Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nagarangal Manithargal Panpaadugal
Nagarangal Manithargal Panpaadugal
Nagarangal Manithargal Panpaadugal
Ebook292 pages5 hours

Nagarangal Manithargal Panpaadugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஐந்து வருடங்களுக்கு முன் நான் சென்னையிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது முன்பின் தெரியாத இடத்திற்கு வந்தது போல் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பெங்களூருக்குக் குடிபெயர்ந்ததன் காரணமே இங்குதான் நான் சிறு பிராயத்திலிருந்து வளர்ந்தேன். கல்லூரிப் படிப்பு முடித்தேன் என்பதும் அதனாலேயே ஆசைப்பட்டு நிலம் வாங்கி வீடு கட்டினோம் என்பதும்தான். ஆனால் நான் வளர்ந்த, எனக்குப் பரிச்சயமான அமைதியான நகரம் காணாமல் போயிருந்தது. அதன் பொறுமைமிக்க நாகரீகம் மறைந்துவிட்டது. விசாலமான தெருக்களுக்குப் பெயர் போன நகரம் போக்குவரத்து நெரிசலில் திணறிற்று. எங்கு திரும்பினாலும் இளைஞர்கள் யுவதிகள், ஜீன்ஸும் ஷர்ட்டுமாக எந்த சாம்ராஜ்யத்தைப் பிடிக்கவோ இரு சக்கர வாகனங்களிலோ கார்களிலோ பறந்தார்கள். வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் வேளையிலும் தெரு நடுவில் இருப்பது போல வாகன இரைச்சல் கேட்டது. நான் நொந்து போனேன். மாறிப்போன பெங்களுர் எனக்கு மிரட்சியைத் தந்தது. ஆனால் தெருவில் வரிசையாக நின்ற வானளாவிய மரங்களும், வீடுகளுக்குள் இருந்த பூச்செடிகளும் பருவம் தவறாமல் பூத்துக் குலுங்கின. அது ஒன்றே என்னை மகிழ்வித்த விஷயம். நான் இந்தியாவில் பல நகரங்களில் வசித்திருக்கிறேன். இந்த அளவுக்கு எந்த நகரமும் தடம் புரண்டு போனதாகத் தோன்றவில்லை.

ஆனால் நகரங்கள் மாறுகின்றன. மனிதர்களின் செயல்பாடுகளாலேயே மாற்றம் ஏற்படுகிறது. அரசியல், வர்த்தகம் ஆகிய துறைகள் முக்கிய பங்கேற்கின்றன. வாழ்க்கை முறையையும் பண்பாடுகளையும் மாற்றுகின்றன. அது நன்மைக்கா தீமைக்கா என்பது மக்களின் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தது.

மிக சாதுவான (ஒருகாலத்தில்) கன்னடியர்கள் நீருக்கும் மொழிக்கும் நிலத்துக்கும் இன்று திடீர் திடீரென்று வெறியில் வெடிக்கையில் எனக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இதற்கான காரணங்களை ஆராயும்போதுதான் நகரங்களின் வரலாறுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றின சிந்தனை என்னுள் தீவிரமாக எழுந்தது. அதைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று.

மனிதனின் எல்லா பிரச்சினைகளுக்கும் மனித மனத்தின் பேராசையும் அகந்தையும் சக ஜீவிகளிடம் இருக்கும் அக்கறையின்மையுமே காரணம் என்றாலும் நமது நகரங்கள் வளர்வதற்கும் அழிவதற்கும் பிரச்சினைகள் உருவாவதற்கும் பொறுப்பற்ற, இங்கிதமற்ற அரசியலும் பரந்த தொலைநோக்கற்ற நிர்வாக அமைப்புமே காரணம் என்று தோன்றுகிறது. மக்கள் தம்மைத் தாமே சுய புத்தியுடன் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், இது மிக ஆபத்தான நிலவரம் என்கிற தவிப்பு சிந்திக்கும் எல்லா இந்தியப் பிரஜைக்கும் இருக்கும். பெங்களூரிலிருந்து ஆரம்பித்து நான் வாழ்ந்த சில நகரங்களின் மாற்றங்களை, மக்களின் பிரச்சினைகளை, அதன் காரணங்களை ஆராயும் முயற்சியே இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

- வாஸந்தி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125403529
Nagarangal Manithargal Panpaadugal

