Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Madisaar Maami
Madisaar Maami
Madisaar Maami
Ebook351 pages2 hours

Madisaar Maami

Rating: 2.5 out of 5 stars

2.5/5

()

Read preview

About this ebook

ரங்கநாயகி

இந்த உலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்திய பெண்மணி - ஆம்... என் தாய்.

ரங்கநாயகி (ஸ்ருதி)

இந்த உலகத்துக்கு நான் அறிமுகப்படுத்திய பெண் - என் மகள்.

ரங்கநாயகி (ஸ்ருதி)

இலக்கிய உலகத்துக்கு நான் அறிமுகப்படுத்திய உன்னதமான தவயோகி - உத்தமமான பெண்மணி - மடிசார் மாமி.

எனக்கு இன்னமும் பிரமிப்பு விலகவில்லை. ஒரு கதாபாத்திரத்தால் ஒரு கதை இந்த அளவு உயரம் தொடமுடியுமா? தொட்டுவிட்டது. லட்சக்கணக்கான வாசகர்களின் நெஞ்சின் ஆழம் வரை சென்று தொட்டுவிட்டது.

மடிசார் மாமி சிரித்தபோது அவளுடன் சேர்ந்து சிரித்தார்கள். அவள் கவலையில் பங்கு கொண்டார்கள். அவளது முயற்சிகள் வெற்றியடைய வேண்டுமே என்று கவலைப்பட்டார்கள். அவளது முடிவைக் கண்டதும் கண்ணீர்விட்டுக் கதறினார்கள்.

ரங்கநாயகியை நான் அறிமுகப்படுத்தினேன் என்பதைவிட தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் ரங்கநாயகி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்பதே உண்மை. அந்தப் பாதிப்பு என்னை விட்டு இன்னமும் விலகவில்லை. இந்த ஆவேசப் புயலை, இதன் அதிரடி முற்றுகையை, இது வாசக நெஞ்சங்களை ஆக்கிரமிக்கும் வேகத்தை இதன் முதல் அத்தியாயத்திலேயே கணித்துவிட்ட விகடன் ஆசிரியரைக் கண்டு பிரமிக்கிறேன்.

மடிசார் மாமியாகவே வாழ்ந்துகாட்டிய ஸ்ரீவித்யாவுக்கு என் ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.

ரங்கநாயகி வாழட்டும் பல்லாண்டு காலம்!

- தேவிபாலா

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603522
Madisaar Maami

Read more from Devibala

Related to Madisaar Maami

Related ebooks

Reviews for Madisaar Maami

Rating: 2.3333333333333335 out of 5 stars
2.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Madisaar Maami - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மடிசார் மாமி

    Madisaar Maami

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    1

    அலாரம் அடித்தது. - கண்களைத் திறந்தாள் விரித்த கைகளில்… ஒரு நொடி அப்படியே உட்கார்ந்திருந்தாள். பாத்ரூமுக்குள் நுழைந்து பல்லைத் தேய்த்தாள். கெய்ஸரைப் போட்டுவிட்டு வெளியே வந்தாள் ரங்கநாயகி.

    அதிகபட்சம் முப்பத்தைந்து வயது இருக்கக்கூடும். இளமையான தோற்றம். சற்றே பூசினாற்போல தேகவாகு. ‘சிக்’கெனக் கட்டப்பட்ட ரங்காச்சாரி மடிசார் புடவை. நெற்றியில் குங்குமம். பளபளக்கும் மூக்குத்தி. நிரந்தரச் சிரிப்பு உதடுகளில்… இதுதான் ரங்கநாயகி.

    மாமி… பால்..! - நீளமான குரல். கூடத்து விளக்கைப் போட்டுவிட்டு வாசல் கதவைத் திறந்தாள். சிறிய தலைகாணி சைஸில் இரண்டு ஆவின் பால் கவர்கள். எடுத்துக்கொண்டு கூடத்தைக் கடக்கும்போது, படுக்கையறையில் பார்வை விழுந்தது. மைதிலி தாறுமாறாகப் படுத்திருந்தாள்.

    மைதிலி, சரியாப் படுத்துக்கோ!

    அடுக்களைக்குள் நுழைந்து கத்திரியால் கவரின் முனையை வெட்டி, பாலைப் பாத்திரத்தில் கொட்டினாள். காஸைப் பற்றவைத்துவிட்டு உள்ளே வந்தாள்.

