Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panju Bommai
Panju Bommai
Panju Bommai
Ebook171 pages1 hour

Panju Bommai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803545
Panju Bommai

Read more from Maharishi

Related to Panju Bommai

Related ebooks

Reviews for Panju Bommai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panju Bommai - Maharishi

    http://www.pustaka.co.in

    பஞ்சு பொம்மை

    Panju Bommai

    Author:

    மகரிஷி

    Maharishi
    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பஞ்சு பொம்மை

    அண்ணன் திருவேங்கடமும், அண்ணி அலமேலுவும் வீட்டின் முன்னால் எதிரெதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை தூரத்திலிருந்தே கோபாலன் பார்த்தான்.

    அலமேலுவின் கையில் புத்தகமொன்று இருந்தது. அது என்ன புத்தகமென்பதும் அவனுக்குத் தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்பு அதை நூலகத்திலிருந்து அவன்தான் தருவித்துக் கொடுத்திருந்தான்.

    மலைச் சரிவில் பண்ணைகள் வளர்ப்பது பற்றியும், தோட்டங்கள் போடுவது பற்றியும் ரொம்பவும் உபயோகமான வகையில் அதில் விஷயங்கள் இருந்தன.

    அண்ணனுக்கும் அண்ணிக்கும் இடையே இதில் ஒரு ஒற்றுமை!

    திருவேங்கடத்துக்கு இம்மாதிரி விஷயங்களில் நாட்டமென்றால் அதற்குமேல் அலமேலுவுக்கு அதில் விருப்பமிருந்தது. திருவேங்கடத்தின் பண்ணை முறைகள் சற்றே பழைமையானவை. இதுநாள்வரை மற்றவர்கள் பின்பற்றி வந்த முறைகளையே அவன் பின்பற்றி வந்தான். விவாகமாகி அலமேலு வந்தவுடன் அவனது பழைய முறைகள் ஒவ்வொன்றையும் மாற்றிக்கொண்டு வந்தாள்.

    அலமேலு படித்த பெண். வேளாண்மை, தோட்டம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவள்.

    அந்தி மங்கும் நேரம். பின்னால் மலைச்சரிவு. அருகில் வியாபித்து நீண்டு செல்லும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் பசுமை செரிந்த பள்ளத்தாக்கு. சரிவுகளில் வேங்கை மரங்கள்.  மண்வளம் மிகுந்த சரிவுகளில் காப்பி, ஆரஞ்சு, வாழை, கொய்யா, பலா, அன்னாசி போன்றவைகள் தென்பட்டன.

    பிரதான ரஸ்தாவை விட்டு சற்றே உள்ளே தள்ளினாற் போல, முழங்கால் உயரத்திற்கு கற்களை அடுக்கி எழுப்பப்பட்ட சுவர் ஒரு இடத்தில் பாதைக்காக இடைவெளி விட்டிருந்தது. அதைத் தாண்டிக்கொண்டு உள்ளே சென்றால் சுமார் ஐந்து ஏக்கர் விஸ்த்தீரணத்தில் மணற்பாங்கு நிறைந்த மலைச்சரிவு. அந்தச் சரிவுகள் பூராவும் ஏலம், லவங்கம், ஜிரேனியம் இவைகளோடு தோட்டத்தில் ஊடு பயிராக ஆரஞ்சு, பலா ஆகியவை.

    கார்த்திகை மாதம். பனி இறங்கத் தொடங்கிவிட்டது. தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் தணிந்து, மழையின் அறிகுறி முற்றிலும் போய்விட்டது.

    அலமேலு முகத்தில் அளவற்ற சந்தோஷம் இப்பொழுதெல்லாம். அதிகமாக சோயா பீன்சைப் பற்றியே பேசுகிறள். ஓர் உண்மையான விவசாயியின் பூரிப்பு அவள் முகத்தில். நிலம், பயிர், தோட்டம், உழைப்பு இதைவிட்டால் அவளிடத்தில் வேறு சிந்தனைகளே இல்லை.

