Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Thirudargal
Uyir Thirudargal
Uyir Thirudargal
Ebook314 pages1 hour

Uyir Thirudargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Uyir Thirudargal

Read more from Rajeshkumar

Related to Uyir Thirudargal

Related ebooks

Related categories

Reviews for Uyir Thirudargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Thirudargal - Rajeshkumar

    25

    1

    கல்யாண அழைப்பிதழ்களை அள்ளி கைப்பையில் திணித்துக்கொண்ட பாரதி அறையினின்றும் வெளியே வந்த விநாடி -- சமையற்கட்டிலிருந்து ஜானகி வெளிப்பட்டாள். இடுப்பில் கை வைத்துக்கொண்டு கேட்டாள். எங்கேடி புறப்பட்டுட்டே?

    ஏம்மா... உனக்கு எத்தினி வாட்டி சொல்லியிருக்கேன் போகும்போது இந்த மாதிரி கேட்காதேன்னு...?

    கேக்காமே எப்படிடி இருக்க முடியும்? அடுத்த வாரம் இந்நேரம் இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப் போகிற பொண்ணு நீ! இஷ்டத்துக்கு வெளியே சுத்தற உன்னை மாப்பிளை வீட்டுக்காரங்க யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க?

    ஒண்ணும் நினைக்க மாட்டாங்க... - வேஷ்டியின் நுனியில் மூக்குக்கண்ணாடிக்கு பாலீஸ் ஏற்றிக் கொண்டே பூஜையறையினின்றும் வெளிப்பட்ட குமரவேல் நேர்த்தியாய் கட்டிய பல் செட்டின் உபகாரத்தால் சிரித்தார். கல்யாணப் பொண்ணுன்னா வெளியே போகக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா ஜானகி...? பாரதி அவ ஃப்ரண்ட்ஸ்களுக்கெல்லாம் மேரேஜ் இன்விடேஷன் தர வேண்டாமா?

    ஜானகி பொரிந்தாள்.

    அவதான் எல்லார்க்கும் கொடுத்து முடிச்சாச்சே? பாரதி குறுக்கிட்டாள். இல்லேம்மா... இன்னும் சில பேர்க்கு கொடுக்க வேண்டியிருக்கு. நான் இன்னிக்கு முக்கியமா வெளியே போகிறதுக்கு என்ன காரணம் தெரியுமா?

    என்னடி...

    லதிகா இன்னிக்கு மெட்ராஸ் வர்றா...

    யாரு...? அந்த பத்திரிகைக்காரியா? -- ஜானகி அலட்சியமாய் சொல்லவும் பாரதிக்கு எரிச்சல் பீறிட்டது.

    என்னம்மா அவ்வளவு அலட்சியமா பத்திரிகைக் காரின்னு சொல்றே...? தமிழ்நாட்டுல இருக்கிற ஒவ்வொரு அரசியல்வாதியும் ராத்திரியில தூங்கிட்டிருக்கும்போது கூட வேர்த்து வழியறாங்கன்னா அதுக்கு காரணமே லதிகாதான். கடந்த ஆறுமாசக் காலத்தில் ரெண்டு அமைச்சர்களோட ஊழல் புகார்களை நிரூபிச்சு... வீட்டுக்கு அனுப்பின வீராங்கனை அவ. பிரஸ் மீட்டிங்குக்கு லதிகா வர்றான்னு தெரிஞ்சாலே எல்லா மினிஸ்டர்க்கும் அடிவயித்துல ஒரு திகில் இருக்கும். தமிழ் அகராதியில 'லதிகா'ங்கிற வார்த்தையை சேர்த்து, அதுக்கு நேரா பெண் வேங்கைன்னு போடப் போறாங்களாம்...

    அவளை பார்க்கவா போறே இப்போ?

    ஆமாம்மா.

    அவ எங்கே தங்கியிருக்கா?

    ஹோட்டல் பிளாக் ரோஸ்.

    கிண்டியில் புதுசா கட்டியிருக்கிற அந்த ஹோட்டலுக்கா?

