Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enakku Mattume Therintha Hema!
Enakku Mattume Therintha Hema!
Enakku Mattume Therintha Hema!
Ebook91 pages40 minutes

Enakku Mattume Therintha Hema!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403501
Enakku Mattume Therintha Hema!

Read more from Rajesh Kumar

Related to Enakku Mattume Therintha Hema!

Related ebooks

Related categories

Reviews for Enakku Mattume Therintha Hema!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enakku Mattume Therintha Hema! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    எனக்கு மட்டுமே தெரிந்த ஹேமா!

    Enakku Mattume Therintha Hema!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    அன்பே

    நீ வானத்தைப் பார்.

    சூரியன் குளிரட்டும்.

    நீ பூமியைப் பார்.

    பாலைவனங்கள் குளிரட்டும்.

    நீ என்னையும் பார்.

    என் நெஞ்சமும்

    கொஞ்சம் குளிரட்டுமே!

    பாண்டிச்சேரி ஸ்லோமோஷனில் - கனகாம்பர நிறத்தில் - விடிந்து கொண்டிருந்தது. ஆரோவில் போகும் ரோட்டில் ஐந்தாறு பங்களா. மாடி அறை. ஜன்னல் ஒரு டேபிளின் மேல் உட்கார்ந்திருந்த அலாரம் டைம்பீஸ் - 5.45-ல் தன் மொரமொரப்பான தொண்டையைத் திறந்து கத்தியது.

    சுபாகர் போர்வையினின்றும் வெளிப்பட்டான்.

    நல்ல சிவப்பு.

    கட்டிலினின்றும் இறங்கினான்.

    நல்ல உயரம்.

    டைம் பீஸின் தலையைத் தட்டி சாந்தப் படுத்திவிட்டு - வாஷ்பேசினுக்கு போய் - கண்ணாடி முன் நின்றான். அடர்ந்த கேசம். கொஞ்சம் பெண்மைத்தனமான முகத்தில் - ரோஸ் நிற உதடுகளுக்கு மேலே புஷ்டியான மீசை. கெட்டியான மோவாயில் ஒரு செல்வக் குழி.

    வாஷ்பேசின் குழாயைத் திருகி - ஜில்லென்ற நீரை இரண்டு கைகளாலும் பிடித்து முகத்தில் அறைந்து சுறுசுறுப்பைக் கொஞ்சம் சார்ஜ் செய்து கொண்டு - கண்ணாடியினின்றும் அகன்று - டர்க்கி டவலால் முகத்தை ஒற்றியபடி - அறையினின்றும் வெளியே வந்தான்.

    குட்மார்னிங் மை டியர் சன்...

    குரல் கொடுத்துக் கொண்டே மாடிப் படிகளில் ஜாக்கிங் சூட்டோடு ஏறிவரும் அவனுடைய அப்பா கண்ணபிரான் கண்ணில் பட, முகம் மலர்ந்தான் சுபாகர்.

    குட்மார்னிங் டாட்...

    நான் ரெடி... வெளியே புறப்பட... - மூச்சு வாங்கிக்கொண்டே மாடிப்படியின் உச்சிக்கு வந்த கண்ணபிரானுக்கு ஐம்பத்தைந்து வயது. தளர்ந்து போகாத எக்சர்சைஸ் உடம்பு. முடி கொட்டிப்போன வழுக்கை மண்டை மட்டும் - அப்பட்டமாய் அவருடைய வயதைக் காட்டிக் கொடுத்தது.

    நானும் ரெடி டாட்... காப்பியை மட்டும் உள்ளே தள்ளிக் கிட்டு வந்துடறேன் சொல்லிக் கொண்டே படியிறங்க முயன்றவன் - காப்பி டம்ளரோடு மாடிப்படி ஏறிவரும் அவனுடைய தங்கை சொர்க்கா தெரிந்தாள். இருபது வயது. தோற்றத்தில் இனிப்பு காட்டினாள்.

    அண்ணா! உனக்கு அட்டகாசமான குட்மார்னிங்"

    உனக்கும் அதே...

    காப்பியை உள்ளே தள்ளு... ஹாஸ்பிடலில் இருந்து போன் வர்றதுக்கு முந்தி அப்பாவோடு வெளியே புறப்பட்டுடு...

    இதோ... இதோ... காப்பி டம்ளரை வாங்கி உதட்டுக்குக் கொண்டுபோக முயன்றவன் - பக்கத்து அறையில் டெலிபோன் மணி அடிக்கும் சத்தம் கேட்டு - டம்ளரை சொர்க்காவிடம் நீட்டிவிட்டு - அறைக்குள் ஓடினான்.

    மேஜை மேலிருந்த பிரியதர்சனியை அள்ளினான்.

    ஹலோ...!

    டாக்டர் சுபாகர் இருக்காரா...?

    எஸ்... ஹோல்டிங்...

    டாக்டர்! நாங்க இங்கே அரவிந்தன் ஸ்ட்ரீட்ல இருந்து பேசறோம்... ஒரு பேஷண்ட்டை அட்டெண்ட் பண்ண நீங்க உடனடியா இங்கே வரமுடியுமா...?

    பேஷண்ட் ஆணா... பெண்ணா...?

    பெண்...

    உடம்புக்கு என்ன...?

    படுக்கையிலிருந்து இப்பத்தான் எந்திரிச்சா... உடனே கிட்டினஸ் மாதிரி ஏற்பட்டு கீழே விழுந்துட்டா. மயக்கத்தை தெளிவிக்கறதுக்காக என்னென்னமோ பண்ணிப் பார்த்தோம். இன்னமும் மயக்கம் தெளியலை.

    என்னோட நர்ஸிங் ஹோமுக்குக் கொண்டு வந்துடுங்களேன்.

    ஸாரி... டாக்டர்... எங்க கார் ரிப்பேர். இந்த நேரத்துல டாக்ஸியோ ஆட்டோவோ கிடைக்கிறது கஷ்டம். ஸோ கொஞ்சம் சிரமம் பார்க்காமே நீங்களே பங்களாவுக்கு வந்துடுங்க டாக்டர்... கேட்கிற ஃபீஸைத் தர்றோம்.

    சரியா அட்ரஸை சொல்லுங்க.

    "நெம்பர் நாற்பத்தி ஒண்ணு. அரவிந்தா ஸ்ட்ரீட். நேரு பாலமந்திர் கட்டிடத்துக்கு கொஞ்சம் தள்ளி... ஒரு ப்ளூ டிஸ்டெம்பர் பங்களா வரும்... அதுதான்.

    Enjoying the preview?
    Page 1 of 1