Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unavailable
Ennai Maatrum Kaadhaley!
Unavailable
Ennai Maatrum Kaadhaley!
Unavailable
Ennai Maatrum Kaadhaley!
Ebook786 pages9 hours

Ennai Maatrum Kaadhaley!

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Currently unavailable

Currently unavailable

About this ebook

என் அன்பான வாசகப் பெருந்தகைகளுக்கு,

ஆன்லைனில் எழுதிய இந்தக் கதை.. மின் நாவலாக உருமாற அருள் பாலித்த எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகட்டும்!

கடல் கடந்து வாழும்..ஈழ நாட்டு எழுத்தாளருக்கு..இந்திய உபகண்டத்திலிருந்து மற்றும் உலகளாவிய ரீதியிலும் ஆதரவு நல்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ரொம்ப நன்றி. உங்கள் ஆதரவுக்கான நன்றி எழுத்தில் வடிக்கும் தரமன்று.

என்னுடைய நான்காவது கதை “என்னை மாற்றும் காதலே!”

தலைப்பு தான் என்னவோ ரொம்ப நவீனமாக இருந்தாலும், கதைக் கரு என்னமோ ரொம்ப பழைமையானது தான் தோழர்களே..

ஆம்.. சுமார் கி. பி 3 நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்த.. அகத்திணை சார் நூலான, “குறுந்தொகை” பாடல் தான் இந்த கதையின் கரு. புலவர் கபிலர் எழுதிய பாடல் அது. பாடல் எண் 25. அண்மையில் தான் அந்த பாடலை வாசித்தேன்.. ஆஹா என்னேவொரு தமிழ்.. ரொம்ப அருமை..

அதில் இருந்ததோ எட்டு வரிகளை விடவும் குறைவான வரிகள் தான்.. இருப்பினும் அது தாங்கியிருந்த செய்தி.. தலைவன், தலைவியின் காதல் எல்லாமே அருமை.

அதனால் அதை வைத்தே ஒரு காதல் கதை எழுதலாம் என்று முடிவுசெய்த போது என் சிந்தையில் உதித்தது தான் இந்த கதை.

இப்போதே எந்த பாடல்? என்ன வகையான காதல் ஒழுக்கம் என்று சொன்னால்.. கதைக்கருவை நீங்கள் ஊகிப்பது இலகுவாகி விடும் அல்லவா? அதனால் கதைப் போக்கிலேயே தெரிந்து கொள்ளுங்கள்.

என் முதல் மூன்று கதைகளையும் விட ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும் இந்த கதை..

அது தவிர.. நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ரியல் லைஃப் ஸெலிப்ரிட்டி ஒருவர் கதையின் ஒரு காட்சியில் வரவிருக்கிறார். அதுவும் சஸ்பென்ஸ்.. வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்..

சரி.. தற்போது தலைவன், தலைவி பற்றிய விபரம்..

தன் வயதுக்குரிய குறும்புகளுடன் வளைய வரும், காலேஜ் நாயகியையும், அவளுக்காக உயிரையும் கூட உவந்தளிக்க கூடிய நாயகனையும் கொண்ட காதல் கதை தான் இது.

அதே போல இறுதியாக ஒன்று. பிழையில்லாத மனிதனே இல்லை. என் எழுத்திலும் பல பிழைகள் இருக்க கூடும்.

தெரியப்படுத்துங்கள்.. முயன்று திருத்தி கொள்கிறேன்.

வாசித்த பின்.. கதையின் தாக்கத்தினால் ஓரிரு வார்த்தைகள் என்னுடன் அளவளாவத் தோன்றினால் vishnupriyawrites@yahoo.com என்னும் ஈமெயில் மூலம் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

அடுத்து இன்னொரு நாவலுடன்.. தமிழ் பேசும் தோழர்களை, இறைவன் நாடினால்.. சீக்கிரமே சந்திக்க நாட்டம் கொண்டு விடை பெறும் நான்,

அன்புடன், உங்கள் விஷ்ணுப்ரியா.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
Unavailable
Ennai Maatrum Kaadhaley!

Related to Ennai Maatrum Kaadhaley!

Related ebooks

Reviews for Ennai Maatrum Kaadhaley!

Rating: 4.333333333333333 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words