Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaaranamilla Kaariyangal
Kaaranamilla Kaariyangal
Kaaranamilla Kaariyangal
Ebook270 pages1 hour

Kaaranamilla Kaariyangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புல்லுக்குள் உறங்கும் பனித்துளிகள், அவன், காரணமில்லாக் காரியங்கள் என்னும் மூன்று குறுநாவல்கள் அடங்கிய தொகுதி இந்நூல்.

மூன்று குறுநாவல்களும் மூன்று வித பிரச்சினைகளைக் கொண்டு பின்னப்பட்டு - சிக்கல் இல்லாமல் சீரான நடையில் செல்பவை என்பதில் ஆச்சரியமில்லை.

முதல் கதையில் சிவா- பாரு என்னும் தம்பதிகள் - மனைவி வேலைக்குச் செல்வதால் அவளுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சினை கனள மிகவும் நுணுக்கமாக, நாமே கண்ணால் கண்டு பிரமிப்பது போல் உருக்கமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

அவள்... அடுத்த குறுநாவல்,

சூழ்நிலைகளே ஒவ்வொரு மனிதனையும் சமூகக் கைதியாக கட்டிப்போடுகிறது. அத்தளையை உடைத்தெறிந்து வீறுகொண்டு நடந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இக்கதையில் வரும் நாயகி சண்பகம் மூலம் உணர்த்தியுள்ள விதம் அற்புதம்.

காரணமில்லாக் காரியங்கள்..

கதையின் நாயகி விசாலி… மனோவியாதிக்காரத் தந்தையால் எப்படியெப்படியெல்லாம் அலைக் கழிக்கப்பட்டு மீண்டு வருகிறாள் என்பதை சம்பவக் கோவைகளோடு சொல்லும் கதை, மூன்று கதையிலும் நாயகியரை மையமாக வைத்துக் கதை செல்லும்விதம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

இன்றும் நடைமுறை வாழ்க்கையில் இதுபோன்ற நாயகிகள் நம் வாழ்க்கைப் பாதையில் உலா வெருவதைக் காணலாம்.

சொல் சிக்கனம், ஆழ்ந்த அனுபவ முத்திரைப் பதித்த எழுத்து வீச்சை இந்நாவல் முழுதும் காணலாம்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125403559
Kaaranamilla Kaariyangal

Read more from Vaasanthi

Related to Kaaranamilla Kaariyangal

Related ebooks

Reviews for Kaaranamilla Kaariyangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaaranamilla Kaariyangal - Vaasanthi

    http://www.pustaka.co.in

    காரணமில்லாக் காரியங்கள்

    Kaaranamilla Kaariyangal

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    புல்லுக்குள் உறங்கும் பனித்துளிகள்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அவள்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    காரணமில்லாக் காரியங்கள்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    பதிப்புரை

    புல்லுக்குள் உறங்கும் பனித்துளிகள், அவன், காரணமில்லாக் காரியங்கள் என்னும் மூன்று குறுநாவல்கள் அடங்கிய தொகுதி இந்நூல்.

    மூன்று குறுநாவல்களும் மூன்று வித பிரச்சினைகளைக் கொண்டு பின்னப்பட்டு - சிக்கல் இல்லாமல் சீரான நடையில் செல்பவை என்பதில் ஆச்சரியமில்லை.

    முதல் கதையில் சிவா- பாரு என்னும் தம்பதிகள் - மனைவி வேலைக்குச் செல்வதால் அவளுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சினை கனள மிகவும் நுணுக்கமாக, நாமே கண்ணால் கண்டு பிரமிப்பது போல் உருக்கமாக உருவாக்கப் பட்டு உள்ளது.

    அவள்... அடுத்த குறுநாவல்,

    சூழ்நிலைகளே ஒவ்வொரு மனிதனையும் சமூகக் கைதியாக கட்டிப்போடுகிறது. அத்தளையை உடைத்தெறிந்து வீறுகொண்டு நடந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இக்கதையில் வரும் நாயகி சண்பகம் மூலம் உணர்த்தியுள்ள விதம் அற்புதம்.

    காரணமில்லாக் காரியங்கள்..

