Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mutru Pulliyil Arambam
Mutru Pulliyil Arambam
Mutru Pulliyil Arambam
Ebook100 pages50 minutes

Mutru Pulliyil Arambam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903671
Mutru Pulliyil Arambam

Read more from Pattukottai Prabakar

Related to Mutru Pulliyil Arambam

Related ebooks

Reviews for Mutru Pulliyil Arambam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mutru Pulliyil Arambam - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    முற்றுப் புள்ளியில் ஆரம்பம்

    Mutru Pulliyil Arambam

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    உமா பத்மநாபனும், வரதராஜனும் கோரஸாகப் புன்னகைத்து விட்டு, வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியின் அடுத்த பகுதியான சிறப்பு விருந்தினர் சந்திப்பில் இன்று நாம் சந்தித்து உரையாட இருக்கும் நபர் தமிழகத்தின் தொழிலதிபர்களில் ஒருவரான கே. பி. சக்ரவர்த்தி, இருபது வருடங்களுக்கு முன்பாக சென்னைக்கு எந்த மூலதனமும் இல்லாமல்வந்து வேலை தேடி அலைந்த ஒரு இளைஞர் இன்றைக்கு வெற்றி பெற்ற தொழிலதிபர், கே.பி.சி. சொட்டுநீலம், கே. பி. சி. வாஷிங் பவுடர் என்றால் குழந்தைக்குக் கூடத் தெரியும் அளவில் உழைப்பால் வெற்றி பெற்று உயர்ந்து நிற்கும் கே.பி. சக்கரவர்த்தியை இப்போது நாம் சந்திப்பதில் மகிழ்ச்சி என்றதும்...

    ஷ்! குறுக்கேப் பேசாமல் பாருடா ராஸ்கல்!'' என்றாள் காஞ்சனா.

    அதனால எங்களுக்கு யாரோட ஆதரவும் இல்லை, ஏதோ ஒரு நம்பிக்கையில சென்னைக்குவந்துட்டோம். மோகன்ராம்னு எனக்கு ஒரு ஃப்ரண்டு, அவன் வீட்லதான் தங்கினோம், அவன் என் வாழ்க்கைல செஞ்ச உதவியை மறக்கவே முடியாது. வேலை தேடினேன், எதுவும் கிடைக்கலை. எனக்கு ஃபினாயில் தயாரிக்கத் தெரியும், மோகன் ராம்கிட்ட நூறு ரூபாய் கடன் வாங்கி அதுக்கான கெமிக்கல் காம்பவுண்ட்ஸ் வாங்கிட்டு வந்து ஃபினாயில் தயாரிச்சி, அதே தெருவுல இருந்த நாலஞ்சி வீடுகளுக்குக் கொண்டுபோய் வித்தேன், அந்த நூறு ரூபாதான் ஆரம்பம், தெருவுல இறங்கி வீடு வீடாப் போய் விக்கிறது கேவல மில்லைன்னு நினைச்ச அந்த நினைப்புதான் ஆரம்பம்.

    அப்புறம்?

    மூணே மாசத்தில் அதே தெருவுல ஒரு வீடு வாடகைக்குப் பிடிச்சேன். ஒரு சைக்கிள் வாங்கினேன். பத்து தெருவுக்கு சுத்த முடிஞ்சுது. உழைச்சேன், அப்படி உழைச்சேன், பணமில்லாம நான் பட்ட பல அவமானங்களுக்கு ஒரே பதிலடி அந்தப் பணத்தை சம்பாதிக்கிறதுதான்னு மனசுல ஒரு வைராக்யம் வந்திச்சு. திட்டம் போட்டு உழைச்சேன், ஃபினாயிலோட வாஷிங் சோப்பு, சொட்டு நீலம் இப்படி ப்ராடக்ட் சேர்த்துக்கிட்டேன், பிராண்ட் எல்லாம் அப்ப போடலை, படிப்படியா முன்னேறி இப்போ அம்பத்தூர்ல ரெண்டு யூனிட்ல மூணு ஷிஃப்ட் வேலையில மொத்தம் நானூத்திப் பதினேழு பேர் வேலை பார்க்கற நிறுவனத்தை நேரடியா நிர்வாகம் பண்ணிட்டு இருக்கேன்.

