Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neruppu Nila
Neruppu Nila
Neruppu Nila
Ebook96 pages32 minutes

Neruppu Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465773
Neruppu Nila

Read more from Devibala

Related to Neruppu Nila

Related ebooks

Reviews for Neruppu Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neruppu Nila - Devibala

    17

    1

    ஜெனரல் மானேஜர் வந்து அழைப்பதாக பியூன் சொல்ல, கஜேந்திரன் எழுந்து உள்ளே வந்தார்.

    வணங்கினார்.

    ஒக்காருங்க கஜேந்திரன்!

    சொல்லுங்க சார்!

    ஸாரி! கொஞ்ச நாளா ஆபீஸ்ல உள்ள நிலவரமும், பேச்சும் உங்களுக்குத் தெரியும்!

    என்ன நிலவரம்?

    கொஞ்சம் பேருக்குக் கட்டாய ஓய்வு குடுத்து வெளில அனுப்பற நிலவரம்?

    அதுக்கு?

    உத்தரவே வந்தாச்சு! நம்ம நிர்வாகம், தொழிற்சாலை எல்லாம் சேர்த்து முப்பதுபேரை வீட்டுக்கு அனுப்ப உத்தரவு வந்தாச்சு! அந்த முப்பது பேர்ல நீங்களும் ஒருத்தர்!

    கஜேந்திரன் முகம் மாறியது!

    உங்களுக்கெல்லாம் உடனடியா செட்டில்மெண்ட் குடுத்து அனுப்பச் சொல்லி உத்தரவு! அது இன்றுமுதல் அமலுக்கு வருது!

    ஸோ, இன்னியோட என் பதவி முடியுது!

    ஆமாம்... ஸாரி!

    சார்! எனக்கு இன்னும் 12 வருஷம் சர்வீஸ் இருக்கு! இப்படி நிர்வாகம் செஞ்சா எப்படி? குழந்தைங்க ரெண்டும் படிக்குது! குடும்பம் எப்படி சார் நடக்கும்?

    உங்க ஆதங்கம் புரியுது! சங்கடமாவும் இருக்கு. என்ன செய்ய? நானும் இங்கே ஒரு ஊழியன். மேலிடத்து உத்தரவை உங்களுக்கு சொல்லத்தான் முடியும்!

    அந்த முப்பது பேர் அடங்கின பட்டியலை நான் பாக்கலாமா?

    தாராளமா! பிரிண்ட்அவுட் எடுத்துத் தரச் சொல்றேன்!

    வயசு அடிப்படைல இந்தக் கட்டாய ஓய்வா?

    அப்படித்தான் இருக்கும். உங்க பில்லை நான் தயார் பண்ணச் சொல்றேன்!

    கஜேந்திரனுக்கு அதற்குமேல் பேச எதுவும் இல்லை!

    எழுந்து தன் இருப்பிடம் வந்துவிட்டார்.

    ஒரு மணி நேரத்தில் ஆபீஸ், பேக்டரி என செய்தி காட்டுத்தீயாக பரவி விட்டது!

    பேக்டரியில் ஒரு பதட்டம் கூட இருந்தது!

    ஆனால் அங்கு தொழிற்சங்கம் இல்லை. அதனால் கேள்வி கேட்க முடியாது!

    பாதிக்கப்பட்டவர்கள் முடிச்சு முடிச்சாக நின்று பேசத் தொடங்கினார்கள்!

    கஜேந்திரன் எந்த வேலையும் செய்யாமல் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார்.

    யமுனா அருகில் வந்தாள்.

    சார்!

    அவர் கண்களைத் திறந்தார். யமுனா அவருக்கு உதவியாளர்.

    இனிமே நீதான் நம்ம செக்ஷன் வேலைகளுக்குப் பொறுப்பை எடுத்துக்கணும். என் பணி முடியுது!

    அதான் சார் வருத்தமா இருக்குது.

    விடு! நான் எதையும் தட்டிக் கேட்க முடியாது.

    ஏன் சார் முடியாது? பில் செக்ஷன் முகுந்தன் உங்களை விட மூத்தவர். பட்டியல்ல அவர் பேரு இல்லை. வயசு பார்த்து இந்த கட்டாய ஓய்வு வரலை.

    அப்படியா...?

