Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Por Megangal
Por Megangal
Por Megangal
Ebook103 pages46 minutes

Por Megangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465865
Por Megangal

Read more from Devibala

Related to Por Megangal

Related ebooks

Reviews for Por Megangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Por Megangal - Devibala

    23

    1

    ரஞ்சனியை தான் காதலிப்பதை படக்கென போட்டு உடைத்துவிட்டான் முரளி!

    அம்மாதான் முதலில் ஆடிப் போனாள்.

    தன் தம்பி மகள் ஜோதியைத் தான் அம்மா மனதில் வைத்திருந்தாள். ஜோதி வளர்ந்ததே இங்குதான். சரி! கல்யாணப் பேச்சை எடுக்கும் நாளில் இதைப் பற்றிச் சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்தாள்.

    ஜோதி, முரளியைவிட ஏழு வயது இளையவள். இப்போதுதான் படிப்பை முடித்து ஒரு நல்ல உத்யோகத்தில் சேர்ந்திருந்தாள்.

    ஜோதி பிறந்ததுமே முரளிக்குத்தான் என்று எல்லாரும் பேசினார்கள். பத்து வயது வரை இந்தப் பேச்சு நீடித்தது! பிறகு அப்பாதான் தடை போட்டார்.

    ‘குழந்தைகள் வளரத் தொடங்கிய பிறகு இந்த மாதிரிப் பேச்சு வேண்டாம். ஆசைகளை வளர்த்துவிட்டு அவஸ்தை கூடாது! நாளைக்கு யாருக்கு யாரை தெய்வம் முடிச்சு போட்டிருக்குமோ தெரியாது’ என்றார்.

    அது சத்ய வாக்காகிவிட்டது!

    முரளி இன்ஜினியரிங் முடித்து, கணிப்பொறி சம்பந்தப்பட்ட வேறு சில படிப்புகளையும் முடிக்கும் போதே இருபத்தி நாலு வயசு!

    வெளிநாட்டுத் தொடர்புள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை! ஆறு மாதம் கழித்து அமெரிக்கப் பயணம். அங்கே ஒரு வருடம். இதோ திரும்பி வந்து ஒரு வருடம் ஆகிறது!

    சரி! இருபத்தி ஏழை கடப்பதால் கல்யாணம் பேசலாம் என அம்மா நினைத்தாள்.

    பேச்சை ஆரம்பித்தாள்.

    ரஞ்சனியை தான் காதலிப்பதை முரளி சொல்லிவிட்டான்.

    அவளும் என்ஜினியர்.

    வெளிநாட்டுக்கு வந்தவள். அங்கேயே நட்புதொடங்கி வளர்ந்து காதலாகிவிட்டது.

    இங்கு வந்த பிறகும் அது வளர்கிறது.

    ரஞ்சனியின் அக்கா கல்யாணம் முடியட்டும் என்று ரஞ்சனி காத்திருக்கிறாள்.

    அக்கா கல்யாணம் முடிவாகி விட்டது.

    அது முடிந்த பிறகு பேசலாம் என முரளி நினைக்க, அம்மா தொடங்கி விட்டாள்!

    அம்மா அதிர்ச்சியில் நிலைகுலைந்து போயிருந்தாள்.

    அப்பா வந்ததும் அழுதே விட்டாள்!

    ஜோதியைத்தான் கட்டிப்பான்னு நினைச்சேனே! இப்படி போட்டு உடைச்சிட்டானே!

    அப்பா பேசவில்லை!

    என் தம்பி முகத்துல எப்படி நான் முழிப்பேன்? ஜோதிக்கு நான் என்ன சமாதானம் சொல்லுவேன்?

    .......!

    நான் புலம்பிக்கிட்டே இருக்கேன். நீங்க பேசாமலே இருந்தா எப்படீங்க?

    என்ன பேசறது? அவன் வேறொரு பொண்ணை விரும்பிட்டான். வாழப் போறது அவன்தான். அவன் விருப்பம் முக்கியமில்லையா?

    என்ன பேசறீங்க? ஜோதிதான் என் மருமகள்னு நான் முடிவெடுத்திருந்தேன்!