    மைதிலி… எழுந்திரும்மா!

    இரு மன்னி! கொஞ்சம்கூடத் தூங்கணும் நான்…

    அடுத்த மாசம் யூனிவர்ஸிட்டி எக்ஸாம் உனக்கு. தூங்கினது போதும்… எழுந்து படி! உம்…

    மைதிலி சோம்பல் முறித்தபடி எழுந்து உட்கார்ந்தாள்.

    தூங்கறச்சேகூடப் பொம்மனாட்டிக்கு உணர்வு வேணும். அடக்கம் மறக்கப்படாது. ஞாபகம் வெச்சுக்கோ…

    மைதிலி முனகியபடி எழுந்து போனாள்.

    கிச்சாமி, எழுந்திருடா! யோகாவுக்கு நேரமாச்சு உனக்கு…

    எழுந்துட்டேன் மன்னி!

    பொங்கிய பாலை இறக்கிவிட்டு ஃபில்டரைத் தட்டினாள்.

    மன்னி… இவனைப் பாரேன்! பதினஞ்சு நிமிஷமா பாத்ரூம்ல உட்கார்ந்திருக்கான். வேணும்னே பண்றான்! - அலறினாள் மைதிலி.

    மெள்ளப் பேசுடீ… நாலு பேருக்குத் தெருவுல கேக்கணுமா உன் சத்தம்? கிச்சாமி, சீக்கிரம் வாடா!

    வெளியே வந்தான் கிச்சாமி என்னும் கிருஷ்ணஸ்வாமி.

    நேத்திக்கு என்னை இவதான் ஆட்டம் காட்டினா மன்னி… பழிக்குப் பழி வாங்கிட்டேன்!

    இந்தா காபி! குடிச்சுட்டு யோகாவைத் தொடங்கு… தினமும் நீ ஜாகிங்கூடப் போகலாம் கிச்சாமி!

    ஏன் மன்னி, என்னைப் பிழிஞ்சு எடுக்கறே?

    லேசா தொந்தி விழறது உனக்கு… கூடாது இந்த இருபத்தஞ்சு வயசுல! உங்ககிட்ட பேசிண்டு நின்னா எனக்கு நாழியாறது!

    மளமளவென உட்கார்ந்து தேங்காயைத் துருவினாள். சற்று நேரத்தில் மிக்ஸி சத்தம், குக்கரின் விசில் எனத் தாளவாத்தியக் கச்சேரி தொடங்கிவிட்டது அடுக்களையில்.

    மன்னி… நான் குளிச்சிட்டேன்!

    பிராவோடு, உள்பாவாடை சகிதம் படுகுஷாலாக வந்து நின்றாள் மைதிலி.

    உள்ளே போடீ! வெட்கமா இல்லையா உனக்கு?

    நீதானே மன்னி இருக்கே… எதுக்கு வெட்கம் எனக்கு?

    கிச்சாமி கூடத்துல யோகா பண்ணிண்டு இருக்கான். உன் அண்ணனா இருந்தாலும் அவன் ஆம்பளை!

    அவன் மட்டும் ஜட்டியோட யோகா பண்ணலாமா?

    கஷ்டம்டீ உன்னோட… சே… காலங்கார்த்தால உங்களோட மாரடிக்க வேண்டியிருக்கு. போய்ப் பாடத்தைப் படி!

    டவலோடு பாத்ரூமுக்குள் நுழைந்தாள். பத்தே நிமிடங்களில் குளியலை முடித்துவிட்டு வெளிப்பட்டாள்.

    ரங்கநாயகி. ரங்கநாயகி..!

    தீனமான குரல் உள்ளேயிருந்து அழைத்தது அவளை. புடவையைச் சுருட்டி மேலே போட்டுக்கொண்டு உள்ளே ஓடினாள்.

    மாமியார் கட்டிலில் உட்கார்ந்திருந்தார்.

    என்னம்மா?

    என்ன சமையல் இன்னிக்கு? - கேட்பதற்குள், ஆயிரம் வயலின் இசைத்ததைப் போல அப்படியொரு ஆஸ்துமா.

    அதைப்பத்தி நீங்க ஏன் கவலைப்படறேள்? அஸ்தலின் போட்டுண்டேளா?

