Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nadamadum Sorgam
Nadamadum Sorgam
Nadamadum Sorgam
Ebook124 pages1 hour

Nadamadum Sorgam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903564
Nadamadum Sorgam

Read more from Pattukottai Prabakar

Related to Nadamadum Sorgam

Related ebooks

Related categories

Reviews for Nadamadum Sorgam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nadamadum Sorgam - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    நடமாடும் சொர்க்கம்

    Nadamadum Sorgam

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    உயர்ந்த ரகக் குற்றங்களுக்கும், குற்றக் கதைகளுக்கும் வசதியான மதராஸ் எனப்பட்ட மெட்ராஸ் எனப்படும் சென்னை.

    இருட்டில் முகம் கழுவிய வானம்.

    தப்பித்த சோப்புத் தீற்றலாக மூன்றாம் நாள் நிலா.

    நகர் முழுவதையும் வலை வீசிப் பிடித்திருந்தது பனி.

    மலைவாசஸ்தலங்களை சவால் விட்டு போட்டிக்கு அழைத்துக் கொண்டிருந்த குளிர்.

    அந்தக் கட்டிடத்தின் வாசலில் ஒரு அம்பாசிடரும் சற்றுத் தள்ளி ஒரு ஃபியட்டும் நின்று கொண்டிருந்தன.

    கட்டிடத்தின் வாசலில் இப்போது மனிதர்கள் நிழல் உருவங்களாக.

    நீலநிற அம்பாஸிடர் இருட்டில் கறுப்பாகத் தெரிந்தது. அதன் டிக்கி திறக்கப்பட்டது. இரண்டு பெரிய பாலிதீன் சாக்கு மூட்டைகளைக் கொண்டு வந்து உள்ளே வைத்தார்கள். மூடினார்கள்.

    சொன்னதெல்லாம் நினைவிருக்கா?

    இருக்கு சார்

    நம்பர் பிளேட் மாத்தியாச்சா?

    மாத்தியாச்சு சார்

    புறப்படலாம்

    ஒருவன் டிரைவிங் சீட்டில் அமர்ந்தான். இன்னொருவன் பின் சீட்டில் அமர்ந்தான். அம்பாஸிடர் புறப்பட்டது.

    இன்னும் மூன்று நிழலுருவங்கள் பாக்கியிருந்தன.

    வழக்கம் போல தூரம் விட்டுத் தொடரணும் தெரிஞ்சுதா?

    தெரியும் சார்

    பிரச்னைன்னா எப்படி செயல்படணும்னு சொல்லத் தேவையில்லைன்னு நினைக்கிறேன்

    தேவையில்லை சார், தெரியும்.

    ரைட் புறப்படுங்க

    ஒருவன் டிரைவிங் சீட்டில் அமர்ந்தான். இன்னொருவன் பின் சீட்டில் அமர்ந்தான். ஃபியட் கார் புறப்பட்டது.

    அதன் பின்புற சிகப்பு வெளிச்சங்கள் தேயும் வரை நின்று கொண்டிருந்த எஞ்சியவன், காம்பௌண்ட் கேட்டைச் சாத்திவிட்டு உள்ளே போனான்.

    தொலைபேசியை எடுத்தான். டிர்ர்ர், டிர்ர்ர் என்று எண்கள் சுழற்றி...

    ஹலோ, ஈவினிங் ஸ்டார்?

    யெஸ், ஈவினிங் ஸ்டார்

    அனுப்பியாச்சு, இன்னும் மூன்றரை மணி நேரத்தில உங்க இடத்தில் இருக்கும்

    தேங்க்யூ

    உடனே உறுதி செஞ்சுடுங்க போன்ல

    ஷ்யூர்

    வைத்தான், கொட்டாவி விட்டான், நேரம் பார்த்தான். கைக்கெடியாரம் கழற்றினான். மூன்று மணி நேரம் செட் செய்தான். நாற்காலியில் சரிந்து அமர்ந்து தினசரி எடுத்து முகத்தில் கவிழ்த்துக் கொண்டான். ஏ.பி.சி. என்பதற்குள் உறங்கிப்போனான்.

    ***

    அந்த போலீஸ் ஸ்டேஷனில் இரவு டூட்டியிலிருந்த சப்இன்ஸ்பெக்டர் தங்கப்பன், கான்ஸ்டபிள் வாங்கி வந்து பிளாஸ்க்கில் இருந்து ஊற்றிய டீயை குடித்துக் கொண்டு மாலை செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தார்.

    ஒரு சினிமா விளம்பரத்தைப் பார்த்து சுளித்தார்.

    என்னய்யா இது, இவ்வளவு மோசமா போஸ் கொடுத்திருக்காளே...

    கான்ஸ்டபிள் எட்டிப் பார்த்து, இதுவா? இது என்ன சார் மோசம்? இதைவிட தாராளமான போஸ் எல்லாம் கொடுக்கிறாங்க சார்.

    டெலிபோன் ஒலித்தது. எடுத்தார்.

    தங்கப்பன் பேசறேன்!

