Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jananam
Jananam
Jananam
Ebook150 pages1 hour

Jananam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

என்னுடைய நாவல்களுக்கோ, சிறுகதைத் தொகுப்புகளுக்கோ முன்னுரை எழுதுவது எனக்குப் பழக்கமில்லாதது. எழுத விருப்பமில்லை என்பதைவிட எழுத எனக்குத் தெரியாது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். கதை எழுதும் போது தயக்கமில்லாமல், சில சமயம் கட்டுக்கடங்காமல் வெளிப்படும் வார்த்தைகள் முன்னுரை எழுத உட்காரும்போது எங்கோ பின்னிக் கொண்டு வெளிவர மறுக்கும்.

கதை எழுதுபவர் தன்னிலை விளக்கம் கொடுக்கத் தேவையில்லை என்று நினைப்பவள் நான். உங்கள் கதை மூலம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று யாராவது கேட்டால் எனக்கு, எனது எழுத்துக்கு நேர்ந்த அவமானமாக, துர்பாக்கியமாக நான் நினைப்பேன். எழுத்தே பேச வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு ஜீவனில்லை என்றுதான் கொள்ள வேண்டும். கதை எழுதி முடித்த பிறகு அது எழுத்தாளரின் மனத்திலிருந்து வெளியேறி வாசிப்பவனிடம் சென்று விடுகிறது. தான் எழுதியவற்றிலிருந்தே எழுதுபவர் விலகி நிற்கிறார். பாரத்தை இறக்கிய பிறகு அதை நீ சுமந்த கதையைச் சொல்லு, இறக்கிய கதையைச் சொல்லு என்றால் அது என்னைப் பொறுத்தவரை சிரமமான விஷயம். எழுதுவது ஏதோ ஒரு வகையான சுமையை இறக்கத்தான். படிப்பவர் மனத்தில் அந்தச் சுமை சிறிதளவாவது ஏற வேண்டும். அதுதான் எழுத்தின் வெற்றிக்கு அடையாளம். அந்தச் சுமையின் ஜனன ரகசியத்தைச் சொல்வது, பிறவி ரகசியத்தைச் சொல்வது போல. அதனால்தான் வார்த்தைகள் வடிவம் பெறாமல் தயங்குகின்றன கூச்சப்படுகின்றன.

இந்தத் தொகுப்பில் இருக்கும் 'ஜனனம்', நான் இந்திய வட கிழக்குப் பிரதேசங்களில் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் பிறந்தவை. என் கணவர் மூத்த பொறியியலாளராக மத்திய பொதுப்பணித் துறையின் ஊழியராகப் பணியாற்றிய போது அவருடன் அந்த மாநிலங்களில் வசித்ததில், அசாதாரண அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. அவை கதைக் களங்களாகப் பரிணமித்தன. தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் மாறுபட்ட இடங்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் புதிய தரிசனங்களையும் ஏற்படுத்தின என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

'ஜனனம்' என்ற நாவலுக்கு, நாங்கள் அஸ்ஸாமில் இருந்தபோது நான் கேள்விப்பட்ட ஒரு விபத்தின் விவரம் காரணமாயிற்று. ஒரு பஸ் விபத்தில் ஒரே ஒரு பெண் பிழைத்தார் என்றும், அவருக்கு விபத்தின் அதிர்ச்சியால் தன்னுடைய பழைய வாழ்வு முற்றிலும் மறந்து போனதாகவும் கேள்விப்பட்டவுடன் அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்வைப் பற்றி எனக்குக் கவலையேற்பட்டது. சோகக் கதையாக இல்லாமல் அதை ஒரு காதல் கதையாக எழுதவேண்டும் என்று ஏன் நினைத்தேன் என்று இன்று திட்டவட்டமாகச் சொல்லமுடியவில்லை. நான் பார்த்த ஒரு இந்தி நாடகம் ஆனால் கதையை நானே மிகவும் ரசித்து எழுதியது அதற்குக் காரணமாக இருக்கலாம். நினைவிருக்கிறது. கதை 15 ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடனில் வெளியானது. பிறகு மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மாத்ரு பூமியில் பிரசுரிக்கப்பட்டது. அதைப் படித்து மிகவும் ரசித்து 'இந்நிலே' என்ற தலைப்புடன் பிரபல (மறைந்த) பட இயக்குனர் பத்மராஜன் மலையாளத்தில் சினிமா எடுத்தார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125403568
Jananam

Read more from Vaasanthi

Related to Jananam

Related ebooks

Reviews for Jananam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 4 out of 5 stars
    4/5
    The story flow is very natural with very fine characters. But the author didn't consider one aspect I feel. In the event the lady suddenly recalls her past after her marriage with the doctor who treated her, her situation would be pathetic and more so she would recall that her husband himself had come in search of her and left without revealing the truth on knowing her love for the doctor. This would be a very distressful condition through out her life.