    நிறுத்து சிவகாமி! உன் மகனைக் கேக்காம முடிவெடுக்கற உரிமையை உனக்கு யார் குடுத்தது?

    நான் அவனைப் பெத்த அம்மா!

    அதுக்காக? அவன் மடில படுத்துட்டு பால் குடிக்கற குழந்தை இல்லை! பருவம் வந்த பையன். அவன் மனசுக்குப் புடிச்சதைத்தான் தேர்ந் தெடுக்க முடியும்!

    ஜோதிகிட்ட என்ன குறை?

    நிறுத்து சிவகாமி! அவனுக்கு வேற ஒருத்தியைப் புடிச்சிருந்தா, நீ சொல்ற வளை கட்டிப்பானா? குழந்தை மாதிரி பேசறியே!

    நீங்களும் என்னைப் புரிஞ்சுகலை! உங்க மகன் பக்கம்தான் இருக்கீங்க!

    அப்பா எரிச்சலானார்.

    நீ பாட்டுக்கு பேசிட்டே போறியே! புத்தியிருந்தா யோசனை பண்ணு! குழப்பத்தை உண்டாக்காதே! நாளைக்கு அந்தப் பொண்ணு இந்த வீட்டுக்கு வாழ வரணும்! முரளி நமக்கு ஒரே மகன். நீ ஜோதியை மனசுல வச்சுகிட்டு இவளை சரியா நடத் தலைனா, போர் மேகங்கள் சூழும்! குடும்பம் யுத்த களமாகும். எல்லார் நிம்மதியும் அழியும்! தேவைதானா?

    அம்மா முகத்தில் கலக்கம்!

    குழந்தைங்க ஒரு முடிவை எடுத்துட்டா, நாம அதுக்கு தலை வணங்கறதுதான் விவேகம். இல்லைனா, கடைசி காலத்துல மிஞ்சறது கசப்புதான்!

    ......!

    முரளிகிட்ட மேற்கொண்டு பேசி, ஆக வேண்டியதைப் பார்க்கலாம்!

    அப்பா எழுந்து போய்விட்டார்.

    அம்மாவால் ஜீரணிக்க முடியவில்லை! எல்லாமே புரிந்தது. புத்தியில்லாதவள் இல்லை! ஆனால் மனசுக்குள் ஒரு கோட்டையைக் கட்டிவிட்டு, அதை மகனே வந்து இடித்து நொறுக்கும்போது, அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை!

    ‘ஜோதிக்கு நான் என்ன சொல்லுவேன்?’

    ‘இப்ப அவசரப்பட வேண்டாம்!’

    ‘நிதானமாக அவள் மன உணர்வுகளைப் புரிந்து கொண்ட பிறகு செயல்படலாம்!’

    2

    "என்னங்க! நம்ம ஜோதி ஜாதகம், ஒரு பணக்கார வரனுக்கு பிரமாதமா பொருந்தியிருக்காம்!"

    ராஜப்பா திரும்பினார்.

    அறிவிருக்கா உனக்கு?

    ஏன் இப்படி கேக்கறீங்க?

    மாப்ளை முரளி ரெடியா கைல இருக்கும்போது, எதுக்கு இன்னொரு வரன்?

    அதில்லீங்க!

    அக்காவும், நானும் முடிவெடுத்து இருபது வருஷமாச்சு! இது உனக்குத் தெரியாதா?

    ஜோதி ஆபீசுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

    ரெண்டு பேருக்கும் என்ன சண்டை?

    விடும்மா! சில சமயம் உங்கம்மா உளறுவா! உனக்கு வரன் வருதாம். முரளி இருக்கும்போது வேற யார் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாக முடியும்?

    ஜோதி எதுவும் பேசவில்லை!

    டிபன் குடும்மா! டயமாச்சு!

    ஜோதி! நீ எதுவுமே பேசலியே?

    அப்பா! நீங்க பெரியவங்க! உங்க குரலுக்கு எதிர்க்குரல் எப்ப எழுப்பியிருக்கேன்?

    அவருக்கு உற்சாகம்!

    "என்னங்க! ஜோதிக்கும் இருபது முடிஞ்சாச்சு! முரளியாவே இருந்தாலும்

    Enjoying the preview?
    Page 1 of 1