Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaandathe Thandikkapaduvai
Thaandathe Thandikkapaduvai
Thaandathe Thandikkapaduvai
Ebook103 pages1 hour

Thaandathe Thandikkapaduvai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903566
Thaandathe Thandikkapaduvai

Read more from Pattukottai Prabakar

Related authors

Related to Thaandathe Thandikkapaduvai

Related ebooks

Related categories

Reviews for Thaandathe Thandikkapaduvai

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaandathe Thandikkapaduvai - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    தாண்டாதே தண்டிக்கப்படுவாய்

    Thaandathe Thandikkapaduvai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பலரால் பல முறை சலிக்கச் சலிக்க வர்ணிக்கப்பட்டுவிட்ட சென்னை.

    கதகதப்பான காலையில் அந்த நவீன வீட்டின் போர்ட்டிகோவில் கொட்டின ரத்தமாக அந்த சிகப்பு மாருதி காத்திருந்தது. புல்வெளியில் ஊஞ்சல். காம்பெளண்ட்டில் ரோஸ், வெள்ளையில் காகிதப் பூக்கள் சிரிக்கும் லோகைன் வில்லா.

    நீல நிற பேண்ட், நீல நிற அரைக்கை சட்டையுடன் அவினாஷ் போன் பேசி முடித்த தன் அம்மாவிடம், நான் ஆஃபீஸ் புறப்படறேன் என்றான்.

    அவினாஷ், பொண்ணோட அப்பாதான் போன் செஞ்சது. மத்தியானம் வர்றேன்னார் என்னென்ன நகைகள் செய்யலாம்னு விபரமாப் பேச என்ற அம்மா ப்ளைன் பட்டில் சேலை கட்டி, ப்ளைன் கொண்டையிட்டு, ப்ளைன் நெற்றியுடன் இருந்தாள். போன் செஞ்சா வர்றியா?

    அம்மா, பொண்ணைப் பார்க்கச் சொன்னே, பார்த்துட்டேன். ஓக்கே சொல்லிட்டேன். மத்த விபரமெல்லாம் நீயே பேசி முடிச்சுடு என்னை இழுக்காதே!

    போட்டுக்கப் போறது உன் பொண்டாட்டியாச்சே?

    அப்போ அவளைக் கேட்டுக்கச் சொல்லு. அவளுக்கு எது இஷ்டமோ அது செஞ்சிக்கட்டும். நான் வரட்டுமா? நேரமாச்சி

    அவினாஷ் மாருதியில் புறப்பட்டான்.

    அவினாஷ் எம்.ஏ.பி.எல் முடித்து விட்டு பாரத் அண்ட் பாரத் என்கிற பெரிய கம்பெனியில் லீகல் அட்வைசர். வயது 27. நான்கு தினங்களுக்கு முன் தொழிலதிபர் சாரங்கபாணியின் மகள் புஷ்பவதி லீலாவை தன் அம்மாவுடன் சென்று பார்த்து சம்மதம் தெரிவித்துள்ளான். லீலா தன் அப்பாவுக்கு ஒரே மகள். சாரங்கபாணிக்கு சொத்து ஒரு கோடியைத் தாண்டி ஸ்டெடியாக ஏறிக் கொண்டேயிருக்கிறது காகித விலையைப் போல.

    ஒரு சஸ்பென்சை இங்கே போட்டு உடைத்து விடலாமா?

    அவினாஷ் இந்தக் கதையின் நாயகன் அல்ல; வில்லன்!

    ***

    டெலிபோன், ஒலிக்க, சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் குறுக்கே வைத்து விட்டு எடுத்தான் அவினாஷ். குளிர் அறை. பின்னணியில் சுவர் தாண்டி... சரக்குக் கப்பல்கள் நிற்கிற துறைமுகம். கடல் கன்னி தான் அணிந்திருந்த நெளி வளையல்களை அசைத்து சப்தம் செய்து காட்டிக் கொண்டிருந்தாள் - அலைகளாக.

    ஹலோ, நான் சந்துரு பேசறேன் அவினாஷ்.

    ஹாய்! எப்டி இருக்கேம்மா?

    ஃபைன்! கங்கிராஜுலேஷன்ஸ். உனக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்காமே?

    ஆமாம். தேங்ஸ்.

    சொல்லவே இல்லையே, நானா கேக்கணுமா?

    சேச்சே. அப்படி இல்லை. சஸ்பென்ஸா ஒரு பார்ட்டிக்கு இன் வைட் பண்ணி அப்போ சொல்லலாம்னு இருந்தேன்.

    பெரிய கையாதான் பிடிச்சிருக்கே. அப்போ அந்தப் பொண்ணு... அவ பேரென்ன?

    யாரைச் சொல்றே சந்துரு?

    என்னய்யா புரியாத மாதிரி டபாய்க்கிறே?

    நிஜமா புரியலை. என்ன சொல்றே நீ?

    ஒரு தடவை சினிமா தியேட்டர்ல எனக்கு அறிமுகப்படுத்தலை நீ?

