Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

A Separation
A Separation
A Separation
Ebook128 pages39 minutes

A Separation

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விவாகரத்து பல காரணங்களுக்காக நடக்கிறது. ஆனால் இந்த சமுதாயம் காரணம் என்று, நடத்தை, தீய பழக்க வழக்கம், அடித்து துன்புறுத்துதல், பணப்பிரச்னை போன்றவற்றை மட்டுந்தான் எடுத்துக் கொள்கிறது.

இப்படியான பிரச்னை எதுவுமேயில்லாமல், இந்த திரைக்கதையில் ஒரு விவாகரத்து நீதிமன்றத்திற்கு வருகிறது. அதன் நியாயங்கள் அதற்கான நியாயங்கள் கொண்டவை. மதிக்கப்பட வேண்டியவை. அந்த தம்பதியர் இருவரும் நடந்து கொள்கிற விதம் எல்லோர் மனதிலும் அவர்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தித் தந்து விடுவது நிஜம்.

ஒரு உறவை தக்க வைக்க ஆதாரமாய் அந்த உறவிற்கிடையே புரிதலும், ஈர்ப்பும் அத்தியாவசியமாகிறது என்பதை இந்த சமூகம் பெரிதாய் காதில் போட்டுக் கொள்வதில்லை. மேலை நாடுகளில் இரண்டாம் உலகப்போரின் போது ஆண்கள் நிறைய பேர் இறந்து போனார்கள். பெண்களை தொழிற்சாலைகளுக்கு முதலாளிகளே விரும்பி அழைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அப்படித் தான் மேலை நாடுகளில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, கையில் நாலு காசு பார்த்து, படித்து, வெளியுலகம் அறியத் துவங்கி, பொருளாதார தன்னிறைவடைந்து, சொந்தக்காலில் நிற்க பழகி, கற்பு என்கிற உடல் அரசியல் தந்திரத்தை உடைத்தெறிந்து, ஆணுக்கு இணையாக பெண்கள் கோலோச்சத் துவங்கியது அதன் விளைவாக தான்.

அந்த காலக்கட்டத்தில் மாறிவரும் பெண் உலகை சரிசமமாக நடத்த மனமில்லாமலும், அந்த மாறுதலை புரிந்து கொள்ள இயலாமலும் ஆணுலம் அதிர, மனமுறிவு அதிகரிக்க ஆரம்பித்தது. அப்போது கம்யூனிஸ தலைவர் லெனின் சொன்னார். இது மாற்றத்தின் அறிகுறி. பெண்களின் வளர்ச்சிக்கான அடையாளம். ஒட்டுமொத்த சமுதாயத்தக்குமான மறுமலர்ச்சி. இது அதிகரித்து பின் இருபாலருக்கும் இடையில் எல்லாவிதத்திலும் ஒரு சமண் எட்டியதும், புரிதல் அதிகரித்து பின் மட்டுப்படத் துவங்கி விடும் என்றார்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஒரு கதையிலும் இப்படியொரு காட்சி வரும். கணவனும், மனைவியும் வழக்கறிஞரிடம் விவாகரத்து கேட்டு வருவார்கள். அவரும் இதே மாதிரி காரணம் கேட்பார். அதற்கு அந்த கணவன் இப்படிச் சொல்வான்.

எங்களுக்கிடையில பெருசா எந்தவித பிரச்னையும் இல்ல. ஆனா காதல் இல்ல. காதல் இல்லாம எப்படி ஒரு உறவுவை நினைச்சி பாக்க முடியும்... அதனால தான் பிரிஞ்சிடலாம்னு ரெண்டு பேருமே சேந்து இந்த முடிவை எடுத்தோம் என்பார்.

இதில் மதம் சார்ந்த வாழ்க்கை முறைக்கும், பகுத்தறிவு சார்ந்த வாழ்க்கை முறைக்குமான இடைவெளியில் துவங்கி, தொன்றுதொட்டு வருபவைக்கும் புதுமைக்குமான இடைவெளியில் நுட்பமாய் பயணிக்கிறது இந்த திரைக்கதை.

