Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Thuimayana Kutram
Oru Thuimayana Kutram
Oru Thuimayana Kutram
Ebook84 pages39 minutes

Oru Thuimayana Kutram

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403504
Oru Thuimayana Kutram

Read more from Rajesh Kumar

Related to Oru Thuimayana Kutram

Related ebooks

Related categories

Reviews for Oru Thuimayana Kutram

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Thuimayana Kutram - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஒரு தூய்மையான குற்றம்

    Oru Thuimayana Kutram

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    கோர்ட்டில் மோசமான அமைதி நிலவியிருக்க - அந்த அமைதியை அறுத்துக் கொண்டு மொசைக் தலை நீதிபதி - பல் செட்டின் உபயத்தால் தீர்ப்பைப் படித்துக் கொண்டிருந்தார்.

    எனவே... ப்ராஸிக்யூஷன் தரப்பில் சொல்லியிருந்த குற்றச்சாட்டுகளை தீரவிசாரித்துப் பார்த்ததில் குற்றம் சாட்டப்பட்டவர் இரண்டு கொடூரமான கொலைகளைப் புரிந்தவர் என்கிற உண்மை தெரிய வருகிறது. குற்றங்கள் செய்யப்பட்ட முறைகளைப் பார்க்கும் போது கொலையாளிக்கு - மிகக் கடுமையான முறையில் தண்டனை தர வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. ஆகவே 320 வது செக்ஷன்படி மேற்படி குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன்...

    தீர்ப்பின் கடைசி வாசகம் காற்றில் கலந்த அதே விநாடி குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த அந்த இளைஞன் -

    நோ... ஓ... ஓ... ஓ... ஓ...

    பெரிதாக வீறிட்டு தீர்ப்பின் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண் சோர்ந்து தளர்ந்து விழுந்தான்.

    போலீசார் ஓடி வந்து அவனைத் தூக்கினார்கள். ஜட்ஜ் சலனமேயில்லாமல் அவனை ஒரு தரம் பார்த்துவிட்டு தன்னுடைய அறையில் காத்திருக்கும் தயிர் வடை காப்பிக்காக எழுந்தார்.

    பார்வையாளர்களுக்கு மத்தியில் மட்டும் லேசான சலசலப்பு.

    இவனையெல்லாம் தூக்குல போடக் கூடாது. நடு ரோட்ல நிக்க வெச்சு... 'மெஷின் கன்'ல் இருக்கிற தோட்டா தீர்கிற வரைக்கும் சுட்டுத் தள்ளணும்...

    இவனுக்கு எந்த ஊரு?

    கோத்தகிரி...

    யாரைக் கொலை பண்ணினான்?

    அந்த அக்கிரமத்தை ஏன் கேக்கீறங்க? வாங்க... கான்டீனுக்குப் போய் ஒரு காப்பி சாப்பிட்டுக்கிட்டே சொல்றேன்...

    ***

    2

    கோத்தகிரி.

    பைக்கில் தடதடத்தபடி அந்த பங்களாவின் காம்பௌண்ட் கேட்டுக்குள் நுழைந்தான் சூரி. கனமான கம்பளிக் கோட்டையும் மீறிக் கொண்டு அவனுடைய தேகாப்பியாச உடம்பு திமிறியது. கழுத்தில் புலி நகம் கோர்த்த டாலர் ஆடியது. முப்பது வயது. முன்கோப முகம். சிலிர்த்து நிற்கிற மாதிரியான கிராப். சிவப்பான சின்னக் கண்கள்.

    பைக்கை ஸ்டாண்ட் இட்டு நிறுத்திவிட்டு - போர்டிகோ படியேறிய சூரியை அந்தக் குரல் தடுத்து நிறுத்தியது.

    சித்தப்பா...

    சூரி திரும்பினான்.

    ஆறு வயது தீபக் பைஜாமா மாதிரியான ட்ரஸ்ஸில் லானைத் தாண்டி ஓடி வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததுமே சூரியின் முகம் கடுகடுப்புக்குப் போனது.

    என்னடா?

    தீபக் பக்கத்தில் வந்து நின்று மூச்சு வாங்கிக் கொண்டு சொன்னான். நான் பாஸ் சித்தப்பா...

    பாஸா...

    ஆமா... ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்லேர்ந்து செகண்ட் ஸ்டாண்டர்ட் போயிட்டேன். இந்தாங்க ஸ்வீட்...

    பைஜாமாவின் பாக்கெட்டுக்குள் வலது கையை நுழைத்து கை நிறைய சாக்லேட்டுகளை அள்ளி சூரி முன்னால் நீட்டினான்.

    எடுத்துக்கோங்க சித்தப்பா...

    காலேஜுக்குப் போய்... பெரிய பி.ஏ. படிப்பு படிச்சு கிழிச்சிட்டான்... சாத்தான் போடா... சாக்லேட்களை தட்டிவிட்டு போர்டிகோ படியேறினான் சூரி. எதிர்ப்பட்ட வேலையாளிடம் கேட்டான்.

    Enjoying the preview?
    Page 1 of 1