Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaigarai Nila
Vaigarai Nila
Vaigarai Nila
Ebook97 pages35 minutes

Vaigarai Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403596
Vaigarai Nila

Read more from Rajesh Kumar

Related to Vaigarai Nila

Related ebooks

Related categories

Reviews for Vaigarai Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaigarai Nila - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    வைகறை நிலா

    Vaigarai Nila

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    பூஜை அறையிலிருந்து வெளிப்பட்டாள் பாக்யா. கையில் கற்பூர ஆரத்தி தட்டு.

    உடம்பு - நாற்பத்தியாறு வயதைத் தொட்டிருந்தாலும், இளமையை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. தலை கொள்ளாத கேசத்தில் ஒரு முடிவாவது நரைக்கு கட்சி மாற வேண்டுமே...? கத்தரிப் பூ நிற பட்டுப் புடவை, வைர மூக்குத்தி, நெற்றியில் ஒரிஜினல் குங்குமப் பொட்டு, முடிச்சிட்ட வேகத்தில் சின்னதாய் ஒரு மல்லிகைச்சரம். ஏதோ ஒரு ஸ்லோகத்தை முணுமுணுக்கும் உதடுகள்.

    யாதேவீ! ஸர்வ பூதேஷி லட்சுமி ரூபேண ஸமஸ்தித்தா! நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம!

    அம்மா...!

    குரல் கேட்டு திரும்பினாள் பாக்யா.

    மகன் வைகுந்த் பக்கத்து அறையிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தான். ஃபுல்சூட் தரித்து உயரமாய் தெரிந்த மகனை பெருமையோடு பார்த்தாள் பாக்யா. என்னடா இப்பவே ஆபீஸுக்கு கிளம்பிட்டே?

    இன்னைக்கு எங்க கம்பெனி எம்.டி. ஃபாரின்லிருந்து வர்றாரும்மா... நான் ஏர் ஃபோர்ட் போய் அவரை ரிஸீவ் பண்ணனும். நேத்து ராத்திரியே உன்கிட்டே சொல்லியிருந்தேனே...?

    ஆமா... சொன்னே... நான்தான் மறந்துட்டேன்...! சரி... பூட்ஸை கழட்டி வெச்சுட்டு நெத்திக்கு பிரசாதம் இட்டுக்கோ...

    அய்யோ... அம்மா... எனக்கு நேரமாச்சு

    ஏண்டா... எல்லா காரியத்துக்கும் நேரம் இருக்கும். நெத்தியில பிரசாதம் இட்டுக்கிறதுக்கு மட்டும் நேரம் இருக்காதா...? கழட்டுடா பூட்ஸை...

    நீ விடமாட்டியே...?

    ஷூக்களை கழற்றினான் வைகுந்த். பாக்யா அவனுடைய நெற்றிக்கு பிரசாதம் இட்டாள்.

    டிபன் சாப்பிட்டியா...?

    ம்...

    எவ்வளவு இட்லி...?

    நாலு...

    ஊ...ஹூ...ம்... போதாது... வா... இன்னும் நான்கு சாப்பிடுவியாம்...

    அய்யோ... அம்மா... சாவகாசமா உட்கார்ந்து இட்லி சாப்பிடறதுக்கெல்லாம் நேரமில்லை... நான் உடனே கிளம்பியாகணும்... பரபரவென்று மறுபடியும் ஷூக்களை மாட்டிக் கொண்டான்.

    மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துடுவியா...?

    ம்... பார்க்கலாம்...

    என்னடா பார்க்கலாம்னு... சொல்றே... இன்னிக்கு மகா லட்சுமி விரதம். மத்தியானச் சாப்பாட்டுக்கு நீ கண்டிப்பா வரணும்...

    சரி... சரி... வர்றேன்...

    எதிர் அறையிலிருந்து குரல் கொடுத்த படியே வெளிப்பட்டார் சக்ரபாணி. பாக்யாவின் ஐம்பத்திரண்டு வயது கணவர். ஆபீஸுக்கு புறப்பட்டு போறவனை நிறுத்தி வெச்சு கிட்டு ஏண்டி இப்படி படுத்தறே...? டேய்... வைகுந்த் நீ கிளம்புடா...

    வைகுந்த் பைக் சாவியோடு வெளியே விரைந்தான். பாக்யா கணவனை ஏறிட்டாள்.

    இந்த கற்பூரத் தட்டை பிடிங்க...

    எதுக்கு...?

    பிடிங்க சொல்றேன்...

    அவர் வாங்கிக் கொண்டார்.

    அப்படி கிழக்கே திரும்பி நில்லுங்க...

    நின்றார்.

    ஊ...ஹு...ம்... இப்படியில்லை... இன்னும் நேரா பார்த்து நில்லுங்க...

    ஏண்டி... என்னை இப்படி ட்ரில் வாங்கறே...?

    சொன்ன மாதிரி நில்லுங்க...

    நின்னுட்டேன்...! சரியா...?

    ரொம்பச் சரி... சொன்னவள் சக்ர பாணியின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள். எழுந்தாள். உங்க கையால கொஞ்சுண்டு குங்குமத்தை எடுத்து என். நெற்றி வகிட்டில் வெச்சுடுங்கோ...

    குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்துவிட்டு, பாக்யாவின் முகத்தையே இமைக்காமல் பார்த்தார் சக்ரபாணி.

    பாக்யா வெட்கித்தாள்.

    எதற்கு அப்படி பாக்கறீங்க... புதுசா கல்யாணம் பண்ணிகிட்டவர் மாதிரி...?

    பாக்யா...

    ம்...

    உன்னை நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு...

    எதுக்காக ஆச்சர்யப்படறீங்க...?

    எப்படி ஒவ்வொரு விரதத்தையும் ஞாபகம் வெச்சுகிட்டு, ஸ்லோகமெல்லாம் சொல்லி - பூஜை புனஸ்காரம் பண்றே...?

    செய்யணும்னு நினைச்சா... எதையும் செய்யலாம்...

    பூஜை பண்ணும்போது நீ சொல்ற ஸ்லோகமெல்லாம் சம்ஸ்க்ருதம்தானே...?

    ஆமா...

    அந்த ஸ்லோகத்துக்கெல்லாம் உனக்கு அர்த்தம் தெரியுமா...?

    தெரியாமலா சொல்வாங்க...

    கொஞ்ச நேரத்துக்கு முந்தி பூஜை ரூமிலிருந்து வெளியே வர்றப்ப ஒரு ஸ்லோகம் சொன்னியே...? அதுக்கு என்ன அர்த்தம் சொல்லு பார்க்கலாம்...?

    யாதேவி... ஸர்வ பூதேவி... இந்த ஸ்லோகத்தைத்தானே சொல்றீங்க...?

    ஆமா...

    "அது ஸ்ரீ அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தில் ஒண்ணு. அந்த ஸ்லோகத்துக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1