கத்திவிட்டு போனார்கள். சந்தியா கவலைப்பட்டாள்.

    எதுக்காக இவ்வளவு வேகத்துல போறாங்க...?

    எங்கேயாவது மோதி சாகத்தான்... ஒவ்வொரு புதுவருஷம் பிறக்கப் போகிற ராத்திரியன்னிக்கும் மெட்ராஸ்ல நாலைஞ்சு பேராவது ரோடு ஆக்ஸிடெண்ட்ல செத்துப் போயிடறாங்க. சாகிறது எல்லாமே இந்த மாதிரியான காலேஜ் பசங்கதான். பாட்டில் பீரை குடிக்க வேண்டியது. வண்டியை வேகமா ஓட்ட வேண்டியது. எங்கேயாது மோதி சாக வேண்டியது...

    ஜி.என். செட்டி சாலையை முழுசுமாய்க் கடந்த ஜெய கோபால் வலது பக்கமாய் ஹீரோ ஹோண்டாவை ஒடித்தான்.

    ஹோட்டல் ஸாண்ட்லியர் ஏழு மாடிகளோடு - அமர்க்களமாய் ஆல்யூமினேஷன் வர்ண பல்புகளில் தெரிந்தது. முகப்பில் ந்யூ இயர் ஈவ். ஹேப்பி நியூ இயர். வெல்கம் என்ற போர்டுகள் அணைந்தன - எரிந்தன, அணைந்தன - எரிந்தன. கார் பார்க்கில் நிரம்பி வழிந்தது.

    என்னங்க... இந்த வருஷம் திருவிழா மாதிரி கூட்டம்...?

    மத்த ஹோட்டல்கள்ல... நடத்தற ந்யூ இயர் ஈவ் பார்ட்டிகளைக் காட்டிலும் சாண்ட்லியர் ஹோட்டலில் நடத்தற பார்ட்டி ‘என்ஜாய்’ பண்றமாதிரி இருக்கும்ங்கிற காரணம்தான்...

    ஹீரோ ஹோண்டாவை டூ-வீலர்ஸ் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு - கிரானைட் கல் பதித்த வெளிச்சமான ரிசப்ஷன் ஹாலுக்குள் நுழைந்தார்கள்.

    வெல்கம் ஸார்...

    பளீரென்று சிவப்பு யூனிஃபார்மில் - தலைக்கு தொப்பியை வைத்துக் கொண்டு நின்றிருந்த ஸ்டுவர்ட், வேலைப்பாடுகள் மிகுந்த - தேக்குமரக் கதவை பவ்யமாய் திறந்துவிட்டான்.

    உள்ளே நுழைந்தார்கள்.

    ஆர்கெஸ்ட்ரா இசை காதில் மோதி - உடம்பின் நரம்புகளை அதிர வைத்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1