Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal
Bakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal
Bakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal
Ebook224 pages1 hour

Bakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதலுக்கு வயசே ஆவதில்லை. என் இள வயசில் குமுதத்தில் எழுதிய காதல் கதைகள் இவை - நகைச்சுவையுடன் கூடியவை.

தேடித் துருவிப் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் ஒரு ஆபாசமோ வக்கிரமோ இல்லாத கைபடாத ரோஜாத் தனமான கதைகள். 'Boy Meets Girl' ரகமான, ரசமான இனிய கொழுந்து வெற்றிலை ரகமான இக்கதைகள் அனைத்தும் இளமைக் குமுதத்தில் வெளியானவை.

- பாக்கியம் ராமசாமி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303598
Bakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal

Read more from Bakkiyam Ramasamy

Related to Bakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal

Related ebooks

Related categories

Reviews for Bakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    பாக்கியம் ராமசாமியின் நகைச்சுவை சிறுகதைகள்

    Bakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. காவீகுவே

    2. பிரம்மச்சாரி ஊசி

    3. சூடு யாருக்கு?

    4. பிலாக்கண சுந்தரி

    5. பரபரப்பு

    6. ஐந்துபேர் கொடுத்த அற்புதக் கதை

    7. மிஸ் அபயம்!

    8. காதல் கூஜா

    9. சாயாதேவியின் நாய்க்குட்டி

    10. வெங்காய வடைமேல் காதல்

    11. ஒருநாள் வெயிட்டர்

    12. கிராக் கதை

    13. காண்ட்டீன் கிராஜுவேட்

    14. ஒரு கை பார்க்கிறோம்

    15. அனுவின் அடிச்சுவட்டில்

    16. மாலதியின் ரகசியம்

    17. அட்டகாசமே உன் பெயர் அகல்யாவா

    18. காதல் ஒரு கப்!

    19. பாவம், இவளொரு 'தைக்ப'

    முன்னுரை

    காதலுக்கு வயசே ஆவதில்லை. என் இள வயசில் குமுதத்தில் எழுதிய காதல் கதைகள் இவை - நகைச்சுவையுடன் கூடியவை.

    தேடித் துருவிப் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் ஒரு ஆபாசமோ வக்கிரமோ இல்லாத கைபடாத ரோஜாத் தனமான கதைகள். 'Boy Meets Girl' ரகமான, ரசமான இனிய கொழுந்து வெற்றிலை ரகமான இக்கதைகள் அனைத்தும் இளமைக் குமுதத்தில் வெளியானவை.

    பாக்கியம் ராமசாமி

    ***

    1. காவீகுவே

    எள்+கொள் வெடித்தது சுந்தரராமனின் முகத்தில்.

    அப்பா, உங்கள் சினேகிதருக்கு இன்றே நோட்டீஸ் கொடுத்துக் கிளப்பவேண்டியதுதான். அந்தப் பெண்ணுக்கு என்ன கொழுப்பு! என்று உறுமினான்.

    நோட்டிஸா, பெண்ணா, கொழுப்பா, ஏன், என்ன நடந்தது? என்று நாராயணமூர்த்தி பதறினார். எப்போதுமே மகனிடத்தில் அவருக்குக் கொஞ்சம் நடுக்கம்.

    நாராயணமூர்த்திக்கு அடையாறு பலராம் நகரில் ஒரு சிறு வீடு இருந்தது. அந்த நெருப்புப் பெட்டி அவருக்கு எதிர்பாராத விதமாகக் கிடைத்தது. என்னவோ அப்ளை செய்து வைப்போமே என்று விண்ணப்பம் போட்டு வைத்தார். கிடைத்துவிட்டது. தான் சைதாப்பேட்டையில் வாடகைக்கு இப்போது குடியிருக்கும் வீடே அவருக்குச் செளகரியமாக இருந்ததால் அடையாறு வீட்டை அவருக்குத் தெரிந்த ஒரு நண்பருக்கு வாடகைக்கு விட்டுவிட்டார்.