    கதையின் நாயகி விசாலி… மனோவியாதிக்காரத் தந்தையால் எப்படியெப்படியெல்லாம் அலைக் கழிக்கப்பட்டு மீண்டு வருகிறாள் என்பதை சம்பவக் கோவை களோடு சொல்லும் கதை, மூன்று கதையிலும் நாயகியரை மையமாக வைத்துக் கதை செல்லும்விதம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

    இன்றும் நடைமுறை வாழ்க்கையில் இதுபோன்ற நாயகிகள் நம் வாழ்க்கைப் பாதையில் உலா வெருவதைக் காணலாம்.

    சொல் சிக்கனம், ஆழ்ந்த அனுபவ முத்திரைப் பதித்த எழுத்து வீச்சை இந்நாவல் முழுதும் காணலாம்.

    அருமையான இந்நாவலை பட்டு வெளியிட வாய்ப்பளித்த தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் திருமதி வாஸந்தி அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி.

    அற்புதமான இந்நூலை வாசகர்கள் பெரிதும் வரவேற்பார்கள் என் நம்புகிறேன்.

    அன்புடன்

    சேது சொக்கலிங்கம்

    புல்லுக்குள் உறங்கும் பனித்துளிகள்

    1

    பாருவுக்கு மகாக் கோபம் வந்தது. காலையிலிருந்து எத்தனை வேலை செய்கிறேன். இந்த மனுஷன் ஒரு தம்ளரை எடுத்து நகர்த்தி வைப்பதில்லை ; ஆனால் அதிகாரம் எப்படித் தூள் பறக்கிறது உட்கார்ந்த இடத்திலிருந்து!

    அவள் பரபரவென்று சமையல் மேடையைத் துடைத்துக் கொண்டே சற்று பலத்த குரலில் தனக்குள் பேசிக் கொள்பவள் போல், பேசிக் கொண்டிருந்தாள்.

    "எனக்கிருக்கிறது உடம்புன்னு நினைச்சீங்களா, இரும்புன்னு நினைச்சீங்களா? காலையிலே அஞ்சு மணிக்கு எழுந்திரிச்சேன்னா மெஷின் கணக்கா வேலை செஞ்சாகணும். இது மனுஷ சரீரம்தான். ஆஞ்சு ஒஞ்சு போகும், நானும் தான் ஆபீசுக்குப் போறேன், உங்களுக்கு வர அளவு சம்பளம் வரல்லன்னாலும் சம்பாதிக்கிறேனா, இல்லையா?

    மகாராஜாவுக்கு ஒரு அயிட்டம் குறையக் கூடாதுன்னு பாத்துப் பாத்து, பயந்து பயந்து...!

    பாரு!

    அவள் சற்று நிறுத்தினாள்.

    என்ன? என்றாள் நின்ற இடத்திலிருந்து.

    போதும், நிறுத்திக்க. நீ சத்தம் போட்டதெல்லாத்தையும் நான் கேட்டாச்சு, எனக்கு இன்னிக்கு வழக்கத்தைவிட சீக்கிரமா ஆபீசுக்குப் போகணும். சாப்பாட்டை எடுத்து வை! உனக்கு உடம்பு முடியல்லேன்னா உன்னை யார் வேலை செய்யச் சொன்னது?

    எனக்கு வேலைக்குப் போறது ஒண்ணும் கஷ்டமா யிருக்காது. நீங்க கொஞ்சம் வீட்டு வேலையிலே உதவி செஞ்சீங்கன்னா! உங்க ஜபர்தஸ்தைக் கொஞ்சம் கொறைச்சீங்கன்னா!

    சிவாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. குளியலறைக் கதவுக்குப் பின்னாலிருந்து ஷவர் திறக்கும் ஓசையும் கூடவே ஏதோ வார்த்தைகள் புரியாத பாட்டொலியும் கேட்க ஆரம்பித்ததிலிருந்து இன்னும் பத்து நிமிஷங்களில் சாப்பிட மேஜைக்கு வந்து விடுவான் என்று புரிந்தது.

    அவள் முணு முணுத்துக்கொண்டே சாப்பாட்டை மேஜை மேல் எடுத்து வைத்தாள்.

    நானும் தான் செல்லமா வளர்ந்தவ, கல்யாணம் ஆற வரைக்கும் அடுப்பிலே உலை வைக்கத் தெரியாதவ.

    மேஜை மேல் நெய் வைத்தோமா, தயிர் வைத்தோமா என்று நோட்டம் பார்த்துவிட்டு, ஷவர் சத்தம் நின்று போனதை உணர்ந்து சற்று பலக்கச் சொன்னாள்.