Read more from Vaasanthi

Related to Nagarangal Manithargal Panpaadugal

Related ebooks

Reviews for Nagarangal Manithargal Panpaadugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nagarangal Manithargal Panpaadugal - Vaasanthi

    http://www.pustaka.co.in

    நகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள்

    Nagarangal Manithargal Panpaadugal

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. கண்ணில் தெரியுதொரு தோற்றம்

    2. காரணங்களும் காரியங்களும்

    3. மஹாநகரத்தில்வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள்

    4. ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப்போது

    5. வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்

    6. மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்

    7. தடம் புரண்ட தலைநகரம்

    8. அரசியல் எழுப்பிய புயலில் முகம் மாறியது தில்லி

    9. கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்

    10. புரையோடிப் போன காஷ்மீரம்

    11. விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்

    12. கரும்புத் தோட்டத்திலே இந்தியர் அனுபவித்த கொடுமைகள்

    13. நம்பிக்கை எனும் நீர்க்குமிழி

    14. கடல் கடந்து பரவிய இந்தியப் பண்பாடு

    15. பொறுத்தது போதும் பொங்கி எழு!

    16. நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை

    17. பரவிவரும் நோய்

    18. மஹாத்மாவின் மரணம்

    19. வெப்பமும் கடற்கரை மணலும் போதைகளும் பெண்பாவமும்

    20. சீனா என்னும் சிகரம்

    21. இஸ்தான்புல்லில் நான்கு நாட்கள்

    22. நெஞ்சை அள்ளும் நீல மசூதி; அசத்தும் ஹாஜியா சோஃபியா

    23. வரலாற்றுப் பெருமையும் முரண்பாடுகளும் கொண்ட ஆதன்ஸ்

    24. எழுச்சிமிக்க வரலாற்றுச்சின்னம் - எகிப்து

    முன்னுரை

    ஐந்து வருடங்களுக்கு முன் நான் சென்னையிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது முன்பின் தெரியாத இடத்திற்கு வந்தது போல் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பெங்களூருக்குக் குடிபெயர்ந்ததன் காரணமே இங்குதான் நான் சிறு பிராயத்திலிருந்து வளர்ந்தேன். கல்லூரிப் படிப்பு முடித்தேன் என்பதும் அதனாலேயே ஆசைப்பட்டு நிலம் வாங்கி வீடு கட்டினோம் என்பதும்தான். ஆனால் நான் வளர்ந்த, எனக்குப் பரிச்சயமான அமைதியான நகரம் காணாமல் போயிருந்தது. அதன் பொறுமைமிக்க நாகரீகம் மறைந்துவிட்டது. விசாலமான தெருக்களுக்குப் பெயர் போன நகரம் போக்குவரத்து நெரிசலில் திணறிற்று. எங்கு திரும்பினாலும் இளைஞர்கள் யுவதிகள், ஜீன்ஸும் ஷர்ட்டுமாக எந்த சாம்ராஜ்யத்தைப் பிடிக்கவோ இரு சக்கர வாகனங்களிலோ கார்களிலோ பறந்தார்கள். வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் வேளையிலும் தெரு நடுவில் இருப்பது போல வாகன இரைச்சல் கேட்டது. நான் நொந்து போனேன். மாறிப்போன பெங்களுர் எனக்கு மிரட்சியைத் தந்தது. ஆனால் தெருவில் வரிசையாக நின்ற வானளாவிய மரங்களும், வீடுகளுக்குள் இருந்த பூச்செடிகளும் பருவம் தவறாமல் பூத்துக் குலுங்கின. அது ஒன்றே என்னை மகிழ்வித்த விஷயம். நான் இந்தியாவில் பல நகரங்களில் வசித்திருக்கிறேன். இந்த அளவுக்கு எந்த நகரமும் தடம் புரண்டு போனதாகத் தோன்றவில்லை.