    கண்ட்ரோல் ரூம்லேர்ந்து பேசறோம். ஒரு முக்கியமான செய்தி. ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி நகரத்தில் ஒரு பெரிய புள்ளியோட பொண்ணை துப்பாக்கி முனையில மயக்கப்படுத்தி ஒரு அம்பாசிடர் கார்ல வச்சி கடத்தியிருக்காங்க. ரோடு மார்க்கமா சிடியை விட்டு வெளில கடத்திட முயற்சிக்கலாம். அதனால மெட்ராசை விட்டு வெளியே போற எல்லா ரோட்லயும் திடீர் செக்போஸ்ட் அமைச்சி எல்லா வாகனத்தையும் தரோவா செக் பண்ணி அனுமதிக்கச் சொல்லி கமிஷனர் உத்தரவு. உங்க ஸ்டேஷன் லிமிட்ல இருக்கிற நேஷனல் ஹைவேஸ்க்கு உடனே புறப்பட்டுப் போய் நடவடிக்கை எடுங்க. உடனே செயல்படுங்க

    தங்கப்பன் உடனே போனை வைத்துவிட்டு சுறுசுறுப்பானார்.

    நேரம் - ஒன்று பதினைந்து.

    விமான நிலையம் தாண்டி சிறிது தூரத்தில் நெடுஞ்சாலையின் இடது பாதிக்குக் குறுக்கில் போலீஸ் ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது.

    மறுபாதியில் சென்னைக்குள் நுழையும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

    சென்னையை விட்டு வெளியேறும் ஒவ்வொரு லாரியும், வேனும், காரும், ஆட்டோவும் கூட நிறுத்தப்பட்டது. நான்கு கான்ஸ்டபிள்கள் தீவிரமாக சோதனை செய்துவிட்டு, இன்ஸ்பெக்டர் தங்கப்பன் ஒரு பார்வை பார்த்து விட்டு, அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

    அந்த நேரத்தில் போக்குவரத்து மிகவும் மறைமுகமாகவே இருந்தது. ஐந்து நிமிடங்களுக்கு ஒரு லாரி அல்லது பஸ் கடந்தது. பல நிமிடங்களுக்கு எந்த வாகனமும் இல்லை.

    தங்கப்பனுக்கு ஈஃனோஃபில்ஸ் ரத்தத்தில் சற்று எகிறி இருப்பதால், ஒவ்வொரு வாகனத்தையும் சோதித்து விட்டு ஜீப்புக்குள் அமர்ந்து கொண்டார். வயர்லெஸ் கரகரவென்று பல்வேறு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தது. சிகரெட் பற்ற வைத்துக் கொண்டார்.

    தூரத்தில் இரட்டை வெளிச்சங்களைப் பார்த்தார்.

    என்னப்பா அது பஸ்ஸா, லாரியா?

    இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வரட்டும் சொல்றேன் சார்

    பக்கத்தில் வந்ததுக்கப்புறம் நீ என்ன சொல்றது. கடத்தின பசங்க பகல்ல செய்யக் கூடாது. பனியில் கிடந்து கஷ்டப்பட வேண்டியதா இருக்கு, பாரு, அது கார்தான்னு நினைக்கிறேன். கொஞ்சம் ஸ்பீடாவே துரை வர்றார். கொஞ்சம் முன்னாடி போயே நிறுத்துங்க.

    கான்ஸ்டபிள் கையில் சிகப்பு வெளிச்சம் கொட்டும் பேட்டரி லைட் வைத்துக் கொண்டிருந்தார். அதை உயிர்ப்பித்துக் கொண்டு எதிர் கொண்டு நடந்தார்.

    போலீஸ் ஜீப் குறுக்கே நிப்பாட்டியிருக்கிற மாதிரி தெரியுது பாரு என்றான். நீல நிற அம்பாஸிடரை ஒட்டிக் கொண்டிருந்த விக்டர்.

    பின் சீட்டில் அமர்ந்திருந்த பாலு கூர்ந்து பார்த்து விட்டு அப்படித்தான் தெரியுது. ரெட் சிக்னல் காமிக்கிற மாதிரி தெரியுது

    வேகத்தைக் குறைத்த விக்டர் என்ன செய்யலாம் இப்போ?

    பதறாதே. பதற்றம் தான் முதல் எதிரி. நம்மை மடக்கறதுக்காக இருக்க வாய்ப்பில்லை. வேற காரணமிருக்கலாம்.

    ரைட் சைடுல நிறைய இடம் இருக்குப்பா, ஒடிச்சி ஓட்டி ஒரே விரட்டா விரட்டிடலாமா?

    ஜீப் நிக்கிது. நிச்சயம் துரத்துவாங்க.

    துரத்தட்டும், என் டிரைவிங் நீ பார்த்ததில்லையே?

    "உளறாதே விக்டர். உன் டிரைவிங் சாகஸம் பார்க்கிறதுக்காக ரிஸ்க் எடுத்துக்க முடியாது. ஸ்லோ பண்ணி நிறுத்திடு. என்னன்னு கேப்போம். தடுமாற்றம் இல்லாம பேசலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1