Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paarvaigalum Pathivugalum
Paarvaigalum Pathivugalum
Paarvaigalum Pathivugalum
Ebook345 pages4 hours

Paarvaigalum Pathivugalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“உனக்கு நடனம் ஆட விருப்பமா!” என்று அவர்கள் கேட்டார்கள்.”ஆமாம்” என்றான் சிறுவன்.”விருப்பம் எப்படி வந்தது?” சிறுவன் விழித்தான். “தெரியவில்லை” என்றான் லேசான குழப்பத்துடன்.”நடனமாடும்போது உனக்கு எப்படியிருக்கிறது” என்று அவர்களில் ஒரு பெண் கேட்டார். சிறுவன் சற்று நிதானித்தான். இவர்களுக்கு நான் சொல்வது விளங்குமா என்று யோசிப்பவன் போல், பிறகு தன்னுள் ஆழ்ந்த லயிப்புடன் கண்களில் நட்சத்திரம் மின்னச் சொன்னான் 'சந்தோசமாக இருக்கிறது. நான் வேறு யாராகவோ தோன்றுகிறது. இறக்கை முளைத்த பட்சி பறப்பதுபோல, மேலே மேலே ஆகாசவெளியில். '

ஐயர்லாந்தில் ஓர் எளிய நிலக்கரி சுரங்கத் தொழிலாளியின் பத்து வயது மகனை அந்தப் புகழ்பெற்ற நடனப்பள்ளிக்குத் தேர்வு செய்வது உசிதமானதா என்று அதுவரை தயக்கம் காட்டிய நேர்முகத் தேர்வாளர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். புதிய தரிசனம் கண்டது போல. பிற்காலத்தில் எடிஎலியட் மிகப் புகழ் பெற்ற பாலே டான்ஸர் ஆனான்.

இதழியல் எழுத்து என்பதும் இந்த தர்மத்துக்கும் சில இலக்கண கோட்பாடுகளுக்கும் உட்பட்டதாக தான் உணர்கிறேன். தமிழ் இதழியலுக்குள் நுழைபவர்கள். இந்தத் தொழிலுக்கு எந்தத் தேர்ச்சியோ பொறுப்புணர்வோ குறைந்தபட்ச பயிற்சியோ தேவையில்லை என்று நினைப்பவர்களாகத் தோன்றுகிறார்கள் தமிழ்வழிக் கல்லூரிகளில் இதழியலைத் தீவிரமாகப் பயில்விக்கும் துறைகள் வரவில்லை. பரபரப்பூட்டும் செய்திகள், சினிமா வம்புகள் ஆகியவற்றை மேம்போக்காக, சுவாரஸ்யமாகச் சொல்வதே இதழியல் என்கிற கருத்து தமிழ்த் தினசரியிலிருந்து வார இதழ்கள் வரை பரவலாக வேரூன்றி அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அதனாலேயே எந்த விளரியத்தையும் அழிந்து அலசும் போக்கோ விவாதமோ தமிழில் இல்லை. உலகளாவிய பார்வை நமக்கு ஏற்படாமற்போவது இதனால்தான். நடுநிலை வகிக்க வேண்டிய பத்திரிகைத் துறையினர் சார்பற்று எழுதுவது என்பது சாத்தியமற்றுப்போனது. அதனாலேயே இங்கு மாற்றுச் சிந்தனை உருவாகவில்லை என்பதோடு சார்பற்ற எழுத்து என்பது எவருக்கும் பரிச்சயமில்லாத, புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகிப் போனது சோகம்.

சார்பற்ற பார்வைக்கு இங்கு அர்த்தமில்லாததாலேயே சினிமாச் செய்திகளில் பத்திரிகை உலகம் தஞ்சம் புகுவதாகத் தோன்றுகிறது. மொழி, அரசியல், சினிமா என்பது தமிழ் மக்களின் உணர்வுடன் சம்பந்தப்பட்ட விஷயமாக சில ஆண்டுகள் முன்வரைக் கருதப்பட்டது. இப்போது நுகர் கலாச்சாரம் அவை எல்லாவற்றையும் கபளீகரம் செய்து வருகிறது. தங்களது வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அரசாங்கமோ அதன் தில்லுமுல்லுகளோ காரணமில்லை என்று உணர்ந்த தலைமுறை இது. இந்தத் தலைமுறைக்கு மேம்போக்கான ஆழமற்ற செய்தி கொடுத்தால் போதும். இந்தச் சூழலில் நான் ஒரு பழமை வாதியாக, பொருத்தமற்ற உதிரியாக உணர்கிறேன்.