    ஆனால் நகரங்கள் மாறுகின்றன. மனிதர்களின் செயல்பாடுகளாலேயே மாற்றம் ஏற்படுகிறது. அரசியல், வர்த்தகம் ஆகிய துறைகள் முக்கிய பங்கேற்கின்றன. வாழ்க்கை முறையையும் பண்பாடுகளையும் மாற்றுகின்றன. அது நன்மைக்கா தீமைக்கா என்பது மக்களின் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தது. அந்தத் தாக்கம் வரலாற்றுடன் மோதும்போது, நிலமாந்தர்களின் கலாச்சார வேர்களை உலுக்கும்போது சமச்சீர் வளர்ச்சியை ஏற்படுத்தாமல் போகும்போது கொந்தளிப்புகள் ஏற்படுகின்றன, ஊடுபாவாக சமுதாயத்தில் பரவி வரும் அதிருப்திகளை ஆள்பவர், நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் போகும்போது பிரச்சினைகள் உருவாகி, மெல்லச் சூறாவளி உருவாவதுபோல எதிர்ப்பும் வெறுப்பும் வெடிக்கின்றன. மிக சாதுவான (ஒருகாலத்தில்) கன்னடியர்கள் நீருக்கும் மொழிக்கும் நிலத்துக்கும் இன்று திடீர் திடீரென்று வெறியில் வெடிக்கையில் எனக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இதற்கான காரணங்களை ஆராயும்போதுதான் நகரங்களின் வரலாறு களில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றின சிந்தனை என்னுள் தீவிரமாக எழுந்தது. அதைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று. எழுத்து என்பது சிந்தனைக்கு நல்ல பயிற்சி, விடையைத் தேடும் பயணம் அது. ஆதங்கத்தினால் துவங்கும் பயணம், புத்தனுக்கு ஞானம் தந்த போதிமர நிழலைத் தேடும் பரிதவிப்பு. மனிதனின் எல்லா பிரச்சினைகளுக்கும் மனித மனத்தின் பேராசையும் அகந்தையும் சக ஜீவிகளிடம் இருக்கும் அக்கறையின்மையுமே காரணம் என்றாலும் நமது நகரங்கள் வளர்வதற்கும் அழிவதற்கும் பிரச்சினைகள் உருவாவதற்கும் பொறுப்பற்ற, இங்கிதமற்ற அரசியலும் பரந்த தொலைநோக்கற்ற நிர்வாக அமைப்புமே காரணம் என்று தோன்றுகிறது. கலோனிய ஆதிக்க நிர்வாகத்தின் பிரித்து ஆளும் யுக்தியை சுதந்திரத்துக்குப் பின்னும் ஜன நாயகம் என்கிற போர்வையில் நாம் பின் பற்றுவதால் ஜாதி, மதம், மைனாரிட்டிகள், பழங்குடியினர் என்று இனம் காட்டி ஓட்டு வங்கி அரசியலை வளர்த்து, சமச்சீர் வளர்ச்சியை ஓரங்கட்டிவிட்ட அவலம் தினமும் புதிய முகங்களுடன் வெவ்வேறு பரிமாணங்கள் எடுக்கின்றன. மக்கள் தம்மைத் தாமே சுய புத்தியுடன் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், இது மிக ஆபத்தான நிலவரம் என்கிற தவிப்பு சிந்திக்கும் எல்லா இந்தியப் பிரஜைக்கும் இருக்கும். பெங்களூரிலிருந்து ஆரம்பித்து நான் வாழ்ந்த சில நகரங்களின் மாற்றங்களை, மக்களின் பிரச்சினைகளை, அதன் காரணங்களை ஆராயும் முயற்சியே இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

    சிவ வெளிநாடுகளுக்குச் சென்ற அனுபவப் பதிவுகளும் இத்தொகுப்பில் உள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டின் உன்னதத்தைத் தொட்ட கிரேக்க சாம்ராஜ்யமும், ரோமானிய வீரமும், எகிப்திய செல்வமும், ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் அதி அற்புத கலைக் கோயில்கள் சமைத்த கம்போடிய ராஜ்யமும் எப்படி பேராசை பிடித்த அரசர்களாலும் தலைவர்களாலும் வெளி ஆக்கிரமிப்பினாலும் மண்ணோடு மண்ணாகிப் போயின என்கிற பிரமிப்பு அந்த நாடுகளுக்குச் சென்றபோது ஏற்பட்டது. ஆனால் சீனாவுக்குச் சென்றதும் பல்லாயிரம் ஆண்டுகளான அதன் வரலாற்றுத் தொடர்ச்சி யும், ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும் அது சாகாவரம் பெற்றது போல மீண்டும் மீண்டும் எழுந்த விந்தையும் இன்று ஆசியாவில் மட்டுமல்ல, வளர்ந்த உலக நாடுகளுக்கு ஒப்பாக சகல துறைகளிலும் முன்னேறியிருப்பதும் மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்திற்று. கடந்த முப்பது ஆண்டுகளில் அங்கு நிகழ்ந்திருக்கும் மாற்றம் ஒரு அற்புதம். ஒட்டு மொத்த சீன மக்களும் நாடு உயர்ந்தால் மக்கள் உயர்வார்கள் என்கிற உத்வேகத்துடன் உழைப்பதாகத் தோன்றுகிறது. உன்னதமே எமது இலக்கு என்று தமது பணியில் காண்பிப்பது மிகப் பெரிய அரிய குணமாகப்படுகிறது.