அஸ்கர் ஃபர்ஹாடி 1972-ல் ஈரானில் பிறந்தார். 1986-ல் யூத் சினிமா சொஸைட்டி ஆஃப் இஸ்பஹானியில் சேர்ந்து சினிமா கற்றார். 2011-ல் ‘எ செப்பரேஷன்’ படத்தை இயக்கி ஆஸ்கர் விருது பெற்றார்.

நேசத்துடன், தி. குலசேகர்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003627
A Separation

Read more from Kulashekar T

Related to A Separation

Related ebooks

Reviews for A Separation

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    A Separation - Kulashekar T

    http://www.pustaka.co.in

    எ செப்பரேசன்

    A Separation

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    ஈரானிய திரைக்கதைகள்

    திரைப்படங்கள் இன்றைய வாழ்வில் பிரதான அங்கம் வகிப்பவை. சமூகத்தின் ஒவ்வொரு அசைவிலும் அதன் ஆளுமை பங்கெடுக்கிறது. தரமான திரைப்படங்கள் ஒரு சமுதாயத்தின் அறவெழுச்சிக்கு அடிகோலுபவையாகவும், ஆக்கப்பூர்வமான அடுத்த கட்ட நகர்விற்கு எடுத்துச் செல்லுபவையாகவும், அந்த சமுதாயத்தில் நிலவும் குதூகலங்களை, கொண்டாட்டங்களை, சிடுக்குகளை முன்வைத்து, ரசனையை ஆழ்ந்த சிந்தனைக்குள் ஆழ்த்தி வளர்த்தெடுப்பவையாகவும் இருக்கும்.

    அமெரிக்க திரையுலகம் கேளிக்கைகளிலும், கற்பனைகளிலும், மிதமிஞ்சிய விஞ்ஞான புனைவுகளிலும், தொழில்நுட்பத்திலும் மூழ்கியிருப்பதற்கு காரணம், அங்கே வறுமை ஒரு பிரச்னை இல்லை. அதை கடந்து விட்டவர்களுக்கு பொழுதுபோக்கு மட்டுமே மிச்சமிருக்கும். அதனால் அவர்களின் திரைப்படங்கள் அப்படியிருப்பதில் வியப்பில்லை.

    பிரச்னைகள் அதிகம் உள்ள வளரும் நாடுகள் அவர்களின் ஏழ்மைக்கான சமூக, பொருளாதார, அரசியல் பிரச்னைகளை கலாப்பூர்வமாக தங்களின் திரைப் படைப்புகளில் சிருஷ்டிப்பதே நியாயம்.

    அதை விடுத்து ஏழை நாடுகளில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒருவர் நூறு பேரை அடிக்கிற அதிபராக்கிரம படங்களை எடுத்து, அதற்கு பாலாபிசேகம் செய்வித்து கொண்டாட வைக்குமேயானால், அந்த நிகழ்வு, பிரச்னையில் உழல்கிற ஒருவரை போதைக்குள் மூழ்கி, அதிலிருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளலாம் என்பதற்கு ஒப்பானது. கொளுத்தும் வெயிலின் யதார்த்தத்தில், கற்பனையில் பெய்யும் மழையில், குதூகலிக்க விரும்புவதற்கு ஒப்பானது.

    மதத்தின் பிடியில் சிக்குண்டிருக்கும் ஈரானிய சமுதாயத்தில் உருவாக்கப்படும் திரைப்படங்கள் அப்படிச் செய்வதில்லை. அவை தங்கள் வாழ்நிலை மீது ஆதிக்கம் செலுத்தும் கண்மூடித்தனமான மதநம்பிக்கை, அதன் விளைவாக மட்டுப்படும் பெண் விடுதலை, பின்தங்கும் சமூக, பொருளாதாரம் என அத்தனை கேள்விகளையும் கலாப்பூர்வமாய் முன் வைக்கிறது. அப்படியான உயிர்ப்புள்ள படைப்புகளை தரிசிக்கிற போது அத்தனை பிரமிப்பாக உள்ளது.