பழம் தின்று கொட்டையை உமிழ வேண்டிய வயதில் நான் இதழியலுக்கு வந்தது இந்த அடாவடித்தனத்துக்குக் காரணமாக இருக்கலாம். தமிழ் எழுத்தாளராக நான் அறியப்பட்டிருந்தாலும் வேற்று மாநிலங்களிலேயே எனது பிறப்பும் படிப்பும் வளர்ப்பும் மூப்பும் சேர்ந்திருந்ததால் தமிழகத்தை நான் நேரில் கண்டு பதிவு செய்ய நேர்ந்தபோது சார்பற்ற பார்வையாக நான் நம்பியது ஒரு அந்நியத் திமிரின் வெளிப்பாடாகச் சிலர் நினைத்திருக்கலாம். என் இதழியல் எழுத்தை யார் எப்படி ஏற்றாலும் இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பின் ஆசிரியையாக நான் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியது எனது எழுத்து வாழ்வின் மிக முக்கியமான கால்கட்டமாக நான் கருதுகிறேன். அந்த ஒன்பது ஆண்டுகளின் ஒவ்வொரு நொடியையும் எனது மாணவப் பருவம்போல் உணர்ந்தேன். தமிழகமும் தமிழ் மக்களும் கோவில்களும் காலச்சின்னங்களும் முரண்பாடுகள் மிகுந்த அரசியலும் கண்ணெதிரில் திரிந்த சித்தாந்தங்சுப்பாம் ஜாதிக் கலவரங்களும் தினம் தினம் என்னுள் புதிய சாளரங்களைத் திறந்தன. தமிழகத்தின் பூகோள சுபாச்சார எல்லைகளையெல்லாம் நேரில் சென்று எழுத எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்.

இந்தத் தொகுப்பில் வெளியாகும் கட்டுரைகள் அநேகமாக இந்தியா டுடே இதழ்களில் எழுதப்பட்டவை. ஆசிரியைப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வேறு பத்திரிகைகளில் எழுதிய சில கட்டுரைகளும் இடம் பெருகின்றன. அவற்றில் பல கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானவ. எனது நேர்மை சந்தேகிக்கப்பட்டது என்பதே என்னை வருத்திய விஷயம். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதை நான் உணர்வேன். இப்பவும் தில்லியிலோ சென்னையிலோ இந்தியா டுடே அலுவலகத்துள் நான் செல்லும்போது என்னுடன் வேலை பார்த்த அனைவரும் என்னிடம் காட்டும் மதிப்பும் மரியாதையும் பாசமும் நான் கடந்து வந்த பாதை மகத்தானதாகச் சிலிர்ப்பேற்படுத்துகிறது. ஒரு சிறிய காலகட்டத்திற்கேனும் நான் ஒரு முக்கியப் பங்கேற்றேன் என்கிற நிறைவைத் தருகிறது.

- வாஸந்தி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125403561
Paarvaigalum Pathivugalum

Read more from Vaasanthi

Related to Paarvaigalum Pathivugalum

Related ebooks

Reviews for Paarvaigalum Pathivugalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paarvaigalum Pathivugalum - Vaasanthi

    http://www.pustaka.co.in

    பார்வைகளும் பதிவுகளும்

    Paarvaigalum Pathivugalum

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. மடிவது மானுடம்

    2. தேவர் மறந்த அடியார்கள்

    3. அற்புதத்திற்கு நிகரென மற்றுண்டோ?

    4. ஜாதி என்ற பெயரில்...

    5. மகுடத்தில் ஒரு கோஹினூர் வைரம்

    6. கனிவான கர்மவீரர்

    7. ஆடுவோமே பள்ளு பாடுவோமே....

    8. மோக லாகிரி மீறுதே

    9. நாத வேள்வி

    10. பிரமிப்பூட்டும் பிரும்மாக்கள்

    11. கல்லெல்லாம் கதை சொல்லும்

    12. யாருக்குப் போடறது?

    13. மக்களும் மாக்களும்

    14. சர்வாதிகார தர்மங்கள்

    15. பேடித்தனமும் நிசப்தங்களும்

    16. பேயரசு செய்தால்

    17. விடைபெறும் நேரத்தில்

    18. கேள்விகளும் அனுமானங்களும்

    19. மதங்களும் முகமூடிகளும்

    20. புனிதப்போர் எனும் பேராபத்து

    21. பதவியும் பாதுகையும்

    22. கலாச்சாரங்களும் ஏகாதிபத்தியமும்

    23. கொள்ளையரும் கொள்ளை நோயும்

    24. மக்களுக்கு உரியதை மக்களுக்கு

    25. வேலியே பயிரை மேயும் காலம்

    26. காணாமற் போன பதிவுகள்

    27. கண்ணகியின் கண்ணீர்

    28. கற்கக் கசடற

    29. மீண்டும் மீண்டும் அந்த மாயப் பொறி

    30. நாம் தேடுவது அதைத்தான்

    31. அஷ்வத்தாமன் இறந்துவிட்டானா?