    அந்த வாடகையை வசூலித்து வரும் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்படைத்திருந்தார். மாசா மாசம் அல்ல. இந்த ஒரு தடவைதான்.

    அதற்குள் என்னவோ ரகளை செய்துகொண்டு வந்துவிட்டான்.

    நடந்தது என்ன விஷயம் என்று சட்டென்று சொல்லிவிட்டால் அவன் பெயர் சுந்தரமா? பட் தட்... தட் பட்... என்று படபடாக் குச்சி மாதிரி பொரிந்து விட்டுத் தன் அறைக்குப் போய்விட்டான்.

    உன் பிள்ளைக்கு என்ன கோபமாம்? என்று மத்தியானத்துக்கு, மேல் நாராயணமூர்த்தி மனைவியிடம் கேட்டார்.

    என்னைக் கேட்டால்? உங்க அருமைச் சினேகிதர் என்ன சொன்னாரோ என்னவோ? பெண்… கொழுப்பு என்றான். அவருடைய பெண் என்ன சொன்னாளோ? என்று கவலைப்பட்டாள் சாரதா.

    நோட்டீஸ் விட்டுக் கிளப்ப வேண்டுமென்று சொல்கிற அளவுக்கு சீதாராமன் அப்படி என்ன தவறாக நடந்துகொண்டுவிட்டான்?

    மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் நீங்களே அங்கே போய்க் கேட்டுக்கொண்டு வந்துவிடுங்கள். இவனைக் கேட்டால் சொல்வதற்கு இன்னும் நாலுநாள் ஆகும், என்று மனைவி தெரிவித்த யோசனைப்படி நாராயணமூர்த்தி அப்போதே பஸ்ஸைப் பிடித்து அடையாறுக்குப் புறப்பட்டார்.

    அடடா… இந்த வெய்யிலில்… என்று குடித்தனக்கார சீதாராமன் நாராயணமூர்த்தியை வரவேற்றார்.

    ஏதோ ஒரு மின்னல் போலப் பளிச்சென்று ஒரு பெண் உள்ளே விருட்டென்று மறைந்த மாதிரி இருந்தது.

    உங்க பெண்ணா? என்றார் நாராயணமூர்த்தி.

    ஆமாம். காலையில் ஏதோ கலாட்டாவாம். நானும் இல்லை. சுந்தரம் ஏதோ கேட்டிருக்கிறான். இவள் ஏதோ சொல்லியிருக்கிறாள். சிறுசுகள் பேச்சை நாம் பெரியவர்கள் பெரிசு பண்ணக்கூடாது, என்றார் சீதாராமன்."

    நாராயணமூர்த்தி சிரித்தவாறு, எனக்கும் விஷயம் என்னவென்று தெரியாது. வந்ததும் வராததுமாக, 'நோட்டிஸ் விட்டு அவர்களைக் கிளப்ப வேண்டும்' என்று பையன் ஏதோ கோபமாகச் சொன்னான். என்னவோ ஏதோ என்று நான் இப்போது ஓடி வருகிறேன். என்ன நடந்தது? என்றார்.

    கிளப்ப வேண்டும், நோட்டிஸ் என்ற வார்த்தைகள் உள்ளே சென்று ஒரு பரபரப்பையும் உஷ்ணத்தையும் உண்டாக்கின.

