Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilave, Nil!
Nilave, Nil!
Nilave, Nil!
Ebook98 pages38 minutes

Nilave, Nil!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903677
Nilave, Nil!

Read more from Pattukottai Prabakar

Related to Nilave, Nil!

Related ebooks

Reviews for Nilave, Nil!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilave, Nil! - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    நிலவே, நில்!

    Nilave, Nil!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    மூன்று நாள் தொடர் மழைக்குப் பிறகு வானம் கண்ணைத் துடைத்துக் கொண்டது. ஆனால் அழுத மூஞ்சி மாறாமல் புன்னகைக்குத் தயாரில்லாமல் புறப்பட்டிருந்தான் சூரியன். நகர் முழுவதையும் குளிர் காற்று தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

    சந்திரன் இடுப்பில் ஈரத்துண்டுடன் பாத்ரூமிலிருந்து வெளிப்பட, காத்திருந்த தங்கை அமுதா, எவ்வளவு நேரம்ப்பா என்று விட்டு உள்ளே சென்றாள்.

    அப்பா ரத்தினசபாபதி கிணற்றடியில் தன் துணிகளை துவைத்துக் கொண்டிருக்க, சந்திரன் வீட்டினுள் கூடத்திற்கு வந்து மேஜை விசிறியைப் போட்டு தன் பக்கம் திருப்பி வைத்துக் கொண்டு, கண்ணாடி முன் நின்றான். எண்ணெய் தேய்த்து தலை சீவிக் கொண்டே இடது கையில் பேப்பர் பிடித்து தலைப்புச் செய்திகளைப் பார்த்தான்.

    வாசலில் சைக்கிள் மணி கேட்டது.

    திரும்பிப் பார்க்க, சொதசொதவென்றிருந்த செம்மண் தரையில் சைக்கிளை ஸ்டாண்ட் போட முடியாமல் காம்பௌண்ட் சுவர் ஓரமாக சார்த்தி வைத்து விட்டு, குடையை மடக்கி கக்கத்தில் வைத்துக் கொண்டு கையில் பாலிதீன் சாக்கை வெட்டித் தைத்த பையுடன் உள்ளே வந்தார் நீலகண்டன்.

    தம்பி இருக்கணும்னு வேண்டிக்கிட்டே வந்தேன்

    வாங்க என்ற அழைப்பையோ, உக்காருங்க என்ற உபசரிப்பையோ அவர் எதிர்பார்க்காமல் அமர்ந்து, அப்பா இருக்காரில்லே? என்றார்.

    சார், உங்களை ஞாயிற்றுக் கிழமைதானே. வரச் சொன்னார் அப்பா. அன்னைக்குத்தான் எல்லாருக்கும் ஃப்ரீ சந்திரன் அருகே மர அலமாரி திறந்து உள்ளே அயர்ன் செய்து அடுக்கியிருந்ததில் ஒரு பேண்ட் தேர்ந்தெடுத்து அங்கேயே நின்று அணிந்து கொண்டான்.

    அப்பா குளிக்கிறாரா?

    இத பாருங்க சார், காலைல இப்படி வந்து தொந்தரவு பண்ணினா என்ன பண்றது? எட்டரை மணிக்கு நான் பிரெஸ்ல இருக்கணும். எட்டு மணிக்கு பஸ், அப்பா இன்னும் குளிக்கலை. துவைச்சிட்டிருக்கார். வருவார், பேசுங்க

    சந்திரன் கிட்டே பேசுங்கன்னு சொல்வார் உங்கப்பா

    தெரியுமில்லே. அப்புறம் ஏன் வொர்க்கிங் டேல வர்றிங்க?

    நேரம் நெருங்கி வர்றப்ப ஞாயிற்றுக்கிழமை, திங்கக் கிழமைன்னு பார்க்க முடியுமா தம்பி? உங்களுக்கு அவசரமில்லை. மாப்பிள்ளை வீடு, பொண்ணைப் பெத்தவனுக்கு உள்ள அவசரம் உங்களுக்குத் தெரியாது, உங்க தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லுவாங்க பாருங்க, அப்ப தெரியும்

    அமுதா குளித்து வேறு உடையணிந்து கொண்டு சமையலறைக்கு வந்திருக்க, சந்திரன் உள்ளே வந்து, அமுதா, எனக்கு டிபன் வை, லன்ச் பாக்ஸ்ல பேக் பண்ணிடு. தரகர் வந்திருக்கார். அவருக்கு ஒரு காபி கொண்டு போய்க் கொடு என்றுதான் தட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

    டிபன் சாப்பிட்டு விட்டு கூடத்திற்கு வந்தபோது ரத்தினசபாபதியிடம், நான் வேணா எழுதித் தர்றேன். இந்த இடம் அமையுது என்று நீலகண்டன் சொல்லிக் கொண்டிருந்தார்

    சந்திரன், என்னமோ சொல்றார் பாரு, கடலூராம் என்றார் அப்பா.

    சந்திரன் அலமாரியில் இருந்து வாட்ச் எடுத்துக்கட்டிக் கொண்டு, அதில் டைம் பார்த்து, அப்பா, இப்ப நின்னு பேச முடியாது. பஸ்சை விட்டுடுவேன். சாயங்காலம் வரச் சொல்லுங்க என்றான்.

    ஒண்ணு செய்றேன். வாங்க, பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் பேசிட்டேப் போகலாம். ரெண்டு நிமிஷத்து சேதி என்று நீலகண்டன் எழுந்து கொண்டார்.

    சந்திரனும், அவரும் பஸ் ஸ்டாண்டிற்கு நடந்தார்கள்.

    கடலூர். எண்ணெய் வியாபாரம். ரெண்டு பொண்ணு. மூத்தவளை வேதாரண்யத்தில் கொடுத்திருக்காங்க. இது ரெண்டாவது பொண்ணு. போன வருஷம்தான் பி.எஸ்சி முடிச்சிருக்கு. பொண்ணை நான் பார்த்தேன் தங்க விக்ரகம் தோத்துச்சு போங்க. உங்க போட்டோவைக் கொடுத்தேன். இந்த மாதிரி சின்ன குடும்பம், அப்பா மட்டும்தான், அம்மா இல்லை. ஒரு தங்கச்சிதான், பிச்சுப் பிடுங்கல் இல்லை; பையன் பி.காம் படிச்சுட்டு, ஆயிரத்தி ஐநூறு ரூபா சம்பளத்துல பிரிண்ட்டிங் பிரஸ்ல மேனேஜர்ன்னு எல்லாம் சொன்னேன்

    இருங்க, எனக்கு சம்பளம் ஆயிரம் ரூபா தான்

    அட! இப்ப என்ன மோசமாய் போச்சு. சொல்றப்போ ஒண்ணு, ரெண்டு சேர்த்துச் சொல்றதுல என்ன வந்துச்சி. அவங்கள்ல பொண்ணு போட்டோ வெளில கொடுக்கறதில்லையாம். ஒரு நடை போய்ட்டு வந்துட்டாப் போச்சு. இங்க இருக்கிற கடலூர்.

    பொண்ணு எப்படி இருப்பா?

    அய்யோ! என் வயசுக்கு அதிகமாக சொல்றதுக்கு சங்கடமா இருக்கு. நீங்கதான் பார்க்கப் போறீங்களே, மாநிறந்தான்னாலும்... மூக்கும், முழியுமா...

    "இத பாருங்க சார்,

    Enjoying the preview?
    Page 1 of 1