    32. நாம் செய்யும் நம்பிக்கை துரோகம்

    33. வெறுப்பு வியாபாரிகள்

    34. ஜெயலலிதா எனும் புதிர்

    35. ஊழியமும் பொதுஜன பாதுகாப்பும்

    36. தனிமனிதனும் ஜனநாயகமும்

    37. சட்டசபை ஆபாசம்

    38. காமராஜர் பிறந்த மண்ணில்

    39. ஜனநாயகத்திற்கு ஒரு பொன்விழா

    40. நாமும் அவர்களும்

    41. நாளும் கோளும் என்ன செய்யும்?

    42. சர்ச்சைக்குப் பெயர் காவேரி

    43. சட்டம் விரும்பாத சட்டமியற்றுபவர்கள்

    44. வேஷங்களும் கோஷங்களும்

    45. வீதியில் வசிக்கும் மனித குண்டுகள்

    46. உலக சமாதானத்திற்கு ஒரு பிரகடனம்

    47. அன்னியம் என்பது எது?

    48. பயங்கரவாதமும் பக்தர்களும்

    49. தமிழ்த்தாயின் மானம் காப்பவர்கள்

    50. காரணமும் காரியமும்

    51. அதிகபட்ச அரசு; குறைந்தபட்ச அரசாட்சி

    52. வீரப்பனுக்கு எத்தனைத் தலைகள்?

    53. நம்மிடையே இருக்கும் பகைவன்

    54. ஜெயலலிதாவும் சாணக்கியனும்

    55. தொல்காப்பியமும் தமிழுணர்வும்

    56. இந்தியர்களும் மனிதர்களும்

    57. என் இதழியல் அனுபவங்கள்

    58. நாடகங்களும் சாமியாடிகளும்

    59. ஜார்ஜ் புஷ்ஷம் ஜெயலலிதாவும்

    60. தெரசாவும் சிக்மண்ட் ஃப்ராய்டும்

    61. வெறுப்பில் வளரும் தலைமுறைகள்

    62. போரில்லா நல்லுலகம்

    வாஸந்தி

    முன்னுரை

    உனக்கு நடனம் ஆட விருப்பமா! என்று அவர்கள் கேட்டார்கள்.ஆமாம் என்றான் சிறுவன்.விருப்பம் எப்படி வந்தது? சிறுவன் விழித்தான். தெரியவில்லை என்றான் லேசான குழப்பத்துடன்.நடனமாடும்போது உனக்கு எப்படியிருக்கிறது என்று அவர்களில் ஒரு பெண் கேட்டார். சிறுவன் சற்று நிதானித்தான். இவர்களுக்கு நான் சொல்வது விளங்குமா என்று யோசிப்பவன் போல், பிறகு தன்னுள் ஆழ்ந்த லயிப்புடன் கண்களில் நட்சத்திரம் மின்னச் சொன்னான் 'சந்தோசமாக இருக்கிறது. நான் வேறு யாராகவோ தோன்றுகிறது. இறக்கை முளைத்த பட்சி பறப்பதுபோல, மேலே மேலே ஆகாசவெளியில்.'

    ஐயர்லாந்தில் ஓர் எளிய நிலக்கரி சுரங்கத் தொழிலாளியின் பத்து வயது மகனை அந்தப் புகழ்பெற்ற நடனப்பள்ளிக்குத் தேர்வு செய்வது உசிதமானதா என்று அதுவரை தயக்கம் காட்டிய நேர்முகத் தேர்வாளர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். புதிய தரிசனம் கண்டது போல. பிற்காலத்தில் எடிஎலியட் மிகப் புகழ் பெற்ற பாலே டான்ஸர் ஆனான். தொழிற்சங்கப் பிரச்சினைகளிலும் தொழிலாளர் போராட்டங்களிலும் ஆழ்ந்திருந்த தந்தைக்கும் அண்ணனுக்கும் எடியின் நாட்டிய ஆர்வம் பெண்மையின், பேடித்தனத்தின் அடையாளமாக, அவமானச் சின்னமாகத் தோன்றிற்று. ஆனால் எடியின ஆர்வத்தை நாட்டியத்தில் அவன் அனுபவித்த பரவசத்தைக் கட்டுப் படுத்த முடியாமற் போனது. அவனுடைய உலகம் வேறு என்று கடைசியில் உணர வைத்தது.

    நீங்கள் ஆடும்போது, பாடும்போது, ஒவியம் தீட்டும்போது எப்படி உணர்கிறீர்கள் என்று கலைஞர்களிடம் கேள்வி கேட்டால் எத்தனை வயது முதிர்ந்தவர்களானாலும் பத்து வயதில் எடி சொன்ன பதிலைத்தான் சொல்வார்கள்.'ஆகாசத்தில் பறப்பதுபோல இருக்கிறது' என்பார்கள் பரவசத்துடன்.