    உம்!

    வெந்நீர் தர்றேன்… குடிச்சுட்டு சிவனேனு படுத்துக்கோங்கோ… எனக்கு நிறைய வேலை இருக்கு…

    நான் கறிகாய் நறுக்கித் தரட்டுமாடீ?

    பதில் பேசாமல் சிரித்துவிட்டு, தலையில் இருந்த ஈர டவலை அவிழ்த்துத் துவட்டிக்கொண்டே உள்ளே வந்தாள் ரங்கநாயகி.

    அக்வா ரிஜியாவுக்கு என்ன மன்னி ஃபார்முலா?

    ப்ளஸ் டூ படிக்கறவன் சொல்லுவான். மைதிலி பி.எஸ்ஸி. ஃபைனல். என்ன படிக்கறே மைதிலி? மூணு ஹைட்ரோ க்ளோரிக் ஆஸிட், ஒரு நைட்ரிக் ஆஸிட்… மனசு பாடத்துல இருக்கட்டும்!

    வெளியில் வந்தாள்.

    திரிகோண ஆசனம் நீ பண்றதே இல்லையா கிச்சாமி?

    இல்லை மன்னி…

    இடுப்புல உள்ள ஊளைச்சதை எப்படிப் போகும், பின்னே?

    ரங்கநாயகி… சித்த வாயேன்!

    வர்றேம்மா… ரசத்துக்குப் புளியைக் கரைச்சிட்டு வந்துர்றேன்!

    அதை முடித்தாள். மாமியாரை நெருங்கினாள்.

    ரங்கநாயகி… உட்காரேன்!

    சீக்கிரம் சொல்லுங்கோ… நேரமில்லை நேக்கு!

    வைதேகிக்கு இது அஞ்சாவது மாசம்!

    தெரியும்… நீங்க சொல்ல வேண்டாம்!

    என்னவோ எனக்கு அஞ்ஞானம்! பெத்தவளா இருந்து ஒரு உபயோகமும் இல்லாம இருக்கேனே… ‘இதைச் செய்… அதைச் செய்’னு உன்கிட்ட சொல்ல எனக்கென்ன உரிமை?

    கிச்சாமி லுங்கியோடு உள்ளே நுழைந்தான்.

    ஏம்மா, இப்படிப் பிரிச்சுப் பேசறே? நீயும் நானும் சொல்லித்தான் மன்னி நம்ம குடும்பத்தைத் தன் தோள்ல சுமந்துண்டு திரியறாளா? உன் குசும்பை அப்பப்பக் காட்டறியே!

    கிச்சாமி… வேர்வை ஆறிட்டு… நீ போய்க் குளி!

    மன்னி…

    போடா..!

    கிச்சாமி போய்விட்டான்.

    வளர்பிறை பாக்கணும்… பஞ்சமியா இருக்கணும். நாள் நன்னா அமையணும். வைதேகிக்கு நம்ம வீட்டுல வெச்சு வளைகாப்பு நடக்கும். போதுமா?

    ரங்கநாயகி!

    சாயங்காலம் வரும்போது அவளுக்கொரு பட்டுப்புடவை எடுத்துண்டு வர்றேன்… தங்க வளையல் போடணுமா?

    வேண்டாம்டி ரங்கநாயகி! நீ இது செய்யறதே அதிகம்…

    மாமியார் அழுதார். மேலும் என்னவோ பேச வாய்திறந்தார்.

    எதுவும் சொல்ல வேண்டாம்… இழுப்பு ஜாஸ்தியாகும்.

    வெளியே வந்து விட்டாள்.

    மைதிலி, உனக்கு காலேஜுக்கு நேரமாகலையா? கிச்சாமி, நீயும் வா… சாப்பிட!

    காக்கி உடையில் கிச்சாமி தயாராகிவிட்டான். சைக்கிளைத் துடைத்து டிபன் பாத்திரத்தை கேரியரில் இருத்தினான்.

    நான் வர்றேன் மன்னி!

    சரிப்பா! சைக்கிளை மெள்ள ஓட்டிண்டு போ…

    நானும் புறப்பட்டாச்சு மன்னி!

    ஏற்கெனவே நீ லேட்டு மைதிலி. சீக்கிரம் கிளம்பு…!

    அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்த ரங்கநாயகி பத்தாவது நிமிடம் தயாராகிவிட்டாள். கரும்பச்சையில் கறுப்பு பார்டர் போட்ட மடிசார்புடவை, கறுப்பு ரவிக்கை, மெலிதான கொண்டை பெரிய சாத்துக்குடி சைஸில்! நெற்றியில் புருவ மத்தியில் குங்குமம், அதன்மேல் விபூதி.

    பளிச்சென வெளியே வந்தாள் ரங்கநாயகி.

    அம்மா, நான் புறப்படறேன். கதவைச் சாத்திக்குங்கோ. டைனிங் டேபிள்மேல சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன். நிதானமாக் குளிச்சிட்டு சாப்பிடுங்கோ. - ஊறுகாய் அதிகம் வேண்டாம். மத்தியானம் ரெண்டு மணிக்கு ஒரு டெரிஃபிலின் போட்டுக்கணும். அதிகமா திணறல் இருந்தா கொஞ்சம் ஸ்ப்ரே எடுத்துக்குங்கோ… வரட்டுமா?

    ரங்கநாயகி!

    சீக்கிரம் சொல்லுங்கோ!

    ராகவனுக்கு போன் பண்றியா?

    எதுக்கு?

    வைதேகிக்கு வளைகாப்பு பண்ணப் போறோம்னு அவனுக்குச் சொல்ல வேண்டாமா?

    நாலு நாள் முன்னால் சொன்னாப் போறாதா?

    என்னடீ நீ? அவனும் வைதேகிக்கு ஒரு அண்ணன்தான்!

    நீங்களும் நானும் மட்டும்தான் இதை ஞாபகம் வெச்சுண்டு இருக்கோம். அவனுக்கு நினைவு இல்லைன்னுதான் தோணறது. சாயங்காலம் பேசிக்கலாம். நான் வர்றேன்!

    ஸ்டாண்டில் தொங்கிய கறுப்பு அங்கியை எடுத்துக்கொண்டாள். பக்கத்தில் இருந்த வெள்ளை காலரை அணிந்து கொண்டாள். அன்றைக்கான கேஸ் கட்டுகளை மேஜையிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் - வக்கீல் ரங்கநாயகி.

    ஒரு கட்சிக்காரர் சிரித்தார்.

    வாங்கோ… என்ன வீடு தேடி வந்திருக்கேள்?

    அந்த சிவில் கேஸ்ல…

    கண்ணப்பனோட புறம்போக்கு நிலத்தகராறுதானே? சேம்பருக்குப் பன்னிரண்டு மணிக்கு வாங்கோ. பேசிக்கலாம்!

    குண்டு மாம்பழம் ஒரு கூடை கொண்டு வந்திருக்கேன். எங்கே வைக்கட்டும் மாமி?

    எதுக்கு?

    குழந்தைகள் சாப்பிடட்டுமே!

    தபாருங்கோ ராஜேந்திரன்! குண்டு மாம்பழம் லஞ்சமா? முதல்ல அதை எடுத்துண்டு போங்கோ. சட்டம் என்ன சொல்றதோ, அதை நான் கோர்ட்ல பேசுவேன். நடுவுல ஏன் குண்டு மாம்பழம்?

    அவர் முகம் வெளுத்தது.

    போய்விட்டார்.

    தன் கையிலிருந்த கேஸ் கட்டுகளையும் வக்கீல் அங்கியையும் வெளியே நின்றிருந்த ஸ்கூட்டரின் பக்கப் பெட்டியில் வைத்தாள். தன் கைப்பையைத் தோளில் நன்றாக இருத்திக்கொண்டு ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள். அது தெருமுனையைக் கடந்தது.

    காத்திருந்த எதிர்வீட்டு மாமி கதவைத் தட்டினாள்.

    வாங்கோ!

    மாட்டுப்பொண் போயிட்டாளா?

    ம்…!

    நன்னாவா இருக்கு இதெல்லாம்?

    எதைச் சொல்றேள்?

    மடிசார் பொடவை, ஸ்கூட்டர்ல சவாரி.. தெருவே நார்றது ரங்கநாயகியால!

    மாமியார் பேசவில்லை…

    நீங்க பெரியவாளா இருக்கேளே… கண்டிக்கறதில்லையா அவளை?