    சீதாராமனின் சம்சாரம் நாகலட்சுமியம்மாள் சம்மனில்லாமல் ஆஜராகித் தன் தலையை மரங்கொத்தி மாதிரி வெளியே விருட்டென்று நீட்டி, கணவனிடம், அவர் பையன் செய்த அக்கிரமத்தை நீங்களே புழக்கடைக்குக் கூட்டிக்கொண்டு போய் அவரிடம் காட்டுங்களேன்? என்று கீச்சுக் குரலானாலும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

    'அக்கிரமம்!' என்ற வார்த்தை நாராயணமூர்த்தியின் வெள்ளரிப் பழஉடம்பைக் கீறுவது போலிருந்தது. தன் மகனை அக்கிரமக்காரன் என்று ஒரு நொடியில் தாக்கித் தன் எதிரேயே பேச இந்த மரங்கொத்திக்கு என்ன ஒரு தைரியம் என்று அவருக்குச் சூடேறியது சுர்ரென்று. அந்தச் சூட்டை மேலும் அதிகப்படுத்துவதுமாதிரி சீதாராமன் புறக்கடைப் பக்கம் விரைந்து சென்று கையில் குனிந்து கற்றையாக எதையோ அள்ளி வந்து அவர் எதிரில் போட்டார் - பசுமாட்டுக்குப் புல் போடுவதைப் போல.

    என்னது இது, தெரிகிறதா? என்றார் சீதாராமன் காட்டமாக. உமது மூர்க்கத்தனமான பையன் செய்த வேலை. என் பெண் என்னவோ சொன்னாளென்று பிஞ்சும் பூவுமாய் இருக்கிற இத்தனை செடிகளையும் பிடுங்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டான்... என்னதான் வீடு உங்களுடையதானாலும், காய்கறி போட்டது நாங்களில்லையா? அவன் பாட்டுக்குப் படக் படக்கென்று காயைப் பறித்தானாம். என் பெண் ஏதோ சொல்லியிருக்கிறாள், அப்பா வந்த பிறகு ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு பறித்துக்கொள்ளுங்கள் என்று.

    கத்திரிக்காயென்றால் உசிர் அவனுக்கு. என்றார் நாராயணமூர்த்தி.

    அவனுக்கு மட்டுமென்ன? எங்கள் வீட்டில் எல்லோருக்குமே அதே உயிர்தான். அழகுக்காகவா பின்னே செடி போட்டு வைத்தோம்? 'எங்களைக் கேட்காமல் நீங்கள் செடி போட்டதே தப்பு' என்று சொல்லிவிட்டு எல்லாச் செடியையும் பிடுங்கிப் போட்டுவிட்டான் உங்கள் பிள்ளை!

    நாராயணமூர்த்திக்கு மகன் செய்த காரியம் தப்பு என்று தெரிந்தாலும் வீட்டுக்குச் சொந்தக்காரர் என்கிற மகுடத்தைக் கழற்றிக்கொண்டு மன்னிப்புக் கேட்கப் பிரியமில்லாதவராக, பையன் சொன்னதிலும் தப்பில்லை. செய்ததிலும் தப்பில்லை. யார் உங்களை ஒரு கத்தரிக்காயும் புடலங்காயும் போடச் சொன்னது? அதெல்லாம் சொந்த வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும், என்றார்.

    நெருப்புப் பெட்டி மாதிரி இருக்கிற இந்த வீட்டுக்கு நான் மடையன் மாதிரி எண்பது ரூபாய் தருகிறேனே... அதைச் சொல்லும்.

    அது உம்முடைய சௌகரியத்தைப் பொறுத்தது. எண்பது ரூபாய்தான் நீர் கொடுக்கிறீர். மாசம் நான் இதற்கு நூறு ரூபாய் ஹௌஸிங் போர்டுக்குக் கட்டுகிறேனே, தெரியுமா உமக்கு?

    அது உம்ம தலையெழுத்து.

    யார் தலையெழுத்தாயிருந்தாலும் சரி. இங்கே நீர் காய்கறிப் பண்ணை போட்டுக்கொழுத்த லாபம் சம்பாதிக்கப் பார்த்தால் அது நடக்காது.

