Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoondilil Oru Thimingalam
Thoondilil Oru Thimingalam
Thoondilil Oru Thimingalam
Ebook100 pages48 minutes

Thoondilil Oru Thimingalam

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

இது ரம்யா – தனஞ்செயனின் நிறைவேறாத காதல் கதை. காதலுக்கு தடை அந்தஸ்து. அவர்கள் காதலைத் தடுக்க தனஞ்செயனின் தந்தை கிருஷ்ணாமோகன் செய்யும் சதி வேலைகள் - ஒரு தந்தை தன் மகனின் நல்வாழ்வை விரும்பாமல் – தன் கெளரவத்தை மட்டும் பார்த்து எந்த எல்லை வரை செல்வார் என்பதற்கு எடுத்துக்காட்டு. கடைசியில் அவராவது அதில் வெற்றி பெறுகிறாரா என்றால் அதுவுமில்லை.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703551
Thoondilil Oru Thimingalam

Read more from Indira Soundarajan

Related to Thoondilil Oru Thimingalam

Related ebooks

Reviews for Thoondilil Oru Thimingalam

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoondilil Oru Thimingalam - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    தூண்டிலில் ஒரு திமிங்கலம்

    Thoondilil Oru Thimingalam

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    முன்னுரை

    'தூண்டிலில் ஒரு திமிங்கலம்' ரம்யா – தனஞ்செயனின் நிறைவேறாத காதல் கதை. காதலுக்கு தடை அந்தஸ்து. அவர்கள் காதலைத் தடுக்க தனஞ்செயனின் தந்தை கிருஷ்ணாமோகன் செய்யும் சதி வேலைகள் - ஒரு தந்தை தன் மகனின் நல்வாழ்வை விரும்பாமல் – தன் கெளரவத்தை மட்டும் பார்த்து எந்த எல்லை வரை செல்வார் என்பதற்கு எடுத்துக்காட்டு. கடைசியில் அவராவது அதில் வெற்றி பெறுகிறாரா என்றால் அதுவுமில்லை.

    *****

    1

    'அது' ஒரு பெக்கூலியர் அசைன்மெண்ட் அதை வெற்றிகரமாக முடிப்பதற்காக ரேகாவிற்கு இருபது லட்சம் சம்பளம் பேசப்பட்டது. கூடவே ஒரு சாண்ட்ரோ கார், செல்ஃபோன், டெய்லி பேட்டாவாக ஐந்தாயிரம்!

    ரம்யா

    ரம்யமாகத்தான் இருந்தாள். பார்வையில் மத்தாப்பு கொளுத்தினாள். மார்பில் முயல் குட்டி வளர்த்தினாள். நடையும் விட்டெறிந்தது.

    ஜீன்ஸ் பேண்ட், டிஷர்ட், சல்வார், மிடி யுகத்தில் நல்லி பட்டில் பாவாடை, வாடாமல்லி வண்ணத்தில் தாவணி என்று வித்யாசம் வேறு காட்டினாள்!

    NIITயே அவளை டாவடித்துக் கொண்டிருந்தது. தனஞ்ஜெயன் சற்று கூடுதலாக மனதில் அவளோடு டூயட்டே பாடிக் கொண்டிருந்தான்.

    அவளுக்கோ தன்னை யார் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதிலெல்லாம் அக்கறையே இல்லாத மாதிரி தெரிந்தது. கம்ப்யூட்டர் முன்னால் மௌஸை பிடித்துக் கொண்டு ஸ்கிரீனில் அம்புக் குறியோடு அலைந்து கொண்டிருந்தாள். நடு நடுவே அந்த தாவணிச் சனியன் மட்டும் நழுவி தழுவி முன் அரை கோளங்களின் விம்முதலை காட்டிக் கொண்டேயிருந்தது.

    தனஞ்ஜெயன் அதைப் பார்க்கும் போதெல்லாம் தொண்டை வறண்டு போவான்.

    இன்றும்...

    வழக்கம் போல அவளிடம் வழியவும் செய்வான்.

    இன்றும்...

    ரம்...

    உம்...

    என்னம்மா பி சி ஐ. கரைச்சு குடிக்காம விட மாட்டே போலருக்கே...?

    இட்ஸ் இம்பாசிபிள். இது என்ன சக்கரையா தண்ணிலல்லாம் கரையறதுக்கு...?