    …..!

    ம்! உங்களைச் சொல்லிக் குத்தமில்லை. உங்க ரெண்டாவது புள்ளை ராகவன் வீட்டோட மாப்பிள்ளையா போயிட்டான். கிச்சாமி இப்பத்தான் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கான். ரங்கநாயகியை விட்டா உங்களுக்கு நாதியுமில்லை!

    …..

    அவ எக்கேடு கெட்டுப் போகட்டும்… ஆனா, எதுக்கு இந்த மடிசாரைக் கட்டிண்டு பிராமணக் குலத்தையே அவமானப்படுத்தறா? நன்னா இருக்கா இது?

    நான் சொல்லிப் பார்த்தாச்சு… கேக்கறதில்லை அவ. முழு நீளத்துக்கு ஒரு கதை சொல்லுவா உடனே!

    அம்மா! - எதிர்வீட்டில் குரல் அழைத்தது.

    வர்றேண்டி! கொஞ்சம் நேரம் பேசவிடமாட்டா எம்பொண்ணு! வர்றேன் மாமி. அப்புறமா பாக்கலாம்!

    அம்மா உள்ளே வந்தாள். குளியலை முடித்துச் சாப்பிட உட்கார்ந்தாள்.

    கதவு தட்டப்பட்டது.

    யாரது?

    நான்தான்மா ஹேமா!

    அம்மா அவசரமாகப் போய்க் கதவைத் திறந்தாள். மூத்த மகள் உள்ளே நுழைந்தாள்.

    வாடி ஹேமா! என்ன இந்த நேரத்துல திடீர்னு?

    வரணும்னு தோணித்து. லீவு நாள்ல எங்கேம்மா வர முடியறது? நாலு மணிக்கு எழுந்தா எந்திரமாட்டம் வேலை. ஆபீஸ்விட்டு வந்தாலும் ஒழியறதில்லை. இங்கே வரணும்னு சொன்னா, அப்பப் பார்த்து என்னோட மாமியாருக்கு உடம்புல - எல்லா வலிகளும் ஆரம்பிக்கும். உன்னோட பேசிண்டு ஒரு நாளாவது இருக்க முடியறதா? மன்னி போயாச்சா?

    ம்!

    ஏன் ஒரு மாதிரி இருக்கேம்மா? மன்னி ஏதானும் சொன்னாளா?

    அவ ஒண்ணும் சொல்லலை. சொல்லவும் மாட்டா. ஆனா அவளோட போக்கே புதிரா இருக்குடி ஹேமா. மடிசார் கட்டிண்டு ஸ்கூட்டர்ல போறா. எல்லாரும் ஜாடைமாடையா பேசறா. எடுத்துச் சொல்லவும் எனக்குப் பயமா இருக்கு. என்னடி பண்றது?

    காரணத்தை அவதான் சொல்லிட்டாளே!

    ஊர் ஒப்புக்க வேண்டாமா ஹேமா?

    விடம்மா! ஊரென்ன ஊரு? கஷ்டப்பட்ட காலத்துல இந்த ஊரா நம்பளை ஏன்னு கேட்டுது? மன்னிதானே போராடினா பாவம்! அவளை யார் தட்டிக்கேட்க முடியும்? சொல்லு!

    எனக்கு அவமானமா இருக்கு!

    என்னையும் எங்க வீட்டுல பேசறா. எங்க மாமியார் நம்ம மன்னியை தூஷணை பண்ணாத நாளில்லை. ஆரம்ப காலத்துல எனக்கும் சங்கடமாத்தான் இருந்தது. சரி விடு! வைதேகி வளைகாப்பை நடத்தப்போறாளா மன்னி?

    ம்! இன்னிக்குப் பட்டுப்புடவை எடுத்துண்டு வரப்போறாளாம்…

    பாவம்! என்ன பாடுபடறா அவளும்! அவளுக்கு என்னம்மா தலையெழுத்து?

    வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.

    ரங்கநாயகி வந்துட்டாடீ ஹேமா! ஏன் இந்த நேரத்துல வந்திருக்கா?

    ரங்கநாயகி உள்ளே நுழைந்தாள். அவளுடன் நடுத்தர வயதுக்குள்ள நரைகளோடு லேசான கூச்சத்துடன் உள்ளே நுழைந்தார் உயரமான ஒரு மனிதர்.