    ஆமா

    காபரே டான்ஸெல்லாம் நடக்கிற அந்த மாதிரியான ஹோட்டலுக்கெல்லாம் நீ ஏண்டி போறே? அந்த லதிகாவை நம்ம வீட்டுக்கே வரவழைச்சு உன் மேரேஜ் இன்விடேஷனை கொடேன்...

    அப்பா குமரவேல் குறுக்கிட்டார். அம்மா பாரதி உங்கம்மாவுக்கு யார் யார்கிட்டே எப்படி நடந்துக்கணும்ங்கிற விவஸ்தையே கிடையாது. இவமட்டுமில்லை இவ பரம்பரையே அப்படித்தான். இவளோட அப்பா ரோட்ல பார்த்துதான் என்னை தலை தீபாவளிக்கே கூப்பிட்டார். பிளாட்பாரக் கடையில்தான் வேஷ்டியும் மேல் தூண்டும் வாங்கிக் கொடுத்தார். நாலு முக்கு சேர்ற இடத்துல -- கைவண்டியில் வெச்சு விக்கிற கடலெண்ணை ஜிலேபியைத்தான் என் இலையில வெச்சாரு.

    பாரதி சிரித்தாள்.

    அப்பா! அம்மாவை உசுப்பாதீங்க. ஏற்கனவே மூடு கெட்டுப்போய் காளி அவதாரம் எடுக்கலாமா... காட்டேரி அவதாரம் எடுக்கலாமான்னு யோசனை பண்ணிட்டிருக்காங்க...! நான் கிளம்பட்டுமா?

    பாரதி நழுவ முயன்றாள்.

    நில்லடி ஜானகி அவளை நிறுத்தினாள்.

    என்னம்மா?

    கிண்டியில் இருக்கிற அந்த ஹோட்டலுக்கு போய்ச் சேர எவ்வளவு நேரமாகும்?

    என்னோட மொபட்ல போனா இருபது நிமிஷம்...

    சரி போக இருபது நிமிஷம் வர இருபது நிமிஷம். அந்த லதிகா கிட்ட பேச இருபது நிமிஷம். உனக்கு ஒரு மணி நேரம்தான் பர்மிஷன். சரியா ஒன்பது மணிக்கெல்லாம் நீ வீட்ல இருக்கணும். இதுக்கு சம்மதம்னா நீ வெளியே போலாம். இல்லேன்னா இங்கேயே இருந்துடு.

    பாரதி ஏதோ பேச வாயெடுக்கும் முன் --- ஹால் சுவரோரமாய் டீபாயின் மேலிருந்த டெலிபோன் "விருட் விருட்' டென்று துடித்தது.

    குமரவேல் போய் ரிஸீவரை எடுத்தார்.

    ஹலோ...

    அங்கிள்! நான் லதிகா பேசறேன். பாரதி இருக்காளா? மறுமுனையில் ஒரு பெண் குரல் ஆர்வமாய் கேட்டது.

    குமரவேல் சிரித்தார். உன்னைப் பத்திதாம்மா பேசிட்டிருக்கோம். நீ பெங்களூர்லயிருந்து எப்போம்மா வந்தே...?

    தருமமிகு சென்னை விடிஞ்சுட்டிருக்கும்போதே வந்துட்டேன்.

    ரொம்ப சந்தோஷம், எல்லா பேப்பர்லேயும் உன்னோட பேர் கொடிகட்டி பறக்குது. உன்னை மாதிரியான ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ் ஸ்டேட்டுக்கு ஒருத்தர் இருந்தா போதும். இந்தியா அஞ்சே வருஷத்துல அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் கடன் கொடுக்கிற அளவுக்கு உயர்ந்துடும்.

    பாரதி இருக்காளா அங்கிள்?

    ஓ! நான் போராடிக்கிறேனோ...? ஸாரி... சொன்ன குமரவேல் பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்த பாரதியிடம் ரிஸீவரை நீட்டினார். அவள் வாங்கி அகலமான புன்னகையோடு நான் புறப்பட்டுட்டேன் லதிகா என்றாள்.

    லதிகா மறுமுனையில் மெல்ல சிரித்தாள்.

    புறப்பட வேண்டாம்ன்னு சொல்லத்தான் போன் பண்ணினேன்.

    என்னடி இது... திடீர் பல்டி?

