Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sumathi Engira Sumai
Sumathi Engira Sumai
Sumathi Engira Sumai
Ebook120 pages29 minutes

Sumathi Engira Sumai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465728
Sumathi Engira Sumai

Read more from Rajeshkumar

Related to Sumathi Engira Sumai

Related ebooks

Reviews for Sumathi Engira Sumai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sumathi Engira Sumai - Rajeshkumar

    22

    1

    போர்ட்டபிள் டெலிவிஷனின் குட்டித் திரையில் அந்தக் காலை நேர ஏழு ஐம்பதுக்கு நியூஸ் வாசிப்பதற்காகத் தோன்றின ‘ரிஷிகன்னா’ குருபிரசாத் ஸ்விட்சைத் தட்டியதால் விசுக்கென்று மறைந்தாள்.

    டெலிவிஷனின் ஷட்டரை மூடிவிட்டு ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் வந்து நின்று தலை வாரி சர்ட்டின் மடிப்புகளைச் சீராக்கிக் கொண்டபின் வெளியே வந்து கதவைப் பூட்டினான்.

    குருபிரசாத்துக்கு வயது இருபத்தெட்டு, கொஞ்சம் தொலைவில் பார்க்கிற போது ஒன்றிரண்டு வயது குறைத்துத்தான் மதிப்பிட முடியும். ஊட்டி கான்வென்ட்டில் படித்த விளைவு நுனி நாக்கில் ஆங்கிலத்தையும். உடம்பில் காரட் நிறத்தையும் தக்க வைத்திருந்தான். அந்தப் பென்சில் கோடு மீசை மட்டும் இல்லாமலிருந்தால் அசப்பில் அமீர்கான் போல இருப்பான். எல்லநோவா பிரைவேட் லிமிடெட்டில் சீனியர் அக்கவுண்ட்ன்ட்.

    வாசற்படியில் இறங்க ராத்திரி பெய்த மழையில் தரை ஈரப்பதமாய் இருக்க கான்வாஸ் ஷூ வரிவரியாய்ப் பதிந்தது. வேப்ப மரத்திற்கடியில் போடப்பட்டிருந்த அஸ்பெஸ்டாஸ் ஷெட்டை நோக்கி நடந்தான்.

    உள்ளே காக்கி வர்ண தார்பாலின் உறையால் முக்காடு போட்டுக் கொண்டிருந்த ஸ்கூட்டர் இங்கிருந்தே தெரிந்தது.

    குருபிரசாத் ஷெட்டை நோக்கி பாதி தூரம் நடந்திருந்த போது பின்பக்கமாய் யாரோ தன் காலைக் கட்டிக் கொண்டதை உணர்ந்தான்.

    தொடர்ந்து

    அங்கிள்! என்று மழலைக்குரல்.

    திரும்பிப் பார்த்தான்.

    லீனா!

    பக்கத்துப் போர்ஷன் குழந்தை, மொசமொசவென்ற உல்லன் உடை ஒன்றுருக்குள் விளம்பரக்குழந்தை மாதிரி போஷாக்காய் இருந்தாள். குருபிரசாத் திரும்பிப் பார்த்ததும் கையைக் கோணலாக நெற்றிக்கருகில் வைத்து

    குட்மார்னிங்! என்றாள்.

    குட்மார்னிங் லீனா!

    சொல்லிக் கொண்டே அவளை அள்ளி தூக்கிக் கொண்டான்.

    நீ இன்னும் ஸ்கூலுக்குப் புறப்படலை?

    குளிச்சாச்சு. அம்மா ட்ரஸ் பண்ணி விட்டா நான் ரெடி. அது சரி, அங்கிள்... இன்னிக்கு என்ன கிழமை?

    மன்டே!

    மன்டே அன்னிக்கு எனக்கு என்ன தருவீங்க...?

    லீனா கேட்டதும் சட்டென்று தலையைத் தட்டிக்கொண்டான்.