    விஷ்ணு திரும்பி, ஏன்மம்மி, கார்ஷெட்ல கிடக்குதே அதான் டாடி வாங்கின அந்த முதல் சைக்கிளா? என்று சிரித்தான்.

    கிண்டலா இருக்கா? வெயில் படாம, மழையிலநனையாம உங்கள வளர்த்தாச்சு. அதான் கேலியா பேசறீங்க என்றாள் காஞ்சனா.

    இப்போ உங்க கே.பி.சி. நிறுவனத்தில் என்னென்ன பொருள்கள் தயார் பண்ணி விக்கிறிங்க சார்?

    சொட்டு நீலம், வாஷிங் பவுடர் - இது ரெண்டு தான் பாப்புலரா போயிட்டு இருக்கு. சோப்பு, ஷாம்பூ இதெல்லாம்கூட - தயாரிக்கிறோம், அதெல்லாம் பெருசா ஹிட் ஆகலை.

    இப்போ இதைத்தவிர வேற என்ன தொழில்கள் பண்றிங்க?

    கே. பி. சி, ஃபைனான்ஸ்னு நிதி நிறுவனம் ஒண்ணும் நடத்தறேன். இப்போ அப்பளம், ஊறுகாய் பெரிய அளவுல தயாரிக்கிற பிளான்ல இருக்கேன்.

    "நூறு ரூபாய் கடன்பணத்தில் ஆரம்பிச்ச உங்க தொழிலோட இன்னிக்கு மதிப்பு, என்ன சார்? தர்மசங்கடமான கேள்வி கேட்டுட்டேனா?

    இல்லை, இல்லை. நான் ஒழுங்கா வருமானவரி கட்டற குடிமகன், அரசாங்கம் இதைச் செய்யலை, அதைச் செய்யலைன்னு சும்மா குறை சொல்லிக்கிட்டு, அதேசமயம் அரசாங்கத்துக்கு நாம் செலுத்த வேண்டிய வரிகளை கட்டாம டபாய்க்கிறது அசிங் கம்னு நினைக்கிறவன் நான். இன்னிக்கு தேதிக்கு என் தொழில்ல உள்ள மூலதனம், எனக்கு இருக்கற சொத்துக்கள் எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட முப்பத்தஞ்சி கோடி தேறும்.

    காஞ்சனா நெற்றியில் தட்டிக் கொண்டு, அய்யோ! எதெதில வெளிப்படையா இருக்கறது ன்னு இல்லையா? இதை யெல்லாமா பப்ளிக்கா சொல்வாங்க? என்றாள்.

    சும்மா இரும்மா, அப்பதான் யங்ஸ்டர்சுக்கு ஒரு கான்ஃபிடென்ஸ் வரும் என்றாள் மேகா.

    நூறு ரூபாயில ஆரம்பிச்சி இருபது வருஷத்தில் முப்பத்தஞ்சி கோடிக்கு அதிபதி ஆகியிருக்கிங்கன்னா இது பெரிய சாதனைதான். இந்த வெற்றிக்குக் காரணமா உங்க உழைப்பைச் சொல்வீங்களா?

    "உழைப்புங்கறது நம்ம உடம்புல இதயத் துடிப்பு மாதிரிங்க. இதயம் துடிக்கிறதை நிறுத்திட்டா? எல்லாமே போச்சு! அந்த மாதிரி எந்தத் தொழில்லயும் உழைப்புங்கற இ த ய த் து டிப்பு கடைசி வரைக்கும் இருந்தாகணும்.

    Enjoying the preview?
    Page 1 of 1