Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Madiyil Sayum Neram
Madiyil Sayum Neram
Madiyil Sayum Neram
Ebook85 pages54 minutes

Madiyil Sayum Neram

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903803
Madiyil Sayum Neram

Read more from Pattukottai Prabakar

Related to Madiyil Sayum Neram

Related ebooks

Reviews for Madiyil Sayum Neram

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Madiyil Sayum Neram - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    மடியில் சாயும் நேரம்

    Madiyil Sayum Neram

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அலாரம் ஒலித்த போது அதை வைத்துவிட்டுப் படுத்த ஜெகனைத் தவிர அடுத்தக் கட்டில்களில் உறங்கின வெங்கட்டும், சுவாமிநாதனும்தான் விழித்துக் கொண்டார்கள்.

    டேய் ஜெகன்! அதை நிறுத்தித் தொலைடா! மரணக் கூண்டுல பைக் ஓட்டற மாதிரி காதைத் துளைக்குது என்றான் வெங்கட்.

    பாரேன். அது கத்துது. நாம கத்தறோம். எருமை மாடு மாதிரி கிடக்கான். பாரு. டேய்! கிராதகா! என்று கை நீட்டி முதுகில் ஒன்று வைக்க...

    ஏதோ ஒரு சுவாரசியக் கனவு வெட்டுப்பட்டு பதறி எழுந்து, என்ன? என்ன? என்றதும்தான் அலாரம் உறைத்தது. அவசரமாய் அதை நிறுத்தினான்.

    மற்றவர்கள் உடனே தூக்கத்திற்குள் நழுவ, இமைகளை அழுத்தமாக உதறிக் கொண்டு எழுந்து விளக்கைப் போட்டான்.

    உடனே வெங்கட்டுக்கு அந்த டியூப்லைட் போலவே இமைகள் படபடத்து. என்னடா மணி? என்று முனகினான்.

    அஞ்சி.

    என்ன பண்றே லைட்டைப் போட்டுக்கிட்டு?

    ஜாகிங் போகப் போறேன். அதுக்கு ரெடியாகணும்.

    உதை வாங்குவே! தூக்கம் கலையுதில்ல? நைட் லேம்ப் வெளிச்சத்திலயே ரெடியாகிக்கோ. முதல்ல லைட்டை அணைச்சுத் தொலை. மத்தாப்பு கொளுத்தினது மாதிரி பிரகாசமா சுடுது.

    அணைத்து விட்டான். குளியலறைக்குச் சென்று வந்தான். கொடியில் கிடந்த குவியலில் நீலநிற விளக்கொளியில் உற்றுப் பார்த்து, வாசனை பார்த்து தன் சட்டையை, பேண்ட்டை எடுத்தணிந்து கொண்டான்.

    ரெகுலராக போகத்துவங்கியதும் ஒருவாரத்தில் ஜாகிங்கிற்கு உண்டான ஸ்பெஷல் வெள்ளை டீ ஷர்ட், ஷார்ட்ஸ்,ஷூ என்று வாங்க வேண்டும். மனதை சோம்பேறித் தனத்திலிருந்து பிடிவாதமாகப் பிய்த்தெடுத்து ஏதோ இன்று புறப்பட்டாயிற்று. வழக்கமாகப் போக முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.

    மேஜை டிராயரில் துழாவி டைரி எடுத்து அதன் உள் ஃபிளாப்பில் செருகி வைத்திருந்த பணம் எடுத்து வைத்துக் கொண்டான். எதற்காவது தேவைப்படலாம். திடீரென்று பைக் பங்சராகலாம். எப்போதும் பணம் பாக்கெட்டில் இருக்க வேண்டும்."

    வியர்வை வழிந்தால் துடைத்துக் கொள்ள ஒரு கர்சீப் வேண்டும். மண்டியிட்டமர்ந்து கட்டிலுக்கடியிலிருந்து மகா சைஸ்பெட்டி இழுத்து, சாவி போட்டுத் திறந்து...

    கடாமுடான்னு என்னடா உருட்டிட்டிருக்கே? மனுஷனைத் தூங்கவிட மாட்டியா? - வெங்கட்டின் ஆட்சேப முனகல் கொட்டாவி கலந்து வந்தது.

    கர்சீப் எடுத்துக் கொண்டு ஜெகன், நான் வெளில போறேன். நீ கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கிட்டுத் தூங்கு என்றான்.

    ஒரு மணி நேரத்தில வந்துட மாட்டே? வெளில பூட்டிக்கிட்டுப் போடா. டிஸ்டர்ப் பண்ணாதே!

    சாவி எங்கடா இருக்கு?

    அய்யோ! பேசாத! கத்தினான் வெங்கட்.'.

    இன்னொரு வார்த்தைக்கு ஜெகனின் குரல்வளை நெறிபடும் அபாயமுணர்ந்ததால், சத்தமில்லாமல் இருட்டுக்குள்ளேயேத் தேடி எடுத்து அறையைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

    வாசலில் நிறுத்தியிருந்த மூன்று பைக்குகளில் தன்னுடைய ஹீரோ ஹோண்டாவை மற்றதில் இடித்து விடாமல் ஜாக்கிரதையாக எடுத்து சாய்வான சிமெண்ட் தளத்தில் இறக்கியபடி தள்ளி சாலைக்கு வந்தான். அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். கிளம்பி உடனே அணைந்தது. மறுபடி கிளப்பி ஆக்ஸிலேட்டரை டுர்ர்ரு... டுர்ர்ரு... என்று பண்ணியதில் வட்டாரத்தில் நூறு பேராவது விழித்துக் கொண்டிருப்பார்கள் என்பது உணர்ந்து, கிளம்பி விட்டான்.

    வானம் தன் கறுப்பு கோஷாவை மெதுவாக விலக்கிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் பேட்டரி இறங்கியிருந்தன. ஒரு பறவைக் கும்பல் சில்ஹவுட்டில் கடந்தது. அந்த வீட்டின் கேட் உள்ளே ராத்திரிக் காவல் களைப்பில் ஒரு ராஜபாளையம் தன் முன்னங் கால்களில் தலை சாய்த்து உறங்கியது. நாலு வீட்டுக்கு ஒரு வாசலில் சுத்தம் செய்து கொண்டு... கோலம் போட்டுக் கொண்டு... சட்டை போடாத மாமா ஒருவர் பிளாஸ்டிக் பக்கெட்டுடன் பைப்புக்கு நடக்க... ஏதோ ஒரு கொல்லைப்புறத்தில் சத்தமாக ஓங்காரம் செய்து துப்பினார் ஒரு யாரோ.

    பெசண்ட் நகர் கடற்கரைக்கு அவன் வந்து சேர்ந்தபோது, அங்கே ஏற்கனவே ஏராளமான கார்களும், ஸ்கூட்டர்களும் நிறுத்தப்பட்டு பாதை முழுக்க விருக், விருக்கென்று

    Enjoying the preview?
    Page 1 of 1