    ஓ நந்தினியைச் சொல்றியா?

    ஆமாம், நந்தினிதானே அவ பேரு, லவ் பண்ணலை அவளை?

    சேச்சே! உளறாதே. ஜஸ்ட் ஷி ஈஸ் எ ஃபிரெண்ட்.

    வில்லங்கமாய்டாமப் பார்த்துக்கப்பா.

    சந்துரு, டோண்ட் பி ஸில்லி, என்கிட்டே உளறின மாதிரி வேற யார்கிட்டேயும் உளறிடாதே. வேற பேசு. வைஃபோட லண்டன் போகப் போறதா சொன்னியே?

    நினைவிருக்கா? அது சம்மந்தமாவும்தான் போன் செஞ்சேன். வீட்டை மீனம்பாக்கத்தில எக்ஸ்டன்ஷன் ஏரியாவில் கட்டித் தொலைச்சுட்டேன். பயமா இருக்கு.

    என்ன பயம் உனக்கு?

    நான், வைஃப் ரெண்டு பேரும் போறோம். இருபது நாளைக்கு வீடு சும்மா பூட்டியிருக்கப் போவுது. முக்கியமான டாக்குமெணட்ஸ், ஜ்வல்ஸ், கேஷ் எல்லாத்தையும் பாங்க் லாக்கர்ல வச்சிட்டேன். ஆனாலும் டி.வி. வி.சி.ஆர், அது, இதுன்னு இருக்கே. அவினாஷ், நீ ஒரு ஹெல்ப் செய்யணுமே எனக்கு?

    என்ன, சொல்லுப்பா.

    வீட்டு சாவிகளை உன்கிட்டேதான் ஒப்படைச்சுட்டுப் போகலாம்னு இருக்கேன். ரெண்டு நாளைக்கு ஒரு தடவை சும்மா வந்து திறந்து பார்த்துட்டுப் போனாலே, ஆளுங்க இருக்காங்கன்னு தோணும்.

    இவ்வளவு தானா? செய்துட்டாப் போச்சி. எப்போ புறப்படறே?

    இன்னைக்கு ஈவினிங் அஞ்சரை மணிக்கு பம்பாய்க்கு போறோம். ஃப்ளைட்ல.

    ரைட். ஈவினிங் உங்களை வழியனுப்ப வர்றேன்.

    அப்போ சாவிகளை ஒப்படைக்கிறேன். கொஞ்சம் முன்னாடியே வந்துடுப்பா.

    வர்றேன். வச்சிடவா?

    அவினாஷ் வைத்து விட்டுப் பார்த்தபோது ஆஷ்ட்ரேயில் வைக்கப்பட்ட சிகரெட் ஃபில்டர் வரை சாம்பலாகியிருக்க, புதிதாக வேறு ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டான்.

    ***

    மதியம் உணவு இடைவேளையின் போது கம்பெனியை விட்டு காரில் புறப்பட்ட அவினாஷ் தாராப்பூர் டவர்சின் பார்க்கிங் பகுதியில் பெரிய காரை நிறுத்தினான்.

    துள்ளலாக ஓடி வந்தாள் நந்தினி.

    வெள்ளையில் இலைப் பச்சை பூக்களுடன் சூரிதாரும், அதே பச்சையில் துப்பட்டாவும் அணிந்திருந்தாள். ஷாம்பூ போட்ட கூந்தல் முகத்தை மறைக்காமல் சிலுப்பிக் கொண்டாள். மெரூன் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டிருந்தாள். அதே நிறத்தில் நெய்ல் பாலீஷ்.

    நந்தினி, யு லுக் கார்ஜியஸ் டுடே என்றான் அவினாஷ்.

    ர்ர்ரியல்லி? என்று அவசியமில்லாமல் சிரித்தாள்.

    லிஃப்ட் உபயோகித்து மேலே இருந்த ரெஸ்ட்டாரெண்ட் வந்தார்கள். சிம்மாசனம் போல அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகளில் மூலை மேஜை தேர்ந்தெடுத்து அமர்ந்தார்கள்.

    ரெண்டு மீல்ஸ் என்றான் அவினாஷ்.

    புது செண்ட்டா? என்றாள் நந்தினி. சொல்லு அவினாஷ், எதுக்கு திடீர்னு போன் பண்ணி வரச் சொன்னே? நான் கொண்டாந்த சாப்பாட்டை ப்யூனுக்குக் கொடுத்துட்டு வந்தேன். என்னம்மா அவ்வளவு அர்ஜெண்ட்டான விஷயம்?

    அவளை உற்றுப் பார்த்தான்.

    மேஜைக்கு மேஜை மட்டும் அமைக்கப்பட்டிருந்த கஞ்சத்தனமான வெளிச்சத்தில் முகத்திற்குள்ளேயே மூக்கின் நிழல் விழ, கூந்தல் கற்றை என் செம்பட்டை நிறம் அணிய...

    Enjoying the preview?
    Page 1 of 1