    வாங்க சார்! அம்மா… டேவிட் ஆசீர்வாதம் வந்திருக்கார்…

    வணக்கம்மா…

    அம்மா வணங்கினாள்.

    உட்காருங்க சார்! இதோ வந்துட்டேன்! ரங்கநாயகி உள்ளே வந்தாள்.

    என்னடீம்மா இந்த நேரத்துல?

    டேவிட்டுக்குச் சில சட்ட ஆலோசனைகள் அவசியமா இருக்கு. ஃபைல்ஸ் வீட்ல இருக்கு. எடுக்க வந்தேன். ஹேமா. லீவா நீ?

    இ… இல்… ஆமாம் மன்னி!

    லீவா? இல்லையா? ரெண்டு பதிலும் சொன்னா எப்படி?

    லீவு போட்டேன் மன்னி!

    ஆபீஸ் போறேன்னு உங்க மாமியார்கிட்ட சொல்லிட்டு, இங்கே வந்திருக்கே… அப்படித்தானே…?

    ஆ… ஆமாம் மன்னி!

    இது தப்பு ஹேமா! ஏன் இந்தப் பொய்? அம்மாவைப் பார்க்கணும்னா சொல்லிட்டு நேரா வரவேண்டியதுதானே?

    அது சரிப்படாது மன்னி. அப்புறமா தொட்டது தொலைஞ்சதுக்கெல்லாம் லீவு போடச் சொல்வா மாமியார். முடியாதுன்னு சொன்னா, ‘உங்கம்மாவைப் பார்க்க மட்டும் லீவு தர்றாளா?’னு கேப்பா. நான் என்ன செய்யட்டும் மன்னி?

    பொய்யும் ஏமாத்தலும் நம்ம மரியாதையைக் குறைச்சிரும் ஹேமா. மாமியாரை நீ எதிர்க்கணும்னு நான் சொல்லமாட்டேன். உன் மனசுல பட்டது உனக்கு நியாயமா இருந்தா. அவர்கிட்ட சொல்லிட்டு வாயேன். மத்தவங்க அபிப்ராயம் அநாவசியம்!

    நீ சொல்லிட்டுப் போயிடுவே! அவ அங்கே இருந்துதானே பிழைக்கணும்!

    அத்தனை பயம் இருந்தா, திருட்டுத்தனமா வரப்படாது.

    தாயாரைப் பார்க்கணும்னு மனசு அடிச்சுக்கிறது. பொம்மனாட்டியா பொறந்தா எல்லாத்துக்கும் பயப்பட வேண்டியிருக்கே! எல்லாரும் ஒன்னை மாதிரி இருக்க முடியறதா?

    ஏன்? நான் எந்த மாதிரி இருக்கேன்?

    அம்மா, நீ கொஞ்சம் சும்மா இருக்கமாட்டியா?

    இரு ஹேமா! சொல்லுங்கோ… நான் எந்த மாதிரி இருக்கேன்?

    நான் சொல்லணுமா? ஊர் பேசறது உன் காதுல மட்டும் விழலையா?

    என்ன பேசறது ஊர்? சரி, ஊர் கிடக்கட்டும்! நீங்க என்ன சொல்ல நினைச்சேள்? அதைச் சொல்லுங்கோ!

    நீ போ மன்னி! அம்மா ஏதாவது உளறுவா!

    ம்! சொல்லுங்கோ…

    மடிசார் புடவையோட ஸ்கூட்டர்ல நீ போறதும்… கண்டவா, கட்சிக்காரானு பேர் சொல்லிண்டு உன்னோட வீட்டுக்கு வர்றதும் நன்னா இருக்குன்னு உன் நெனப்பா?

    மடிசார் என்னோட உடுப்பு. நான் அதைக் கட்டற காரணம். உங்களுக்கெல்லாம் தெரியும். வாகனம் என் வசதிக்கு. சரியான நேரத்துக்கு உரிய இடத்தை அடைய அது செளகரியம். ம்…! வேற ஏதாவது குற்றச்சாட்டு உண்டா?

    உண்டு!

    ம்? அதையும் சொல்லிருங்கோ!

