Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thottravanin Dairy Kurippu
Thottravanin Dairy Kurippu
Thottravanin Dairy Kurippu
Ebook128 pages43 minutes

Thottravanin Dairy Kurippu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த உலகில் பெண், பொன், மண் இவைகளை நோக்கியே நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம். பணத்தை மையமாக வைத்துதான் வாழ்க்கை சுழன்று கொண்டுள்ளது. அதிகாரத்தையும், பணபலத்தையும் வைத்தே சமூகம் மனிதனின் தகுதியை நிர்ணயிக்கிறது. துறவறம் என்பது வாழ்க்கையில் தோல்விகண்ட ஒருவருக்கானது என சமூகம் விலகிக் கொள்கிறது. கோயிலில் தெய்வத்தின் சந்நதியில் இருகரம் கூப்பி வணங்கி பணத்தையே நாம் யாசகமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். சமூகம் உனக்குள் கேள்விகள் எழாமல் பார்த்துக் கொள்கிறது. உலகை வெல்வது பற்றி சமூகம் பேசும். தன்னை வெல்வதைப் பற்றி அதற்குத் தெரியாது. நான் யார் என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்பவனை சமூகம் கலகக்காரனாகத்தான் பார்க்கும். சாக்ரடீஸ், இயேசு போன்றவர்கள் மரணத்தைக் கண்டு பயந்து நடுங்காமல் இருந்ததினால் தான் வரலாறு இன்னும் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையே தேடல்தான் தேடிக் கண்டு கொண்டவர்கள் சாமன்யராக மக்கள் மத்தியில் நடமாட முடியாது. மரணம் ஒரு விடுதலை என்று உணரும் ஒவ்வொருவரும் தீர்க்கதரிசிகள் தான்.

பேரன்புடன், ப. மதியழகன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124603641
Thottravanin Dairy Kurippu

Read more from P. Mathiyalagan

Related to Thottravanin Dairy Kurippu

Related ebooks

Reviews for Thottravanin Dairy Kurippu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thottravanin Dairy Kurippu - P. Mathiyalagan

    http://www.pustaka.co.in

    தோற்றவனின் டைரிக் குறிப்பு

    Thottravanin Dairy Kurippu

    Author:

    ப. மதியழகன்

    P. Mathiyalagan
    For more books

    http://www.pustaka.co.in/home/author/mathiyalagan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இவர்கள் இன்னதென்று…

    மண்ணின் மகாபுருஷர்கள்

    இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்

    அம்மா

    அப்பா

    மகள்

    இவன்

    பித்தன்

    வாசல்

    வலி

    பலிபீடம்

    வெளி

    கடிதம்

    வெண்மேகம்

    பிராணன்

    இவர்கள் இன்னதென்று…

    இந்த உலகில் பெண், பொன், மண் இவைகளை நோக்கியே நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம். பணத்தை மையமாக வைத்துதான் வாழ்க்கை சுழன்று கொண்டுள்ளது. அதிகாரத்தையும், பணபலத்தையும் வைத்தே சமூகம் மனிதனின் தகுதியை நிர்ணயிக்கிறது. துறவறம் என்பது வாழ்க்கையில் தோல்விகண்ட ஒருவருக்கானது என சமூகம் விலகிக் கொள்கிறது. கோயிலில் தெய்வத்தின் சந்நதியில் இருகரம் கூப்பி வணங்கி பணத்தையே நாம் யாசகமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். சமூகம் உனக்குள் கேள்விகள் எழாமல் பார்த்துக் கொள்கிறது. உலகை வெல்வது பற்றி சமூகம் பேசும். தன்னை வெல்வதைப் பற்றி அதற்குத் தெரியாது. நான் யார் என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்பவனை சமூகம் கலகக்காரனாகத்தான் பார்க்கும். சாக்ரடீஸ், இயேசு போன்றவர்கள் மரணத்தைக் கண்டு பயந்து நடுங்காமல் இருந்ததினால் தான் வரலாறு இன்னும் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையே தேடல்தான் தேடிக் கண்டு கொண்டவர்கள் சாமன்யராக மக்கள் மத்தியில் நடமாட முடியாது. மரணம் ஒரு விடுதலை என்று உணரும் ஒவ்வொருவரும் தீர்க்கதரிசிகள் தான்.

    பேரன்புடன்

    ப. மதியழகன்

    1. 11. 18

    மன்னார்குடி

    115, வள்ளலார் சாலை,

    ஆர். பி. சிவம் நகர்,

    மன்னார்குடி - 614001.

    திருவாரூர் மாவட்டம்.

    தமிழ்நாடு,

    இந்தியா.

    cell:9597332952, 9095584535

    mathi2134@gmail.com

    Whatsapp:9384251845

    மண்ணின் மகாபுருஷர்கள்

    1

    இதோ சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார் இயேசு. இன்னும் அவருக்கு உயிர் இருக்கிறது. தனக்கு இருபுறமும் திருடர்கள் அறையப்பட்டிருப்பதை பார்க்கிறார். இன்னும் அவரை தச்சனின் மகனாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். கீழே குனிந்து ஜனங்களைப் பார்க்கிறார். ‘பிதாவே இவர்களை மன்னியும் இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்’ என தனக்குள் முணுமுணுக்கிறார்.

    மண்ணில் உதிரம் வழிகிறது. எத்தனையோ பேர்களை உண்டு செரித்த வயிறல்லவோ அதற்கு. மேரி கண்ணில் நீர் வழிய அண்ணாந்து பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறாள். மக்களில் பெரும்பானோர் இயேசுவை காறி உமிழ்ந்து வசை மாறி பொழிகின்றனர். அவர் முணுமுணுப்பதைப் பார்த்து மக்கள் இவன் எலியாவை அழைக்கிறான் பார் என்றார்கள்.