    கவிஞரும், எமுத்தாளரும், பத்திரிகையாளரும்கூட கலைஞர்கள் தான். ஆனால் ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் அவர்களது பதில் வேறுவிதமாக இருக்கும். நான் பஞ்சாபி எழுத்தாளர் அமிருதா ப்ரித்தம்மை அந்தக் கேள்வியைக் கேட்டபோது, அது என்னுடைய உயிர் மூச்சு என்றார். மற்றவர்களுக்கு விஷயம் சொல்ல என்னிடம் ஏதோ இருப்பதாக உணர்கிறேன் என்றார்.எழுதுவது எனக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயமில்லை" என்றார் எழுத்தாளர் சி. ராஜ நாராயணன் ஒருமுறை பரவசத்தின் எல்லையைக் கலைஞன் தொடும் போது அதுவே ஓர் ஆன்மீக அனுபவம் என்பதால் அவனது இசையும் நடனமும் சிற்பமும் அமரத்துவம் பெறுகின்றன. எழுத்தின் எல்லை வேறு. தளம் வேறு. மனித இயல்பே அதன் களம் என்பதால். உலகத்தின் மிக உன்னதப் படைப்புகள் எழுத்தாளர்கள் உள்ளார்ந்து அனுபவித்து உணர்ந்த துயரத்தின். கோபத்தின், நேயத்தின் விளைவாகவே பிறந்தவை. பாசாங்குத்தனமற்ற நேர்மையின் பிரதிபலிப்பாக, அவர்களது சமுதாய ஆன்மீகப் பார்வையின் பதிவுகளாக.

    அத்தகைய பார்வை இல்லாவிட்டால், உள்ளார்ந்த மானுட நேயமில்லாவிட்டால், எழுத்து அர்த்தம் பெறாது. அது படைப்பிலக்கியமோ இதழியல் எழுத்தோ, எதுவானாலும். ஏனென்றால் எழுத்தின் அடிப்படை தர்மம் அது. தேவை அது.

    இதழியல் எழுத்து என்பதும் இந்த தர்மத்துக்கும் சில இலக்கண கோட்பாடுகளுக்கும் உட்பட்டதாக தான் உணர்கிறேன். தமிழ் இதழியலுக்குள் நுழைபவர்கள். இந்தத் தொழிலுக்கு எந்தத் தேர்ச்சியோ பொறுப்புணர்வோ குறைந்தபட்ச பயிற்சியோ தேவையில்லை என்று நினைப்பவர்களாகத் தோன்றுகிறார்கள் தமிழ்வழிக் கல்லுாரிகளில் இதழியலைத் தீவிரமாகப் பயில்விக்கும் துறைகள் வரவில்லை. பரபரப்பூட்டும் செய்திகள், சினிமா வம்புகள் ஆகியவற்றை மேம்போக்காக, சுவாரஸ்யமாகச் சொல்வதே இதழியல் என்கிற கருத்து தமிழ்த் தினசரியிலிருந்து வார இதழ்கள் வரை பரவலாக வேரூன்றி அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அதனாலேயே எந்த விளரியத்தையும் அழிந்து அலசும் போக்கோ விவாதமோ தமிழில் இல்லை. தமிழ்நாட்டுக்கு அப்பால் - தமிழக அரசியல், சினிமாவுக்கு வெளியே ஒரு கொந்தளிப்பும் சுவாரஸ்யமும் கொண்ட பிரபஞ்சம் இருப்பதை நாம் அநேகமாக தனணர்வதில்லை. உலகளாவிய பார்வை நமக்கு ஏற்படாமற்போவது இதனால்தான்.

    வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசியல் ஆயுதமாகப் பயன்பட்ட சினிமா கலாச்சாரத்திலும் மாற்றுக் கருத்து துழைந்துவிட முடியாத. இரு மாபெரும் கழக அரசியல் முகாம்களின் ஆதிக்கத்திலும் தமிழக இதழியல் சிக்கியிருப்பதாகத் தோன்றுகிறது. நடுநிலை வகிக்க வேண்டிய பத்திரிகைத் துறையினர் சார்பற்று எழுதுவது என்பது சாத்தியமற்றுப்போனது. பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா புனிதப் போர் தொடுப்பதாகப் பிரகடனப் படுத்திய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், உலக நாடுகளிடம் ஒன்று நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள். அல்லது அவர்களுடன் பயங்கரவாதிகளுடன்" என்று எச்சரித்த வகையில்தான் இங்கு இதழியல் கருத்துகள் ஏற்கப்படுகின்றன. அதனாலேயே இங்கு மாற்றுச் சிந்தனை உருவாகவில்லை என்பதோடு சார்பற்ற எழுத்து என்பது எவருக்கும் பரிச்சயமில்லாத, புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகிப் போனது சோகம். பத்திரிகையாளர் நடுநிலையைாக இங்கு பேசுவது அசம்பாவிதம். விமர்சனங்கள் எந்தக் காகக் கட்சிகளும், அரசுகளும் ஏற்றதில்லை. ஏற்பதில்லை என்பது தமிழக அரசியல் மற்றும் இதழியல் சரித்திரத்தில் பதிவாகிப் போனது. அவதூறு வழக்குகளும் உயிருக்கு ஆபத்து சான்ற சமிக்ஞைகளும் இதழியலின் முதுகெலும்பை ஒடிப்பவை. வாளாக இருக்க வேண்டிய பேனாவை மயிலிறகாக மாற்றுபவை. குடும்பத்தை நடத்த வேண்டிய பொறுப்புள்ள பத்திரிகைக் காரர்களும் உழைப்பது சாண் வயிற்றுக்கு. சமூக சேவைக்கு அல்ல. இத்தகைய சூழலில் எந்தப் பத்திரிகை நிருபருக்கு உண்மையைச் சொல்லத் துணிச்சல் வரும்?'