    நான் என்ன பண்ணட்டும்? சாயந்தரம் ஆறு மணிக்கு பேட்டி தர்றதா சொல்லியிருந்த ஹெல்த் மினிஸ்டர் நேசராஜ், இப்பவே டயத்தை ஒதுக்கி பேட்டி தர்றார். சாயந்தரம் அவர்க்கு ஏதோ ப்ரோக்ராம் இருக்காம்...

    சரி. நீ பேட்டியை முடிச்சுகிட்டு எத்தனை மணிக்கு ஹோட்டலுக்கு திரும்பி வருவே...?

    பேட்டி எப்படியும் ரெண்டு மணி நேரம் போகும். அதுக்கப்புறம் சில மெட்றாஸ் வி.ஐ.பி.ஸை சந்திக்கணும், எப்படியும் ரூமுக்கு திரும்ப ஆறுமணியாயிடும்...

    அடிப்பாவி...

    நான் பாவிதான். இந்தப் பாவியைச் சந்திக்க சரியா ஆறரை மணிக்கு வா குளிச்சிட்டு காத்திருக்கேன்.

    ஆறுமணிக்கு முன்னாடி உன்னால வர முடியாதா?

    கஷ்டம்... எல்லா வி.ஐ.பி.ஸையும் இன்னிக்கே பார்த்து பேசியாகணும். இல்லேன்னா என்னோட எடிட்டர் சுடுதண்ணியில தவறி விழுந்துட்ட எலியாட்டம் கத்துவார்.

    சரி... நான் ஆறுமணிக்கு வர்றேன்.

    வா...! கல்யாண ஏக்கத்துல உன்னோட இடை என்ன சுற்றளவுக்கு குறைஞ்சிருக்குன்னு நான் அளந்து பார்க்கணும்...

    சீய்ய்ய்ய்... என்றாள் பாரதி.

    அசோக் அவென்யூ. கடைசி பங்களா.

    பங்களாவின் மாடியறைக்கு -- ஏ.ஸி.யின் ஜில்லிப்பில் அந்த நான்கு பேரும் நாற்காலிகளில் தளர்வாய் உட்கார்ந்திருந்தார்கள். கைகளில் இருந்த கண்ணாடி தம்ப்ளர்களில் ராயல் சல்யூட் விஸ்கி - ஐஸ் க்யூபுகளோடு அலைமோதிக் கொண்டிருந்தது. நான்கு பேர்களின் முகங்களிலும் தீவிரமான சிந்தனை உறைந்து போயிருக்க யோசித்து யோசித்து விஸ்கியை விழுங்கினார்கள்.

    ஜீவா...

    ம்...

    இதோட நாலு லார்ஜ் உள்ளே தள்ளிட்டே? இன்னமுமா யோசனை பண்றே...?

    சம்மர் கிராப் தலையோடும், காட்டெருமை உடம்போடும் தெரிந்த அந்த ஜீவா கோணலாய் சிரித்தான், புலியை வேட்டையாடறது ரொம்பவும் ஈஸி ஹாஜா... மான் வேட்டையாடறதுதான் ரொம்பவும் கஷ்டம். நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. அந்த லதிகா மெட்ராஸை விட்டு பெங்களூர் போகும்போது பிணமாத்தான் போகணும். அய்யாவோட ஸ்ட்ரிக்ட்டான ஆர்டர் இது...

    ஜீவா ஒரே மூச்சில் விஸ்கியை விழுங்கிவிட்டு காலி டம்ளரை 'டொக்' கென்று டீபாயின் மேல் வைத்தான்.

    அய்யாவுக்கும் அந்தப் பொண்ணுக்கும் என்ன தகராறு?

    எத்தினியோ தகராறு... அதைப்பத்தியெல்லாம் உனக்கு எதுவும் தெரிய வேண்டாம். அய்யா சொன்னபடி செஞ்சுட்டு பணத்தை வாங்கிட்டுப் போயிட்டே இரு...

    அந்த லதிகாவோட உயிர்க்கு என்ன ரேட் ஃபிக்ஸ் பண்ணியிருக்கீங்க?

    நீ எவ்வளவு எதிர்பார்க்கிறே?

    அஞ்சு லட்சம்...