Book preview

Jananam - Vaasanthi

http://www.pustaka.co.in

ஜனனம்

Jananam

Author:

வாஸந்தி

Vaasanthi

For more books

http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

உங்களுடன் ஒரு வார்த்தை

என்னுடைய நாவல்களுக்கோ, சிறுகதைத் தொகுப்புகளுக்கோ முன்னுரை எழுதுவது எனக்குப் பழக்கமில்லாதது. எழுத விருப்பமில்லை என்பதைவிட எழுத எனக்குத் தெரியாது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். கதை எழுதும் போது தயக்கமில்லாமல், சில சமயம் கட்டுக்கடங்காமல் வெளிப்படும் வார்த்தைகள் முன்னுரை எழுத உட்காரும்போது எங்கோ பின்னிக் கொண்டு வெளிவர மறுக்கும்.

கதை எழுதுபவர் தன்னிலை விளக்கம் கொடுக்கத் தேவையில்லை என்று நினைப்பவள் நான். உங்கள் கதை மூலம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று யாராவது கேட்டால் எனக்கு, எனது எழுத்துக்கு நேர்ந்த அவமானமாக, துர்பாக்கியமாக நான் நினைப்பேன். எழுத்தே பேச வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு ஜீவனில்லை என்றுதான் கொள்ள வேண்டும். கதை எழுதி முடித்த பிறகு அது எழுத்தாளரின் மனத்திலிருந்து வெளியேறி வாசிப்பவனிடம் சென்று விடுகிறது. தான் எழுதியவற்றிலிருந்தே எழுதுபவர் விலகி நிற்கிறார். பாரத்தை இறக்கிய பிறகு அதை நீ சுமந்த கதையைச் சொல்லு, இறக்கிய கதையைச் சொல்லு என்றால் அது என்னைப் பொறுத்தவரை சிரமமான விஷயம். எழுதுவது ஏதோ ஒரு வகையான சுமையை இறக்கத்தான். படிப்பவர் மனத்தில் அந்தச் சுமை சிறிதளவாவது ஏற வேண்டும். அதுதான் எழுத்தின் வெற்றிக்கு அடையாளம். அந்தச் சுமையின் ஜனன ரகசியத்தைச் சொல்வது, பிறவி ரகசியத்தைச் சொல்வது போல. அதனால்தான் வார்த்தைகள் வடிவம் பெறாமல் தயங்குகின்றன கூச்சப்படுகின்றன.

இந்தத் தொகுப்பில் இருக்கும் 'ஜனனம்', நான் இந்திய வட கிழக்குப் பிரதேசங்களில் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் பிறந்தவை. என் கணவர் மூத்த பொறியியலாளராக மத்திய பொதுப்பணித் துறையின் ஊழியராகப் பணியாற்றிய போது அவருடன் அந்த மாநிலங்களில் வசித்ததில், அசாதாரண அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. அவை கதைக் களங்களாகப் பரிணமித்தன. தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் மாறுபட்ட இடங்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் புதிய தரிசனங்களையும் ஏற்படுத்தின என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

