Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthiya Thisaigal
Puthiya Thisaigal
Puthiya Thisaigal
Ebook94 pages35 minutes

Puthiya Thisaigal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403499
Puthiya Thisaigal

Read more from Rajesh Kumar

Related to Puthiya Thisaigal

Related ebooks

Related categories

Reviews for Puthiya Thisaigal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthiya Thisaigal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    புதிய திசைகள்

    Puthiya Thisaigal

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    திருவனந்தபுரம் ஏர்போர்ட் ஒரு பணக்காரக் கல்யாணப் பெண்ணின் பளபளப்போடு - அந்த முன்னிரவு வேளையில் தெரிந்தது. ரன்வேயில் ஒரு ஏர் இந்தியா விமானம் காத்திருக்க - தூரத்தில் பாதையின் இரண்டு பக்கங்களிலும் முட்டைச் சிவப்பு விளக்குகள் யூனிஃபார்ம் இடைவெளியில் ஒளிர்ந்தன. லெளஞ்சில் கூட்டம் நிரம்பி மலையாளம் சம்சாரித்து ஆங்கிலத்தை சொற்பமாய்ப் பேசியது. டெரஸ் வராந்தாவில் ராத்திரி நேரக் குளிர்காற்று வேகமாய் வீசி - அங்கே நின்றிருந்தவர்களின் கேசங்களைக் கலைத்துப் பார்த்தது.

    பரிதி வரவேற்பு லெளஞ்சில் காத்திருந்தான். பரிதிக்கு இருபத்தேழு வயது. அறிமுகமாகிற அந்த விநாடி வலது கையின் சுண்டுவிரல் நகத்தை சுவாரஸ்யமாய்க் கடித்துக் கொண்டிருந்தான். சினிமாவில் நடிக்க ஹீரோ சான்ஸ் வந்து, வேண்டாம் என்று சொல்லி விட்டான். இப்போது தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் க்ளார்க் உத்யோகம். இன்னும் கல்யாணம் இல்லை. சூப்பர் மார்க்கெட்டில் கம்ப்யூட்டர் பிரிவில் வேலை பார்க்கும் உஷாவைக் கடந்த ஒரு மாதமாய்க் காதலித்துக் கொண்டிருக்கிறான். ராத்திரியில் தூக்கம் இல்லை. பால் - சர்க்கரை போட்டாலும் - வேப்பங்காயாய்க் கசக்கிறது.

    பரிதி அங்கிருந்த பாலிமர் வண்ண நாற்காலியில் உட்கார்ந்து நேற்று கூரியர் தபாலில் தனக்கு வந்த கடிதத்தைப் பிரித்து ஏழாவது தடவையாகப் படிக்க ஆரம்பித்தான்.

    அன்புள்ள பரிதிக்கு,

    அஷோக்குமார் எழுதிக் கொண்டது. இந்தக் கடிதம் உனக்குத் தொந்தரவு கொடுப்பதற்காகவே எழுதப்பட்டது. எனவே மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். என் தங்கை மதிவதனா நாளை பம்பாயிலிருந்து 737AL விமானத்தில் புறப்பட்டுத் திருவனந்தபுரம் வருகிறாள். அவள் எதற்காக வருகிறாள் என்பது ராஜரகசியம். கடிதத்தில் எழுத முடியாது. மதிவதனா உன்னிடம் நேரில் சொல்வாள். சொல்லா விட்டாலும் வருத்தப்படாதே... மதிவதனாவை ஐந்து வருஷங்களுக்கு முன்னால் நீ பார்த்தது. அப்போது சோளக் குச்சியாய் இருந்தவள் இப்போது சதை போட்டு அழகாக இருப்பாள். காதலிக்கலாம் என்று எண்ணாதே... உதைப்பேன். திருவனந்தபுரம் மதிவதனாவுக்குப் புதிது. மலையாளம் அறவே தெரியாது. வேண்டிய உதவிகள் செய். நீ வேலை பார்க்கும் பேங்க் டெலிபோனுக்கு என்ன ஆயிற்று? கல்லடி பட்ட நாய் மாதிரி ஊளையிடுகிறதே தவிர ரிங் பண்ணக் காணோம். எனவே இந்த கூரியர் கடிதம்.

    இப்படிக்கு அன்பு நண்பன்

    அஷோக்குமார்.

    கடிதத்தைப் படித்து மடித்தபடியே யோசித்தான் பரிதி. 'மதிவதனா பம்பாயிலிருந்து இங்கே திருவனந்தபுரத்துக்கு எதற்காக வருகிறாள்?'

    'ராஜ ரகசியம்...!'

    'இந்த அஷோக்குமார் காலேஜில் படிக்கிற காலத்தில் இருந்தே குழப்பவாதி.’ எதையும் தெளிவாய் எழுதமாட்டான். பேசவும் செய்ய மாட்டான்!

    பரிதி எழுந்து ரிசப்ஷன் கெளண்டரை நோக்கிப் போனான். இள நீல வண்ணச் சேலையில் சந்தன நிற உடம்பைப் பதுக்கி வைத்துக் கொண்டு டெலிபோனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த அந்த ரிஷப்னிஸ்ட் பரிதியைப் பார்த்ததும் இடது கை விரல்களால் ரிஸீவரின் வாயைச் செல்லமாய்ப் பொத்திக் கொண்டு, எஸ்... என்றாள்.

    பம்பாய் ஃப்ளைட்... சரியான நேரமா?

    முப்பது நிமிஷம் லேட்...

    எட்டு மணிக்கெல்லாம் வந்துவிடுமா?

    வந்துவிடும்...

    பரிதி கபேடேரியா போய்க் காப்பி குடித்தான். 'டோன்ட் ஸ்மோக்' பெல்ட்டைத் தாண்டிப்போய் ஒரு சிகரெட்டைப் புகையாக்கினான். துபாய்க்குப் புறப்பட்டுப் போன ஏர் இந்தியா ஜம்போ ஜெட் விமானம் ஒன்று 'டேக்-ஆப்' செய்யப்படுவதை வேடிக்கை பார்த்தான். புக்

    Enjoying the preview?
    Page 1 of 1