    ஏன் இன்று இவ்வளவு நேரம், எதிரே வரும் மைத்துனனைக் கேட்டாள்.

    ஸ்பெஷல் கிளாஸ்.

    அவன் முன்னே வந்து அவனிடமிருந்த புத்தகங்களைத் தான் வாங்கிக் கொண்டாள்.

    வீட்டின் முன்னே திறந்தவெளியில் போடப்பட்டிருந்த சிறிய வட்ட வடிவமான மேஜைமுன் வந்து அமர்ந்தான். புத்தகங்களை உள்ளே கொண்டுபோய் வைத்துவிட்டு வெளியே வரும்போது, தங்க இழைகளுடன் பூவேலை செய்யப்பட்ட வெண்மைநிற பீங்கான் டீ ஜாடியுடன் வந்தாள், கப்பில் டீயை ஊற்றி அவன் முன்னே நகர்த்திவிட்டு, அவன் எதிரே இருந்த காலி ஆசனத்தில் அவள் அமர்ந்தாள்.

    திருவேங்கடம் கோபாலன் முகத்தில் காணப்பட்ட லேசான களைப்பையும், ஒருவித தயக்கத்தையும் பார்த்துவிட்டு டீபாயின்மேல் அலமேலு படிப்பதற்கென்று வைத்திருந்த விவசாய நூல் ஒன்றை எடுத்து அதில் சோயாபீன்ஸ் சாகுபடியை பற்றிய விவரங்களைக் கூறும் அத்தியாயத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான். தனது இந்தச் செய்கை தம்பியை ஒருவேளை எரிச்சலூட்டினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்பதையும் உணர்ந்தேதான் இருந்தான் அவன், என்றாலும் அவன் விஷயத்தில் திருவேங்கடம் ஏதும் தலையிடுவதில்லை. செயல் முறையிலும், சிந்தனைப் போக்கிலும் அவனிடத்தில் காணப்பட்ட இடைவெளி அவனுடன் பல விஷயங்களில் ஒத்துப்போக முடியாமல் இருந்தது. ஒத்துப்போக முடியாமல் இருந்தது என்பதாலேயே விலகிப்போய் விடவில்லை. அதிகம் தான் தலையிடாமல் அலமேலுவின் பொறுப்பிலேயே அவைகளை விட்டுவிட்டான்.

    திருவேங்கடம் தம்பிமேல் அளவற்ற பாசம் கொண்டவன், அவனுடைய எதிர்காலம் பற்றி ஏராளமான ஆசைகளை சுமந்து கொண்டிருப்பவன்.

    ***

    திருவேங்கடம் அதிகம் படிக்கவில்லை. படிக்க வைக்கக் கூடியவர்கள் யாருமில்லாமல், ஒரு முக்கிய பிரயாணத்தில் நடுவழியில் நிற்க வைத்துவிட்டு போய்விட்ட மாதிரி அவர்களை அவர்கள் பெற்றோர் நிற்க வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். நீர் ஊற்றவும் பராமரிக்கவும் வேலி கட்டவும், காலத்தின் தட்ப வெப்பத்திற்கு தக்கபடி பாதுகாக்கவும் ஆளில்லாத அனாதைச் செடிகளாக அவர்கள் இந்த மனிதக் காட்டில் விடப்பட்ட நேரமும் அதுதான்.

    மங்கிய விளக்கொளியில் ஜன்னல் ஓரமாக உள்ள இரும்புக் கட்டிலில் கோபாலன் சாய்ந்திருந்தான். ஜன்னல் திறந்திருந்தது. சந்திர ஒளியில் எதிரே சேர்வராயன் மலை தெரிந்தது. இருளில் அதன் இயற்கை அமைப்பின் மேடு பள்ளங்கள், ஒரு குழந்தையின் பல்வேறு சுற்பனைகளுக்கு இடம் தந்து கொண்டிருப்பதுபோல கோபாலனின் கற்பனைக்கும் இடம் தந்து கொண்டிருந்தது.

