Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mathangalil Aval Margazhi
Mathangalil Aval Margazhi
Mathangalil Aval Margazhi
Ebook87 pages33 minutes

Mathangalil Aval Margazhi

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403685
Mathangalil Aval Margazhi

Read more from Rajesh Kumar

Related to Mathangalil Aval Margazhi

Related ebooks

Reviews for Mathangalil Aval Margazhi

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mathangalil Aval Margazhi - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    மாதங்களில் அவள் மார்கழி

    Mathangalil Aval Margazhi

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    கல்யாண ரிசப்ஷன் உற்சாகத்தின் உச்சியில் இருக்க - தருண் புறப்பட எழுந்தான். பக்கத்தில் இருந்து நண்பன் ஈஸ்வரமூர்த்தி அவனுடைய கையைப் பற்றினான்.

    என்னடா தருண்... எந்திரிச்சுட்டே...?

    பிசினஸ் விஷயமா ஒருத்தரை பார்க்கப் போகணும்.

    சரியா போச்சு... உனக்கு எப்பப் பார்த்தாலும் பிசினஸ் நினைப்புத்தானா...? ஒரு கல்யாண, ரிசப்ஷனுக்கு வந்தோம்... கொஞ்ச நேரம் உட்கார்ந்தோம்னு வேண்டாம்...? கிஃப்ட் பாக்ஸைக் குடுத்துட்டு டிஃபன் சாப்பிட்டுட்டு போறதுக்கா வர்றது...?

    தருண் அசுவாரசியமாய் உட்கார்ந்தான். மேடையில் ஆர்க்கெஸ்ட்ரா தன் வாத்தியக் கருவிகளை தட்டி சரிபார்த்துக் கெண்டிருந்தது. தபேலா ஒற்றைத் தாளம் போட - கிடார் மின்சாரத்தை சாப்பிட்டு விட்டு 'டிடிங்...' என்றது. ட்ரூப்பில் இருந்த பாதி பேரில் இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் - அநேகமாய் ஜீன்ஸ் பேண்ட் சர்ட்டுக்குள் இருந்தார்கள். மேடைக்கு பின்புறம் இருந்த சுவரில் 'ஜனனி - ஆர்கெஸ்ட்ரா' என்ற எழுத்துக்களோடு ஜிகினா பேனர் காற்றில் ஆடியது.

    அதற்குக் கீழே போட்டிருந்த - பாலிமர் வண்ண நாற்காலியில் அந்த இரண்டு பெண்கள் தெரிந்தார்கள்.

    ஒருத்தி அழகாய் இருந்தாள். உடம்பில் மஞ்சள் - சிவப்பு பூக்கள் இறைந்த கறுப்பு வண்ண கார்டன் ஷிபான்.

    டேய்... ஈஸ்வர்...

    ம்...

    அந்த ப்ளாக் ஸாரியைப் பார்த்தியா...

    ஜொள்ளு விடாதே... அவ இந்த ஆர்க்கெஸ்ட்ராவின் பிரதான ஸிங்கர் வாணி...

    கண்ணை சுண்டறா...

    குரலைக் கேட்டா தேனா பாயும்...

    என்ன ஒரு ஹோம்லி ஃபேஸ்... முகத்தை பார்த்துட்டே இருக்கலாம் போலிருக்கே...

    தருண் வைத்த கண் வாங்காமல் அந்த வாணியை பார்த்துக் கொண்டிருக்க - மைக்கில் ஒரு இளைஞன் பேச ஆரம்பித்தான்.

    திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் 'ஜனனி' வருக வருக என வரவேற்கிறாள். இது எங்களுடைய நூறாவது நிகழ்ச்சி. கடந்த வருடம்தான் இந்த இசைக்குழுவை தொடங்கினோம். ஒருவருட காலத்திற்குள் நூறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டோம் என்றால் அதற்கு காரணம் ரசிகப் பெருமக்களாகிய நீங்கள் காட்டிய ஆதரவுதான். சினிமா பாடல்களை மட்டுமே ரசிக்கிற மனோபாவத்திலிருந்து விடுபட்டு - எங்கள் குழுவின் மெல்லிசை பாடல்களை ரசித்துப் பாராட்டும் உங்களுக்கு எங்கள் நன்றி. இப்போது எங்கள் குழுவின் இன்னிசை ஆரம்பமாகிறது. முதல் பாடலை கடவுள் வாழ்த்தாக குமாரி வாணி அவர்கள் பாடுவார்கள்.

    இளைஞன் மைக்கைவிட்டு நகர்ந்து - கையை சொடுக்கி ஒன்... டூ... த்ரி... ஃபோர் சொல்ல அனைத்து வாத்தியங்களும் ஒரே விநாடியில் உயிர் பெற்று இசையாய் பொழிந்தது.

    அந்த வாணி எழுந்து வந்தாள். அளவான உயரத்தில் சதைபிடிப்பான உடம்பு. கூந்தலில் சொருகியிருந்த ஒற்றை ரோஜா அவளுடைய உதட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1