    ஆமாம். நாங்கள் இப்போ காய்காயாக உங்கள் வீட்டுத் தோட்டத்தில் பயிர் செய்து மாடி வீடாக மயிலாப்பூர் பூராவும் கட்டியிருக்கிறோம்! உள்ளிருந்து சீதாராமனின் சம்சாரம் தலையை நீட்டிச் சொன்னாள், வயிற்றெரிச்சலுடன்."

    நாராயணமூர்த்தி ஏதோ பதில் சொல்ல வாயெடுக்கு முன், உள்ளிருந்து அம்மாவைச் சமாதானப்படுத்திய பெண்ணின் குரல் கேட்டது. அம்மா... நீ சும்மா இரும்மா. அல்பத்துகிட்டேயெல்லாம் பேசிக்கொண்டு!

    நாராயண மூர்த்திக்கு ஜிவ்வென்று கோபம் வந்துவிட்டது.

    இந்தாய்யா சீதாராமன். உம்ம பெண்ணின் பல் பூராவையும் தட்டிவிடுவேன். என்னை யாரென்று அவளுக்குத் தெரியாது. அவளுக்கு மட்டுமென்ன, உமக்கும் தெரியாது. இந்த க்ஷணமே உமது சட்டி பானைகளைத் தூக்கி வெளியே எறிகிறேன்.

    இங்கே, ஏதய்யா சட்டி பானை? எல்லாம் எவர்சில்வர் பாத்திரம்தான். ஒரு அடி நகர்ந்து வீட்டுக்குள் காலெடுத்து வைத்தீரானால் என் சம்சாரம் ஈவிரக்கம் பார்க்காமல் அரிவாள்மணையாலேயே உம்ம காலை ஒரு போடு போட்டுவிடுவாள்! ஜாக்கிரதை.

    ஓ. கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறீரா? இப்போதே போலீசுக்குப் போன் செய்வேன்.

    தாராளமாகப் பண்ணுமய்யா. சட்டப்படி இந்த வீட்டை வாடகைக்கு விடக்கூடாது என்பது உமக்குத் தெரியுமல்லவா? அதையும் இழுத்துவிடுகிறேன்.

    அந்த மிரட்டலுக்கெல்லாம் பயந்தவன் நானில்லை. உம்மைக் கவனிக்கிற விதத்தில் கவனித்துக்கொள்கிறேன்.

    நாராயணமூர்த்தி மூச்சு இஸ் இஸ் என்று இரைக்க வீடு திரும்பினார்.

    அவர் சம்சாரம், ஏன் இப்படி வியர்த்துக் கொட்டுகிறது? என்ன நடந்தது? என்றாள்.

    நடந்தது வெண்டைக்காய்... பேசாதே என்கிட்டே. எல்லாம் உன் முரட்டுப் பயல் சுந்தரத்தால் வந்தது. அந்தக் கழுதை எதற்குக் கத்திரிக்காய்ச் செடியைப் பிடுங்கிப் போடறான். எவனோ போட்டு, என்னவோ தின்னுட்டுப் போறான். வயிற்று வலி வந்து சாகட்டும். இவன் ஏன் அதைப் பிடுங்கி எறியணும்? வழியோடு போகிற வம்பு...

    என்னது, கத்தரிக்காய்ச் செடியைப் பிடுங்கி எறிந்துவிட்டானா?

    ஆமாம். பிடுங்கி என் தலையிலே எறிந்துவிட்டான். போய் நீ வேலையைப் பார். எனக்கு ரத்தம் கொதிக்கிறது. பிள்ளையைப் பெற்றிருக்கிறாய் பார் குரங்கு மாதிரி.

    சாரதா ரொம்பச் சாதுதான். ஆனாலும் பத்து மாசம் சுமந்து அதிசயமாய் ராஜாவாட்டம் ஒரு பிள்ளையைப் பெற்றவளை, 'குரங்கைப் பெற்றிருக்கிறாயே?' என்றால் பொத்துக்கொண்டு வராதா?