    ஏற்கெனவே நான் சொன்னதுதான். நெத்தில பொட்டு… பளபளன்னு எடுப்பா மூக்குத்தி, இந்த ரெண்டும் உனக்குத் தேவைதானா? உன் புருஷன் கைலாசம் காலமாகி பதினஞ்சு வருஷம் ஆச்சு. தொங்கத் தொங்க தாலி மட்டும்தான் நீ கட்டிக்கலை! மத்தபடி எதுக்காக இந்த சுமங்கலி வேஷம்?

    தலையை உயர்த்தி மாமியாரைப் பார்த்தாள் ரங்கநாயகி.

    அந்தப் பார்வையின் தீவிரத்தைக் கண்டு ஹேமாவின் உடம்பு நடுங்கத் தொடங்கியது.

    2

    நான் வக்கீல் நோட்டீஸ் விடப்போறேன்பா! ஆவேசத்துடன் நிமிர்ந்தாள் அருந்ததி.

    கண்ணாடி முன் நின்று நெற்றியில் சந்தனப் பொட்டைச் சரிசெய்து கொண்டிருந்த சோமசுந்தரம்பிள்ளை, மகள் கூறுவதைக் கேட்டுத் திடுக்கிடவில்லை! மாறாக ஆமாம்மா! இனிமே அதைத் தவிர வேற வழியில்லை. நானும் நினைச்சேன். சொல்லிட்டே நீ! நல்ல லாயரா ஒருத்தரைப் பிடிச்சு, உடனே முடிவெடுத்தாகணும்! என்றார்.

    அம்மா உள்ளே நுழைந்தாள்.

    நல்லாருக்கா நீங்க பேசறது?

    எதைச் சொல்றே நீ?

    முடிஞ்சா ஒட்ட வைக்கப் பாக்கணும். அதுதான் மனிதாபிமானம். உங்க பொண்ணுதான் ஆத்திரத்துல தலை, கால் தெரியாம ஆவேசப்படறாள்னா, நீங்களுமா ஏத்திவிடறது? அவ நல்லபடியா வாழணும்னு ஆசையில்லையா உங்களுக்கு?

    நீ சும்மா இரு! இருபத்தி நாலு மணி நேரமும் போதைல முங்கிக்கிடக்கான் இவ புருஷன்…

    அவர் நம்ம மாப்பிள்ளை. மரியாதை இருக்கட்டும்!

    மண்ணாங்கட்டி! குடிகாரனுக்கு என்ன மரியாதை? வீட்ல எந்த நேரமும் நாலு பேர்! ஒரு குழந்தையோட கிலுகிலுப்பைச் சத்தம் கேட்க வேண்டிய வீட்ல, கண்ணாடிக் கோப்பைகள் சிலுங்கற சத்தம்தான் கேட்கறது!

    இதப்பாருங்க…!

    இல்லேம்மா! நீ இதுல தலையிடாதே! நீங்க வாங்கப்பா… என்னால அங்கே வாழ முடியாது இனி… அப்பா, இன்னொண்ணு!

    சொல்லும்மா…!

    யாராவது லேடி அட்வகேட் இருந்தாப் பாருங்க!

    ஏம்மா?

    ஆண்களுக்கு இது வெறும் வழக்காத்தான் தெரியும். ஒரு பெண்ணோட மனப் போராட்டம் புரியாது. பெண் லாயரா இருந்தா என் உள்ளுணர்வுகள் நிச்சயமாப் புரியும். ப்ளீஸ்பா!

    அப்பா ரிஸீவரை எடுத்ததும் பக்கத்து வீட்டுக்காரர் ‘ஓசி ஹிண்டு’வைத் திருப்பித்தர உள்ளே நுழைந்தார்.

    நல்ல ஒரு லேடி அட்வகேட் சொல்லுங்களேன் ஜீக்கே! உங்களுக்குத்தான் கோர்ட் ஏரியாக்கள் பழக்கமாச்சே!

    மடிசார் மாமியைப் போய்ப் பாருங்களேன் பிள்ளைவாள்!

    யோவ்! நானென்ன விளக்குப் பூஜைக்கா கேக்கறேன்? விவாகரத்து வேணும் சார்.