    கொஞ்சம் பேரை குறைக்குது நிர்வாகம்னா எப்படி? வயசுல மூத்தவங்களை நீக்குவாங்க. அல்லது புதுசாச் சேர்ந்து கன்ஃபர்ம் ஆகாதவங்களை நீக்குவாங்க. நீங்க ரெண்டுலேயும் வரலியே!

    கஜேந்திரன் எழுந்தார்.

    நான் கேக்கறேன்!

    நேராக அனுமதி பெற்று ஜியெம் அறைக்குள் நுழைந்தார்.

    சார்! முகுந்தன் நீக்கப் படலையா?

    இல்லை சார்.

    அவருக்கு என்னை விட வயசும், சர்வீசும் அதிகம். நியாயமா அவரும் நீக்கப்பட்டிருக்கணுமில்லையா?

    அந்த அடிப்படைல மேலிடம் பாக்கலை!

    வேற எந்த அடிப்படை சார்? இதைத் தெரிஞ்சுக்காம நான் விடமாட்டேன்.

    ஜியெம் தவித்தார்.

    சொல்லுங்க சார்.

    மிஸ்டர் கஜேந்திரன்! கோவப் படாதீங்க. முகுந்தனுக்கு கம்ப்யூட்டர் ஆபரேஷன் பிரமாதமாத் தெரியும். பல பிஸினஸ் பேச்சுக்களை அவரே நேரடியாப் பேசி முடிச்சுக் குடுத்திருக்கார். அவுட் ஸ்டாண்டிங் கலெக்ஷன்களை ரொம்ப நல்லா செஞ்சிருக்கார். அவர் ஆல் ரவுண்டர். அவரை நீக்காது நிர்வாகம்!

    கஜேந்திரன் முகம் சுட்ட கத்திரிக்காய் ஆனது!

    அப்படீன்னா சர்வீசுக்கு இங்கே மரியாதை இல்லையா?

    மன்னிக்கணும். சர்வீசை விட, வயசை விட, இப்பல்லாம் திறமைக்குத்தான் அதிக மரியாதை.

    கஜேந்திரன் பேசவில்லை!

    தன் இருப்பிடம் வந்து விட்டார்.

    அவரால் பேசமுடியாது. எந்தத் திறமையையும் வளர்த்துக் கொள்ள வில்லை. ஆபீஸ் போவது ஒரு கடமை. வழக்கமான வேலைகள் - முதல் தேதி சம்பளம், சொந்த பிரச்னைகளுக்காக அடிக்கடி லீவு... இப்படித்தான் நடந்தது!

    தொடக்கம் முதலே முன்னுக்கு வர வேண்டும் என்ற துடிப்பு இல்லை! காரணம் - அறிவு இல்லை! தன் மேல் நம்பிக்கை இல்லை. நிரந்தரமாக உடம்புக்குள் ஊறிவிட்ட ஒரு சோம்பேறித்தனம்.

    தன் பலவீனங்கள் கஜேந்திரனுக்குத் தெரியும். அதை யாராவது எடுத்துச் சொன்னால் கோபம் வந்துவிடும்.

    பிற்பகல் மூன்று மணிக்குள் காசோலை கைக்கு வந்துவிட்டது. முப்பத்தி ரெண்டு வயதில்தான் கஜேந்திரன் இந்த வேலையில் சேர்ந்தார். இப்போது நாப்பத்தி எட்டு. பதினாறு வருஷ சர்வீஸ்! அதற்கான தொகையாக ஐந்து லட்ச ரூபாய் கிடைத்தது. பென்ஷன் இல்லை.

    கஜேந்திரனுக்கும், நீக்கப்பட்ட ஒரு சிலருக்கும் நாலு மணிக்கு ஒரு பிரிவுபசார விழாவை அந்த நிர்வாகம் நடத்தியது.

    சுவர் கடிகாரம் பரிசளித்தார்கள்.

    எல்லாருக்கும் நன்றி கூறி கஜேந்திரன் புறப்பட்டுவிட்டார்.

    வெளியே வந்து ஸ்கூட்டரை இயக்கினார்.

    பதட்டமாக இருந்தது.

    ‘சங்கரி என்ன சொல்வாள்?’

    காலையில் அலுவலகம் வரும்போது அவரே இதை எதிர்பார்க்கவில்லையே?

    கொஞ்ச நாளாக ஆபீஸ் நிலவரம் சரியில்லை

    Enjoying the preview?
    Page 1 of 1