    சார்பற்ற பார்வைக்கு இங்கு அர்த்தமில்லாததாலேயே சினிமாச் செய்திகளில் பத்திரிகை உலகம் தஞ்சம் புகுவதாகத் தோன்றுகிறது. மொழி, அரசியல், சினிமா என்பது தமிழ் மக்களின் உணர்வுடன் சம்பந்தப்பட்ட விஷயமாக சில ஆண்டுகள் முன்வரைக் கருதப்பட்டது. இப்போது நுகர் கலாச்சாரம் அவை எல்லாவற்றையும் கபளீகரம் செய்து வருகிறது. இப்போது சித்தாந்தங்களுக்கும் கோஷங்களுக்கும் இடமில்லை. நேரமுமில்லை. இதழியல் துறை சந்திக்கும் பிரச்சினை களுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லை. தங்களது வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அரசாங்கமோ அதன் தில்லுமுல்லுகளோ காரணமில்லை என்று உணர்ந்த தலைமுறை இது. ராமனாண்டாலும் இராவணன் ஆண்டாலும் அதற்குக் கவலையில்லை. இந்தத் தலைமுறைக்கு மேம்போக்கான ஆழமற்ற செய்தி கொடுத்தால் போதும்.

    இந்தச் சூழலில் நான் ஒரு பழமை வாதியாக, பொருத்தமற்ற உதிரியாக உணர்கிறேன். நினைத்ததைச் சொல்லத் தயங்காதவளாக, சங்கராச்சாரியிலிருந்து முல்லாக்கள் வரை, அரசியல் பெருந்தலைவர் களிலிருந்து பயங்கரவாத அமைப்புகள் வரை. இந்துத்துவ வெறியர் களிலிருந்து ஜார்ஜ் புஷ் வரை என் பார்வைக்கும் சிந்தனைக்கும் தவறாகப்பட்டதை அவர்களது செயல்களை விமர்சிக்கத் தயங்காத வளாக, எழுத்தில் பதிவு செய்திருப்பது அநேகருக்கு விளங்க முடியாத ஒன்று. எனக்கு வேறு விதமாக எழுதத் தெரியாது என்பதுதான் உண்மை, எழுதும் போது எடி, எலியட் சொன்னதுபோல் ஆகாசத்தில் பறப்பது போல் இருக்கிறது. எடி பரவசத்தில் மிதந்தான். நான் கழுகைப் போல அகண்ட வெளியிலிருந்து உலகைப் பார்ப்பதாகத் தோன்றுகிறது. அங்கிருந்து பார்க்கும்போது கண்ணில்படும் அவலங் களில், கேவலங்களில், பிரமிப்புகளில், அதிர்ச்சிகளில் சொல்லக்கூடியது, சொல்லக்கூடாதது எது பாயன் மயக்கம் ஏற்படுவதில்லை. சொன்னதால் யாருடைய ஆதரவை இழப்பேன், யாருடைய விமர்சனத்தை வரவேற்பேன். இதனால் வரும் ஆபத்து என்ன என்கிற பிரமை கணப்பொழுதும் தோன்றுவதில்லை.

    பழம் தின்று கொட்டையை உமிழ வேண்டிய வயதில் நான் இதழியலுக்கு வந்தது இந்த அடாவடித்தனத்துக்குக் காரணமாக இருக்கலாம். தமிழ் எழுத்தாளராக நான் அறியப்பட்டிருந்தாலும் வேற்று மாநிலங்களிலேயே எனது பிறப்பும் படிப்பும் வளர்ப்பும் மூப்பும் சேர்ந்திருந்ததால் தமிழகத்தை நான் நேரில் கண்டு பதிவு செய்ய நேர்ந்தபோது சார்பற்ற பார்வையாக நான் நம்பியது ஒரு அந்நியத் திமிரின் வெளிப்பாடாகச் சிலர் நினைத்திருக்கலாம்.