    அதனாலேயே ஈரானிய திரைக்கதைகள் உலக அளவில் கவனிக்கப் படுபவையாகவும், உலக திரைப்பட விருதுகளை பெருவாரியாக அள்ளிச் செல்பவையாகவும் இருக்கின்றன. சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட புரட்சியை தொடர்ந்து, எழுபதுகளில் நியூவேவ் சினிமா அங்கே கோலோட்ச துவங்கி, விடாமுயற்சியோடு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

    அவர்கள் பத்து லட்சத்தில் ஒரு படத்தை எடுத்து விடுகிறார்கள். அவை எளிமையானவை. சுவாரஸ்யமானவை. கலைநயமிக்கவை. அவர்கள் கடுமையான மதவாத அரசின் தணிக்கை கெடுபிடிகளையும் தாண்டி, புதியபுதிய வழிகளில் புதுமையை தங்களின் திரைப்படங்களில் படைக்கிறார்கள்.

    மேஜிக்கல் ரியலிசம் என்றொரு உத்தியை இலக்கியத் துறை அறிமுகப்படுத்தியதற்கு பின்னால் ஒரு சமூக அடக்குமுறை இருந்திருக்கிறது. ஜனநாயகமற்ற ஒரு எதேச்சியதிகார ஆட்சியில், கலை தன்னை ரகசியமான சங்கேத பாசையின் மூலம் மக்களோடு அடையாளப்படுத்திக் கொள்ள கையாண்ட உத்தி தான் அது.

    அப்படியாக எத்தனை அடக்குமுறைகள் இருந்தாலும், அதனை உரமாக எடுத்துக் கொண்டு, ஈரானிய திரைப்படங்கள் புதியபுதிய கலைநேர்த்தியை படைப்புகளில் படைத்தவண்ணம் முன்னோக்கி பயணிக்கிறது.

    குழந்தைமை, காதல், குடும்ப உறவு, பெண்ணியம், அரசியல் என பலதளங்களை மையப்கருவாக கொண்டிருக்கும், இந்த ஏழு திரைக்கதைகளை படித்து பரவசிக்கையில், மேலே சொன்ன அத்தனையின் நியாயங்கள் புரியும். உண்மையின் ருசி புரியும். ஒரு புதிய படைப்புலகம் நமக்குள் நட்பு கொள்ளும். அது யதார்த்தம், உண்மை, அறம், சுவாரஸ்யம் மற்றும் நுட்பம் நிறைந்த உணர்வு எழுச்சியால் கட்டமைக்கப்பட்ட மகோனத கலைவடிவமாய் எங்கும் பரிமளிக்க வழி வகுக்கும்.

    நேசத்துடன்,

    தி. குலசேகர்

    மெக்மல்பஃப் + ஒளிப்பதிவாளர் செழியன் = ஒரு உரையாடல்

    ஈரானிய இயக்குநர் மோஷென் மெக்மல்பஃப் உடனான சந்திப்பின் சாரத்தை இங்கே வரவேற்புரையாக வழங்குவது பொருத்தமாக இருக்கும். அதை பார்த்து விட்டு, பிற்பாடு, உலகத்தரத்திலான, மிகச் சிறந்த ஈரானிய திரைக்கதைகளுக்குள் இறக்கை கட்டி பறக்கலாம்.

    ஈரானிய திரைக்கதைகளில் புதிய அலை அறுபதுகளில் 'கவ்' திரைப்படத்திலிருந்து துவங்குகிறது என்று சொல்லலாம். அந்த படத்தில் உதவி இயக்குநராய் இருந்தவர் அபாஸ் கிராஸ்டமி. ஈரானிய திரையுலகின் பிதாமகர். இவரின் சீடர்கள் தான் ஜாபர் பனாஹி மற்றும் மெக்மல்பஃப். மெக்மல்பஃப்பின் சீடர் தான் மஜீத் மஜிதி. மெக்கமல்பஃப்பின் சாரா, ஹனா என்கிற இரண்டு மகள்கள், மற்றும் மனைவி மெர்ஸியா

    Enjoying the preview?
    Page 1 of 1