    விண்ணுலக சாம்ராஜ்யம் என்பதை யூதர்கள் தவறாகப் புரிந்து

    கொண்டனர். மீண்டும் அண்ணாந்து பார்த்து முணுமுணுக்கிறார் ‘பிதாவே என்னை ஏன் கைவிட்டீர்’ என. இதோ வெட்டவெளியிலிருந்து ஒரு நீர்த்துளி அவரின் உதடுகள் மீது விழுகிறது. தலைகுனிந்து ‘உம் விருப்பம் அதுவாக இருந்தால் அப்படியே ஆகட்டும்’ என்கிறார்.

    யூதர்களின் ராஜா என்றழைக்கப்பட்டவர் உலகுக்கே ராஜாவானார். அப்படியே உன் சித்தப்படி ஆகட்டும் என்று இறைவனின் ஆளுகைக்கு தன்னை ஒப்படைத்த பின் தச்சனின் மகனான இயேசு, கிறிஸ்துவாக உருமாறுகிறார். அலைகள் கடலுக்குள் திரும்புதைப் போல அவர் கடவுளுக்குள் ஐக்கியமாகிறார்.

    கடவுளின் குமாரர்களுக்கு மரணத்தையே மக்கள் பரிசாகத் தருகின்றனர். அன்பே கடவுள் என போதிக்கவே தேவமைந்தன் இறங்கி வந்தார். மீண்டும் குழந்தையாகாமல் உங்களுக்கு பரலோக சாம்ராஜ்யத்தில் இடமில்லை என்றார். உள்ளத்தளவில் மனிதன் மீண்டும் குழந்தையாக மாற அவர் வலியுறுத்தினார். இன்றளவும் வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள் எல்லாம் தேவனின் காலடியில் தான் சரண்புகுகிறார்கள்.

    அன்பை விதைத்துவிட்டுப் போன அந்த மனுஷகுமாரன் வன்முறைக்கு அஹிம்சையையே பதிலாகத் தந்தார். எல்லா நாடுகளும் ஆயுதங்களை எல்லாம் கடலில் தூக்கி போட்டுவிட்டால் மேய்ப்பன் மீண்டும் இம்மண்ணுலகுக்கு வருகை தருவார்.

    2

    சித்தார்த்தன் பயணித்த ரதம் பாதை மாறிச் சென்றது. சுத்தோதனர் தன் மகனை இறப்பு, பிணி, மூப்பு என்றால் என்னவென்று தெரியாமல் வளர்த்திருந்தார். அவன் பிறக்கும் போதே ஜோதிடர்கள் கணித்திருந்தார்கள் அவன் இன்ன வயதில் துறவறம் பூணுவான் என்று. இளவரசன் ரதம் செல்லும் பாதையில் காவல் அதிகமாய் இருக்கும் சவஊர்வலம், நோயாளிகள், முதியோர் இவர்களை அந்தப் பாதையில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.

    சாரதி தெரிந்தே தான் வேறு பாதையை தேர்ந்தெடுத்தானா எனத் தெரியாது. எதிர்ப்பட்ட நோயாளியைப் பார்த்து ‘இவனுக்கு என்ன நேர்ந்தது ஏன் உடல் முழுவதும் கொப்பளங்களாக இருக்கிறது’ என தேரோட்டியிடம் கேட்கிறான் சித்தார்த்தன். ‘அவன் வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறான் இளவரசே. உடலே வியாதிகளின் கூடாரம் தானே’ என பதில் தருகிறான் சாரதி.

    சிறிது தொலைவைக் கடந்த பின்னர் தடியை ஊன்றி நடந்து வரும் முதியவர் ஒருவர் எதிர்ப்படுகிறார். ‘இவர் ஏன் தடியை ஊன்றி வருகிறார். இவரது தோலில் ஏன் இவ்வளவு சுருக்கங்கள் காணப்படுகிறது’ என வினவுகிறான் சித்தார்த்தன். அதற்கு தேரோட்டி ‘பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் இவைகளை எதிர் கொண்டே ஆகவேண்டும் இளவரசே’ என்று பதிலளிக்கிறான்.

    சற்று தொலைவில் சவஊர்வலம் ஒன்று எதிர்ப்படுகிறது. சித்தார்த்தன் ‘இந்த மனிதன் ஏன் படுத்திருக்கிறான். இவனை ஏன் நான்குபேர் சுமந்து செல்கிறார்கள்’ என்கிறான். அதற்கு தேரோட்டி எவராலும் மரணத்திலிருந்து தப்ப முடியாது இளவரசே. எல்லோருக்கும் எது நிச்சயமோ இல்லையோ மரணம் ஒன்று மட்டும் நிச்சயம் இளவரசே’ என்று பதில் தருகிறான்.

    நிஜம் சித்தார்த்தனை பேயறை அறைகிறது. அவன் ரதத்தை அரண்மணைக்கு திருப்பச் சொல்கிறான். மரண அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனை பேயுறக்கத்துக்கு அழைத்துச் செல்வதை அறிந்து அவர் மனம் பரிதவித்தது. மரணப் புதிருக்கு விடை தெரிய வேண்டும் அவருக்கு. நிலையில்லாத இந்த உடலுக்கு ஏன் இந்த ஆடம்பரங்கள் என கண்ணாடி முன்பு தன் பிம்பத்தை பார்க்கிறார். அவரது கேள்விகளுக்கு பதில் அரண்மணையில் இருந்தால் கிடைக்காது எனத் தோன்றுகிறது. அன்று இரவு

    Enjoying the preview?
    Page 1 of 1