Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Manasu Un Madiyil
En Manasu Un Madiyil
En Manasu Un Madiyil
Ebook74 pages32 minutes

En Manasu Un Madiyil

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465742
En Manasu Un Madiyil

Read more from Devibala

Related to En Manasu Un Madiyil

Related ebooks

Reviews for En Manasu Un Madiyil

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Manasu Un Madiyil - Devibala

    12

    1

    " ‘நைஷ்டிக பிரம்மச்சாரி’னா அர்த்தம் தெரியுமா உமா?" கண்களைக் குறும்பாகச் சிமிட்டிக் கொண்டு கேட்டாள் வைஜயந்தி.

    நைட்டுல மட்டும் பிரம்மச்சாரியா?

    உமா அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டதும், குபீரென்று எழுந்தது சிரிப்பு.

    அடிப்பாவி, ‘பலான’ சமாச்சாரம் இல்லைடி இது. சுத்த பிரம்மச்சாரி. ஆம்பளைல அக்மார்க் கற்புடீ.

    மறுபடியும் சிரிப்பு.

    சரி. அப்படி யாராவது உண்டா என்ன?

    அப்படிக் கேளு ராசாத்தி. நம்ம காலேஜ்ல எம்.ஏ. ஃபிலாஸபினு ஒரு படிப்பு உண்டு தெரியுமா? அந்த வகுப்புல எட்டு பெண்களும், பன்னண்டு ஆண்களும் படிக்கறது தெரியுமா? ஆதௌ கீர்த்தனாரம்பத்துல, இந்திராகாந்தி ஆர்ட்ஸ் காலேஜ்ல, எம்.ஏ. ஃபிலாஸபில, பன்னண்டு ஆண்கள்ள ஒருத்தர்தான் நம் கதாநாயகன்.

    படபடவென கை தட்டல்.

    ஹேய் எனக்குத் தெரியும்! வடிவு கை தூக்கினாள்.

    என்ன தெரியும்?

    அந்தக் கதாநாயகனை!

    எல்லோருக்கும் சொல்லு பார்க்கலாம்!

    பேரு மோகன். உயரம் 175 சென்டிமீட்டர். எடை அறுபது கிலோ, மார்புச் சுற்றளவு - விரிவடையும்போது 85- - 90.

    அடி நிறுத்துடீ! மார்புச் சுற்றளவோட நிறுத்திக்கோ. ஆள் அவனேதான்!

    சரி. எதுக்கு இந்த தகவல்?

    அந்த ஜடத்தை யாராவது மயக்க முடியுமா? நாம எட்டு பேர் இருக்கோம். நமக்குள்ள ஒரு பந்தயம்!

    நான் தயாராயில்லை! என்ற குரல் நாலு திசைகளிலிருந்தும் வந்தது.

    ஸோ நாலுபேர் தானா?

    நான் ஏற்கெனவே ஒருத்தரை லவ் பண்றேன் என்றாள் சுமதி.

    எனக்கு பண வசதி பத்தாதம்மா! - பிரதிபா.

    அடி... உன்னை ஓட்டல்ல ரூம் புக் பண்ணவா சொன்னாங்க?

    இந்தக் காலத்து காதலர்கள் மோசம்டீ. காதலியோட மணிபர்ஸை காலி செஞ்சுட்டுத்தான் மறுவேலை. காலம் மாறிப்போச்சு! அட்டகாசமான சிரிப்பு எழுந்தது.

    சரி. மைதானத்துல இறங்கப் போறது யாரு?

    நான் ரெடி! வைஜயந்தி முன்னால் வந்து நின்றாள்.

    நானும் தயார்! இது உமா.

    வெரிகுட். எ. குட் ட்ரையாங்கிள். இந்தி சினிமா மாதிரி வரப்போகுது. ஒரு காதலன். ரெண்டு காதலி. சக்களத்தியாகாம பார்த்துக்குங்கடீ... நைஷ்டிக பிரம்மச்சாரி ரகசியமாக ரெண்டு வண்டிகளையும் ஓட்டப் போறான். ஜாக்ரதை!

    நாங்க என்ன கல்யாணமா செஞ்சுக்கப் போறம்? மனசுல காதலை விதைச்சு, அவனை தேவதாஸாக்கிட்டு விலகிருவோம். சரிதானா உமா?

    கரெக்ட்!

    சரி. எப்ப ஆரம்பம்?

    இன்னும் அரை மணி நேரத்துல. ஃபைனல் பெல் ரிங் ஆன உடனே வகுப்பை விட்டு வெளில வருவான். ஆரம்பிச்சுக்கலாம்!

    க்ளாஸைக் கட் பண்ணிட்டு, ஓட்டல்ல வந்து காதலைப் பத்தின பேச்சா? வாங்கடீ!

    பில் வந்தது.

    உமாவும், வைஜயந்தியும் ஷேர் பண்ணிக்கட்டும். அவங்கதானே எல்லாத்தையும் இனிமே ஷேர் பண்ணிக்கப் போறது!

    திரும்பவும் சிரிப்பு.

    வெளிப்பட்டு திசைக்கொருவராகப் பிரிய, கல்லூரி முடிந்து அந்த நாலரை மணி மாலை வேளையில் மாணவ முடிச்சுகள் அங்கங்கே ஜனித்தன.

    நான் வர்றேன் வைஜயந்தி! - உமா.

    ஏண்டி வித் ட்ரா பண்ணிட்டியா?

    நோ.. நோ.. போட்டில ஜெயிக்கணும். ஆரம்பம் இன்னிக்கேன்னு கட்டாயமா? எனக்கு வேலை இருக்கு. நீ தொடங்கு. ஆல் த பெஸ்ட்!

    உமா கூட்டத்தில் கரைய,

    வைஜயந்தி காலேஜ் கேட்டை ஒட்டி நின்று கொண்டு பார்வையை உள்ளே வைத்திருந்தாள்.

    என்னடா? ஏஞ்சல் யாரைப் பாக்குது?

    நாட்டியக்குதிரை நடுவீதிக்கு வந்துருச்சு!

    தொடர்ந்து ஒரு விசில்.

    பல மாணவர்களின் பார்வை தன்மேல் ஏக்கத்துடன் படிவதை ஓரக்கண்ணில் சேமித்துக் கொண்ட வைஜயந்தி, சற்று கர்வமாக உணர்ந்தாள்.

    வைஜயந்தி பார்த்துப்

    Enjoying the preview?
    Page 1 of 1