    தூங்கவில்லையா இன்னும்

    நிலை வாயிற்படியில் நின்ற அலமேலு கேட்டாள்.

    இல்லை.

    ஏன் கல்லூரியில் ஏதேனும் தகராறா?

    அப்படியொன்றும் இல்லை.

    சாயந்தரத்திலிருந்தே ஆள் ஒரு மாதிரியாக இருப்பதைப் பார்த்தால் ஏதோ நடந்திருக்குமென்று நினைத்தேன்.

    கோபாலன் மௌனமாக இருந்தான்.

    உன் போன்ற இன்றைய இளைஞர்களின் திடீர் மௌனத்திற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று காதல் விவகாரம். மற்றொன்று வேலைப் பிரச்சனை. உன்னைப் பொறுத்தவரையில் இரண்டாவதுக்கு அவசியமில்லை...

    உங்களுடைய மகத்தான ஊகத்திற்கு நன்றி...

    நன்றி மட்டும் போதாது. உண்மை தெரிய வேண்டும்.

    அதுதான் உங்களுக்குத் தெரிந்து விட்டதே.

    இருவரும் இருந்த இடத்தில் நின்றுகொண்டே பேசினர்.

    எனக்கு மட்டும் தெரிந்தால் போதுமா?உன் அண்ணாவுக்கும் கொஞ்சம் தெரியட்டுமே என்று பார்க்கிறேன்...

    உங்களால் சும்மா போக முடியவில்லையா! மணி பத்து ஆகப் போகிறது. இப்பொழுதே இதைப் பற்றிப் பேசிவிட வேண்டுமா? என்றான் சற்றே எரிச்சலுடன். இருளின் அமைதியில் தன் இனிய கற்பனைகளைச் கலைத்த கோபம் மன்னிமேல் அவனுக்கு.

    கோபம்கூட வருகிறது, பரவாயில்லை. அப்படியானால் எனது மற்றொரு யூகமும் சரியாகவே இருக்கும். நீ உன் காதல் விவகாரத்தில் ஏதோ ஓர் இடத்தில் குழம்பிப் போயிருக்கிறாய் என நினைக்கிறேன். கற்பனையில் இனிக்கும் விஷயம், செயல் முறையில் சற்றே சிக்கல் நிறைந்திருக்கு மென நினைக்கிறேன்......

    மன்னி...மன்னி...

    அவன் நடுவே ஏதோ கூற முயன்றான். அவனைப் பேசவிடாமல் அவளே பேசினாள். உனது காதல் விஷயம் சிக்கலற்றது என்றால் உன்னிடம் கோபத்திற்கும், பதட்டத்திற்கும் இதோ இந்த அமைதிக்கும் இடமே கிடையாது... குட் நைட். விஷ் யூ குட் ட்ரீம்...

    அலமேலு இருளில் அப்பால் நகர்ந்தாள்.

    ***

    அந்தச் சட்டையை அவன் போட்டுக் கொண்டபோதுதான், அதன் கைப்பொத்தானொன்று இல்லாதது தெரிந்தது. புறப்படுகிற பரபரப்பில் சற்றே எரிச்சலுடன் அதைக் கழற்ற முயன்றபோது அலமேலு உள்ளே வந்தாள்.

    ஏன் சட்டைக்கு என்ன வந்தது.

    பொத்தான் அறுந்து போயிருக்கிறது என்றான் எரிச்சலுடன்.

    கழற்ற வேண்டாம், இரண்டே வினாடியில் பொத்தான் வைத்துத் தைத்துத் தருகிறேன் என்றவள் உள்ளே சென்று பொத்தான், ஊசி, நூல் சகிதம் வந்தாள். அவன் சட்டையை அணிந்தவண்ணம் நிற்க கை பொத்தானை தைத்து விட்டாள்.

    உன்னுடைய ஒவ்வொரு சிறு தேவைகளிலும், உன்னுடைய மற்றொரு தேவையையும், ரொம்ப நாசூக்காக உணர்த்துகிறாய், ரொம்ப விரைவாக அதற்கோர் ஏற்பாடு செய்ய வேண்டியதுதான். ஆனால் இதில் ஒரு சிறு சிக்கல் இருக்கிறது மைத்துனரே.