    மைகுட்னஸ்! நேத்திக்கு சாயந்தரம் ஒரு ஃபங்ஷனுக்குப் போயிட்டேன்! உன்னோட ஞாபகமே இல்லை! வாங்கி வெக்க மறந்துட்டேன்!

    அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு இப்ப காட்பரீஸ் வேணும்

    சாயந்தரம் ஆஃபீஸ் முடிஞ்சு வர்றப்ப வாங்கிட்டு வர்றேன் லீனா!

    லீனா கால்களை உதைத்துக் கொண்டு அடம்பிடித்தாள்.

    ஊஹும்! எனக்கு இப்ப வேணும்!

    சத்தம் கேட்டு பக்கத்துப் போர்ஷன் கதவில் செல்வம் தோன்றினான். லீனாவின் அப்பா.

    லீனா...! காலங்கார்த்தால அங்கிள்கிட்டே எதுக்கு அடம் பிடிச்சிட்டிருக்கே?

    எனக்கு காட்பரீஸ் வேணும்!

    குருபிரசாத் புன்னகைத்தான். செல்வத்தைப் பார்த்து,

    இன்னிக்கு திங்கட்கிழமைங்கற ஞாபகமே எனக்கு சுத்தமா இல்லை... காட்பரீஸ் வாங்கி வெக்காம விட்டுட்டேன்! அதைக் கேட்டுத்தான் அழறா!

    அங்கிள்க்கு ஆஃபீஸுக்கு டயமாச்சு. இந்தப்பக்கம் வா லீனா! செல்வம் குரல் கொடுக்க குருபிரசாத் மீண்டும் புன்னகைத்தான்.

    நோ ப்ராப்ளம்! கார்னர்ல இருக்கற டிபார்ட்மென்ட்டல் ஸ்டோருக்கு லீனாவைக் கூட்டிட்டு போய் வாங்கிக் கொடுத்துட்டுப் போறேன்!

    வேண்டாம் குருபிரசாத். நீங்க ஆஃபீஸுக்குக் கிளம்புங்க! அடம்பிடிச்சா எது வேணா கிடைக்கும்ங்கற மென்ட்டாலிடி லீனாவுக்கு வந்துடும்

    குழந்தைங்க அநாவசியா அடம் பிடிக்காது! அவ புதுசா எதையும் கேக்கலையே... நான் வழக்கமா வாங்கித் தர்ற காட்பரீஸை இன்னிக்கு தராதது என் தப்புத் தானே! அஞ்சு நிமிஷத்தில் லீனாவைக் கொண்டு வந்து விடறேன்.

    சொல்லிக் கொண்டே ஷெட்டை அடைந்து தார்பாலின் உறையை நீக்கினான். செம்பருத்தி சிவப்பில் கைனாடிக்ஹோண்டா பளபளப்பாய் நின்றிருக்க இக்னீஷியன் பொத்தானை அழுத்த ஸ்டார்ட் ஆகிக் கொண்டது.

    வா லீனா! இங்கே ஏறி நின்னுக்கோ!

    அவள் தயக்கமாய் செல்வத்தைப் பார்த்தாள்.

    என்னை என்ன பார்க்கறே! போய் ஸ்கூட்டர்ல ஏறிக்க!

    செல்வம் சொன்னவுடன் துள்ளலாய் ஓடிப்போய் ஸ்கூட்டரில் ஏறி நின்று கொண்டாள். காம்பவுண்ட் கதவைக் கடக்கிற போது ஹாரன் பொத்தானை சந்தோஷமாய் அழுத்திக்கொண்டே செல்வத்துக்கு டாட்டா காட்டினாள்.

    டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரை அடைந்து அவளுக்குப் பிடித்தமான காட்பரீஸ் சாக்லெட்டை வாங்கிக் கொடுத்து திரும்ப வீட்டுக்கு கூட்டி வந்து காம்பவுண்ட் கதவுக்கருகில் இறக்கி

    Enjoying the preview?
    Page 1 of 1