Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nillamal Odi vaa…
Nillamal Odi vaa…
Nillamal Odi vaa…
Ebook146 pages50 minutes

Nillamal Odi vaa…

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Nillamal Odi vaa…

Read more from Rajeshkumar

Related to Nillamal Odi vaa…

Related ebooks

Related categories

Reviews for Nillamal Odi vaa…

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nillamal Odi vaa… - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    நேரம் நள்ளிரவு இரண்டு மணியைத் தாண்டியிருக்க - கோவையின் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்த ஏகப்பட்ட டெலிபோன்களில் ஒன்று தன் வாயைத் திறந்தது.

    டீ குடித்துக் கொண்டிருந்த கண்ட்ரோல் ஆபீஸர் உன்னிகிருஷ்ணன் டம்ளரை அப்படியே மேஜையின் மேல் வைத்துவிட்டு ரிஸீவரை எடுத்து வலது காதுக்கு அணிந்தார்.

    எஸ்...

    கண்ட்ரோல் ரூம்...?

    எஸ்…

    ஸார்... என்னோட பேர் சிவசுப்ரமணியன். ஒரு பேங்க்ல அக்கௌண்டன்ட் ஆபீஸரா ஒர்க் பண்றேன். வீடு கணுவாய்க்குப் பக்கத்தில் இருக்கிற ஐஸ்வர்யா நகர்.

    என்ன விஷயம் சொல்லுங்க...?

    ஒரு கம்ப்ளைண்ட் ஸார்.

    சொல்லுங்க...

    ஸார்... எங்க ஐஸ்வர்யா நகர்க்குள்ளே ஒரு கால்டாக்ஸி ரொம்ப நேரமா இருட்டுக்குள்ளே நின்னுட்டிருக்கு... அந்த டாக்ஸிக்குள்ளே விபச்சாரம் நடந்துகிட்டிருக்குமோன்னு ஒரு சந்தேகம். போலீஸை உடனே ஸ்பாட்டுக்கு அனுப்பிச்சு பார்த்தா பரவாயில்லை...

    உன்னிகிருஷ்ணன் உஷாராகி நிமிர்ந்து உட்கார்ந்தார். அது கால்டாக்ஸிதானா...?

    ஆமா ஸார்... கொட்டை எழுத்தில் பேர் எழுதியிருக்கு.

    என்ன பேரு...?

    எவர் ஹேப்பி கால் டாக்ஸி. போன் நம்பர் கூட தெளிவா தெரியுது ஸார். 5566779. அது ஒரு மாருதி வேன் ஸார். ஒயிட் கலர்.

    கால்டாக்ஸி எவ்வளவு நேரமா நின்னுட்டிருக்கு?

    கிட்டதட்ட நாலு மணி நேரமா ஸார். நான் ஒரு டயாபடீஸ் பேஷண்ட். ஒருமணி நேரத்துக்கு ஒருதடவை யூரின் பாஸ் பண்றதுக்காக எழுந்திருப்பேன். அப்படி எழுந்திருக்கும்போதெல்லாம் ஜன்னல் வழியா பார்ப்பேன்.

    டாக்ஸிக்குப் பக்கத்தில் யாராவது நின்னுட்டிருக்காங்களா...?

    அப்படி யாரும் இருக்கிற மாதிரி தெரியலை ஸார்.

    டாக்ஸிக்குள்ளே அசைவுகள் ஏதாவது தெரியுதா?

    கண்ணாடியெல்லாம் ஏத்திவிட்டிருக்காங்க ஸார்.

    சரி... உங்க பேர் என்ன சொன்னீங்க?

    சிவ சுப்ரமணியன் ஸார்.

    உங்க வீட்டு அட்ரஸைச் சொல்லுங்க...

    நம்பர் 129, பாரதி தெரு, ஐஸ்வர்யா நகர்.

    இந்த ஐஸ்வர்யா நகர் எங்கே இருக்குன்னு லேண்ட் மார்க் சொல்லுங்க.

    ஸார்... தடாகம் ரோட்ல இடையர் பாளையம் வேலாண்டிபாளையம் தாண்டி வந்தீங்கன்னா டி.வி.எஸ். நகர் வரும்.

    ஆமா...

    டி.வி.எஸ். நகர்க்கு முன்னாடியே இந்த ஐஸ்வர்யா நகர் வரும் ஸார். கடந்த ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் புதுசா உருவான காலனி. மொத்தமே எண்பது வீடுகள்தான் ஸார்... வீதிகளுக்கெல்லாம் தேசத் தலைவர்கள் பெயர்களைச் சூட்டி இருப்பாங்க ஸார். காந்தி தெரு, நேரு தெரு, வ.உ.சி. தெரு, கட்டபொம்மன் தெரு. நான் குடியிருக்கிறது பாரதி தெரு ஸார்.

    அந்த கால்டாக்ஸி எந்த தெருவில் நின்னுகிட்டு இருக்கு...?