    அவள் அவனைத் திரும்பிப் பார்க்காமல், ஏறிடாமல், கம்ப்யூட்டரிலிருந்தும் கவனத்தை திருப்பாமல் சதாய்த்தாள்.

    ஜோக்கா?

    உம் - ரசிக்கத் தெரிஞ்சவங்களுக்கு.

    கடி.

    எப்படி வேணா வெச்சுக்கோ...

    கொஞ்சம் பார்த்துத்தான் பேசேன்.

    சரி... என்ன? அவள் திரும்பினாள். அந்த அதிர்வில் திரும்ப தாவணி சரிந்தது.

    அவன் வெளிறிப் போனான். சிகரெட் பிடித்து உலர்ந்த உதட்டை எச்சில் ஈரத்தால் பூசினான்.

    அவள் புரிந்து கொண்டு தாவணியைச் சரிசெய்து கொள்ளத் தொடங்கினாள். ஆனால் சற்று நிதானமாகவே... அந்த நிதானம் சிதையாமல் கேட்டாள்.

    என்ன லவ் பண்ணணுமா?

    அவனுக்கு குண்டூசி ஒன்று ஒரு மில்லி மீட்டர் தோலுக்குள் ஏறியது போல் இருந்தது.

    கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே? மிடறு கூட்டியபடி கேட்டான்.

    எனக்கு ஆட்சேபணை இல்ல. ஆனா கல்யாணம் பண்ணிக்கணும் சாதாரணமாக சோப்பு வாங்கினால் பிளேடு இலவசம் என்கிற மாதிரி சொன்னாள். அவன் ஆற்றில் விழுந்த மரத்து தேங்காய் அதன் போக்கில் இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தான். பின் பேசினாள்.

    அறைவே... பல்லு போகும்... இன்ஸ்ட்யூட்டே திரும்பிப் பார்க்கும்னு நினைச்சேன். இப்படி ஒரு பதிலைச் சொல்லி என்னை உலுக்கிட்டியே ரம்.

    இதுவா என் கேள்விக்கு பதில்...?

    உலுக்கிட்டேங்கறேன்... புரியலையா? என்னால நம்ப முடியல.

    திரும்பவும் சுத்தி வளைச்சு பதில் சொல்றே. நேரா சொல்லு தனா. கல்யாணம் பண்ணிப்பியா?

    ஷ்யூர்! ஷ்யூர்! ஷ்யூர்! போதுமா?

    என்ன கோர்ட்ல பதில் சொல்ற மாதிரி சொல்ற?

    லட்சம் தடவை கூட சொல்வேன். ஆமா என்னை என்ன ஜாலிக்கு லவ்வற கேப்மாரின்னு நினைச்சிட்டியா?

    அவள் ஆமோதிக்கும் உணர்ச்சிகளை முகத்தில் ஓடவிட்டாள். அப்படியே சுற்றி ஒரு பார்வை பார்த்தாள். பலர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக மாஸ்டர் மகேந்திரன், இவள் பார்க்கவும் அவர் நெருங்கி வந்தார்.

    என்ன ரம்யா... ஏதாவது பிராப்ளமா?

    நத்திங் சார், தனா ஒரு டவுட் கேட்டான். அதான்.

    சப்ஜெக்ட்லையா?

    நோ... யெஸ்... யெஸ்...

    தென்... நான் எதுக்கு இருக்கேன்? மிஸ்டர் தனஞ்ஜெயன் கமான் - என்ன பிராப்ளம்?

    மகேந்திரன் அவனைத் தள்ளிக் கொண்டு போகத் தொடங்கினார். பொங்கி வழியப் போன பாலின்மேல் தண்ணீர் விட்ட மாதிரி...

    அவன் பி.சி. முன் இருவரும் போய் நின்றார்கள்.

    என்ன பிராப்ளம் சொல்லு...

    அவன் மிடறியபடி அவரைப் பார்த்தான்.

    நிறைய சினிமா பாப்பியா?

    பதில் சொல்லாமல் ஆமோதிப்பது போல் நின்றான்

    உக்காந்து பதில் சொல்லு, பாப்பியா?

    அ... ஆமாம் சார்...

    அதான் படிக்க வந்த இடத்துல மத்த வேலைல்லாம் பண்றே...

    சார்...

    Enjoying the preview?
    Page 1 of 1