    அய்யா நிர்ணயம் பண்ணின ரேட் ரெண்டு லட்சம்...

    ரொம்ப இடைவெளி. நான் வர்றேன்... எழ முயன்ற ஜீவாவின் தோள்பட்டையின் மேல் கையை வைத்து உட்காரச் செய்தான் ஹாஜா.

    சரி, மூணு லட்சம்...

    நோ பார்கெய்ன்... அஞ்சு லட்சம்னா பேசுவோம்.

    ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு. நான் அய்யாவை போன்ல கான்டாக்ட் பண்ணிட்டு வந்துடறேன்.

    தாராளமா பண்ணிட்டு வா...

    ஹாஜா எழுந்து பக்கத்து அறைக்குப் போனதும், ஜீவா தனக்கு இரண்டு பக்கமும் -- கிலோ கணக்கில் உடம்பை வளர்ந்திருந்த இரண்டு பேர்களையும் மாறி மாறி பார்த்தான். மெல்லிய குரலில் கேட்டான்.

    என்ன ஐசக்... துரை! நான் சொன்ன ரேட் சரிதானா?

    கச்சிதம் ஐசக் சிரிக்க, துரை கேட்டான்.

    அந்தப் பொண்ணு மேல அய்யாவுக்கு என்ன கோபம்?

    நான் கேள்விப்பட்ட விவகாரத்தை சொல்லட்டுமா?

    சொல்லு.

    அந்த லதிகா பொண்ணு நம்ம அய்யாவுக்கு வேண்டிய இரண்டு மந்திரிகளை ஊழல் புகார்களை நிரூபணம் பண்ணி, வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாளாம். கோர்ட்ல கேஸ் போட்டு அந்த மினிஸ்டர்களுக்கு தண்டனையும் வாங்கித்தரப் போறாளாம். கேஸ் கோர்ட்டுக்குப் போறதுக்கு முந்தி அவளை பரலோகத்துக்கு அனுப்பிடணும்கிறது அய்யாவோட எண்ணம்.

    விவகாரம் பெரிசுதான்.

    பத்து லட்சம் கேட்டிருக்கலாம் ஜீவா.

    வேண்டாம். அதிகப்படியா ஆசைப்பட்டா வர்ற காசும் கையை விட்டுப் போயிடும்.

    ஹாஜா பக்கத்து அறையினின்றும் வெளிப்பட்டான். உதட்டில் ஒட்டியிருந்த சின்ன புன்னகையோடு சொன்னான்.

    உன்னோட ரேட்டுக்கு அய்யா ஒத்துக்கிட்டார்.

    சந்தோஷம்.

    காரியத்தை எப்படி முடிக்கப் போறே?

    அந்த லதிகா எந்த ஹோட்டலில் தங்கியிருக்கா?

    ஹோட்டல் பிளாக் ரோஸ்.

    ரூம் நெம்பர்?

    239

    அவள் மட்டும் தானே வந்திருக்கா?

    ஆமா.

    என்ன விஷயமா வந்திருக்கா?

    மினிஸ்டரையும், இன்னும் சில வி.ஐ.பி.ஸையும் பார்த்து பேட்டி எடுக்கறதுக்காக வந்திருக்கா. இந்த நிமிஷம் அவ ரூம்ல இல்லை. வெளியே போயிருக்கா. சாயந்தரம் திரும்பலாம்...

    ஓ.கே. ஜீவா தோள்களைக் குலுக்கிக் கொண்டு எழுந்தான். கிறக்கமான குரலில் சொன்னான். சாயந்தரம் ஏழு மணிக்கு மேலே அந்த லதிகா உயிரோட இருக்க மாட்டா."

    2

    ஹெல்த் மினிஸ்டர் நேசராஜ் அவ்வளவு ஹெல்தியாக இல்லை. சட்டைப் பாக்கெட்டிலேயே மாத்திரைகள் வைத்திருந்தார். இரண்டு வாக்கியம் சேர்ந்தாற்போல் பேசினால், அரைநிமிட நேரம் மூச்சு வாங்கினார். சென்ற தேர்தலில் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே ஆறாயிரம் வோட்டு வித்தியாசத்தில் எதிர் கட்சி வேட்பாளரை தோற்கடித்தவர்.