    என் இதழியல் எழுத்தை யார் எப்படி ஏற்றாலும் இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பின் ஆசிரியையாக நான் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியது எனது எழுத்து வாழ்வின் மிக முக்கியமான கால்கட்டமாக நான் கருதுகிறேன். அந்த ஒன்பது ஆண்டுகளின் ஒவ்வொரு நொடியையும் எனது மாணவப் பருவம்போல் உணர்ந்தேன். தமிழகமும் தமிழ் மக்களும் கோவில்களும் காலச்சின்னங்களும் முரண்பாடுகள் மிகுந்த அரசியலும் கண்ணெதிரில் திரிந்த சித்தாந்தங்சுப்பாம் ஜாதிக் கலவரங்களும் தினம் தினம் என்னுள் புதிய சாளரங்களைத் திறந்தவன் நாம் இருந்தன.'சுண்டறியாதன கண்டேன்’ என்று சொன்ன சோழ மன்னனுக்குக் கிடைத்த தரிசனம் எனக்குப் பலமுறை கிடைத்ததாக உணர்கிறேன். இந்தியா டுடே தாய் ஸ்தாபனபே இதழியல் எழுத்து எப்படி இருக்க வேண்டும் என்பதையும் ரிப்போர்ட்டிங்கின் தரத்தை நிர்ணயிப்பது எது என் பாரதயும் பின்ன ககுக் கற்றுத்தந்தது. ஸ்தாபனத்தின் அரசியல் சித்தாந்தங்கள் பிற்காலத்தில் சாய்னது கொள்கைகளிலிருந்து வித்யாசமாகிப்போனாலும் என் கருத்துகள் தயக்கமில்லாமல் வெளிப்படுத்த எனக்குப் பூரண சுதந்திரம் அளித்திருந்ததாலேயே என்னால் செயல்பட முடிந்தது. தமிழகத்தின் பூகோள சுபாச்சார எல்லைகளையெல்லாம் நேரில் சென்று எழுத எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்.

    இந்தத் தொகுப்பில் வெளியாகும் கட்டுரைகள் அநேகமாக இந்தியா டுடே இதழ்களில் எழுதப்பட்டவை. ஆசிரியைப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வேறு பத்திரிகைகளில் எழுதிய சில கட்டுரைகளும் இடம் பெருகின்றன. அவற்றில் பல கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானவ. எனது நேர்மை சந்தேகிக்கப்பட்டது என்பதே என்னை வருத்திய விஷயம். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதை நான் உணர்வேன்.

    இப்பவும் தில்லியிலோ சென்னையிலோ இந்தியா டுடே அலுவலகத்துள் நான் செல்லும்போது என்னுடன் வேலை பார்த்த அனைவரும் என்னிடம் காட்டும் மதிப்பும் மரியாதையும் பாசமும் நான் கடந்து வந்த பாதை மகத்தானதாகச் சிலிர்ப்பேற்படுத்துகிறது. ஒரு சிறிய காலகட்டத்திற்கேனும் நான் ஒரு முக்கியப் பங்கேற்றேன் என்கிற நிறைவைத் தருகிறது.

    வாஸந்தி

    1. மடிவது மானுடம்

    தமிழ்நாட்டில் பெண் சிசுக்கொலை மீண்டும் தலைப்புச் செய்தியாகி இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் 5 பிளாக்குகளில் நடந்த சமீபத்திய ஆய்வின்படி 12. 50 குடும்பங்களில் 64 குடும்பங்கள். அதாவது 51%, பெண் சிசுக்கொலை செய்திருப்பதாகத் தெரிகிறது. பெண் சிசுக்கொலைக்கு நேற்றுவரை உசிலம்பட்டி சுட்டிக்காட்டப்பட்டது. இன்று சேலம், நாளை? புற்றுநோயின் பயங்கர துரிதத்துடன் தமிழ்நாட்டில் பரவி வரும் அவலத்தைக்கண்டு நாடு பூராவும் அதிர்ந்திருக்கிறது - மானுடத்துக்கே இது தலைக்குனிவு என்பதால்.

    ஆய்வுகளின் கணிப்புகள் வெளிச்சத்துக்கு வந்த பின்னும் சம்பந்தப்பட்ட படித்த வர்க்கத்தினிடையே இதைப்பற்றி இருக்கும் அலட்சியம் அல்லது மெளனம் அதிர்ச்சி தருகிறது. தமிழ்நாட்டில் பெண் சிசுக்கொலை என்பது ஒரு பிரிவினருக்கு மட்டும் உரியது என்னும் எண்ணத்தை சேலம் அறிக்கை தகர்த்துவிட்டது. கவுண்டர், வன்னியர், நாயக்கர், நாடார், தேவர், லம்பாடிகள், மலையாளிகள் எல்லாரும் பெண் பிறந்த உடனேயே நிராகரிக்கிறார்கள்.