    நானும் அதைத்தான் சொல்றேன். தாம்ஸன்ல லீகல் அட்வைஸரா இருந்துக்கிட்டே, கோர்ட்ல அப்பியர் ஆகக்கூடிய ஒரு பெண் வக்கீல் இருக்காங்க. அவங்க நிஜப் பெயர் ரங்கநாயகியோ என்னமோ எனக்குத் தெரியாது. மடிசார் புடவை கட்டிக்கிட்டு கோர்ட்டுக்கு வர்றதால ‘மடிசார் மாமி’னு எல்லாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதுண்டு!

    மடிசார் புடவையோட கோர்ட்டுக்கா? புதுசா இருக்கே… பிராமின்ஸ் ஆ..?

    ஆமாம்… அந்தம்மாவைக் கொஞ்சம் வித்தியாசமான லேடினு ஊர்ல பேசிப்பாங்க. ‘ஒருமாதிரி’ பொம்பளைன்னும் சில பேர் சொல்றாங்க. நமக்குத் தெரியாது.

    அருந்ததிக்குக் கொஞ்சம் ஆர்வமாகக்கூட இருந்தது.

    ‘மடிசார் மாமியா? மடிசார் சேலையில் உயர்நீதிமன்றத்தில் ஒரு பெண்ணா? வயதானவராகத்தான் இருப்பார். நிச்சயம் என் பிரச்னைகளைப் புரிந்து கொள்வார்!’

    எங்கே போய் அவங்களைப் பாக்கறது?

    கோர்ட் ஏரியால ‘மடிசார் மாமி’ பிரசித்தம். போய்க் கேளுங்களேன்!

    புறப்படும்மா அருந்ததி. இன்னிக்கே பாத்துரலாம்!

    என்னங்க! யோசனை பண்ணிட்… அம்மாவின் பேச்சைக் கேட்க அங்கே காதுகள் இல்லை.

    அருந்ததி, உடைகளை மாற்றிக்கொண்டு வந்தாள். பிள்ளைவாள் ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டு வாசலில் நிறுத்தினார். அருந்ததியிடம் ஒரு ஆவேசம் இருந்தது.

    ‘பொம்பளைன்னா கிள்ளுக்கீரையா இந்தச் சமூகத்துல… ஒரு கயித்தைக் கட்டிட்டா ஆச்சா? என்ன செஞ்சாலும் சகிச்சுக்க முடியுமா? அதெல்லாம் அந்தக் காலம். நான் யாருன்னு உனக்குக் காட்டறேன் கூடிய சீக்கிரம்!’

    ரெடியாம்மா?

    அப்பாவின் தோளில் அருந்ததி ஒட்டிக்கொள்ள, ஸ்கூட்டர் புறப்பட்டது. பத்தரை மணி சுமாருக்கு உயர்நீதிமன்ற வளாகத்தில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி நடந்தார்கள்…

    ஒரு கறுப்பு அங்கியை வழிமறித்தார் சோமசுந்தரம்.

    மடிசார் மாமி வந்திருக்காங்களா?

    சேம்பர்ல 160-வது கேபின்ல இருப்பாங்க. போய்ப் பாருங்க!

    தாங்க்யூ!

    இரண்டு பேரும் சேம்பருக்கு வழி கேட்டு நடந்தார்கள். முதல் மாடியில் கறுப்பு கோட் டிராஃபிக் நெரிசலாக இருந்தது.

    மடிசார் மாமி இருக்காங்களா?

    வர்ற நேரம்தான். ஃபேமிலி கோர்ட்ல ஒரு கேஸ் இருக்கு இன்னிக்கு. நிச்சயம் வருவாங்க. அப்படி உட்காருங்க! - இன்னொரு வக்கீல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    ‘ஏன் இந்தச் சுமங்கலி வேஷம்?’

    ‘ஏன் இந்தச் சுமங்கலி வேஷம்.’

    ரங்கநாயகியின் காதுக்குள் மாமியார் மூர்க்கமாக ஓலமிட்டுக் கொண்டிருந்தாள். கேள்வி புறப்பட்ட அந்த நொடியில், சகலத்தையும் உதறிவிட்டு காலை வீசி வெளியே நடந்துவிடலாம் என்று ஒரு வெறியே எழுந்துவிட்டது.

    ‘யாருக்காக இத்தனை பாரம் சுமக்கிறேன்

    Enjoying the preview?
    Page 1 of 1