    அவன் மன்னியின் பேச்சுக்கு நடுவே பேசவில்லை. அன்று கல்லூரிக்குத் தேவையான நோட்ஸ்களையும் புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.

    போன வாரம்கூட ஒரு இடம் வந்தது. நல்ல இடம், சுமாரான வசதியுள்ளவர்கள்தான். மனிதர்களும் நல்ல மாதிரியாகவே இருந்தார்கள். ஆனால், பொண்ணுக்கு சமையற் கலையொன்றைத் தவிர மற்றது எதுவும் தெரியாது. படிப்பும் அதிகம் இல்லை என்று கேள்விப்பட்டோம். அதை அப்படியே ஆன் தி ஸ்பாட் ட்ராப் செய்தோம்.

    'ஷூ' லேசை முடிந்து கொண்டிருந்த கோபாலன் ரொம்ப நன்றி என்றான் ஆங்கிலத்தில்.

    ஏற்கனவே அவருடைய அண்ணாவுக்கு வாழ்க்கைப் பட்டவளைப் பற்றியே அவரிடத்தில் ஒரு நிறைவான அபிப்பிராயம் கிடையாது. தனக்கு வரவேண்டியவளாவது பாட்டு நாட்டியம் இலக்கிய பரிச்சயம் என்று இப்படி ஏதேனும் சிலவற்றிலேனும் 'டேஸ்ட்' உள்ளவளாக இருந்தால் நல்லது என அபிப்ராயப் படுகிறார் என்று கூறிவிட்டேன் என்றாள் சிரித்துக்கொண்டே.

    'ஒண்டர்புல்' என்றான் அவன்.

    எனவே சீக்கிரமே விவாஹ... அவள் முடிக்குமுன்,

    நான் போய்ட்டு வரட்டுமா... இன்னிக்கு முதல் வகுப்பு எடுக்க வேண்டும். எட்டு பணிக்கு சலாமத் போயிடுவான்...பை த பை...இன்னிக்கு சக்கை பிரதமன்... அசவாய்ட்ட ருசி... ஹா எந்தா குருவாயூரப்பா...

    அலமேலுவின் முகம் சிவந்தது.

    கோபாலன் வெளியேறி ரொம்ப தூரம் போகும்வரை பார்த்துக்கொண்டே நின்றாள். தூரத்தில் ஒரு மேடு. அதைக் கடந்து பள்ளத்தில் இறங்கும்போது அலமேலுவைத் திரும்பிப் பார்த்துக் கை அசைத்தான்.

    ***

    இது யாருடைய போட்டோ சற்றே குரலை உயர்த்தி அழுத்தமாக மைத்துனனிடம் கேட்டாள் அலமேலு.

    மன்னி எந்த போட்டோவை கையில் வைத்துக் கொண்டு கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் கோபாலன். இதை அவன் முற்றிலும் எதிர்பார்க்கவேயில்லை. இவ்வளவு எளிதாக அது மன்னியின் கையில் கிடைக்கும்படி வைத்துவிட்டதற்காக தனக்குள் வெட்கப்பட்டுக் கொண்டான்.

    இரண்டு பதில்தான் சொல்ல முடியும். ஒன்று தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று சொல்லிவிடலாம், இதற்கு சுலபமான வழியும் இருந்தது. மன்னி அலமேலு எந்தப் புத்தகத்தின் உட்பக்க அட்டையின் மடிப்பிலிருந்து இதை எடுத்தாளோ அந்தப் புத்தகம் அவனுடையது அல்ல. சகோதர விரிவுரையாளர் ஒருவருடையது. எனக்குத் தெரியாது. இது வெங்கடேசன் புத்தகம் என்று சொல்லிவிடலாம். அல்லது உண்மையை ஒளிவு மறைவின்றி சொல்லிவிடலாம்.

    இரண்டு மூன்று

    Enjoying the preview?
    Page 1 of 1