    உலகம் முழுவதிலுமே எல்லாரும் வேண்டுவது ஆண் குழந்தையைத்தான். ஆண் குழந்தை கெளரவச் சின்னம், பெற்றவருக்குப் பாதுகாப்பு: பெண் இரண்டாம் பட்ச நிலையில் இருப்பவள். அவளில்லாமல் பரக்ருதி இல்லை என்றாலும். விந்தையாகச் சுமையாகி போனவள். பொருளாதார முன்னேற்றமும், நவீனப்படுத்தலும், அதைத் தொடர்ந்து தடம் புரண்ட சமூக அமைப்புகளும், தார்மீகச் சரிகவும் பெண்ணை ஓரங்கட்டுவதில் வெற்றி அடைந்திருக்கின்ற அதன் அழுத்தம் தாங்காமல் பெண்ணே பெண்னை நிராகரிக்கும் எல்லைக்குச் சென்றிருக்கிறது. ஸோஃபீஸ் சாய்ஸ் படத்தில் போலந்து, பெண் ஸோஃபியிடம் நாஜி தளபதி 'ஏதாவது ஒரு குழந்தைதான் நீ வைத்துக் கொள்ளலாம், மற்றது சாக வேண்டும்' என்ற போது, அவள் ஆண் குழந்தையை இருத்திக்கொண்டு பெண்ணை சாக அனுப்புவது போல.

    உசிலம்பட்டி பெண் சிசுக்கொலைகளுக்கான சமூக, பொருளியல் காரணங்களை இன்னமும் ஆய்வாளர்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். வைகை அணையால் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத் தாழ்வா, அதிலிருந்து விளைத்த வரதட்சணைக் கொடுமையா, பொதுவான தார்மீகச் சரிவா என்று கேள்விகளை எழுப்புகிறார்கள். இன்று பல இடங்களில் பரவிவரும் பெண் சிசுக்கொலை இந்தக் கேள்விகளை அர்த்தமற்றதாக்கிவிட்டன. வரதட்சணைக் கொடுமை தாங்காமல், பெண் குழந்தையுடன் வராதே என்ற கணவர்மார்களின் உபத்திரவம் தாங்காமல், தாம் பெற்ற பெண் குழந்தையைக் கொல்ல தாய் உசிலம்பட்டி சேலம் தாய்பமார்கள் சொல்வதை எந்த நியாயத்தில் சேர்த்துக்கொள்வது என்று புரியவில்லை. இயற்கைக்கு விரோதமான இந்தச் செயலுக்குத் துணிவு ஏற்படுத்துவது எது? இத்தனை அசுரத் தனம் எப்படி ஏற்பட்டது.இது ஒரு பாவம் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறார் சேலத்துக்கு அருகில் இருக்கும் ஒரு பெண் மருத்துவர்.பெண்ணாய் பிறந்து கஷ்டப்படுவதைவிட சாவது மேல் தான் டாக்டர். உயிரைக் காப்பாற்றுவது என் கடமை. ஆனால் பெண் குழந்தைகளைக் கொல்லும் உரிமையைப் பெற்றவர்களிடமிருந்து பறிக்க முடியாது. பிறந்த குழந்தையின் உயிர் வாழும் உரிமையைப் பறிக்க இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்ற கேள்வி எழும்பாமலே போவது விசித்திரம். இந்த ஆய்வுகளின்படி ஒரு விஷயம் தெளிவாகியிருக்கிறது. சிசுக் கொலை செய்வது இந்துக்கள் மட்டுமே. இந்து மதத் தலைவர்கள் மௌனம் சாதிப்பது ஏன்? அடிப்படை மானுட உணர்வுக்கே உசிலம்பட்டியும், சேலமும் சாவுமணி அடிப்பது காதில் விழவில்லையா?

    ஆனால் இது வெறும் தார்மீகச் சரிவு என்று முடிவு கட்டுவது அறிவார்ந்தவாதம் இல்லை. பெண்களின் நலனுக்கு என்ற எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அரசு குடும்பநல / குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள். புதிய கன்ஸ்யூமரிச கலாச்சார தர்மங்களில் சிக்கிய பெண்ணின் தன்மானத்துக்கு எதிராக, அவளைக் கேவலப் படுத்துவதாக இயங்கி வருகின்றன. கர்ப்பத்தில் இருக்கும் கோளாறைக் கண்டுபிடிக்க உதவுகிற amnicentesis முறை இப்போது பெண் கருவை அழிப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ரகசியமாக செய்து கொள்ளப்படும் கருக்கலைப்பினால் விளையும் அபாயத்தைத் தவிர்க்க, கருக்கலைப்புச் சட்டத்தை அரசு அமலாக்கியது பெண் கருவைக் கலைக்கும் தைரியத்தை எல்லா மட்டத்தவருக்கும் அளித்திருக்கிறது.

    வரதட்சகணை நிர்பந்தமும், பெண் சிசுக் கொலையும் தமிழ் பாரம்பரியத்தில் இல்லை என்று சரித்திரம் சொல்கிறது. சமூகவியல் படி சாவுக்கும் கொலைக்கும் அஞ்சாத ரோசமுள்ள மறவர் குலம் என்று சொல்லப்படும் முக்குலத்தோர் இனத்திலும் பெருசா சிசுக்கொலை என்பது மரபு இல்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், தனி மனிதனின் செயல்கள் யதார்த்தமான காரணங்களால் உந்தப்பட்டு அந்த மதிப்பீடுகளுக்கு நேர்முரணாகச் செயல்படும் - தருமங்கள் சாகும், மானுடம் மடியும்.