    கட்ட பொம்மன் தெரு கார்னர்ல ஸார்.

    சரி... அந்த டாக்ஸியை வாட்ச் பண்ணிட்டிருங்க. போலீஸ் ஒரு அரைமணி நேரத்துக்குள்ளே ஸ்பாட்ல இருப்பாங்க.

    தேங்க்யூ ஸார்...

    உன்னிகிருஷ்ணன் ரிஸீவரை வைத்துவிட்டு வாக்கி டாக்கியில் ஒரு பட்டனைத் தட்டிவிட்டு பேசினார்.

    சேரலாதன்...! இன்னிக்கு ஃப்ளையிங் ஸ்க்வாட் நீங்கதானே...?

    ஆமா...

    தடாகம் ரோட்டுக்கு உடனடியா நீங்க புறப்பட்டு போகணும். உங்களுக்கு ஐஸ்வர்யா நகர் தெரியுமா...?

    தெரியும்... டி.வி.எஸ். நகர்க்குப் பக்கத்தில் இருக்கு. புதுசா உருவான குடியிருப்பு.

    அங்கே கால்டாக்ஸியில் வெச்சு விபச்சாரம் நடக்கிறதாக தகவல். அந்த நகர்ல குடியிருக்கிற சிவசுப்ரமணியன் என்கிற ஒரு பேங்க் ஆபீஸர் ஒருத்தர் போன் பண்ணி புகார் கொடுத்து இருக்கார். நீங்க ஜீப்பை ரெடி பண்ணிகிட்டு கண்ட்ரோல் ரூமுக்கு வாங்க. உங்களுக்கு நான் எல்லா டீடெய்ல்ஸும் தர்றேன்...

    உன்னிகிருஷ்ணன் வாக்கி டாக்கியை வைத்துவிட்டு டம்ளரில் மீதம் இருந்த டீயை குடித்து முடிப்பதற்குள் இன்ஸ்பெக்டர் சேரலாதனும் சப்-இன்ஸ்பெக்டர் மாயக் கண்ணனும் பூட்ஸ் சத்தங்களோடு வேகவேகமாய் வந்தார்கள். முப்பது வயது சேரலாதன் ஆறடி உயரத்தில் காக்கி யூனிஃபார்ம்க்கு கச்சிதமாய் பொருந்தியிருந்தார். அவர்க்கு இரண்டு அங்குலம் குறைவாய் இருந்த மாயக்கண்ணன் கொஞ்சம் புஷ்டியாய் மீசையை வளர்த்து பார்க்கிறவர்களை ஒரு கணம் மிரள வைத்தார்.

    என்ன உன்னிகிருஷ்ணன்...! இன்னிக்கு ஃப்ளையிங் ஸ்க்வாட்டுக்கு வேலை இருக்காதுன்னு நினைச்சேன்... வேலை கொடுத்துட்டீங்களே...? சேரலாதன் கேட்க உன்னிகிருஷ்ணன் சிரித்தார்.

    என்ன செய்யறது சேரலாதன். இது கலியுகம். கேப்ஸ்யூல்களில் மருந்தை எடுத்துட்டு அதில் போதை மருந்தை அடைச்சு கடத்தறாங்க... மினரல் வாட்டர் பாட்டில்களில் சாராயம், இதே ரீதியில் ஹோட்டலில் ரூம் எடுத்தா போலீஸ் ரெய்டு வருதுன்னு இப்பெல்லாம் ஒரு கால் டாக்ஸியை வாடகைக்குப் பேசி அதையே ஹோட்டல் அறையா மாத்திகிட்டு விபச்சாரம் பண்றாங்க... கால் டாக்ஸியோட பேர் எவர் ஹேப்பி. போன் நம்பர் 5566779. போன்ல புகார் கொடுத்தவரோட பேரு சிவசுப்ரமணியன். இந்த துண்டு பேப்பர்ல அவர் வீட்டு அட்ரஸை எழுதியிருக்கேன். மொதல்ல டாக்ஸியை மடக்கினதும் புகார் கொடுத்த சிவசுப்ரமணியனைப் போய்ப் பார்த்து அவர்கிட்டே ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கிக்குங்க... போலீஸ் நடவடிக்கைகளுக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்கிறதாக சொல்லியிருக்கார்...

    உன்னிகிருஷ்ணன் நீட்டிய துண்டுச்சீட்டை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்ட சேரலாதன் தொப்பியை சரியாய் பொருத்திக் கொண்டு சப் - இன்ஸ்பெக்டர் மாயக்கண்ணனோடு வெளியே வந்து காத்திருந்த ஜீப்புக்குள் தாவினார். மாயக்கண்ணனும் தொற்றிக் கொள்ள ஜீப் புறப்பட்டது. டிரைவர் டானியேல்

    Enjoying the preview?
    Page 1 of 1