    பிங்க்... பிங்க்...

    "வெந்நீர் பிளாஸ்க் அருகே இருந்த இண்டர்காம்... கூப்பிட நேசராஜ் உடம்பின் எந்த பாகத்தையும் அசைக்காமல் - கையை மட்டும் நீட்டி ரிசீவரை எடுத்தார்.

    எஸ்...

    ஸார்... மாவட்டச் செயலாளர் மணிகண்டன் உங்களை பார்க்கிறதுக்காக வந்திருக்கார். உதவியாளர் சொன்னார்.

    என்ன விஷயம்னு கேட்டியா?

    கேட்டேன் ஸார்.

    என்ன சொன்னார்?

    ஏதோ மெடிக்கல் காலேஜ் சீட் விஷயமா உங்ககிட்டே சொல்லிருந்தாராம்.

    "வரச்சொல்லு... வேற யார் யார் என்னைப் பார்க்கிறதுக்காக வந்திருக்காங்க?'

    "செவிலித்தாய்கள் சங்கத்திலிருந்து மிஸஸ் மாத்யூ வந்திருக்காங்க. பெரிய நாயக்கன் பாளையம் பிரைமரி ஹெல்த் சென்டரிலிருந்து டாக்டர் ஒருத்தர் வந்திருக்கார். அப்புறம்.

    அந்த பிரஸ் ரிப்போர்ட்டர் பொண்ணு லதிகா வந்திருக்காளா?

    இன்னும் வரல்ல ஸார்.

    அவ வந்தா உடனே அனுப்பிவை. ரிசப்ஷன்ல உக்கார வைக்காதே. நம்ம கட்சி ஆளுங்க பேசற பேச்சை வெச்சே அவ அநேக காரியம் பண்ணிடுவா

    எனக்கு எல்லாம் தெரியும் ஸார். அவ வந்ததுமே உங்க ரூமுக்கு அனுப்பிச்சிடறேன் ஸார்.

    சரி... அந்த மணிகண்டனை உடனே அனுப்பு. - ரிஸீவரை வைத்த நேசராஜ் நீளமாய் ஒரு மூச்சு வாங்கி - பிளாஸ்கில் இருந்த வெந்நீரை - கொஞ்சமாய் டம்ளரில் கவிழ்த்து - ஒரு வாய் சப்பினார்.

    வணக்கம் தலைவரே! வழுக்கைத் தலையும், தொப்பை வயிறுமாய் - காதுவரை இளித்துக் கொண்டு - அந்த மணிகண்டன் உள்ளே நுழைந்தார்.

    வாய்யா... உட்காரு...

    நேசராஜ் சோபாவைக் காட்ட அவர் உட்கார்ந்தார்.

    என்ன விஷயம்?

    எனக்கு தெரிஞ்ச பெண் ஒருத்திக்கு... மெடிக்கல் சீட் விஷயமா தலைவர்கிட்டே போன வாரமே சொல்லியிருந்தேன்...

    சி.எம். கிட்டே பைனல் லிஸ்ட் இருக்கு. நானும் அவர் கிட்டே சொல்லியிருக்கேன். பார்ப்போம். அந்தப் பொண்ணோட அதிர்ஷ்டத்தை.

    தலைவரு அப்படி சொல்லக் கூடாது. உங்களை நம்பித்தான் அந்தப் பொண்ணோட அப்பன்கிட்டே ஒரு பெரிய நோட்டை வாங்கிட்டேன். உங்களுக்கு சேர வேண்டிய பங்கையும் குடுத்துட்டேன்.

    அதுக்காக ஏன்ய்யா புலம்பறே? சீட் கிடைக்கலைன்னா பணத்தை திருப்பிக் குடுத்திட வேண்டியதுதானே?

    "மூணு மாசத்துக்கு முன்னாடி எடுத்த பணம். கையில நிக்குமா தலைவரே? அந்த பணத்தை வச்சிகிட்டுத் தான் ஊர்ல சின்னதா ஒரு சூதாட்ட எக்ஸிபிக்ஷன் போட்டேன். பாழாப்போன மழை

    Enjoying the preview?
    Page 1 of 1