Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavu Thevathai
Kanavu Thevathai
Kanavu Thevathai
Ebook120 pages1 hour

Kanavu Thevathai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465810
Kanavu Thevathai

Read more from R.Sumathi

Related authors

Related to Kanavu Thevathai

Related ebooks

Reviews for Kanavu Thevathai

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavu Thevathai - R.Sumathi

    16

    1

    "ஏய் நந்திதா..."

    கம்பீரமான ஆண் குரல், உற்சாகமாக ஒலித்தது தன் பெயர் நடுவீதியில் இவ்வளவு சத்தத்துடன் ஒலித்ததைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்து போனாள், நந்திதா.

    இந்த ஊரில் சொந்த பந்தம் என்று சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை. அதனால், இதயத்துக்கு நெருக்கமானதை போல உணர்வை ஏற்படுத்திய அந்தக் குரல், அவளை யோசிக் வைத்தது. விழிகளை நாலாபக்கமும் சுழல வைத்தது. பட்டாம்பூச்சியாய்ப் படபடக்கும் அவளது கண்களுக்கு அதிகப் பளு கொடுக்காமல் பக்கத்தில் வந்தான், அவன்.

    ஏய் நந்திதா... மீண்டும் அதே உற்சாகம், கம்பீரத்துடன் வந்தது. குரல். ஆனால், சத்தத்தைக் குறைத்து அழைத்தான்.

    எங்கேயோ கேட்ட அந்தக் குரல், இப்போது எங்கிருந்து ஒலிக்கிறது எனத் தேடியவள், திரும்பினாள். பக்கத்தில் நின்றிருந்தவனைப் பார்த்ததும் சட்டென்று பரவசமானாள்.

    ஹலோ சூரியா! அவளும், திகைப்பு மாறி, உற்சாகத்துக்கு வந்துவிட்டாள். இருவர் முகத்திலும் ஆனந்தம் அலை பாய்ந்தது.

    சூரியா... நீ எப்படி இங்கே?

    அதையேதான் நானும் கேட்கிறேன். நீ எப்படி இங்கே? கல்யாணமாகி இந்த ஊருக்கு மருமகளா வந்திருக்கியா? உன் வீட்டுக்காரர் எங்கே வேலை பார்க்கிறார்?

    அவன் சடசடவெனக் கேட்க, அவள் பற்கள் ‘பளிச்’சிடச் சிரித்தாள்.

    ஒரு பொண்ணு ஊர் விட்டு ஊர் வந்தால், உடனே கல்யாணமாகி வந்திருக்கிறதாதான் அர்த்தமா? என்னைப் பார்த்தா கல்யாணமான மாதிரியா தெரியுது? அவள் சிரிப்போடு, கேள்விக் கணை தொடுத்தாள்.

    இல்லை! என அவளுடைய கழுத்தைப் பார்த்துவிட்டுப் பலமாகச் சிரித்தான், சூரியா.

    எனக்கு இங்கே வேலை கிடைச்சிருக்கு. அதான் இங்கே வந்துட்டேன்.

    அப்படியா? என்ன வேலை? எங்கே இருக்கிறாய்?

    பெருமையா சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும் பெரிய வேலை இல்லை. தனியார் நிறுவனத்தில் மூவாயிரம் ரூபாய் சம்பளத்துல இருக்கிறேன்.

    சூரியாவின் முகம் மாறியது.

    சென்னையில் இந்த சம்பளத்தை வச்சுக்கிட்டு என்ன செய்ய முடியும்? அக்கறையாக வினவினான்.

    என்ன பண்ணுறது? செய்யும் தொழிலே தெய்வம் வாங்குகிற சம்பளமே வாழ்க்கை. இப்போதைக்கு இது போதும்.

    எங்கே தங்கி இருக்கே? பெண்கள் விடுதியிலா?

    இல்லை! வாடகைக்கு வீடெடுத்துத் தங்கி இருக்கேன்.

    தனியாவா?

    அம்மாவும் நானும்.

    அப்பா...?

    போன ஆண்டே போய்ச் சேர்ந்துட்டார். அவளுக்குச் குதூகலம் கலைந்து, நொடியில் குரல் உடைந்தது.

    அவளது முகத்தில் வேதனை ரேகை படர்வதைக் கவனித்த அவன் சட்டென்று பேச்சை மாற்றினான்.

    சரி வா... ஏதாவது சாப்பிட்டுக்கிட்டே பேசலாம். நடுத் தெருவில் நின்னு பேசிக்கிட்டிருக்கோம். கண்களில் துளிர்த்துவிட்ட கண்ணீரை வழிய விடாமல் மறைத்துக் கொண்ட நந்திதா, மவுனமாக அவன் பின்னால் நடந்தாள்.

    இருவரும் ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தனர். அமைதியான இடம் பார்த்து அமர்ந்தனர்.

    காப்பி மட்டும் போதும், சூரியா.

    ஏன்? ஏதாவது சாப்பிடேன். சாயந்தர நேரம்தானே?

    பழக்கமில்லை.

    அதனாலென்ன? இன்னைக்கு என்கூடச் சாப்பிடு, என்றவன். அவளின் பதிலுக்குக் காத்திராமல் இரண்டு மசாலா தோசைக்குச் சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான்.