    உன்னை யார் வேலைக்கும் போகச் சொன்னாங்க? கேள்வியைப்பாரு! ஏன், நான் கொண்டுவர அறு நூறு ரூபாய் வேண்டாங்குதோ! ரொம்ப சரி, அப்ப நா அதைத் தனியா பாங்குல போட்டுக்கறேன், ஒரு நகை நட்டுக்கு உதவும். இந்தப் பணத்தை நா எடுக்கல்லேன்னா அப்பத் தெரியும் ஐயாவுக்கு!

    என்ன தெரியும், யாருக்கு?

    அவள் தூக்கிவாரிப் போட்டவளாய் திரும்பிப் பார்த்தாள். இதற்குள் தயாராகி விட்டானா? அவள் தன்னை சமாளித்துக் கொண்டுச் சற்று அடங்கிய குரலில் சொன்னாள்.

    வேலைக்கு ஏன் போறேன்னு அலுத்துக்கிறீங்களே, நான் சம்பாதிக்கிற பணம் உபயோகமாயில்லையா?

    சிவாவின் முகத்தில் மீண்டும் சிடுசிடுப்பு ஏறிற்று.

    யார் இல்லேன்னாங்க? அதுக்காக உன் அலுப்பையும் புலம்பலையும் தினம் தினம் கேட்டுக்கணும்னா, எனக்கு அந்தப் பணமே வேண்டாம், உன்னாலே சமாளிக்க முடியல்லேன்னா வீட்டிலேயே இரு. என் சம்பளத்திலே பல்லைக் கடிச்சுக்கிட்டு குடித்தனம் பண்ணு. உன்னுடைய ரோதனைக்காக நா என்னை மாத்திக்க முடியாது. நா இப்படியேதான் இருப்பேன்.

    எத்தனை ஆணவப்பேச்சு இவனுக்கு என்று கோபம் வந்தாலும், அப்பொழுது எந்த வாக்கு வாதத்துக்கும் தெம்பில்லாமல், அவள் தன்னைத் தயார் செய்துகொள்ளச் சென்றாள்.

    பாதித் தலையைப் பின்னிக் கொள்ளும்போதுடிபன் எடுத்து வெச்சாச்சு! என்று ஒரு சத்தம் போட்டாள்.

    தாங்க்யூ! என்று பதிலுக்கு சத்தம் போட்டுவிட்டு. அவன் வெளியேறும் ஓசைக் கேட்டது.

    அவள் மறுபடி முகத்தைக் கழுவி பவுடர் போட்டுப் பொட்டிட்டுக் கொண்டாள், கஞ்சி போட்டு மூட முடத்த நூல் புடவையைச் சுற்றிக்கொண்டு கண்ணாடிக்கெதிரில் நிற்கும்போது.

    பழைய தள தளப்பெல்லாம் போச்சு! என்று சொல்லிக் கொண்டாள்.

    சாப்பிட்டு பஸ்சுக்கு ஓடத்தான் நேரம் பாக்கி என்று அவசரமாக சாப்பாட்டு மேஜைக்குச் சென்றபோது மறுபடி கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

    மேஜையில் எல்லாம் திறந்தபடி கிடந்தது. தட்டைக்கூட அவன் முற்றத்தில் கொண்டு போட்டிருக்கவில்லை.

    இவன் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று ஆத்திரத்துடன் அவள் அவசரமாக அள்ளிப்போட்டுக் கொண்டு, மேஜையைத் துடைத்து, டிபன்டப்பாவைப் பையில் திணித்து வீட்டைப் பூட்டிக்கொண்டு தெருவில் இறங்கி பஸ் ஸ்டாப்பை நோக்கி வேக நடை போட ஆரம்பித்த பிறகு தான், சற்று வெளி உலகம் கண்ணுக்குப் புலப்பட ஆரம்பித்தது.

    ஆண் - பிள்ளைகள் சாவகாச மெதப்போடு நடந்து போவதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக வந்தது.

    வீட்டில் சம்பளம் வாங்காத வேலைக்காரி இருக்கிற வரையில் உங்களுக்கு என்ன கவலை என்று சொல்லிக் கொண்டாள்.