    தொடர்ச்சியான நல்ல நிர்வாகமே நல்ல மாற்றத்துக்குப் பாதை வகுக்கும். அப்படிப்பட்ட நிர்வாகம் அமையவும் அமைக்கவும் மக்களுக்கு முக்கிய பங்கு இருப்பதை நாம் உணர்வதே இல்லை.

    வாஸந்தி

    1. கண்ணில் தெரியுதொரு தோற்றம்

    வெள்ளையனை மூட்டைகட்டி. அவனது' நாட்டுக்கு அனுப்பிய கையுடன் நமது மண் பாரம் அதிகரித்துவிட்டதாகத் தோன்றுகிறது, தனித்தனியாக மனத்தில் சுமக்கப் புறப்பட்ட பாரங்கள் மண்ணை அழுத்தும் விநோதம் அது. சுதந்திரம் கிடைக்கும் வரை நமது ஒரே குறிக்கோள் அன்னியனை விரட்டுவது. அதன் உன்னதமே நம்மைப் பிணைத்தது. அநேக இந்தியர்களுக்கு குஜராத் மாநிலம் எது என்பதோ அதன் மொழி என்ன என்பதோ தெரியாது. ஆனால் அந்த மாநிலத்தில் பிறந்து வேற்று மொழி பேசிய காந்தி என்பவரை தமது வாழ்வை உய்விக்க வந்த மகான் என்று புரிந்தது. அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ளவும் அன்னிய ஜவுளியைக் கொளுத்தவும் வெள்ளை துரைகளிடம் அடிவாங்கவும் துணிச்சல் வந்ததது. அதை இன்று நினைத்துப் பார்க்கும்போது மிக ஆச்சரியமாக இருக்கிறது. தேசியம் என்ற உணர்வும் பாரத நாடு என்ற ஐதீகமும் ஐரோப்பிய சித்தாந்தங்களின் இறக்குமதி என்று யாரும் நினைக்காமல் ஏற்பட்ட பிணைப்பு அது. தகவல் தொடர்பு சாதனங்கள் மிகக் குறைந்த அளவில் இருந்த நிலையிலும் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை ஒரு வேள்வியில் ஈடுபட்டதான புனித உணர்வு அனைவரையும் ஆட்கொண்டிருந்தது.