'ஜனனம்' என்ற நாவலுக்கு, நாங்கள் அஸ்ஸாமில் இருந்தபோது நான் கேள்விப்பட்ட ஒரு விபத்தின் விவரம் காரணமாயிற்று. ஒரு பஸ் விபத்தில் ஒரே ஒரு பெண் பிழைத்தார் என்றும், அவருக்கு விபத்தின் அதிர்ச்சியால் தன்னுடைய பழைய வாழ்வு முற்றிலும் மறந்து போனதாகவும் கேள்விப்பட்டவுடன் அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்வைப் பற்றி எனக்குக் கவலையேற்பட்டது. சோகக் கதையாக இல்லாமல் அதை ஒரு காதல் கதையாக எழுதவேண்டும் என்று ஏன் நினைத்தேன் என்று இன்று திட்டவட்டமாகச் சொல்லமுடியவில்லை. நான் பார்த்த ஒரு இந்தி நாடகம் ஆனால் கதையை நானே மிகவும் ரசித்து எழுதியது அதற்குக் காரணமாக இருக்கலாம். நினைவிருக்கிறது. கதை 15 ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடனில் வெளியானது. பிறகு மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மாத்ரு பூமியில் பிரசுரிக்கப்பட்டது. அதைப் படித்து மிகவும் ரசித்து 'இந்நிலே' என்ற தலைப்புடன் பிரபல (மறைந்த) பட இயக்குனர் பத்மராஜன் மலையாளத்தில் சினிமா எடுத்தார்.

*****

ஜனனம்

1

திடீரென்று வந்த பேய்க் காற்றில் திகைத்துப் போய் ஜன்னல் திரைகள் சிலிர்த்துக் கொண்டு மேலே கிளம்பி மேஜைமேல் இருந்த காகிதங்கள் மூலைக் கொன்றாகப் பறக்கவிட்டன.

அனந்த் சட்டென்று எழுந்தான். அந்தக் காற்றின் வேகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு ஜன்னல் கதவுகளைச் சாத்தி மூடுவதற்குள் மழைத்தூறல் ஆரம்பித்து முகத்தையும் கைகளையும் நனைத்தது. அவன் அவசரமாகக் கீழே விழுந்திருந்த காகிதங்களைப் பொறுக்கி வைத்தான். மழை பெரிய ஓசையுடன் வானத்தைக் கிழித்துக் கொண்டு இறங்கிற்று. ஜன்னலுக்கு வெளியே எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. 'ஓ, என்ன மழை இது மறுபடி' என்று அவன் சலித்துக் கொண்டான்.

இப்படித்தான் ஒரு அசுர மழை முந்தாநாள் பெய்தது. எங்கிருந்தோ புறப்பட்டு வந்த ஒரு பஸ், பாதைக்கும் ஆற்றுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆற்றில் கவிழ்ந்து போயிற்று. ஒரு பயணியும் மிஞ்சியதாகத் தெரியவில்லை. இன்று மாலை வரை சடலங்களை வெளியே இழுக்கும் வேலை நடந்து கொண்டிருந்ததை அவன் ஆஸ்பத்திரியிலிருந்து வரும்போது பார்த்தான். முப்பத் தெட்டு சிதைந்து போன சடலங்கள் - உப்பி, நீலம்பாரித்து - மை காட்! மனசை விட்டு அகல மறுத்தது அது. மரணத்தின் திடீர் தாக்குதலில் அந்த உயிர்கள் என்ன நினைத்திருக்கும் என்று அவன் யோசித்தான். வாழ்ந்ததும், நினைத்ததும், ஏங்கியதும் எவ்வளவு பெரிய பொய் என்று உணர்ந்திருக்குமோ? இந்த மாதிரி ஞானோதயங்கள் அந்த நிமிஷத்தில் நிச்சயம் வராதென்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். மரண பயத்தின் அதிர்ச்சி மூளையைப் பாரலைஸ் செய்திருக்கும்...

சாப்பிட வரல்லியாடா அனந்த்?

இதோ வரேம்மா!

மேஜைமேல் சாப்பாட்டை வைத்துக் கொண்டு மங்களம் காத்திருந்தாள்.

மறுபடியும் மழையைப் பார்த்தியோ? என்றான். 'மழைன்னாலே குலை நடுங்கறது இப்ப!"

அந்த வார்த்தைக்கும் அந்த முகத்துக்கும் ஏதும் சம்பந்தமிருக்கவில்லை. அம்மாவின் முகத்தில் எப்பவும் ஒரு புன்னகை இருக்கும். பேசும்போது சிரித்துக் கொண்டே பேசுகிற மாதிரி இருக்கும். அவள் அதிர்ந்தோ, கலவரப்பட்டோ அவன் பார்த்ததில்லை. அப்பா செத்துப் போன போதும் இப்படித்தான் சிரித்திருப்பாளோ' என்று அவனுக்குச் சந்தேகமாக இருக்கும். காயமே இது பொய்யடா என்கிற சிரிப்பு... காற்றடைத்த...

