Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nizhal Mudichu
Nizhal Mudichu
Nizhal Mudichu
Ebook95 pages54 minutes

Nizhal Mudichu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903787
Nizhal Mudichu

Read more from Pattukottai Prabakar

Related to Nizhal Mudichu

Related ebooks

Related categories

Reviews for Nizhal Mudichu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nizhal Mudichu - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    நிழல் முடிச்சு

    Nizhal Mudichu

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காதல் டைரிக் குறிப்பு - 1

    காதல் சம்பவக் குறிப்பு - 1

    நிழல் முடிச்சு - 1

    காதல் டைரிக் குறிப்பு - 2

    காதல் சம்பவக் குறிப்பு - 2

    நிழல் முடிச்சு - 2

    காதல் டைரிக் குறிப்பு - 3

    காதல் சம்பவக் குறிப்பு - 3

    நிழல் முடிச்சு - 3

    காதல் டைரிக் குறிப்பு - 4

    காதல் சம்பவக் குறிப்பு - 4

    நிழல் முடிச்சு - 4

    காதல் டைரிக் குறிப்பு - 5

    காதல் சம்பவக் குறிப்பு – 5

    நிழல் முடிச்சு - 5

    காதல் டைரிக் குறிப்பு - 6

    காதல் சம்பவக் குறிப்பு - 6

    நிழல் முடிச்சு - 6

    காதல் டைரிக் குறிப்பு - 7

    காதல் சம்பவக் குறிப்பு - 7

    நிழல் முடிச்சு - 7

    காதல் டைரிக் குறிப்பு - 1

    சாருலதா! என்ன ஒரு இனிமையான பெயர் உனக்கு! யார் அப்படி பெயர் சூட்டினார்கள்! சூட்டியவரின் விரலுக்கு என்னிடம் யதேஷ்ட சம்பாத்யம் வரும்போது ஒரு வைர மோதிரம் செருக வேண்டும் கண்ணே.

    சாருலதா! வாய்விட்டுச் சொன்னாலும் தித்திக்கிறது. மனசுக்குள் உச்சரித்தாலும் தித்திக்கிறது. ஆழ்ந்து யோசித்தால் தித்திப்பு உடன் உருவத்தில் தான், பெயரில் இல்லை. பிரம்மன் எத்தனையோ லட்சம் பெண்களுக்கு ஓர வஞ்சனை செய்துவிட்டு மாஸ்டர் பீஸ் லட்சியத்துடன் உருவாக்கி உலவவிட்ட தேவதை நீ.

    நீ சுவாசிக்கிற அதேக் காற்றை சுவாசிப்பதில் பெருமிதம் கொள்ளும் ஜீவன் நான் என்பது சத்தியம்- அலை கடலோரத்தில் ஈர மணலில் நீ பதித்துக் கடந்த ஈரப் பாத சுவடுகளில் ஒன்றுக்கு நான் உதடுகள் முத்தம் பதித்ததை உடன் முதுகுப் பக்கமும் விழிகள் இருந்தால் பார்த்திருப்பாய்.. அந்தச் சுவடுகளை அலைகள் பாய்ந்து வந்து கலைத்துச் சென்றபோது எவ்வளவு கெட்ட வார்த்தைகளையும் ஏந்திச் சென்றன தெரியுமா?

    சாருலதா, அன்று பேருந்தில் அவசரமாக நீ ஏறின்போது உடைந்து போன உன் ஒரு கண்ணாடி வளையலின் இரண்டு துண்டுகளை நீ ஜன்னல் வழியாக வீசியெறிந்தது உன் ஞாபக அடுக்குகளில் தங்கியிருக்க அவசியமில்லை ஆனால், அடுத்த ஸ்டாப்பிங்கில் நான் அவசரமாக இறங்கி திரும்பி நடந்து ஒரு மணி நேரம் தேடி அவற்றைக் கண்டுபிடித்து கவிக்ஃபிக்ஸ் போட்டு ஒட்டி என் தலையணைக்கடியில் வைத்திருப்பதை ஒரு நாள் காட்டும்போது உன் விழிகள் எவ்வளவு பெரிதாக விரியப் போகின்றன தெரியுமா?

    அந்த ஒற்றை வளையலுக்கு தினம் நான் குட்மார்னிங் சொல்கிறேன். முத்தமிட்டு குட்நைட் செல்கிறேன், எனக்கு அது ராமரின் பாதுகை., கோவில் பிரசாதம்.

    சாருலதா, நான் உன்னை பூஜிக்கிறேன், காதலிக்கிறேன் என்று ஒரு - நாளும் சொல்லமாட்டேன். அது இந்தப் பத்தாண்டுகளில் கொச்சைப் படுத்தப்பட்டுவிட்டது. காதல் என்கிற வார்த்தை வீரியம் இழந்து தெருவில் வீசப்பட்ட ஒரு அணைந்த பீடித் துண்டுக்கான மரியாதையில் தான் இருக்கிறது. நல்ல லாபம் தரும் வியாபாரப் பொருளாகிப் போனது - எழுத்தாளர்களுக்கும் சினிமாக் காரர்களுக்கும்,

    அதனால் சாருலதா, நாம் அந்த வார்த்தையையே உபயோகிக்க வேண்டாம். நீ ஒரு எளிய வாசகி என்றால், 'எனக்கு உன்னை பிடித்திருக்கிறது' என்று சொல்வேன். எவ்வளவு என்று கேட்டால், தலைக்கு மேல் என் சுட்டு விரல் உயரும், பின்புறம் கழுத்தை வளைத்துப்பார். உன் கண்களுக்குத் தெரிவது ஆகாயம். ஆனால் என் சுட்டு விரலின் சுட்டு முனை அத்தோடு முடியவில்லை அதையும் தாண்டி, அதையும் தாண்டி.. அதையும் தாண்டி...

    காதல் சம்பவக் குறிப்பு - 1

    சாருலதா

    ம்?

    சாருலதா

    என்ன?

    உன்னைக் கூப்புடலை. சும்மா உன் பேரைச் சொன்னேன், உன் பேரை உச்சரிக்கிறப்பவே ஒரு த்ரில் இருக்கு தெரியுமா?

    அப்படியா?

    ஐ ம் நாட் ஃபிளாட்டரிங்.

    ஆனா கொஞ்ச நாளா உளறிங்

    யெஸ், எப்பயிலேர்ந்து தெரியுமா? ஐ லவ் யூன்னு நான் சொல்லி, நீ புன்னைகையோட தலை குனிஞ்சியே.. அந்த நிமிஷத்திலேர்ந்து தான். நீ மட்டும் ‘சார் நான் உங்ககூட ஒரு பிரதர் மாதிரிதான் பழகினேன்'னு நொந்தல்ஸ் வசனம் பேசியிருந்தா.. நான் இப்படி உளறல் மன்னன் ஆகியிருக்க மாட்டேன்.

    திலக், இப்படி ஒரு ஆம்பளையோட சுதந்திரமா வெளில வந்து நெருக்கமா உக்காந்து பேசிக்கிட்டிருக்கிறதை எங்கப்பா பார்த்தா நொந்து போய்டுவார்.

    "உங்கப்பா ஐநூறு கிலோ

    Enjoying the preview?
    Page 1 of 1