Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irappathu Sugam...
Irappathu Sugam...
Irappathu Sugam...
Ebook94 pages54 minutes

Irappathu Sugam...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903786
Irappathu Sugam...

Read more from Pattukottai Prabakar

Related to Irappathu Sugam...

Related ebooks

Related categories

Reviews for Irappathu Sugam...

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irappathu Sugam... - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    இறப்பது சுகம்…

    Irappathu Sugam…

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    ஸ்கூட்டரை வேகமாக ஓட்டின மாதவன் வியர்த்துப் போயிருந்தான்,

    அர்ச்சனா எதற்காக இத்தனை அவசரமாக அழைத்தாள்?

    பக்கத்து வீட்டுக்காரர் வந்து, தம்பி, உங்களுக்கு போன்' என்று சொன்ன போதே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

    என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் போன் இருப்பதை யாரிடமும் சொன்னதே இல்லையே. சொல்லப் போனால் அந்த போன் நம்பர் என்ன என்று கூடத் தெரியாதே!

    'அப்படியிருக்க, யார் இவ்வளவு விசாரித்து அழைப்பது?' என்கிற சிந்தனையோடு தான் சென்று எடுத்துப் பேசினான்,

    'ஹலோ! மாதவன் பேசறேன்"

    மாதவன், நான் அர்ச்சனா

    என்ன மேடம்? எங்கேர்ந்து பேசறிங்க?

    நம்ம ஆபீஸ்லேர்ந்துதான்.

    மாதவன் தன் வாட்சில் நேரம் பார்த்து,மணி எட்டாகுதுங்க. இந்த நேரத்தில ஆபீஸ்ல என்ன பண்றிங்க? அதுசரி. இந்த போன் நம்பர் உங்களுக்கெப்படித் தெரியும்? என்றான்,

    உங்க அட்ரசைச் சொல்லி பக்கத்தில எதாச்சும் போன் நம்பர் இருக்கான்னு டைரக்டரி என்கொயரிவ விசாரிச்சேன். சொன்னாங்க.

    சரி. என்ன விஷயம் சொல்லுங்க?

    இங்கே நான் ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டிருக்கேன் மாதவன். எனக்கு அவசரமா உங்க உதவி தேவைப்படுது. நீங்க உடனேப் புறப்பட்டு நம்ம ஆபீசுக்கு வர முடியுமா, ப்ளீஸ்...,

    என்னங்க சிக்கல் அர்ச்சனா?

    போன்ல சொல்ல முடியாதுங்க மாதவன். ப்ளீஸ்... வாங்களேன்

    'சரி, வர்றேன்"

    போனை பாத்து விட்டு தன் வீட்டுக்கு வந்தவன்,யாருடா உனக்கு போன் செஞ்சது? ! என்றார் மனஞ்சலில் அமர்ந்திருந்த அப்பா.

    என் ஃபிரண்டுப்பா. ஏதோ முக்கியமாப் பேசணுமாம். போய்ட்டு வந்துடறேன்

    சாப்பிட வர்றேன்னியேடா. சாப்டுட்டுப் போயிட்டேன் என்றாள் அம்மா தோசை ஊற்றியபடி.

    இல்லைம்மா. நான் வந்து சாப்பிடறேன்

    அடுத்த நிமிடம் ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்தான். மனம் முழுக்க நிரம்பி வழியும் கேள்விகள்.

    ராத்திரி எட்டு மணி வரை அர்ச்சனாவுக்கு ஆபீசில் என்ன வேலை? என்ன சிக்கல் அது? ஒருவேளை இவள் உள்ளே இருப்பதைத் தெரிந்து கொள்ளாமல் ஆபீசைப் பூட்டிக் கொண்டு போய் விட்டார்களா?

    அப்படியென்றால்கூட அவள்" உதவி மேனேஜர் சதாசிவத்துக்குத் தானே போன் செய்ய வேண்டும்? அவரிடம்தான் சாவிகள் இருக்கும்.

    எழுபத்தி எட்டு பேர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஏன் மெனக்கெட்டு என்னை அழைத்தாள்?

    அந்த ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் உள்ள"நான்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களில் அர்ச்சனாவும் ஒருத்தி.

    பிரமாதமான அழகென்று சொல்ல முடியாது. ஆனால் செதுக்கல் தேகம். நேர்த்தியான புடவைக் கட்டல், தூக்கக் கவக்கத்தில் பேசுவதுபோல பேச்சில் எப்போதும் ஒரு சின்ன மயக்கம் இருக்கும்.

    "மணி அண்ட் கம்பெனியோட பின் வாய்ஸ் ஃபைல் எடுத்துக் கொடுங்களேன்! என்கிற ஒரு அலுவலக உப்பு சப்பற்ற வாக்கியத்தை யாராலாவது செக்ஸியாகப் பேச முடியுமா?

    அவளால் மட்டும் முடியும், மேஜைக்கு வந்து நின்று, இரண்டு கைகளையும் ஊன்றி, லேசாகக் குனிந்து, தேவையில்லாமல் சிரித்து, ஒரு பேஸ் வாய்சில் வார்த்தை வார்த்தையாக 'இன்னைக்கு ராத்திரி என்னோட வந்து தங்க முடியுமா?' என்பது போலப் பேசுவாள்.

    எனவே அலுவலகம் முழுவதும் அர்ச்சனாவுக்கு சின்னச் சின்ன சலுகைகள் இருக்கும். அவளிடம் யாரும் சிடுசிடுப்பதில்லை தாமதமாக வந்தால் 'ஏன் லேட்?' என்றுக் கேட்பதில்லை. சீக்கிரமாகவேப் புறப்பட்டாலும் அதட்டுவதில்லை. அன்றைக்கே அனுப்பியாக வேண்டிய ஒரு முக்கியமான ஸ்டேட் மெண்ட்டை அவள் 'நாளைக்கு எடுத்துத் தர்றேனே சார் என்று சொன்னால், எல்லோரும் 'அதனால என்ன, பரவால்லை' என்பார்கள்.

    அர்ச்சனா கடித்த பாதி வடையைபரவால்லை, கொடும்மா, உலகத்தில் எல்லாமே எச்சில்தான் என்றுச் சொல்லி அக்கவுண்டன்ட் பரந்தாமன் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். அண்ணாருக்கு வயது ஐம்பத்தி ஒன்று.

    ரெக்கார்ட்ஸ் ரூமில் வைத்து ஜெயராமன் அவளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விட்டு, அவள்தட்ஸ் ஆல் ரைட் என்றுச் சொல்லச் சொல்லக் கேட்காமல் 'ஸாரிம்மா, வெரி வெரி ஸாரி' என்று வழிந்ததாக ஒரு பியூன் வழிச் செய்தி உண்டு.

    வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமை காலையில் அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கு மேனேஜிங் டைரக்டர் சிவா தன் மாருதி ஜென்னை அனுப்புவதாகவும், அவள் அதில் ஏறிக் கொள்வதாகவும்,

    Enjoying the preview?
    Page 1 of 1