ஏன் என்னவோ மாதிரி இருக்கே?

இல்லையே! என்று அவன் யதார்த்தத்துக்கு இறங்கினான்.

எதுக்குத் தினமும் எனக்காகக் காத்துண்டிருக்கேன்னு நினைச்சுண்டேன்!

உனக்காகக் காத்திரண்டிருக்கறதுக்கு வேறெ ஒரு ஆளைத் தேடறேங்கறேன். நீ தானே இப்ப வேண்டாம் அப்ப வேண்டாங்கறே? உனக்காப் பார்த்துக்கவும் தெரியல்லே!

அவன் சிரித்தான். நானா பார்த்ததுண்டா நீ ஒப்புத்துப்பியா?

ஓ! ஆனா இந்தச் சின்ன ஊரிலேயே நீ இருந்தேன்னா நீ ஆயுசு முழுக்கப் பிரம்மச்சாரியா இருக்க வேண்டியதுதான்.

நா இந்த ஊரைவிட்டுப் போறதா இல்லே!

அப்ப பகவானா யாரையாவது இங்கே அனுப்பிச்சாத்தான் உண்டு!

அவன் சிரித்துக் கொண்டே சாப்பிட்டுக் கை கழுவிக் கொண்டு வந்தான்.

டெலிபோன் ஒலித்தது. மறு முனையில் நர்ஸ் நிர்மலாவின் பதட்டக் குரல் கேட்டது.

ஒரு எமர்ஜென்ஸி டாக்டர்! ஒரு ஆக்ஸிடென்ட் கேஸ். வர்றீங்களா?

ட்யூட்டி டாக்டர் இல்லே?

இருக்கார். ஆனா நீங்க வந்தாத் தேவலைன்னு ஃபீல் பண்றார். முந்தாநாள் பஸ் கவுந்துதே, அதுலே வந்தவனு சொல்றாங்க.

அவனுள் சட்டென்று ஒரு விழிப்பு ஏற்பட்டது.

வரேன்!

மழையின் வேகம் இப்பொழுது குறைந்திருந்தது. அவன் அவசரமாக அம்மாவிடம் சொல்லி விட்டு காரில் கிளம்பினான். அத்தனை பயணிகள் பொசுக்கென்று கண்ணை மூடி இப்பொழுது சடலங்களாக போலீஸ் ஸ்டேஷனில் ஈ மொய்க்கப் படுத்திருக்கையில்...

'இந்த அநாமதேய உயிர் எந்த இடத்தில் தனியாகப் போய் ஒட்டிக் கொண்டு தப்பித்தது' என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அடுத்த பத்தாவது நிமிஷம் ஆஸ்பத்திரியின் காஷுவாலிட்டிக்குள் அவன் நுழைகையில் அவனுக்கு லேசாகத் திகைப்பேற்பட்டது. ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டுக் கண்ணை மூடிய நிலையில் - எந்தவிதப்புறச் சேதமும் தெரியாமல் மிக அழகிய ஓர் இளம் பெண் படுத்திருந்தாள்.

ட்யூட்டி டாக்டர் ராகவனும் நிர்மலாவும் மரியாதையுடன் ஒதுங்கி நிற்க, அவன் கட்டில் அருகில் சென்று நாடியைப் பிடித்துப் பார்த்தான். நாடித் துடிப்பு லேசாகக் கேட்டது. கை, பூ மாதிரி இருந்தது, அனலாகக் கொதித்தது. நினைவற்ற நிலையிலும் அந்த பஸ் விபத்தில் சிக்கியவள் இவள் என்று நம்ப முடியவில்லை. அந்தப் பளபளக்கும் நிறமும் கட்டி நிறுத்தி வைக்கும் அழகும்? அவன் பார்த்த மற்ற சடலங்களுக்கும் இவளுக்கும் எத்தனை வித்தியாசம்!

அவன் சட்டென்று தன்னைச் சமாளித்துக் கொண்டான்.

"யார் அழைச்சிண்டு வந்தது இந்த கேஸை? எப்படித் தெரியும் இந்தப் பெண்

Enjoying the preview?
Page 1 of 1