Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ragasiyam Ramyamanathu
Ragasiyam Ramyamanathu
Ragasiyam Ramyamanathu
Ebook96 pages1 hour

Ragasiyam Ramyamanathu

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903565
Ragasiyam Ramyamanathu

Read more from Pattukottai Prabakar

Related to Ragasiyam Ramyamanathu

Related ebooks

Related categories

Reviews for Ragasiyam Ramyamanathu

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ragasiyam Ramyamanathu - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ரகசியம் ரம்யமானது

    Ragasiyam Ramyamanathu

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    முக்கியமான அந்த மெயின் சாலைக்கு முற்றும் சொல்லிவிட்டு, இடது கை பக்கம் திரும்பினால் உடம்பு இளைத்த கிளைச் சாலை நூல் பிடித்தது போல நேராய்ச் சென்றது. திடீர் என்று ஒரு பங்களா, கடந்தால் ஒரு பள்ளியின் மைதானம். யூனிஃபார்மில் நாளைய இளம் பெண்கள் குதித்துக் குதித்து வாலிபால் ஆடுவதைப் பார்த்து ரசிப்பதற்குள் புகை கக்கும் சின்னத் தொழிற்சாலை. விரோதம் போல தூர தூரமாய் மரங்கள். அப்புறம் விஜயநகர் என்கிற எக்ஸ்டென்ஷனுக்கு தம்மாத் தூண்டு பெயர் பலகை.

    விஜயநகர் தம் பிடித்து பெரிய ஏரியா ஆகிவிடும் உத்தேசத்தில் இருந்தது. நட்ட நடுவில் ஏராள இடம் விட்டு அங்கங்கே கட்டிடங்களுக்கு ஆரம்ப வேலைகள். ஒன்றில் சாரம் கட்டி கை மாற்றி, கை மாற்றி உச்சிக்கு சிமெண்ட் – ஜல்லி கலவை போய்க் கொண்டிருந்தது.

    நமக்கு - வலது புறமாக சுமாரான பங்களா வாசலில் ஹீரோ ஹோண்டா ஸ்டார்ட் செய்து திரும்பி வாசலில் நிற்கும் வெள்ளை வெளேர் மனைவிக்கு டாட்டா சொல்லும் இளைஞன். இன்னொரு பக்கம் மொட்டை மாடியில் துணிகளை கிளிப் செய்து கொண்டு ப்ரொஃபைலில் கழுத்துக்குக் கீழே சுதந்திரமாய் காட்சிப் பொருளாக்கிக் கொண்டிருக்கும் வேலைக்காரி. திறந்த வெளியில் பொழுது போகாத இளைஞர்கள் வெயிலோ, வியர்வையோ பார்க்காமல் விளையாடும் அந்த கிரிக்கெட் - இதெல்லாம் வேண்டாம்.

    நேற்று தான் கிரஹப்பிரவேசம் செய்தது போல அந்த பங்களா பளிச் என்று இருந்தது. வாசலில் கூர்க்கா இல்லை. பங்களாவின் இரண்டு புறங்களிலும் நெட்டி லிங்க மரங்கள் அட்டெண்ஷனில் அணிவகுத்து நின்றன. ஏராள புல்வெளிகளுக்கு நடுவில் கார் போக வர சிமெண்ட் தளம். தளத்தின் எல்லையில் முக்கோண, முக்கோணமாய் குத்தி வைத்து வெள்ளையடிக்கப்பட்ட செங்கற்கள். புல் நடுவில் சாயங்கால உபயோகத்திற்கு மெத்தை, திண்டு, டமாராம் என்று பந்தாவாய் ஊஞ்சல்.

    போர்ட்டிகோவில் இரண்டு கார்கள் வெவ்வேறு ஜாதியில் - ஷோ ரூமில் இருந்து நேராய் வந்து நின்றிருந்தன. அதில் துடைப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் துடைத்துக் கொண்டிருந்தான் ஒருவன். போர்ட்டிகோவின் உத்தரத்திலிருந்து அங்கங்கே செயின் கட்டித் தொங்க விட்ட மண் தொட்டியில் யாரோ பார்த்து ரசிக்கவென்று பூக்கள், மூன்று படிகள் ஏறி முக்கிய வாசல். சினிமா தியேட்டர் மாதிரி அகலமான இரட்டைக் கதவுகளைத் தொட்டால் தேக்கின் பாலிஷில் நம் ரேகை பார்க்கலாம்.