    பஸ்சில் இன்று நல்ல வேளையாக இடம் கிடைத்தது. அவளைப் போல் அரக்கப் பரக்க ஓடிவந்த சில பெண்கள் இடம் கிடைக்காமல் நிற்பதைக் கண்டும் காணாமல் ஆண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

    'உன்னாலே சமாளிக்க முடியல்லேன்னா வீட்டிலேயே இரு. பல்லைக் கடிச்சுக்கிட்டு என் சம்பளத்திலே குடித்தனம் செய்."

    'எத்தனைப் பல்லைக் கடித்தாலும் பல் தான் நொறுங்கிப் போகும். வேறு எதையும் சமாளிக்க முடியாது. பல்லைக் கடித்துக் கொண்டு வீட்டு வேலையும் செய்து ஆபீசுக்குக் கிளம்புவேனே தவிர வேலைக்கு வருவதை நிறுத்த மாட்டேன்," என்று பாரு தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள்.

    பஸ்சில் இடம் கிடைக்காமல் காலையில் சீக்கிரம் எழுந்து வேலை செய்து இப்பொழுது ஓடி வந்து நிற்கும் சோர்வு தெரியும் அந்தப் பெண்களின் முகத்தைப் பார்க்கப்பரிதாபமாக இருந்தது. இவர்களும் நம்மைப் போல் ஒரு நிர்ப்பந்தத்திற்குத் தான் வேலைக்குப் போகிறார்கள் என்று தோன்றிற்று.

    'பணம் அத்தியாவசியமோ இல்லையோ வெளியே வேலைக்கு வருவதில் கிடைக்கும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் அவசியம். இல்லாவிட்டால் இவர்களும் நானும் மிதியடிகளாகவே இருப்போம்...!" -

    அவள் அலுவலகத்துக்குப் போய் சேர்ந்தபோதும் மனநிலை பட படப்பாகவே இருந்தது. 'லிஃப்டில்' அவள் கூட வந்த ஸ்ரீதரன் சினேகிதமாகப் புன்னகைத்தான்.என்ன மேடம், உடம்பு சரியில்லையா? என்றான்.

    ஏன், நல்லாயிருக்கேனே? என்றாள் அவள் திடுக்கிட்டு.

    நல்லாத்தான் இருக்கீங்க! என்றான் அவன் அசட்டுச் சிரிப்புடன்,ஒருவேளை முகத்திலே தெரியுறது கோபமோ என்னவோ? அவள் பதில் சொல்லாமல் நான்காவது நிலையில் வெளியேறினாள். அவள் இருக்கையை அடைந்ததும் மானேஜர் கூப்பிட்டனுப்பினார்.

    உற்சாகமாக 'குட் மார்னிங்!' சொன்னார்.

    நாளைக்கு நான் பம்பாய்க்குக் கிளம்பறேன். எனக்கு உதவியாளா நீங்களும் கூட வரணும், இரண்டு விமான டிக்கெட் புக் பண்ணிவிட்டேன் என்றார்.

    2

    அவள் இதைச் சற்றும் எதிர்பார்க்காத திகைப்பிலே சில வினாடிகள் மவுனமாக நின்றாள்.

    எத்தனை நாளுக்கு? என்றாள் மெள்ள.

    இரண்டே நாள், நாளைக்குக் கிளம்பி நாளன்னி ஈவினிங் ஃப்ளைட்லே திரும்பி வந்து விடுவோம், ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே?

    ப்ராப்ளம் ஒண்ணும் இல்லே என்று அவள் இழுத்தாள்.குழந்தைகள் கூட இல்லேயில்லே, உங்களுக்கு?

    இவர் எல்லா விவரமும் தெரிந்து வைத்திருக்கிறாரா என்று அவளுக்கு மெலிதாகக் கூச்சம் ஏற்பட்டது.

    இல்லே, என்றாள் அவள் மெல்லிய குரலில்,சிவாவிடம் கேட்டுச் விட்டுச் சொல்கிறேன் என்று சொல்ல வெட்கமாக இருந்தது.

    'அவர் டூரில் போகும்போது உன்னைக் கேட்டுக்கொண்டு போகிறாரா" என்று மானேஜர் பரிகாசம் செய்வார் என்று தோன்றிற்று.