    பெங்களூரில் நான் சிறுமியாக வசித்த மல்லேசுவரத்தில் ஒரு மிகப்பெரிய மைதானம் இருந்தது. தினமும் மாலையில் பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும். எந்தக் கடவுளின் உருவப்படமும் இருக்கவில்லை என்று நினைவு. நான் பள்ளிக்கு அப்போதுதான் செல்ல ஆரம்பித்திருந்தேன். ஆனால் மிகத் துல்லியமாக நினைவு இருக்கிறது. அந்த பிரும்மாண்ட மைதானமும் அதன் மரங்களின் இலைகளின் அசைவுகளும், கூட்டிற்குத் திரும்பும் பட்சிகளின் இரைச்சலும் மைதானத்தின் ஒரு ஓரமாக விரித்திருந்த ஜமுக்காளத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ஆண்களும் பெண்களும் - மிகத் துல்லியமாக இப்பவும் மனக்கண்ணில் விரிகிறது. ஆங்கிலத்திலோ கன்னடத்திலோ சொற்பொழிவு இருக்கும். பிறகு எல்லோரும் தேசபக்திப் பாடல்கள் பாடுவார்கள். ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டு நிச்சயம் உண்டு . அதுவும் தேசபக்திப் பாடல் என்று நான் நினைத்தேன். குர்த்தா பைஜாமா அணிந்த வெடவெட என்ற ஒல்லியான உயரமான சிவந்த முகத்துடன் ஒருவர் கடைசியாக தீபம் ஏற்றி கணீரென்று ஜெய் ஜகதீச ஹெரே என்று ஆரம்பிக்க அவனரத் தொடர்ந்து எல்லோரும் பாடுவார்கள். எல்லோர் குரலிலும் இனம்புரியாத தாபமும் துக்கமும் துடிப்பும் இழையோடும். ஐந்து வயதில் அந்த உயரமான ஆளிடம் நான் காதல் கொண்டேன். அவரது முகத்தில் அருள் சுரந்தது. அவரது கையைப் பிடித்துக் கொண்டு நடக்கவேண்டும் போல் இருந்தது. அந்த வயதில் நான் காதல் வயப்படக்கூடியவர் நிறைய பேர் இருந்தார்கள். அவர்கள் உன்னதங்களைப் பற்றிப் பேசினார்கள். இலக்குகளைப் பற்றி நினைவூட்டினார்கள். வயது வித்தியாசமில்லாத கூட்டம், பல மொழி, பல நிறங்கள். சுவர்கள் இல்லாத வெளி அது. மரங்கள் அடர்ந்த, பட்சிகள் மிகுந்த, வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் குளுகுளு நந்தவனம் அது. பெங்களூரில் வசிக்கிறேன் என்பதே பெருமை. நாகரிகமும் நாசூக்கும் மிகுந்த பெங்களூர். உணர்ச்சிவசப்படாத சாந்தமே உருவான கன்னட மக்கள். இப்போது 2006. இடைப்பட்ட காலத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு மனிதர்கள் என்று ஜாகைகளும் பரிச்சயங்களும் ஆனபின் மீண்டும் பெங்களுருக்குக் குடியேறி இருக்கிறேன். பெங்களூர் மாறிவிட்டது. மற்ற நகரங்கள் மாறிப்போனது போல. மாறவேண்டியது இயற்கையின் நியதி. மாற்றம் என்பது வளர்ச்சியின் அடையாளம். ஆனால் பெங்களூரின் சூரத்தனமான வளர்ச்சி என்னை நிலைகுலைய வைக்கிறது. கன்னடியர் உறங்கும் போது அவர்கள் இனம் காணாத அசுரன் ஒருத்தன் ஏற்படுத்திவிட்ட வளர்ச்சி போல் தோன்றுகிறது. என்னைப் போலவே அரசு இயந்திரமும் இந்த வளர்ச்சியைக்கண்டு நினலகுலைத்திருப்பதாகத் தெரிகிறது. பிதுங்கி வழியும் சாலைகளை செப்பனிடவோ சமாளிக்கவோ வகை தெரியாமல் திண்டாடுகிறது. ஓய்வு பெற்றவர்களின் சுவர்க்கம் என்று அழைக்கப்பட்ட நகரத்தில் ஓய்வில்லாத வாகனங்களின் இரைச்சல். பசுமை வனங்கள் இருந்த இடங்களில் எல்லாம் கான்க்ரீட் காடுகள். பாதையின் அகலம் தெரியாமல் அடைத்து நிற்கும் ட்ராஃபிக் ஜாம்கள். தோட்டம் நிறைந்த பங்களாக்கள் போய் பளபளக்கும் பன்னாட்டு நிறுவன அலுவலகக் கட்டிடங்கள்.

    ஆனால் தெருவில் கால் வையுங்கள். பெங்களூர் ஒரு கோலா கலத்தில் இருப்பது தெரியும். இந்தியாவின் இளைய தலைமுறை ஓட்டு மொத்தமாக இங்கு வந்து இறங்கியிருப்பதை உணர்வீர்கள். IT என்னும் தகவல் தொழில் நுட்பம் வீசும் மந்திரக்கோலால் இழுக்கப்பட்ட இளம் சிட்டுகள். உணவகங்கள் புதிதாக முளைத்த வண்ணம் இருக்கின்றன. புதிதாக மால்கள். . . புதிது புதிதாக IT கம்பெனிகள், எல்லாவற்றிலும் இளைய கும்பல். தெரு அடைத்து கார்கள்; மோட்டார் பைக்குகள்.