    உள்ளே ஒரு விமானத்தைக் கொண்டு வந்து நிறுத்தலாம் போலிருந்தது. நீங்கள் நேற்று சினிமாவில் பார்த்த மாதிரியே நட்ட நடு ஹாலில் இருந்து மாடிப்படிகள் புறப்பட்டு மேலே போய் அப்புறம் இரண்டு கிளைகளாகப் பிரிந்து சென்றன.

    சோபாக்கள் வா, வந்து உட்காரு என்பது போலிருந்தன. அதை தூசி (ஏது தூசி? சும்மா - வாங்கும் சம்பளத்துக்காக) தட்டிக் கொண்டிருந்த பெண் வா, வந்து முத்தமிடு என்பது போலிருந்தாள்.

    ஹாலுக்கு அருகிலேயே ஒரு கண்ணாடித் தடுப்புகளுடன் கூடிய அறை, அதில் சுழல் நாற்காலியில் மானேஜர் ராம்மனோகர். அதிகபட்சமாக மதிப்பிட்டாலும் முப்பது தான் மதிக்கலாம். பிரளென் டிண்டட் கண்ணாடிக்குள் ஓரிடத்தில் நிற்காத விழிகள். தலையைத் தூக்கி வாரியிருந்ததில் ஒரு லுக் சேர்ந்திருந்தது.

    கிருஷ்ணகுமாரின் பர்சனல் மனேஜர். ஏ.சி. வேலை செய்யவில்லையா? பொமரேனியனுக்குக் காய்ச்சலா? விசாரித்து அலைந்து புளுஃபிலிம் கேசட் வாங்கி வரவேண்டுமா? வண்டிகளுக்கு பெட்ரோல் போட வேண்டுமா? வீட்டில் டெலிபோன் ஒலிக்கிறதா? ஸ்விம்மிங் பூலில் தண்ணீர் மாற்ற வேண்டுமா? பிரபல டென்ட்டிஸ்ட் இடம் அப்பாய்ண்ட்மெண்ட் ஃபிக்ஸ் செய்ய வேண்டுமா? பயணங்களுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமா? தோட்டத்தை அழகு படுத்த புதிதாக செடிகள் வாங்க வேண்டுமா? பதில் சொல்ல வேண்டியவன் ராம் மனோகர். தீக்குச்சியைத் திருப்பி வைத்துப் பல் குத்துவான். எத்தனை ஆங்கிலப் பத்திரிகைகள் உண்டோ அத்தனையும் அவன் மேஜையில் உண்டு. தினம் மூன்று வேளைகள் அவன் மேஜையின் ஆண்ட்ரேயைக் காலி செய்ய வேண்டும். ரம்யாவை கண்ணாடிக்குள் இருந்து பார்ப்பான். பார்ப்பான். அப்படிப் பார்ப்பான்.

    ரம்யா? இங்கிருந்து மூன்றாவது பாராவில் சந்திக்கலாம்.

    கிருஷ்ணகுமார் பாத்டப்பில் நுரைக்குள் திவ்யமாகக் குளித்துக் கொண்டிருக்க... அறையில் ரெக்கார்ட் பிளேயர் அடுத்தடுத்த ரெக்கார்டுகளை அனாவசியத்திற்கு இசைத்துக் கொண்டிருந்தது. அறையில் இருக்கும் பொருள்களைப் பட்டியலிட்டால்... இங்க் தீர்ந்துவிடும். வேளச்சேரி மெயின் ரோட்டில் 'சுஜி கலர் லேபரட்டரி' பார்த்திருப்பீர்கள். அப்புறம்...

    Enjoying the preview?
    Page 1 of 1