    அப்போ என்ன தயக்கம்? யோசனை செய்ய எனக்கும் நேரமில்லே! வேற யாரும் இங்கே நா விரும்பற மாதிரியிலே புத்திசாலித்தனமாக உதவக்கூடிய ஆள் இல்லே. உங்களுடைய வேலை எனக்குப் பிடிச்சிருக்கு, பாம்பே ஹெட் ஆபீஸ் ஆனதாலே உங்க வேலையை அங்கே நேரிடையா காண்பிக்க ஒரு சந்தர்ப்பம்கூடக் கிடைக்கும். ஆனால் இந்த விஷயத்தை உங்க மட்டுக்கு வெச்சுக்குங்க.

    சட்டென்று பரவிய சந்தோஷத்தோடு அவள் அவரைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்து:தாங்க்யூ சார்! என்றவள்,டூருக்கு வேண்டிய விஷயங்கள் எதைத் தயார் செய்யணும்னு சொல்லுங்க.

    அவர் உற்சாகமாக விவரிக்க ஆரம்பித்தார். அவள் விரைவில் வேலையில் ஆழ்ந்து போனாள். இடையிடையே மானேஜரின் வார்த்தைகள் பன்னீர் தெளிக்கப்பட்ட மாதிரி மனத்தைக் குளிர்வித்தன. காலையில் விழித்ததிலிருந்து ஏற்பட்ட அலுப்பு திடீரென்று மறைந்து உடம்பில் புதிய உற்சாகம் ஊறிற்று.

    ஆபீசை விட்டுக் கிளம்பும்போது மானேஜர் ரங்கன் மறுபடி ஞாபகப்படுத்தினார்.

    நாளைக்கு நான் நேரே ஆபீஸ்லேந்து ஏர்போர்ட் போறேன், நீங்க லஞ்ச் அவர்லே வீட்டுக்குப் போய் தயாரா யிருந்தீங்கன்னா வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.

    சரி சார்!

    அவள் வீட்டை அடைந்தபோது சிவா இன்னும் வந்திருக்கவில்லை. அவள் உடையை மாற்றிக் கொண்டு, இரவு சமையலுக்கு வைத்துவிட்டு, தன்னுடைய பயணத்துக்கு வேண்டிய உடுப்புக்களை ஒரு சின்ன சூட்கேசில் அடுக்கினாள்.

    சிவா எட்டு மணி வரை வரவில்லை. அவனுடைய இரண்டு நாள் சாப்பாட்டுக்காக அவள் வத்தல் குழம்பையும், சாம்பாரையும் ஒரு வதக்கல் கறியையும் செய்து ப்ரிஜ்ஜில் வைத்தாள். அவனுடைய துணிகளுக்கு இஸ்திரி போட்டு வைத்தாள்.

    டி.வி.யில் இந்தி செய்தி படிக்கப்படும் போதே அவளுக்குக் கண்ணை அசத்திற்று. 'தூங்கேன்' என்று எல்லா அங்கங்களும் கெஞ்சின, கண்கள் செருகிக்கொண்டு போன சமயத்தில் சிவா வந்தான்.

    அதுக்குள்ளே தூக்கமா? என்றவன்,தட்டை வை குளிச்சுட்டு வந்துடறேன் என்றான்.

    தூக்கத்திலும் அசதியிலும் எரிச்சல் ஏற்பட்டதை வெளியில் காண்பிக்காமல் அவள் மவுனமாக எழுந்து தட்டை வைத்து சமைத்த பதார்த்தங்களை மேஜையில் வைத்தாள்.

    அவன் குளித்துவிட்டுத் தலையையும் முகத்தையும் துடைத்தபடி வந்து கேட்டான், கண்களில் மெல்லிய சந்தேகம் இழையோட.

    எங்கே கிளம்பிண்டிருக்கே பெட்டியை பாக் பண்ணி வெச்சிருக்கியே?

    நாளைக்கு நா பம்பாய்க்குப் போகணும். இரண்டு நாள். டிரிப் நாளை ஃப்ளைட்வே போய் நாளன்னி ஃப்ளைட்லே திரும்பிடுவேன்.

    யாரோட போறே?

    மானேஜரோட!

    அவனுடைய முகம் சரேலென்று மாறிற்று.

    இது என்ன, வழக்கமில்லாத வழக்கம் ஆரம்பிச்சிருக்கே!

    அவனுடைய

    Enjoying the preview?
    Page 1 of 1