    சொல்லு... சீர்காழியில் உங்க வீட்டுல இப்ப யார் இருக்கா?

    அதுவும் வாடகை வீடுதானே... யாராவது குடியிருப்பாங்க.

    அப்பாவோட சேமிப்புன்னு...

    அதை ரெண்டு அக்காளுக்கும் கரைச்சுட்டாங்க. மண வாழ்க்கை அமைச்சுக் கொடுத்து, அதுக்கு வட்டி கட்டின மாதிரி வரிசையா சீர் செனத்தி செய்து அப்பா ஓடாகத் தேஞ்சுட்டார். அப்பாவின் மறைவுக்குப் பிறகு அம்மாவைக் காப்பாத்த வேண்டிய பொறுப்பு என் மீது விழுந்தது. அதுக்கு வருமானம் வேணுமே... ஊரில் ஏதாவது வேலைக்குப் போனா ஐந்நூறு, ஆயிரத்துக்கு மேல் என்ன கிடைக்கும்? அதான் பத்திரிகைகள் பார்த்து விண்ணப்பம் போட்டேன். ஆண் பிள்ளை இல்லாத அம்மாவுக்கு இப்ப எல்லாமே நான்தான்.

    மசால் தோசை மேசையில் சுடச்சுட வந்து உட்கார்ந்தது. நந்திதா சாப்பிடத் தொடங்கியவாறே கேட்டாள்.

    நீ மாயவரத்திலேருந்து எப்ப இங்கே வந்தே?

    நானும் உன்னை மாதிரிதான், வேலை கிடைச்சு இங்கே வந்தேன். நல்ல வேலை. கை நிறையச் சம்பளம்.

    அம்மா எப்படி இருக்காங்க?

    நல்லா இருக்காங்க. இங்கே என் கூடத்தான் இருக்காங்க. தங்கையைக் கும்பகோணத்துலதான் கொடுத்திருக்கு.

    அப்படியா?

    பேசிக்கொண்டே இருவரும் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தனர்.

    ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. சூரியா. பரிச்சயமான முகம் எதுவுமே இல்லாத சென்னையில் உன்னைப் பார்த்ததும் எப்படியோ இருக்கு. ஆனந்தம் மட்டுமல்ல. அதுக்கும் மேலே ஏதோ ஒரு தெம்பு வந்த மாதிரி இருக்கு. வேளச்சேரியில்தான் எங்க வீடு. வாயேன், என்கூட. உன்னைப் பார்த்தா அம்மா சந்தோஷப்படுவாங்க.

    முகவரி கொடு, நந்திதா. நான் இன்னொரு நாள் வர்றேன்.

    அவள் தன் கைப்பையைத் திறந்து, காகிதம் எடுத்து, முகவரி எழுதிக் கொடுத்தாள்.

    அவளுக்குத் தன் முகவரியை எழுதிக் கொடுத்தான், சூரியா.

    அவளைப் பேருந்தில் ஏற்றி விட்டுவிட்டு, பூரிப்பாய்க் கையசைத்தபடி நின்றான்.

    2

    "என்னப்பா... இன்னைக்கு இத்தனை தாமதம்? ஆபீசில் ஏதாவது முக்கியமான வேலையா?"

    சூரியா வீட்டுக்குள் நுழைந்ததுமே, அம்மா தனம் காத்திருந்ததைப் போல் கேட்டாள்.

    வேலையெல்லாம் வழக்கம்போல முடிஞ்சது. வழியில என் கூட கல்லூரியில் ஒண்ணா படிச்ச ஒரு பொண்ணை எதேச்சையா பார்த்தேன். பேசிக்கிட்டிருந்ததுல நேரமாயிடுச்சு, என்றவாறே காலணிகளைக் கழற்றினான்.

    நீ படிச்சது மயிலாடுதுறையில். அங்கே உன் கூட படிச்சவ இங்க எப்படி?

    இங்கே வேலை பார்க்கிறா...

    ‘ம்...’ என அதுக்கு மேல் அதைப் பற்றிப் பேச விரும்பாதவளைப் போல், அம்மா சலிப்போடு உள்ளே சென்றாள்.

    காப்பி எடுத்து வந்தாள். அவனிடம் கொடுத்துவிட்டு, காய்கறி வாங்கிட்டு வர்றேன், என துணிப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

    மணக்கும் காப்பியை இடக் கையிலும், காலையில் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு வைத்திருந்த பத்திரிகையை வலக்கையிலும் வைத்தபடி செய்திகளை மேய்ந்தான்.

    மனமோ அதில் ஒட்டாமல் நந்திதாவை நினைத்து மத்தளம் அடித்தது.

    நந்திதாவைத் திடீரெனச் சந்தித்த நிமிடத்தில் உண்டான திகைப்பும், தித்திப்பும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.

    அந்த மிச்ச நினைப்பு மனசுக்கு இதமாக இருந்தது. சூடான காப்பியை உறிஞ்சினான். நிமிடத்தில் மனதிலும், உடலிலும் புத்துணர்வு கிளர்ந்தெழுந்தது. நந்திதா! மயிலாடுதுறையில் அவன் படித்த கல்லூரியில் படித்தவள். அழகைவிட அவளுடைய அடக்கமே அனைவரையும் கவரும்.

    அலட்டல்,

    Enjoying the preview?
    Page 1 of 1