    தமிழர், தெலுங்கர், வட இந்தியர் எல்லோரும் ஆண்களும் பெண்களும் பேதமில்லாமல், ஜீன்ஸும் டாப்புமாக கையில் கண்டிப்பாக ஒரு செல்போனில் பேசியபடி விரைந்து கொண்டு. . . forum என்ற மிகப்பெரிய ஷாப்பிங் mallஇல் உள்ள multiplex அரங்கத்தில் கண்டிப்பாக சனிக்கிழமை இரவு சினிமா பார்த்து, தெருவுக்குத் தெரு சராசரியாக இருக்கும் பத்து உணவகத்தில் ஏதேனும் ஒன்றில் கொரித்துக்கொண்டு. . . . வாழ்வே இவர்களுக்குக் கொண்டாட்டம் என்று படுகிறது. கன்னடியர் கன்னடியர் அல்லாதவர் என்று பிரித்துப் பார்க்கமுடியாத கலவை.

    பெங்களூர் எப்பவுமே இப்படித்தான் என்று தான் நினைத்துக் கொள்கிறேன். கன்னடியர் என்றுமே தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை. வந்தாரை வாழவைக்கும் புகலிடமாகவெ கர்நாடகம் இருந்து வந்திருக்கிறது. இங்கு புரட்சி வெடித்ததான சரித்திரம் இல்லை, சுதந்திரம் வருவதற்கு முன்பே தமிழகத்தில் சாதிப்புரட்சியும் மொழிப் போராட்டமும் வெடித்தது போல இங்கு ஏதும் நிகழவில்லை, குறைந்தபட்சம் மாணவர் இடையே கம்யூனிசம்கூட தாக்கம் ஏற் படுத்தவில்லை. (நக்ஸலைட் என்ற பெயரையே அப்போது கேள்விப் பட்டதில்லை. ) இனம், ஜாதி, மதம் என்ற பேத உணர்வு தோன்றியதில்லை. சந்தையிலும் காய்கறி மார்க்கெட்டிலும் கன்னடம் பேசப்படும். இங்கு வந்து செட்டில் ஆன தமிழர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் கன்னடம் கற்றார்கள்.

    கன்னடப் பழக்கவழக்கங்களை மேற்கொண்டார்கள். பண்டிகைக் காலங்களில் எங்கள் வீட்டுச் சமையலில் ஹோளிகேயும் பிஸிபேளா ஹுளி அன்னாவும் அவசியமான அயிட்டங்கள். என்னுடைய அம்மாவும் அவருடன் கூடப்பிறந்தவர்களும் கன்னடம் படித்தவர்கள். இங்கு வசித்த ஏராளமான தெலுங்கர்களும் கன்னடியருடன் தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டார்கள். இந்த வகையான ஐக்கியப்படுத்திக் கொள்ளலே கன்னடியருக்கு உறுத்தாமல் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியமில்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இப்பவும் அவர்கள் இன்றைய பன்முகக்கும்பலில் முகம் தெரியாமல் இருப்பது போல் படுகிறது.

    திடீரென்று ஒரு நாள் எரிமலை வெடித்தது. கர்நாடகத்தின் அபிமான சினிமா நட்சத்திரம் ராஜ் குமார் இறந்த அன்றும் மறு நாளும் நகரம் முழுவதும் நடந்த அட்டகாசங்கள் யாரும், முக்கியமாக அரசு நிர்வாகம் எதிர்பாராதது. ராஜ் குமாரின் இறப்பு அவரது அபிமானிகளை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் விளைவு பயங்கரமானதாக இருக்கும், கொலைவெறி ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட் டார்கள். உண்மையில் அடி வயிற்றில் அமுக்கி வைத்திருந்த பழி உணர்வு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டதைப் போல் வாகனங்கள் எரிக்கப்பட்டன. தமிழ் நாட்டு எண் பலகை கொண்ட கார்கள் கொளுத்தப்பட்டன. IT நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. கன்னடியருக்கு வெறி வந்ததைப் போல இருந்தது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல, அதைக் கட்டுப்படுத்த இயலாமல் நிர்வாகம் திக்கு முக்காடிப் போயிற்று. வட இந்திய தொலைக்காட்சி சானங்களில் இந்த வெறி ஆட்டத்தைப் பார்த்த படித்த வட இந்தியர்கள் தென் இந்தியாவில் சினிமா நடிகர்களிடம் இருக்கும் பித்து விநோத மானது, காட்டுமிராண்டித்தனமானது என்று சொல்ல ஆரம்பித்தார்கள். எனக்குத் தெரிந்து, தமிழ் நாட்டில் இருப்பது போல் கன்னடியர் சினிமா வெறி பிடித்தவர்கள் இல்லை. சினிமா நடிகர்களை தமிழ் நாட்டில் ஆராதிப்பது போல இங்கு ஆராதிக்கும் வழக்கம் இல்லை. ராஜ்குமாரின் அந்தஸ்து சந்தனக் கடத்தல் வீரப்பன் அவரை சிறை பிடித்துச் சென்றதும் பன் மடங்கு உயர்ந்தது. கன்னடியரின் கெளரவச் சின்னமானார் ராஜ்குமார். கன்னடியரின் அடையாளமாகிப் போனார். அவரைச் சிறைப் பிடித்தவன் தமிழன் என்பதால் தமிழர், முக்கியமாகப் புதிதாக வேலைவாய்ப்பினால் பெங்களூர் வந்து சேர்ந்த, கன்னட மொழி தெரியாத தமிழர் ஒட்டுமொத்தமாக விரோதிகளானார்கள். அதற்கு முன்பே காவேரி பிரச்சினையினால் தமிழர் விரோதிகளாகியிருந்தார்கள்.

