Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

‘Mar’kizhi Maatham
‘Mar’kizhi Maatham
‘Mar’kizhi Maatham
Ebook77 pages1 hour

‘Mar’kizhi Maatham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603642
‘Mar’kizhi Maatham

Read more from Devibala

Related to ‘Mar’kizhi Maatham

Related ebooks

Related categories

Reviews for ‘Mar’kizhi Maatham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ‘Mar’kizhi Maatham - Devibala

    http://www.pustaka.co.in

    ‘மார்’ கிழி மாதம்

    ‘Mar’kizhi Maatham

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    ஹோட்டல் ‘அஜ் நபி’ என்ற நியான் எழுத்துக்களை தலையில் அணிந்து கொண்டு, அந்த நவீன மோஸ்தர் கட்டிடம், காலை வெயிலில் கண்ணடிக்க.

    ஒரு நட்சத்திர ஓட்டல் அந்தஸ்த்துக்கான சகல தகுதிகளுடன் ‘அஜ்நபி’ இயங்கிக் கொண்டிருந்தது.

    தங்கும் பகுதி முதலில் விரிந்திருக்க, அதிலிருந்து இடப்புறம் திரும்பி, குறுகலாகப்போன கான்க்ரீட் ரிப்பனின் முடிவில், கண்ணாடிக் கதவுகளை அணிந்துகொண்டு குளிர்வசதி பொருத்தப்பட்ட ‘உணவகம்’ இருந்தது.

    வெள்ளுடைச் சேவகர்கள் கல்யாணக் கலகலப்புடன், மெனு கார்டும், செயற்கை சிரிப்புமாக ஓடிக் கொண்டிருக்க, சானல் இசை துரத்திக் கொண்டிருந்தது.

    வாசலில் வந்து நின்ற டாக்ஸியிலிருந்து இறங்கும் அதே ஜோடியை நாமும் அறிமுகப்படுத்திக் கொள்ளலாமா?

    முப்பது வயதே நிரம்பியிருந்த அந்த இளைஞன், ஆறடி உயரமும், நல்ல வெள்ளை கோதுமை நிறமுமாக, உருளை உருளையான உடம்புடன், மீசையில்லாத முகமுமாக ஒரு வடநாட்டுக்காரன் என்று சொல்லிக் கொண்டிருந்தான். சமீபத்திய ஷேவிங் பச்சை முகவாயில் புதிய வசீகரத்தை அப்பியிருக்க, ரிசப்ஷனை நெருங்கி விட்டான்.

    தன்னை ‘எம். சௌத்ரி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். ‘ஏஸி டீலக்ஸ் டபுள் ரூம்’ கேட்டான். பிற வசதிகளைப் பற்றி விசாரித்தான்.

    உடன் வந்த அந்தப் பெண், அமைதியாக, அவனை உரசிக்கொண்டு நிற்க,

    அட்வான்ஸ் தொகையை, தன் புஷ்டியான பர்ஸ் திறந்து, கரன்ஸிகளை உருவிக் கொடுத்தான்.

    அவன் கையில் ஒரு பெரிய வீலர் சூட்கேஸ்.

    அவளிடம் ஒரு ப்ரீஃப் கேஸ்.

    சாவியைப் பெற்றுக் கொள்ள,

    பணியாளன் பெட்டிகளை வாங்கிக் கொண்டு, லிஃப்டுக்கு போனான்.

    நாலாவது மடியில், இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை காத்திருக்க.

    உள்ளே நுழைந்தார்கள்.

    பணியாளன் விலகியதும்.

    கதவைச் சாத்திவிட்டு, கட்டிலில் வந்து உட்கார்ந்தான் செளத்ரி.

    அந்தப் பெண்ன ரேஷ்மா என்று அழைத்தான்.

    அவர்கள் பேசிக்கொண்டது அத்தனையும் ஹிந்தியில்தான். நம் வாசக வசதிக்காக அது தமிழாக்கப்படுகிறது.

    குளிப்பதற்கு தயாரானாள் ரேஷ்மா.

    டர்க்கி டவல், சோப், ஷாம்பூ செயில் கரியங்களுடன் பாத்ரூமுக்குப் புறப்பட்டு விட்டான்.

    தன் மேலாக்கை நழுவ விட்ட ரேஷ்மாவுக்கு இரண்டு... இரண்டு பத்துகள் வயதிருக்கலாம். மிதமான உயரத்தில் கல்கத்தா ரஸகுல்லா போல தளதளப்பாக இருந்தாள். முகமும், அதிலுள்ள உறுப்புகளும், சமீபத்தில் காய்ச்சி இறக்கப்பட்ட பால்கோவா போல பளபளப்பாக இருந்தது.

    தன மொத்த உடைகளுக்கும் விடுதலை கொடுத்துவிட்டு, ஷவரைத் திருக,

    அடுத்த பூச்சிதறல், பட்டு மேனியில் கோடுகளை வரைய ஆரம்பித்துவிட்டன.

    குளியல் முடித்து, காட்டன் ஹவுஸ் கோட்டில் புது புஷ்பமாக வெளிப்பட்டாள் ரேஷ்மா.

    பெட்டி திறந்து ட்ரையரை எடுத்து, ஷாம்பூ ஈரத்தைப் போக்க மின்சார இணைப்பைத் தேடினாள்.

    செளத்ரியும் குளித்து முடித்துத் தயாராக,

    அவர்கள் பூட்டிக் கொண்டு, ரெஸ்ட்டாரென்ட் போகும் நேரம் சின்னதாக ஒரு பாரா! -

    கல்கத்தாவில் போன வாரம் காதல் திருமணம் செய்துகொண்டு கையோடு ஊட்டிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு (செளத்ரிக்கு தனியார் நிறுவனமொன்றில் - எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் - வேலை) ஊரைவிட்டுக் கிளம்பியவர்கள். சென்னையில் நாலு நாட்கள் தங்கி, தேனிலவை முடித்துக் கொண்டு, ஊட்டிக்குப்போக, நீலகிரி

    Enjoying the preview?
    Page 1 of 1