    பெற்றதெல்லாம் சரிதான். உங்ககிட்டே வளர்ந்ததாலே அப்படி ஆயிட்டுது அவன் சுபாவமும்...

    சீ கழுதை! வாயை மூடு. எதிர்த்துப் பேசினால் பல்லை உடைப்பேன்.

    உங்களைக் கல்யாணம் செய்துகொண்டதற்குப் பல்லையும் உடைப்பீர்கள், மூக்கையும் உடைப்பீர்கள். இங்கேயே ஒருத்தி எப்போதும் பழிகிடக்கிறேனில்லையா நீங்கள் லொக் லொக்கென்று இருமுகிறதைக்கூடப் பொறுத்துக்கொண்டு. அதனாலே உங்களுக்கு நான் ரொம்ப 'சீப்’பாகப் போய்விட்டேன். எனக்கும் பிறந்த வீடு என்று ஒன்று இருக்கிறதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

    முன்னே தொலை. யார் வேண்டாமென்றார்கள். வரவே வராதே.

    வராமலேயே போய்விடுகிறேன்.

    அடே சுந்தரம், உங்க அம்மா பெட்டியைத் தூக்கி வாசலில் எறி.

    நாராயணமூர்த்தி கர்ஜித்தார்.

    சுந்தரம் தன் ரூமிலிருந்து சாவகாசமாக வெளியே வந்தான். முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு, அம்மா என்னத்துக்கு அழுகிறாள்? என்ன ரகளை? என்றான், அப்பாவைப் பார்த்து.

    நாராயணமூர்த்தியும் கடுகடுப்பாக, வேறென்னத்துக்கு அழுகிறாள். உன்னைப் பெற்றதுக்கு அழுகிறாள். ஆமாம். எதற்கு நீ கத்தரிச் செடியைப் பிடுங்கிப் போட்டாயாம்? உன்னை வாடகை வாங்க அனுப்பினேனா இல்லை, செடியைப் பிடுங்கிப்போட அனுப்பினேனா? என்றார்.

    இதுதான் ரகளைக்குக் காரணமா? உங்க ஓட்டை வீட்டு விஷயமாக இனித் தலையிட்டால் என் பெயர் சுந்தரமில்லே. தெரிந்ததா? படீரென்று கதவை ஓங்கிச் சாத்திக்கொண்டு உள்ளே போய்விட்டான் சுந்தரம்."

    ‘விக்கி விக்கி அழும் வயதான மனைவி ஒருபுறம். துர்வாச அவதாரமான மகன் ஒருபுறம். 'சே... சே. நிதானம் போதாது. பதட்டம் கூடாது' என்று மகனுக்கு சொல்லிக் கொண்டிருந்து விட்டுக் கடைசியில் தானே இப்படி ஒரேயடியாகப் பதட்டப்பட்டு...'

    ரயிலுக்குப் புறப்பட்டுவிட்டாள் சாரதா.

    சுந்தரம் ரூம் கதவைச் சாத்திக்கொண்டவன், சாத்திக்கொண்டவனே.

    கேவலம், கத்திரிக்காய் என்ன பாடு படுத்திவிட்டது. நான் போயிட்டு வர்ரேன், என்று சாரதா சொல்லிக் கொண்டுவிட்டாள்.

    'போகிறவரை போகட்டுமே' என்று நாராயண மூர்த்தி, ரோஷமாக ‘ஊம்' என்று ஓர் உறுமல் உறுமினார்.’

    ஸ்டேஷனுக்கு சாரதா போயேவிட்டாள்.

    நாராயணமூர்த்தி 'சே!' என்று துண்டை உதறிப் போட்டுக்கொண்டு ஸ்டேஷனுக்கு விரைந்து சென்றார் - மனைவியைச் சமாதானப்படுத்திக் கூட்டிவர்.

    பிளாட்பார

    Enjoying the preview?
    Page 1 of 1