    ஒரு முறை ஒரு கூட்டத்தில் ஜார்ஜ் ஃபர்னாண்டஸ்ஸின் இளைய சகோதரர் மைக்கேல் ஃபர்னாண்டஸ்ஸை சந்திக்க நேர்ந்தது. அவர் பப்பாண்டுகளாகக் கர்நாடக தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புள்ளவர். அவரிடம் பேச்சு வாக்கில் நான் என் ஆதங்கத்தைத் தெரிவித்தேன். காவேரி பிரச்சினையில் கன்னடியர் கலவரத்தில் ஈடுபட்டதும், தமிழர்களை விரோதிகளாக பாவித்ததும் கன்னட இலக்கியவாதிகள் கூட இப்போது மொழி பேதம் பேசுவதும் எனக்கு ஆச்சரியமாகவும், கன்னடியரின் ஆளுமையே மாறிப்போய் விட்டது என்ற விசனமும் ஏற்படுவதாகச் சொன்னேன். என்னை சங்கடப்படுத்தத் தயங்குபவர் போல் அவர் நிதானமாகச் சொன்னார். ‘தமிழர்கள் இங்கு தங்கள் மாநிலத்து அரசியலை நுழைக்க ஆரம்பித்து பிறகுதான் பேதம் தோன்ற ஆரம்பித்தது' என்றார். 'முதலில் திமுக நுழைந்தது. தொழிற்சங்கங்களில் இருந்த தமிழர்கள் தி மு கவைச் சேர்ந்தவர்கள் என்று தனிக் கொடி வைத்துக் கொண்டார்கள். அதிகமாகத் தமிழர்கள் பணி செய்யும் இடங்களில் (முக்கியமாக இந்திய‘ தொலைபேசி நிறுவனம்) திமுக வென்றபோது கன்னடியர் உள்ளிட்ட எல்லா தொழிலாளர்களையும் தமிழர்கள் தங்கள் கட்டுக்குள் வைக்கத் தலைப்பட்டார்கள். ஆணவமாக நடந்துகொண்டார்கள். அன்றிலிருந்தே விரோதம் துவங்கிவிட்டது. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவார்கள் என்கிற பயம் வந்துவிட்டது கன்னடியருக்கு’ என்றார் ஃபர்னாண்டஸ்.

    ராஜ்குமாரின் மரணம் தொடர்ந்த வெறியாட்டம் மாநிலத்தின் அறிவுஜீவிகள் சமூகவியலாளர்கள் எல்லாரையும் சிந்திக்க வைத்தது. காரண காரியங்களை எல்லாருமாகப் புரட்டிப் புரட்டி விவாதித்தார்கள். மரியாதை தவறிப் பேசும் வழக்கமே இல்லாத கன்னடியனுக்கு (இன்றும்கூட ஆட்டோ ரிக் ஷா ஓட்டுனர்களோ, போலிஸோ, கடைக் காரர்களோ ஆகட்டும், மிக மரியாதையுடனேயே பேசுகிறார்கள்,

    வண்டியில் ஏறும்போதே கூடப் போட்டுக் கொடுங்க என்பதோ சில்லறை இல்லை என்று மழுப்புவதோ இங்கு இல்லை, மிச்சம் பத்துப் பைசாவாக இருந்தாலும் ஆட்டோ ஓட்டுனர் வாடிக்கையாளருக்குத் திருப்பிக் கொடுக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1