    ஒரு பக்கம் பெண்ணின் நலனுக்காக அரசாள்பவரும், சட்டங்கள் செய்பவரும், பெண் உரிமை இயக்கங்களும் கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்து வருகிறார்கள். மறுபக்கம் பெண் சமத்துவம் என்னும் தத்துவத்துக்கு எதிராக வளர்ந்து வரும் கண்ஸ்மரிச கலாச்சாரம். இத்தனை வருஷத்து அறிவார்ந்த சர்ச்சைகளுக்குப் பிற்கும் பெண் சமூக மாற்றங்களினால் வஞ்சிக்கப்பட்டவள் என்றோ பலனடைந்தவள் என்றோதான் வர்ணிக்கப்படுகிராளே தவிர, முன்னேற்றப் பணியில் ஒரு பிரதிநிதி என்றோ, கூட்டாளி என்றோ சொல்லப்படுவதில்லை.

    சமுதாய மதிப்பீடுகளைப் புறக்கணித்ததில் தனது மதிப்பையும் இழந்து நிற்கும் பெண் இந்தக் கவசத்திற்குள் புகுந்து கொள்கிறாள். ‘வஞ்சிக்கப்பட்டவள்' 'சூரையாடப்படுபவள்' எனவே, 'சாகப் பிறந்தவள்.' இந்தச் கவசங்கள் தனக்குத் தேவை இல்லை என்பதை அவள் உணர வேண்டும். சமூக நீதிகளையும் நியதிகளையும் நிர்ணயிப்பதில் அவளுக்கு சமபங்கு உண்டு என்பதையும், பெண் சிசுக் கொலைக்கு குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதையும் உணர வேண்டும். கல்வி, பொருளாதார முன்னேற்றம் எல்லாம் பொன்ண் நிலையை உயர்த்திவிடும் என்பது வெறும் ஐதீகம், சமூகத்தில் நடக்கும் தன் பேதற்கும், பொல்லாததற்கும் அவளும் பதில் சொல்ல வேண்டியவள் என்ற நிலை வரும்போதுதான் பெண்களின் கூட்டு பலம் அதிகரிக்கும், குடும்ப நிர்பந்தங்கள பாதிர்க்கும் தைரியம் வரும். அபலைப் பெண்கள், நிர்பந்தத்தால் கொலை செய்கிறார்கள் என்று பரிவும் பாதுகாப்பும் காண்பிப்பது விவேகமற்றது.

    இப்போது உடனடியாகத் தேவை, ஒட்டுமொத்தமான கண்டன கோஷம்,

    இந்தியா டுடே, செப்டம்பர் 6-20, 1992

    2. தேவர் மறந்த அடியார்கள்

    தஞ்சாவூரில் நாணயக்காரத் தெரு மிகக் குறுகலான தெரு. அதற்குள் ஒரு சந்து. சந்துக்குள் உள்ளடங்கிய வீடு. இருண்ட கூடத்தில் உடல் தளர்ந்த நிலையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்மணி. கண்களை ஒரு வினாடி மூடி மனத்துள் சுருதி சுட்டிப் பாட ஆரம்பிக்கிறார்.

    விளையாட இது நேரமா? களைத்தேன் ஜென்மம் எடுத்து...

    குரல் கம்பீரமாக எழுந்து கூட்டம் முழுவதும் ரீங்கரித்து நெக்குருகிப் போகிறது - துளிப் பிசிறில்லாமல் - சுருதி பிசகாமல்.

    84 வயது சாத்தியக்குடி மீனாட்சி கந்தரத்தம்மாள் தன்னை மறந்து சங்கீதத்தில் ஒன்றிவிட்டவராய் பாடுகிறார். அநாயாசமாக நிரவல் அலையலையாக எழும்புகிறது.

    களைத்தேன் ஜென்மம் எடுத்து.

    - இதைவிட ஒரு பொருத்தமான வரியை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. அவரைப் போல தேவதாசி குலத்தில் பிறந்த பெண் மணிகள் இந்த நாற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்து அப்படித்தான் தாங்கள் எடுத்த ஜென்மத்தை நினைத்துக் களைத்துப் போனார்கள். தங்கள் வாழ்வுடன் விளையாடிய சமூகத்தின்மேல் பழி தீர்த்துக்கொள்ள, பிறவியுடன் சம்பந்தப்பட்ட இசையையும், நாட்டியத்தையும் நிராகரித்துத் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டார்கள். சமூகத்தின் அலட்சியத்தையும் பரிகாசங்களையும் மீறி கவையே மூச்சாக வாழ்ந்து சங்கீதத்தில் பிரபலமான மீ.

    Enjoying the preview?
    Page 1 of 1